என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • சிங்கம்புணரி தான்தோன்றீஸ்வரர் கோவிலில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
    • நிகழ்ச்சி ஏற்பாடுகளை தேவஸ்தான கண்காணிப்பாளர் தண்ணாயிரம், மற்றும் ஸ்தானிகம் ரவிகுருக்கள் செய்திருந்தனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே தர்ம சம்வர்த்தினி உடனுறை தான்தோன்றீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு வடுகபைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.இதையொட்டி வடுக பைரவருக்கு ம்ருதுஞ்ஜய ஹோமம், கணபதி ஹோமம் சத்ரு சம்கார ஹோமம் உள்ளிட்ட ஹோமங்கள் நடைப்பெற்றது.பின்னர் பால், பன்னீர், பஞ்சாமிர்தம், தயிர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான அபிசேகங்கள் செய்யப்பட்டன. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு. பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை தேவஸ்தான கண்காணிப்பாளர் தண்ணாயிரம், மற்றும் ஸ்தானிகம் ரவிகுருக்கள் செய்திருந்தனர்.

    • அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான பி.ஆர்.செந்தில்நாதன் தலைமை தாங்கினார்.

    சிவகங்கை

    சிவகங்கையில் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் சிவகங்கை மாவட்ட, அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான பி.ஆர்.செந்தில்நாதன் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், முன்னாள் எம்.எல்.ஏ. நாகராஜன், குணசேகரன் ஆகியோர் பேசினர்.

    தி.மு.க. அரசை கண்டித்து சிவகங்கை அரண்மனை வாசலில் வருகிற 25-ந் தேதி மாவட்ட அ.தி.மு.க. சார்பில், மாவட்ட தலைநகரில் நடக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், மாவட்ட அணி செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அரளிக்கோட்டையில் மாணவ-மாணவிகளுக்கு நோட்டு-ரொக்க பரிசுகளை அமைச்சர் வழங்கினார்.
    • இந்த பள்ளி தொடங்கப்பட்டு 84 ஆண்டுகளை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரளிக்கோட்டையில் அமைந்துள்ள ஊராட்சி உயர்நிலைப்பள்ளியில் அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் அவரது தாய் தந்தை கருத்தான் - கருப்பாயி அம்மாள்நினைவாக அமைக்கப்பட்டுள்ள கல்வி அறக்கட்டளை சார்பில் அவரின் சொந்த நிதியில் இருந்து அந்த பள்ளியில் பயிலும் மாணவ -மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்களை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார். அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் 12-வது ஆண்டாக அந்த பள்ளியில் 10-ம் வகுப்பில் படித்து தேர்ச்சி பெற்று முதல் 3 இடங்களை பெற்ற மாணவ-மாணவிகளுக்கு முதல் பரிசு தொகையாக ரூ10 ஆயிரம் ரொக்க பரிசினையும், 2-வது பரிசு தொகையாக ரூ.5 ஆயிரம், 3-வது பரிசு தொகையாக ரூ. 3 ஆயிரம் வழங்கினார்.

    மேலும் அந்த பள்ளியில் மாணவ-மாணவிகளின் வெற்றிக்கு பாடுபட்ட பள்ளி ஆசிரியர்களுக்கு கைக்கடிகாரத்தையும் அமைச்சர் வழங்கினார். இந்த பள்ளி தொடங்கப்பட்டு 84 ஆண்டுகளை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த பள்ளியில் 10ம் வகுப்பு வரை பயின்று மேல்நிலைப் பள்ளியிலும் அதை தொடர்ந்து கல்லூரி படிப்புக்கு செல்லும் மாணவ- மாணவிகளுக்கு இந்த அறக்கட்டளை சார்பாக அவர்களின் கல்விக்கான செலவையும் ஏற்றுக் கொள்கின்றனர்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளரும், திருப்புவனம் பேரூராட்சி தலைவருமான சேங்கைமாறன், மாவட்ட கல்வி அதிகாரி சாமிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கூட்டுறவு பயிற்சி விண்ணப்ப விற்பனை தேதி நீடிக்கப்பட்டது.
    • இந்த விண்ணப்பங்கள் விற்பனைக்கான கடைசி நாள் வருகிற 28-ந் தேதி ஆகும்.

    சிவகங்கை

    சிவகங்கை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் கூட்டுறவு பட்டய பயிற்சி பெறாத நிரந்தர பணியாளர்களுக்கு 2022-23-ம் ஆண்டுக்கான அஞ்சல்வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சிக்கு விண்ணப்பங்கள் கடந்த 19-ந் தேதி முதல் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த விண்ணப்பங்கள் விற்பனைக்கான கடைசி நாள் வருகிற 28-ந் தேதி ஆகும் என சிவகங்கை கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் கோ.ஜினு தெரிவித்துள்ளார்.

    • செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேச பள்ளியில் ரத்ததான முகாம்
    • பள்ளியின் நிர்வாக இயக்குநர் சங்கீதா சத்யன் தலைமை தாங்கினார்.

    காரைக்குடி

    செல்லப்பன் வித்யா மந்திர் இண்டர்நேஷனல் பள்ளி மற்றும் காரைக்குடி ரோட்டரி சங்கம் இணைந்து ரத்ததான முகாமை பள்ளி வளாகத்தில் நடத்தியது. பள்ளியின் நிர்வாக இயக்குநர் சங்கீதா சத்யன் தலைமை தாங்கினார். பள்ளி இயக்குநர் ராஜேஸ்வரி, முதல்வர் வாணிபோஜன் முன்னிலை வகித்தனர்.

    தமிழ்த்துறை தலைவர் ஜான் போஸ்கோ வரவேற்றார். ரோட்டரி சங்க முன்னாள் ஆளுநர் பெரியண்ணன் முகாமை தொடங்கி வைத்தார்.

    ரோட்டரி சங்க தலைவர் சத்குரு தேவன், அரசு மருத்துவமனை ரத்த வங்கி இயக்குநர் அருள்தாஸ், ரோட்டரி சங்க செயலாளர் பாலசுப்பிரமணியன், பொருளாளர் ஜெயப்பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாணவிகள் பிரபாஷினி, ஸ்ரீசவுந்தரி ஆகியோர் ரத்ததானம் பற்றி பேசினர். இதில் 100-க்கும் மேற்பட்டோர் ரத்தம் வழங்கினர். தலைமையாசிரியர் மீரா நன்றி கூறினார்.

    • வேலை தேடும் இளைஞர்களுக்கான திறன் பயிற்சி முகாமை அமைச்சர் பெரிய கருப்பன் தொடங்கி வைத்தார்.
    • இளைஞர் திறன் திருவிழாவில் அதிகளவில் பெண்கள் கலந்து கொண்டுள்ளனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரியில் படித்த வேலை தேடும் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கும் வகையில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் இளைஞர் திறன் பயிற்சி தொடக்கவிழா நடந்தது.

    பயிற்சி அளிப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு சான்றிதழ்களை கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார். மானா மதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் முன்னிலை வகித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியதாவது:-

    பட்டம் மற்றும் பட்டயம் பெற்ற இளை ஞர்கள் பயன்பெறும் வகையில் அவர்களின் கல்வித்த குதிக்கு ஏற்றவாறு வேலை வாய்ப்பினை பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து இளைஞர் திறன் திருவிழாவை மாநிலம் முழுவதும் நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தர விட்டுள்ளார்.

    இளைஞர்கள் எந்தத்து றையில் ஆர்வமுள்ளவர்கள் என்பதை அறிந்து, அவர்க ளின் கல்வித்தகுதிக்கு ஏற்றாற்போல் பயிற்சி அளிக்க 23 பதிவு பெற்ற நிறுவனங்களின் மூலம் 1,750 இளைஞர்கள் பல்வேறு திறன் வளர்ப்பு பயிற்சிகள் பெறும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    ஆண்களுக்கு நிகராக பெண்கள் அனைத்துத்து றையிலும் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக பெண்களுக்கான பல்வேறு திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இளைஞர் திறன் திருவிழாவில் அதிகளவில் பெண்கள் கலந்து கொண்டுள்ளனர். அவர்கள் கல்வித்தகுதிக்கு ஏற்றாற்போல் இதில் பங்கு பெற்றுள்ள நிறுவனங்களின் வாயிலாக தங்களது திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் (தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) வானதி, நகர்மன்றத் தலைவர்கள் துரைஆனந்த் (சிவகங்கை), மாரியப்பன் கென்னடி (மானாமதுரை), ஆவின் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தலைவர் சேங்கைமாறன், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் மஞ்சுளா பாலசந்தர் (சிவகங்கை), லதாஅண்ணாத்துரை (மானாமதுரை), மாவட்ட கவுன்சிலர்கள் செந்தில்குமார், சாந்தா சகாயராணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வேலைவாய்ப்புக்காக இளைஞர்கள் திறன் திருவிழா நாளை நடக்கிறது.
    • இலவச திறன் பயிற்சியுடன் சிறந்த வேலை வாய்ப்பை பெற்று பயனடையலாம்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்டத்தின் கீழ் இளைஞர்களின் திறனை மேம்படுத்துவதற்காக, வேலைக்கேற்ற திறன் குறித்து விழிப்புணர்வு மற்றும் தகவல்களை ஒருங்கே பெறுவதற்கும்,

    வேலை வாய்ப்பிற்கு தேவையான திறன் பயிற்சியினை பெறுவதற்கும் மற்றும் திறன் பயிற்சி பெற்று வேலைவாய்ப்பினை பெற்றிட அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் இளைஞர் திறன் திருவிழா நாைள (புதன்கிழமை) காலை 9.30 மணி முதல் மாலை 4 மணிவரை சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரியில் 'இளைஞர் திறன் திருவிழா" நடக்கிறது.

    இம்முகாமில் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு பயிற்சி நிறுவனங்கள் பங்கு பெற்று வேலைநாடும் இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கும் பொருட்டு தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    இளைஞர்கள் தங்களின் கல்வித்தகுதி, அடையாள அட்டை, தொழில்நுட்ப தகுதி, சாதிச்சான்று, இருப்பிடச் சான்று, மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட அடையாள அட்டை, உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களின் அசல் மற்றும் சான்றொப்பமிட்ட புகைப்பட நகல் ஆகியவற்றுடன் கலந்து கொண்டு இலவச திறன் பயிற்சியுடன் சிறந்த வேலை வாய்ப்பை பெற்று பயனடை யலாம்.

    எனவே, வேலை நாடும் இளை ஞர்கள் இவ்வாய்ப்பினை நல்ல முறையில் பயன்ப டுத்திக் கொள்ள வேண்டும் என்று கலெக்டர் மதுசூதன் ரெட்டி, கேட்டு கொண்டுள்ளார்.

    • பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவிகள் வலியுறுத்தியுள்ளனர்.
    • நீண்ட போராட்டத்திற்கு பிறகு ஒரு ஆசிரியர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தனியார் செவித்திறன் குறைவுடையோர் உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு

    85-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இப்பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு 2 ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆசிரியர் மீதும், நடவடிக்கை எடுக்காத பள்ளி நிர்வாகம் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தனர்.

    இதை தொடர்ந்து நேற்று பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகள் தலைமை தபால் நிலையம் அருகே சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இவர்களுக்கு ஆதரவாக முன்னாள் மாணவிகளும், செவித்திறன் குறைவு டையோர் காதுகேளாதோர் சங்கத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். அவர்கள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

    மேலும் மாவட்ட மாற்றுதிறனாளி அலுவலர் கதிர்வேல் தலைமையில் பள்ளி மாணவ- மாணவிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் ஆல்பர்ட் ஆபிரஹாம் என்ற ஆசிரியர் மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தது ெதரியவந்தது. அதன்பேரில் ஆசிரியர் ஆல்பர்ட் ஆபிரஹாமை போலீசார் கைது செய்தனர்.

    நீண்ட போராட்டத்திற்கு பிறகு ஒரு ஆசிரியர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.மேலும் சம்மந்தப்பட்ட இன்னொரு ஆசிரியரையும் கைது செய்யவேண்டும், தவறு செய்த ஆசிரியர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட பள்ளி நிர்வாகத்தின் மீதும், நடவடிக்கை எடுக்க வேண்டும், பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வங்கிகளை மத்திய அரசு தனியார்மயமாக்கினால் போராட்டம் நடத்தப்படும் என மாநில பொது செயலாளர் பேட்டி அளித்துள்ளார்.
    • வங்கிகள் தனியார்மயம் ஆக்கப்படுவதால் இலங்கையை போல் இந்தியாவும் பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும்.

    சிவகங்கை

    சிவகங்கையில் அனைத்து வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தின் ஊழியர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அதன் தேசிய துணை செயலாளரும், மாநில பொது செயலாளருமான கிருபாகரன் கலந்து கொண்டார்.

    கூட்டத்தில் வங்கி ஊழியர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான வங்கி ஊழியர்கள் பங்கேற்றனர்.

    பின்னர் மாநில பொது செயலாளர் கிருபாகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வருகிற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் 2 பொது துறை வங்கிகள் தனியார்மயமா க்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது கண்டனத்துக்குரியது. வங்கிகளை தனியார்மயம் ஆக்குவதால் யாருக்கும் பயனில்லை. இதனால் விவசாய கடன், கல்விக்கடன் ஏழை எளிய மக்களுக்கு கிடைக்காமல் போகும். தற்போது உள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரதமர் நரேந்திர மோடி இருவரும் பல்வேறு பொது நிறுவனங்களை தனியார்மயமாக்கியதுடன் கடைசியாக வங்கிகளையும் தனியார் மயமாக்க முயற்சித்து வருகிறார்கள். தெரிவித்தார்.

    மேலும் இதுபோன்ற அறிவிப்பு வெளியானால் இந்தியா முழுவதும் 9லட்சத்து 50ஆயிரம் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவார்கள். வங்கிகள் தனியார்மயம் ஆக்கப்படுவதால் இலங்கையை போல் இந்தியாவும் பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிவகங்கை அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
    • சரக்கு வாகனத்தின் டயர் வெடித்து வாகனம் ரோட்டில் கவிழ்ந்தது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சீரணி அரங்கம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவர் தினசரி மதுரையிலிருந்து திருப்பத்தூருக்கு அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் பர்னிச்சர், பெயிண்ட், ஆட்டோ மொபைல், எலக்ட்ரிகல்ஸ், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை ரெகுலர் சர்வீஸ் செய்யும் சரக்கு வாகன ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.

    இவர் நேற்று முன்தினம் இரவு மதுரையிலிருந்து சரக்குகளை ஏற்றி கொண்டு நேற்று காலை 6.30 மணி அளவில் மதுரையில் இருந்து திருப்பத்தூருக்கு வரும் வழியில் கருப்பூர் அருகே வேட்டங்குடி பட்டி பறவைகள் சரணாலயம் பகுதியில் சரக்கு வாகனத்தின் டயர் வெடித்து வாகனம் ரோட்டில் கவிழ்ந்தது.

    இதில் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக டிரைவர் ராஜா உயிர் தப்பினார். இதனை கண்ட பொதுமக்கள் திருப்பத்தூர் நகர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் இனஸ்பெக்டர் சுந்தர மகாலிங்கம், திருப்புத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து தீயணைப்பு நிலைய அலுவலர் ஆனந்த் சுப்பிரமணியம் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சரக்கு வாகனத்தை சாலையில் இருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

    மேலும் விபத்தில் காயமடைந்த டிரைவர் ராஜாவை போலீசார் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

    • திருப்பத்தூரில் 23 ஆண்டுகளுக்கு பின் மஞ்சுவரட்டு நடந்தது.
    • இந்த மஞ்சுவிரட்டில் 4 பேர் காயமடைந்தனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தென்மா பட்டு ஆதினமிளகி அய்யனார் கோவில் புரவி எடுப்பு திருவிழா நடைபெற்றது.

    திருவிழாவை முன்னிட்டு தென்மாபட்டு கிராம முக்கியஸ்தர்கள் சின்னையா கோவிலில் இருந்து கிராம பட்டெடுத்து வந்து தென்மாபட்டு கண்மாய் பகுதியில் மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

    இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டுவரப்பட்டு கண்மாய்க்குள் அவிழ்த்து விடப்பட்டது.

    சீறி பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் உற்சாகமாக பிடித்தனர். இந்த மஞ்சுவிரட்டில் 4 பேர் காயமடைந்தனர். இங்கு 23 ஆண்டுகளுக்கு பிறகு மஞ்சுவிரட்டு நடைபெறுவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

    மஞ்சுவிரட்டு முடிந்தவுடன் கிராம பாரம்பரியமான விருந்து உபசரிப்பு நடைபெற்றது.

    • ஆண்டு முழுவதும் வடமஞ்சுவிரட்டு நடத்த கோரி ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • இந்தபோட்டி நடத்துவது மழை பெய்யும், விவசாயம் செழிக்கும் என்ற நம்பிக்கையில் தான்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் அரசு உத்தரவுப்படி ஜனவரி முதல் மே மாதம் வரை 5 மாதங்கள் மட்டுமே வடமஞ்சுவிரட்டு நடத்த வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி அறிவித்து உள்ளார்.

    இந்த நிலையில் வடமஞ்சுவிரட்டு நடத்துவது தொடர்பாக சிவகங்கையை அடுத்த சக்கந்தியில் தமிழ்நாடு வடமாடு நலச்சங்கத்தின் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநிலத் தலைவர் அந்தோணிமுத்து, துணை தலைவர் பாரத்ராஜா முன்னிலை வகித்தார்.

    இதில் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கோவில் மற்றும் தேவாலய விழாக்களில் விதிமுறை பின்பற்றியே ஆண்டு முழுவதும் வடமஞ்சுவிரட்டு நடந்து வந்தது.

    வடமாடு மஞ்சு விரட்டு நடத்துவது மழை பெய்யும், விவசாயம் செழிக்கும் என்ற நம்பிக்கையில்தான். மேலும் வடமாடு மஞ்சுவிரட்டில் சங்கத்தில் பதிவு செய்து, விதிமுறைகளை பின்பற்றும் வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

    முதல்-அமைச்சர் தேர்தல் அறிக்கையில் கூறியது போல் வருடம் முழுவதும் வடமஞ்சுவிரட்டு நடந்த அனுமதிக்க வேண்டும்.

    போட்டியில் மருத்துவ பரிசோதனை செய்த காளைகள் மட்டுமே களமிறக்கப்படுகின்றன. மேலும் தேர்வு செய்யப்படும் காளைகள், வீரர்கள் மட்டுமே களமிறக்கப்படுவதால், பார்வையாளர்கள், பொதுமக்களுக்கு பாதிப்பு எதுவும் இருக்காது.

    ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடப்பதால், வடமஞ்சு விரட்டும் ஆண்டு முழுவதும் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் ஜனவரி முதல் மே மாதம் வரை மட்டுமே வடமஞ்சுவிரட்டுக்கு அனுமதி தரப்படும்.மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என சிவகங்கை மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

    இந்த உத்தரவை திரும்ப பெற்று ஆண்டு முழுவதும் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    ×