கருவேல மரங்கள் அகற்ற நடவடிக்கை

சிவகங்கை மாவட்டத்தில் கருவேல மரங்கள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார். கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
Published on

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகளுக்கான குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி பங்கேற்று விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில், சிவகங்கை மாவட்டத்தல் உள்ள 4ஆயிரத்து 226 முன்னாள் ஜமீன் கண்மாய்களில் 1,748 கண்மாய்கள் கடந்த வருடங்களில் தூர்வாரப்பட்டுள்ளன.

தற்போது கொத்தங்குடி, வலையான்வயல், பள்ளிவயல், கொத்தான்கோட்டை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள 42 கண்மாய்கள் மொத்தம் ரூ.24.14 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று, சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்றார்.சாலைவழித்தட மாற்றம் செய்தல், சாலையில் தடுப்புச்சுவர் அமைத்தல், விவசாயப்பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகள், காட்டுமாடுகளை அப்புறப்படுத்துதல், ஆக்கிரமிப்புக்களை அகற்றுதல், பட்டா வழங்குதல், பட்டா திருத்தம் செய்தல், நிலஅளவை செய்யக் கோருதல், அங்கன்வாடி கட்டிடம், நியாயவிலைக்கடை கட்டித்தரக் கோருதல், கிராமக்கிணறு பழுதை சீர் செய்தல், சிமெண்ட் களம் அமைத்து தரக்கோருதல், தார்ச்சாலை சீரமைத்தல், ஆற்றுப்பகுதியில் உள்ள சீமைக்கருவேல் மரங்களை அகற்றுதல், விவசாயிகளுக்கு தேவையான உரங்களை இருப்பு வைக்கக் கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை கலெக்டரிடம் விவசாயிகள் எடுத்துரைத்தனர்.

அந்த கோரிக்கைகள் தொடர்பாக, தற்போது அந்தபகுதிகளில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்கள் எடுத்துரைத்தனர். தகுதியான கோரிக்கைகள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்வதற்கு ஏதுவாக களஆய்வு செய்ய துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர்(பொறுப்பு) தனபாலன், கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர்கள் கோ.ஜீனு, ரவிச்சந்திரன், கால்நடைப் பராமரிப்புத்துறை இணை இயக்குநர் நாகநாதன், வருவாய் கோட்டாட்சியர்கள் சுகிதா (சிவகங்கை), பிரபாகரன் (தேவகோட்டை), கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சர்மிளா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com