என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • சிவகங்கை அருகே கந்துவட்டி கேட்டு பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.
    • இதுதொடர்பாக கணவன்-மனைவி கைது செய்யப்பட்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கையில் கந்து வட்டி தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து கந்து வட்டியால் பாதிக்கப்பட்ட பலர் போலீஸ் நிலைய ங்களில் புகார்கள் கொடுத்த வண்ணம் உள்ளனர்.

    சிவகங்கை அருகே உள்ள காளையார்கோவில் திருநகரைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மனைவி பிரியா. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ், அவரது மனைவி ராஜாத்தி ஆகியோரிடம் ரூ. 2 லட்சம் கடன் வாங்கியுள்ளார்.

    இதற்காக 5 புரோ நோட்டுக்கள், 2 வெற்று பத்திரத்தில் பிரியா கையெழுத்திட்டு கொடுத்து ள்ளார்.

    கடனை வட்டியுடன் பிரியா செலுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் காளையார்கோவில் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில், கூடுதல் வட்டி கேட்டு சுரேஷ், ராஜாத்தி ஆகியோர் கொலை மிரட்டல் விடுத்ததாக குறிப்பிட்டிருந்தார்.

    இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவன்-மனைவியை கைது செய்தனர்.

    • அ.தி.மு.க. பெண் கவுன்சிலர் மீது வீடு புகுந்து சரமாரி தாக்குதல் நடத்தப்பட்டது.
    • ராதாவுக்கும், தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஜெயமணி கணேசன் என்பவருக்கும் இடையே தேர்தல் முன்விரோதம் இருந்து வந்தது.

    சிவகங்கை

    சிவகங்கை நகராட்சி அகிலாண்டபுரத்தைச் சேர்ந்த கிருஷ்ணகுமார். இவரது மனைவி ராதா. இவர் சில மாதங்களுக்கு முன்பு நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 25-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    இத்தேர்தலின்போது ராதாவுக்கும், தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஜெயமணி கணேசன் என்பவருக்கும் இடையே தேர்தல் முன்விரோதம் இருந்து வந்தது.இருவரது வீடும் அருகருகே உள்ளது.

    இந்நிலையில் ஜெயமணி தனது உறவினர்களுடன் சேர்ந்து கவுன்சிலர் ராதா வீட்டுக்குள் அவரையும், அவரது மாமியாரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ராதா, அவரது மாமியார் ஆகியோர் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டனர்.

    அவர்களை சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன், நகர செயலாளர் ராஜா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்

    இதுகுறித்து சிவகங்கை நகர் போலீசில் தி.மு.க. பெண் நிர்வாகி மீது புகார் செய்யப்பட்டது. காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார் விசாரணை செய்து வருகிறார்.

    • கிராவல் மண் குவாரியை மூட வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கல்லங்குடி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலைப்பணிகளுக்கு என்று கிராவல் மண் குவாரி செயல்பட்டு வந்தது. இதனையடுத்து குவாரியில் இருந்து வெளியே வந்த டிப்பர் லாரிகளை வழிமறித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.

    இதனையறிந்த வட்டா ட்சியர், இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் ஆகியோர் இதுதொடர்பாக நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனாலும் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினார்கள். துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், கிராம மக்களை சமரசம் செய்து உங்கள் கோரிக்கைகளை மனுவாக கலெக்டரிடம் கொடுங்கள் என்றார்.

    அதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள், கண்ணங்குடி ஒன்றியத்தில், கண்டியூர் கிராமத்தில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் கலெக்டர் மதுசூதனரெட்டி கலந்து கொண்டதை அறிந்து நேரில் சென்று மனு அளித்தனர்.

    அதில் கல்லங்குடி, புதூர், தே.வயல் கிராம மக்களுக்கும், எங்களுக்கும் மற்றும் எங்கள் கிராமத்தை சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும் 100 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீர் தரும் இடமாக செல்லியம்மன் கோவில் ஊரணி உள்ளது. தற்போது மழைக்காலம் தொடங்க உள்ளதால் ஊரணிக்கு மழை நீர் வருவது தடைபட்டு விடும். மேலும் மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள் ஆழமான குவாரியில் விழும் சூழ்நிலை உள்ளது. எனவே தாங்கள் குவாரியை மூட உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

    • மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர் கூட்டம் நடக்கிறது.
    • அரசு உதவிகள் பெறுவதற்கு விண்ணப்பங்களும், ஆலோசனைகளும் வழங்கப்படும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், 'மாற்றுத்திறனா ளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருவாய் கோட்ட அளவில் மாதந்தோறும் நடைபெற்று வருகிறது.

    அதன் தொடா்சியாக, தேவகோட்டை கோட்டாட்சியர் தலைமையில் வருகிற

    20-ந் தேதி காலை 10 மணி அளவில் காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபத்திலும், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் 26-ந் தேதி அன்று காலை 10 மணி அளவில் மானாமதுரை வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் 'மாற்றுத்திறனா ளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம்" நடைபெற உள்ளது.

    இச்சிறப்பு குறைதீர் நாளன்று சிறப்பு நிகழ்வாக மாற்றுத்திற னாளிகளுக்கான ஒற்றைச்சாளர முறையிலான சிறப்பு மருத்துவ முகாமும் நடைபெற உள்ளது. இந்நாளில் மாற்றுத்திறனா ளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குதல், யூ.டி.ஐ.டி. பதிவு மேற்கொள்ளுதல், ஆதார் அட்டை பதிவு மற்றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு ஆகியவை மேற்கொள்ளப்படும்.

    மேற்குறிப்பிட்ட உதவிகளைப் பெறுவதற்கு ஒவ்வொரு பதிவிற்கும் தனித்தனியாக பாஸ்போர்ட் அளவு புகைப்படம் -4, குடும்ப அட்டை நகல் (அல்லது) ஆதார் அட்டை நகல் (அல்லது) இருப்பிடச்சான்று ஆகியவற்றுடன் முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    ஏற்கனவே, மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை பெற்றவர்களுக்கு உதவி உபகரணங்கள் மற்றும் மாத உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, வங்கிக்கடன் மற்றும் பிற அரசு உதவிகள் பெறுவதற்கு விண்ணப்பங்களும், ஆலோசனைகளும் வழங்கப்படும்.

    சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் இச்சிறப்பு குறைதீர் நாட்களில் கலந்து கொண்டு பயனடைய வேண்டும்.

    மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.

    • வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
    • நகர்மன்ற தலைவர் ஆனந்த், நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை நகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா, கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆகியோர் ஆய்வ செய்தனர்.

    சிவகங்கை நகராட்சியில் கட்டப்பட்டுவரும் அறிவுசார் மையம், செட்டியூரணியில் கரைகளை பலப்படுத்தும் பணி, வாரசந்தை, தெப்பக்குளம், ராணி ரெங்க நாச்சியார் பஸ் நிலையம் ஆகியவற்றில் நடக்கும் பணிகளை ஆய்வு செய்த அவர்கள் இதுதொடர்பாக அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினர்.

    அதன்பின் நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா கூறியதா வது:-

    சிவகங்கை நகராட்சி யில் போட்டி தேர்வுக்கு தயாராகும் இளைஞர்க ளுக்கு பயிற்சி வழங்க ரூ.1.85 கோடி மதிப்பில் அறிவுசார் மையம் கட்டப்பட்டு வரு கிறது. ெசட்டியூரணியை அதிக ஆழப்படுத்தி கரையை பலப்படுத்தும் பணியும், அதனை சுற்றி வேலி அமைக்கும் பணியும், நடை பாதை ஏற்படுத்தவும் பணிகள் நடந்து வருகிறது.

    சிறுவர்களுக்கான விளை யாட்டு உபகரணங்களுக்காக ரூ.1.60 கோடி ஒதுக்கீடு ெசய்யப்பட்டுள்ளது. சாலையோர கடைகளை ஒழுங்குப்படுத்தவும், வாரசந்தையில் கூடுதல் கடைகள் அமைக்கவும் ரூ.3 கோடி மதிப்பில் பணிகள் நடந்து வருகின்றன. ராணி ரெங்கநாச்சியார் பஸ் நிலையத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

    குடிநீர் பிரச்சினையை தீர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. மேற்கண்ட பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கும், ஒப்பந்ததாரர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது நகர்மன்ற தலைவர் ஆனந்த், நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • திருப்பத்தூர் ஒன்றியங்களில் கலெக்டர் திடீர் ஆய்வு செய்தார்.
    • மனுவாக பெற்றதன் அடிப்படையில் மேற்கொண்ட நடவடிக்கை கள் குறித்து கேட்டறிந்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றி யங்களில் உள்ள வட்டா ட்சியர் அலுவலகம், கீழ செவல்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம், ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்று வரும் பணிகளை கலெக்டர் மதுசூதனரெட்டி நேரில் ஆய்வு செய்தார்.

    முன்னதாக திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவ லகத்தில் வட்டாட்சியர் வெங்கடேசனிடம் அலுவலகத்தில் நாள்தோறும் பொதுமக்கள் தரும் பல்வேறு கோரிக்கைகளை மனுவாக பெற்றதன் அடிப்படையில் மேற்கொண்ட நடவடிக்கை கள் குறித்து கேட்டறிந்தார்.

    மேலும் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும், வருகை பதிவேடுகள் குறித்தும் பார்வையிட்டார். நிலுவை யில் உள்ள மனுக்களுக்கு சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    அதனைத்தொடர்ந்து திருப்பத்தூர் கணேஷ் நகரில் உள்ள சிறுவர் பூங்காவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டார்.பின்பு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் ஒன்றி யங்களில் நடைபெற்று வரும் பணிகளின் நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின்போது மண்டல துணை வட்டா ட்சியர் செல்லமுத்து, சமூக நல பாதுகாப்பு வட்டாட்சியர் சிவசம்போ, தனி வட்டாட்சியர் சாந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் தென்னரசு மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • தூய்மைக்கான மக்கள் இயக்கம் விழா நடந்தது.
    • முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் மேரி அனைவரையும் வரவேற்றார்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தான் பேரூராட்சியில் பேரூராட்சிகளின் ஆணையர் அறிவுரையின்படியும், சிவகங்கை மண்டல உதவி இயக்குநர் அறிவுறுத்தலின் படியும் தூய்மைக்கான மக்கள் இயக்கம் விழா நடைபெற்றது.

    இதில் திடக்கழிவு மேலாண்மை குறித்து மீனாட்சி ஆச்சி மெட்ரிகுலேசன் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் செயல் அலுவலர் ரமேஷ்பாபு, பேரூராட்சி தலைவர் ராதிகா ராமச்சந்திரன், வார்டு உறுப்பினர் அன்புக்கரசி மற்றும் பாண்டிச்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் மேரி அனைவரையும் வரவேற்றார். முடிவில் பேரூராட்சி இளநிலை உதவியாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

    • பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதை தவிர்க்க உறுதிமொழி எடுத்துகொண்டனர்.
    • போட்டியில் சிறந்த கோலங்களை வடிவமைத்த மகளிர் சுயநிதி குழுக்களுக்கு தலைவர் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் புசலான் தலைமையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு, மகளிர் சுயநிதி குழுக்களுக்கு நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    செயல் அலுவலர் கணேசன் முன்னிலை வகித்தார். போட்டியில் சிறந்த கோலங்களை வடிவமைத்த மகளிர் சுயநிதி குழுக்களுக்கு தலைவர் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

    அதனைத் தொடர்ந்து நெற்குப்பையில் செயல்பட்டு வரும் 72 மகளிர் சுயநிதி குழுக்களில் முதல் கட்டமாக 10 குழுக்களை தேர்வு செய்து அவர்களுக்காக வங்கிகளில் ஒதுக்கப்பட்டுள்ள ரூ.75 லட்சம் கடன் பெறுவதற்கான ஒப்புதல் ஆணையை தலைவர் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் சிங்கம்புணரி, நெற்குப்பை மகளிர் சுய உதவி குழுக்களின் ஒருங்கிணைப்பாளர் வாணி, இளநிலை உதவியாளர் சேரலாதன், வார்டு உறுப்பினர்கள் கண்ணன், சித்ரா சின்னையா, வரி தண்டலர் துரைராஜ், தூய்மை பணி மேற்பார்வையாளர் சிற்றரசு, பேரூராட்சி பணியாளர்கள், மகளிர் சுயநிதி குழு உறுப்பினர்கள் ஊர் பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியின் போது பிளாஸ்டிக் பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்ப்போம் என்று அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    • இளையான்குடியில் பா.ஜ.க. நிர்வாகி கார் உடைக்கப்பட்டது.
    • டீக்கடை முன்பு காரை விட்டு இறங்கியபோது 50-க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் வேலூர் இப்ராஹிம் கார் மற்றும் அவருடன் வந்த கார்களை தாக்கி கண்ணாடியை உடைத்தனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பா.ஜ.க. மாநில சிறுபான்மை பிரிவு செயலாளராக இருப்பவர் வேலூர் இப்ராஹிம். இவர் நேற்று இரவு புதுக்கோட்டை மாவட்டத்தில் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இளையான்குடி வழியாக ராமநாதபுரம் வந்தார்.

    அப்போது இளை யான்குடி கண்மாயக்கரை பகுதியில் அவருக்கு நிர்வாகிகள் வரவேற்பு கொடுத்தனர். அதன்பின் ஒரு டீக்கடை முன்பு காரை விட்டு இறங்கியபோது 50-க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் வேலூர் இப்ராஹிம் கார் மற்றும் அவருடன் வந்த கார்களை தாக்கி கண்ணாடியை உடைத்தனர்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவத்திற்கு இடத்துக்கு விரைந்து வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் இதுபற்றி சாலை கிராமம் போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் செய்தனர்.

    இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் மற்றும் போலீசார் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன் பின்னர் வேலூர் இப்ராஹிம் சாலைகிராமத்தில் இருந்து போலீசார் பாதுகாப்புடன் ராமநாதபுரம் சென்றார்.

    • தேவகோட்டை நகராட்சியில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
    • நகர்மன்றத் தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

    தேவகோட்டை

    தேவகோட்டை நகராட்சி அவசர கூட்டம் நகர்மன்றத் தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் சாந்தி, மேலாளர் முன்னிலை வகித்தனர்.

    பருவமழை தொடங்க இருப்பதால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக நகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து மழைநீர் வடிகால்கள் மற்றும் கால்வாய்கள், சிறு பாலங்கள் அடிப்புறத்தில் முழுமையாக தூர்வார வேண்டும்.

    தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்காமல் நகர் பகுதியில் 84 கிலோ மீட்டர் நீளம் உள்ள மழைநீர் வடிகால்களையும், 15 கிலோ மீட்டர் உள்ள குளக்கால், 302 சிறு பாலங்களையும் சுத்தம் செய்ய வேண்டும்.

    பன்றிகளால் டெங்கு, மலேரியா, மூளைக் காய்ச்சல் போன்ற நோய்கள் பரவும் நிலை உள்ளதால் நகரில் சுற்றித்திரியும் பன்றிகளை உயிருடன் பிடித்து நகரின் எல்கையில் விட ஆணையாளர் உத்தரவு பிறப்பித்தார்.

    மேலும் ரூ. 10 கோடி மதிப்பீட்டில் பெருமா கண்மாய், காட்டூரணி, அழகப்பா ஊரணி போன்ற நீர்நிலைகள் மேம்பாட்டுபணி மற்றும் பேருந்து நிலையம் மேம்பாட்டு பணி, வாரச்சந்தை மேம்பாட்டு பணி, அழகப்பா ஊரணி பூங்கா மேம்பாட்டுபணிகள் மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • சிவகங்கை அருகே உள்ள வைரவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பண்ணமுத்து மகன் பரமசிவம் (வயது 30).
    • கோவில் விழாவில் ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் சிவகங்கை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சிவகங்கை:

    சிவகங்கை அருகே உள்ள வைரவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பண்ணமுத்து மகன் பரமசிவம் (வயது 30). தச்சு தொழிலாளியான இவர் சிவகங்கை காளவாசல் பகுதியில் வசித்து வந்தார்.

    பரமசிவம் மீது கொலை, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இதனால் ரவுடிகள் பட்டியலில் உள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சிவகங்கையில் நடந்த பா.ஜனதா பிரமுகர் முத்துப்பாண்டி கொலை வழக்கிலும் இவருக்கு தொடர்பு இருந்தது.

    அந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த பரமசிவம் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில் சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோவில் பூச்செரிதல் விழா நேற்று நடந்தது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த விழாவை முன்னிட்டு அந்தப்பகுதியில் ஏராளமான இடங்களில் ஆடல், பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    காளவாசல் பகுதியிலும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. அதனை காண ஏராளமான பொதுமக்கள் திரண்டிருந்தனர். பரமசிவம் காளவாசல் பகுதியில் நடந்த கலை நிகழ்ச்சியை காண சென்றார். இந்தநிலையில் நள்ளிரவு 1 மணியளவில் அவரை ஒரு கும்பல் அரிவாளால் வெட்ட முயன்றது.

    இதையடுத்து பரமசிவம் அங்கிருந்து தப்பி ஓடினார். இருந்தபோதிலும் அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் அவரை விடாமல் துரத்திச்சென்று ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர்.

    இதனை கோவில் திருவிழாவிற்கு வந்திருந்த பக்தர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பரமசிவம் கொலை செய்யப்பட்டது குறித்து சிவகங்கை டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சிவகங்கை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் வந்தனர்.

    அவர்கள் பரமசிவத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பரமசிவத்தை வெட்டிக்கொன்றவர்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பது தெரியவில்லை.

    அவர் மீது கொலை உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் உள்ளதால் முன் விரோதத்தில் பழிக்குப்பழியாக யாரேனும் அவரை கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

    அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் விழாவில் ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் சிவகங்கை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ரூ.1.15 கோடியில் சமத்துவபுரங்களை சீரமைக்கும் பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் பேரூராட்சி, சிறுகூடல்பட்டி ஊராட்சியில் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்புப்பணிகள், சாலைப்பணிகள், நூலகப் பராமரிப்பு, பள்ளி பராமரிப்பு, பொது விநியோகக் கட்டிடம் பராமரிப்பு, நுழைவுவாயில் பராமரிப்பு, பொரியார் சிலை பராமரிப்பு, தெருவிளக்கு பராமரிப்புப் பணிகளை கலெக்டர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் கலெக்டர் கூறுகையில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சமத்துவபுரங்களை புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதலமைச்சரின் உத்தரவின்படி, பழைய சமத்துவபுரங்களில் உள்ள வீடுகளில் பழுது பார்த்தல், குடிநீர் விநியோகம் செய்தல், தெருவிளக்குகள் பராமரிப்பு, விளையாட்டு மைதானம், பூங்கா பராமரிப்பு, தந்தை பெரியார் சிலை பராமரிப்பு, சமுதாயக்கூடம், நூலகம், அங்கன்வாடி, நுழைவுவாயில், பொது விநியோகக் கட்டிடம் மற்றும் பள்ளி கழிப்பிட வசதி போன்ற பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அரசனூரில் உள்ள சமத்துவபுரம் ரூ.85.22 லட்சம் மதிப்பீட்டிலும், அமராவதிபுதூரில் உள்ள சமத்துவபுரம் ரூ.1.01 கோடி மதிப்பீட்டிலும், புளிச்சிகுளத்தில் உள்ள சமத்துவபுரம் ரூ.1.29 கோடி மதிப்பீட்டிலும், பையூரில் உள்ள சமத்துவபுரம் ரூ.1.42 கோடி மதிப்பீட்டிலும், சிறுகூடல்பட்டியில் உள்ள சமத்துவபுரம் ரூ.1.15 கோடி மதிப்பீட்டிலும், விஜயபுரத்தில் உள்ள சமத்துவபுரம் ரூ.1.32 கோடி மதிப்பீட்டிலும் பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் பராமரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    சமத்துவபுரத்தில் உள்ள பூங்காக்களை பராமாரித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், இல்லந்தோறும் உள்ள கழிப்பறைகளை சீர்செய்து தொடர்ந்து பயன்படுத்திடவும், தெருவிளக்கு மற்றும் குடிநீர் விநியோகத்தினை சீரான முறையில் மேற்கொள்ளவும், நூலகங்களை பராமாரித்து அங்கு வசிக்கின்ற பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவும் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாகதிருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாளர்களின் பணிப்பதிவேடுகள், துறை அலுவலர்கள் பணிகள் தொடர்பாக கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆய்வு செய்தார். அப்போது திருப்பத்தூர் வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயகுமார், தென்னரசு, உதவிப்பொறியாளர்கள் அன்புச்செல்வன், சுப்பிரமணி, வீரப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×