என் மலர்tooltip icon

    சிவகங்கை

    தேவகோட்டையில் பூட்டிய 2 வீடுகளை உடைத்து நகை மற்றும் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன.

    தேவகோட்டை:

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் திருச்சி -ராமேசுவரம் நெடுஞ்சாலை ஓரத்தில் ஸ்டேட் பேங்க் காலனி உள்ளது. இங்கு வசித்து வருபவர் சீத்தாராமன் (வயது60). நகைப்பட்டறை தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் மதுரையில் உள்ள மகள் வீட்டுக்கு சென்று விட்டார். இவரது மூத்த மகன் ராஜசேகர் பக்கத்து தெருவில் வசித்து வருகிறார். அவர் தந்தை வீட்டின் வழியாக நடந்து வந்தபோது வீடு திறந்து கிடந்ததை பார்த்து உள்ளே சென்றார். இதுகுறித்து தந்தைக்கும் தகவல் தெரிவித்தார்.

    அப்போது வீட்டின் கதவை உடைத்து அங்கு இருந்த 5 பவுன் நகை, ரூ.25 ஆயிரம் ரொக்கம், ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையர்கள் திருடிச் சென்று இருப்பது தெரிய வந்தது.

    இதேபோல் தேவகோட்டை நகைக்கடை வீதியை சேர்ந்தவர் செல்வி (45). இவர் வீட்டை பூட்டி விட்டு சென்னை சென்றார்.

    வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அக்கம் பக்கத்தினர் வீடு திறந்து கிடந்ததை பார்த்து செல்விக்கு தகவல் தெரிவித்தனர்.

    வீட்டில் இருந்த 2 வெள்ளி குத்துவிளக்குகள் திருடு போய் இருப்பது தெரியவந்தது.

    மேற்கண்ட 2 திருட்டு சம்பவங்கள் தொடர்பாக தேவகோட்டை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சாதுரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கைரேகை நிபுணர்கள் குற்ற வாளிகளின் தடயங்களை சேகரித்தனர்.

    தேவகோட்டை பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 5 கடைகள், 2 வீடுகளை உடைத்து கொள்ளையர்கள் பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். இது போலீசாருக்கு விடப்பட்ட சவால் போன்று தெரிகிறது என்று பொதுமக்கள் பரவலாக பேசி கொண்டனர்.

    அண்ணா, கருணாநிதி தலைமையிலான ஆட்சியில் தமிழகத்தில் தொழில் புரட்சி எற்பட்டுள்ளதாக சிங்கம்புணரியில் மு.க.ஸ்டாலின் பேசினார். #mkstalin #karunanidhi

    சிங்கம்புணரி:

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் முன்னாள் அமைச்சர் செ.மாதவன் கடந்த 4-ந்தேதி உடல் நல குறைவால் காலமானார். 5-ந்தேதி மாதவனின் இறுதிச்சடங்கு மற்றும் ஊர்வலத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார் .

    இந்த நிலையில் நேற்று சிங்கம்புணரியில் செ. மாதவன் இல்லம் முன்பு அமைக்க பட்ட விழா மேடையில் செ.மாதவன் உருவப்படத்தை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் பெரியகருப்பன் வேலு, பெரியசாமி, தங்கம் தென்னரசு, சுப.தங்கவேலன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    அனைத்து கட்சி பிரமுகர்கள் விழா மேடையில் புகழ் அஞ்சலி செலுத்தி பேசினர். பின்னர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, 1967-ல் அண்ணா ஆட்சி காலம் முதல் தி.மு.க. அமைச்சராக இருந்தவர் மாதவன். தமிழ் நாடு என பெயர் வைத்த போது அதை சட்ட அமைச்சராக இருந்து சட்டமாக்க காரணமாக இருந்தவர்களில் மாதவனின் பங்கும் உண்டு. சீர்திருத்த திருமணம் சட்டத்தை சட்ட முன்வடிவு எற்படுத்தியவர் மாதவன்.

    அண்ணா, கருணாநிதி தலைமையிலான ஆட்சியில் தமிழகத்தில் தொழில் புரட்சி எற்பட்டதை பட்டியலிட்டு அது பொற்காலம் என்றார். தி.மு.க. என்ன செய்தது என்று கேட்பவர்களுக்கு இது போன்ற சில உதாரணங்களை சுட்டிக் காட்டி பேசினார். #tamilnews  #mkstalin #karunanidhi

    திருப்பத்தூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே உள்ள மு.கோவிலாப்பட்டியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் முத்துக்குமார் (34). இவர் அதே பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

    கடந்த 6-ம் தேதி திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளியில் 2-ம் வகுப்பு பயிலும் மாணவி பள்ளிக்கு சென்று கொண்டிருக்கும் போது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

    அன்றிலிருந்து அந்த சிறுமி உடல் சோர்வாக இருந்துள்ளார். இதனால் பெற்றோர் வயிற்றில் தொங்கல் எதுவும் விழுந்திருக்குமோ, அல்லது வேறு எதுவும் உடல்நிலை பிரச்சினையா? என மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

    முத்துக்குமாரின் இந்த கேடுகெட்ட செயலை அவரது அக்கா மகள் பார்த்துள்ளார். இந்த சிறுமியும் ஒரே வகுப் பறையில் படிப்பதால் இந்த சம்பவத்தை பள்ளியில் சொல்ல, இதைக்கேட்ட சிறுமிகள் வீட்டில் கூறினர்.

    இது பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயின் காதுக்கு சென்றது. பதறிப்போன தாய் இது குறித்து திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

    இதன் அடிப்படையில் வாலிபர் முத்துக்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை கண்டித்து சிவகங்கையில் மகிளா காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை கண்டித்தும், அதுதொடர்பாக மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

    மாநில மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஸ்ரீவித்யா கணபதி தலைமை தாங்கினார். மாவட்ட காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரம் அருணகிரி, மாவட்ட துணைத்தலைவர் சண்முகராஜன், முன்னாள் மாவட்ட தலைவர் ராஜரத்தினம், நகர தலைவர் பிரபாகரன், வட்டார தலைவர்கள் மதியழகன், நாகராஜன், வேலாயுதம், ரமேஷ், நகர மகிளா காங்கிரஸ் தலைவி ஏலம்மாள், மகளிரணி நிர்வாகிகள் நாகலட்சுமி, பாண்டியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    திருப்பத்தூர் அருகே பிளஸ்-1 மாணவியை 3-வது முறையாக கடத்திய கந்து வட்டிக்காரரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகேயுள்ள உப்புக்காரத் தெருவைச் சேர்ந்தவர் முருகன். பிளாஸ்டிக் வியாபாரி. இவரது மனைவி இளமதி. இவர்களது மகள் நிவேதா (வயது 18). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு சத்திரக்குடியை சேர்ந்த மணிகண்டன் (40) என்பவர் முருகன் வீட்டின் அருகே குடிவந்தார். இவருக்கு திருமணமாகி குழந்தை உள்ளது. கந்துவட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார்.

    மணிகண்டனிடம் மாணவியின் தாயார் கந்துவட்டிக்கு பணம் வாங்கினார். அப்போது அவர்களிடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் மாணவியை மணிகண்டன் 2 முறை கடத்திச் சென்றுவிட்டார்.

    இதுகுறித்து சிங்கம் புணரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை மீட்டனர். தொடர்ந்து மாணவியை கடத்தியதால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு பரிந்து ரைக்கப்பட்டது. அதன் பேரில் மணிகண்டன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தண் டனை காலம் முடிந்ததும் அவர் ஜாமீனில் வெளி வந்தார்.

    அதன்பின்னரும் மணிகண்டன் திருந்துவதாக இல்லை. மாணவி வீட்டுக்குள் புகுந்து அவரையும், அவரது தாயாரையும் காரில் கடத்திச் சென்று விட்டார். சிறிது தூரத்தில் மாணவியின் தாயாரை இறக்கிவிட்டார்.

    வீடு திரும்பிய மாணவியின் தாயார் சிங்கம்புணரி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பொன்ரகு வழக்குப்பதிவு செய்து மாணவியை கடத்தி சென்ற மணிகண்டனை தீவிரமாக தேடி வருகிறார்.

    விபத்தில் உயிரிந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்காததால் கோர்ட் உத்தரவுப்படி ஆந்திர மாநில 2 அரசு பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டது.
    திருப்பத்தூர்:

    வேலூர் மாவட்டம், திருப்பத்தூரில் உள்ள காந்திபேட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சசிக்குமார் (வயது 34). இவரது மனைவி அனிதா.

    இவர்களது மகன்கள் அரவிந்த்குமார், ரோஹித்சரண். கடந்த 2011-ம் ஆண்டு ஜூலை மாதம் 16-ந்தேதி சாமி கும்பிடுவதற்காக சசிக்குமார் தனது குடும்பத்தினருடன் திருப்பதிக்கு காரில் புறப்பட்டார்.

    சித்தூர் மாவட்டம், சந்திரகிரியை அடுத்த கொல்லரப்பட்டி என்ற இடத்தில் கார் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த ஆந்திர மாநில அரசு பஸ் திடீரென கார் மீது மோதியது. இதில் சசிக்குமார், அனிதா, மகன்கள் அரவிந்த்குமார், ரோஹித்சரண் மற்றும் சசிக்குமாரின் தம்பி சுரேந்திரகுமார் ஆகிய 5 பேர் காயம் அடைந்தனர். இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி சசிக்குமார் உயிரிழந்தார். மற்ற அனைவரும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதனையடுத்து சசிக்குமாரின் குடும்பத்தினர் இழப்பீடு வழங்கக்கோரி திருப்பத்தூரில் உள்ள கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த 30.1.17-ந் தேதி வழக்கை நீதிபதி விசாரித்து, சசிக்குமாரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையாக 40 லட்சத்து 39 ஆயிரத்து 612 ரூபாய் வழங்க ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டார். ஆனால் வெகுநாட்கள் ஆகியும் இழப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை.

    அதைத் தொடர்ந்து சசிக்குமாரின் குடும்பத்தினர் வக்கீல் உதயகுமார் மூலமாக கோர்ட்டில் நிறைவேற்று மனு தாக்கல் செய்தனர். இந்த நிலையில் நேற்று நீதிபதி டி.இந்திராணி நிறைவேற்று மனுவை விசாரித்து, சசிக்குமாரின் குடும்பத்தினருக்கு வட்டியுடன் சேர்த்து ரூ.61 லட்சம் ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழகம் வழங்காததால், அந்த மாநில 2 அரசு பஸ்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.

    அதன்படி, கோர்ட்டு அமீனாகள் திருப்பதி, ஏகாம்பரம் ஆகிய 2 பேரும் திருப்பத்தூர் புதிய பஸ் நிலையத்திற்கு சென்று, கோர்ட்டு உத்தரவை ஆந்திர மாநில அரசு பஸ் டிரைவர்கள், நடத்துனர்களிடம் காண்பித்தனர். பின்னர் அங்கு குப்பம் செல்ல நின்று கொண்டிருந்த 2 ஆந்திர மாநில அரசு பஸ்களை ஜப்தி செய்து, திருப்பத்தூர் கோர்ட்டிற்கு எடுத்து வந்தனர்.

    இந்த சம்பவத்தால் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
    மதகுப்பட்டி அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தர்மபுரி-ஈரோட்டைச் சேர்ந்த பெண்கள் உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே உள்ள கல்லல் கோவில் திருவிழாவையொட்டி ஆடல், பாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக தர்மபுரி, ஈரோட்டைச் சேர்ந்த கலைக்குழுவினர் நேற்று வேன் மூலம் சிவகங்கைக்கு புறப்பட்டனர்.

    சிவகங்கை மதகுப்பட்டி அருகே உள்ள சொக்க நாதபுரம் கருப்பணசாமி கோவில் அருகே வந்து கொண்டிருந்த போது திடீரென டயர் வெடித்தது. இதில் நிலை தடுமாறி ஓடிய வேன் ரோட்டோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் வேனில் இருந்த தர்மபுரி முருகன் பட்டியைச் சேர்ந்த பிரகாஷ் (வயது27), கிருஷ்ணகிரி நொச்சம்பட்டியைச் சேர்ந்த மகேஷ் (27), ஈரோடு பள்ளிப்பாளையம் அஸ்வின் (27), கொடு முடியைச் சேர்ந்த டிரைவர் மகேந்திரன் உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

    விபத்தில் சிக்கியவர்களை அந்தப்பகுதியினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 8 பேரும் ஆபத்தான நிலையில் மதுரை, சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து மதகுப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.


    சிவகங்கை ரெயில் நிலையத்தில் இந்தி எழுத்துக்கள் அழிக்கப்பட்டன. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகங்கை:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், நியூட்ரினோ திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக போராட்டங்கள், சாலை மறியல் நடந்து வருகின்றன.

    இந்த நிலையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை சென்னையில் நடத்தக்கூடாது என்று தமிழக வாழ்வுரிமை கட்சியினர், நாம் தமிழர் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

    மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டம் வலுத்துள்ள நிலையில் சிவகங்கை ரெயில் நிலையத்தில் அறிவிப்பு பலகைகளில் இடம் பெற்றிருந்த இந்தி எழுத்துக்கள் கருப்பு மை பூசி அழிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இன்று அதிகாலை ரெயில் நிலையத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர்.

    இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகங்கை அருகே வாலிபரை மிரட்டி பணம் மற்றும் செல்போன் பறித்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகங்கை:

    சிவகங்கை தாலுகா நாலுகோட்டை கிரா மத்தைச் சேர்ந்தவர் வீரபாண்டி (வயது 25). இவர் சம்பவத்தன்று அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவரை வழிமறித்த 25 வயது மதிக்கத்தக்க நபர், கத்தியை காட்டி மிரட்டி வீரபாண்டியிடம் இருந்த ரூ. 20 ஆயிரம் ரொக்கம், செல்போனை பறித்துக்கொண்டு தப்பினார்.

    இதுகுறித்து அவர் சிவகங்கை தாலுகா போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரவிச் சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் வீரபாண்டியிடம் பணம் பறித்தது நாலுகோட்டையைச் சேர்ந்த முருகன் என தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து பணம்-செல்போனை பறிமுதல் செய்தனர்.

    சிவகங்கை நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் சமூக விரோதிகள் நகை பறிப்பு வழிப்பறி போன்ற சம்பவங்களில் தைரியமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் வெளியே செல்லவே அச்சப்படுகின்றனர்.

    எனவே போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து சமூக விரோதிகளை கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் கல்லூரி மாணவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

    தேவகோட்டை:

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கல்லூரணி கிராமத்தைச் சேர்ந்தவர் சிலையப்பன். இவரது மகன் கருப்பையா (வயது21). ராமநாதபுரத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இவர் தனது நண்பர்கள் அடைச்சிவயல் கிராமத்தைச் சேர்ந்த கார்த்தி (21), தேவகோட்டை இறகுசேரி ஸ்ரீராம் (21) ஆகியோருடன் கண்டதேவி ஊரணி பகுதிக்கு சென்று பேசி கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு தேவகோட்டை ராம்நகர் ஹவுசிங்போர்டை சேர்ந்த ஆல்பர்ட் மகன் லெவின் சிந்தா (18), தனது நண்பர்களுடன் வந்தார். இவருக்கும் கார்த்திக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்தது.

    இந்த விரோதத்தில் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது லெவின் சிந்தா, அவர்களது நண்பர்கள் தாணிச்சாஊரணி அசோக்குமார் (21), கண்ட தேவி பிரபாகரன் (21), அரவிந்த் (21), தாழையூர் இந்திரகண்ணன் (21), ஆனையடிவயல் பாலமுருகன் (22) ஆகியோர் சேர்ந்து கார்த்தி உள்பட 3 பேரையும் சரமாரியாக தாக்கினர். அரவிந்த் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கருப்பையா தலையில் குத்தினார்.

    இதில் படுகாயம் அடைந்த கருப்பையா சிகிச்சைக்காக தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கருப்பையா பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தேவகோட்டை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சாதுரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் ஆகியோர் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மாணவர் அசோக்குமார், பிரபாகரன், இந்திர கண்ணன், பாலமுருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். லெவின் சிந்தா மற்றும் அரவிந்தை போலீசார் தேடி வருகின்றனர்.

    மோதலுக்கு பெண் தகராறு ஏதும் காரணமாக இருக்கலாமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மாணவர்கள் மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்டு இருப்பது தேவகோட்டை பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

    திருப்புவனத்தில் பணியின்போது மதுபோதையில் தரையில் படுத்திருந்த அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.
    சிவகங்கை:

    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள திருவேகம்பத்து கிராமத்தைச் சேர்ந்தவர் ரஜினிகாந்த்.

    இவர் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பூவந்தி அரசு உயர்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    நேற்று மதியம் ஆசிரியர் ரஜினிகாந்த் மது குடித்தார். போதை தலைக்கேறிய நிலையில் அவர் பள்ளியின் விளையாட்டு உபகரணங்கள் வைக்கும் அறையில் மயங்கி கிடந்தார்.

    உடனே ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ரஜினிகாந்தை சென்று பார்த்தபோது அவர் போதையில் இருந்தது தெரியவந்தது.

    அவரை எழுப்ப முயன்றும் எந்த பயனும் இல்லை. சில மணி நேரம் புலம்பி கொண்டிருந்த ஆசிரியர் ரஜினிகாந்த் பின்னர் அங்கேயே தூங்கினார்.

    இதுகுறித்து சக ஆசிரியர்கள் முதன்மை கல்வி அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் உரிய விசாரணை நடத்தி, பணியின்போது மது குடித்து ஒழுங்கீனமாக நடந்து கொண்ட ஆசிரியர் ரஜினிகாந்தை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    மாணவர்களுக்கு முன்னுதாரனமாக திகழ வேண்டிய ஆசானே போதையில் பள்ளிக்கு வந்தது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகம் முழுவதும் இன்று போராட்டம் நடைபெற்றது. காரைக்குடியில் பஸ்கள் மீது யாரோ கல்வீசி தாக்குதல் நடத்தினர்.

    காரைக்குடி:

    தமிழகம் முழுவதும் இன்று தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் பஸ் மறியல், ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காரைக்குடியிலும் இந்த போராட்டத்தில் திரளானோர் பங்கேற்றனர்.

    இந்த நிலையில் காரைக்குடி-ராமேசுவரம் மற்றும் தேவகோட்டை-மதுரை சென்ற பஸ்கள் உள்பட 5 பஸ்கள் மீது யாரோ கல் வீசினர். இதில் அந்த பஸ்களின் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன.

    ×