என் மலர்
உள்ளூர் செய்திகள்

அதிகாரி ஆய்வு செய்த போது எடுத்த படம்.
தொழிலாளர் துறை அதிகாரிகள் ஆய்வு
- தொழிலாளர் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
- கொத்தடிமைத் தொழிலாளர்கள் எவரும் வேலை செய்யவில்லை என உறுதி செய்யப்பட்டது.
சிவகங்கை
சென்னை தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் ஆணையின்படியும், மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் ஜெயபாலன், மதுரை தொழிலாளர் இணை ஆணையர் சுப்பிர மணியன் ஆலோசனை யின் பேரில், சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) முத்து தலைமையில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் சைல்டுலைன் உறுப்பி னர்கள், ஆள்கடத்தல் பிரிவு காவலர்கள், தொழிலாளர் துணை ஆய்வாளர், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் மானாமதுரை பகுதியில் உள்ள ஊதுபத்தி தயார் செய்யும் இடங்களில் கூட்டாய்வு மேற்கொண்டனர். இதில் 18 வயதிற்குட்பட்ட குழந்தை கள், வளரிளம் பருவத் தொழிலாளர்கள், கொத்தடிமைத் தொழி லாளர்கள் எவரும் வேலை செய்யவில்லை என உறுதி செய்யப்பட்டது.
மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) முத்து தெரிவித்துள்ளார்.






