என் மலர்
சேலம்
- சேலம் மாவட்டத்தில் கால்நடை மருத்துவ நிலையங் களில் சிகிச்சை, செயற்கை முறை கருவூட்டல், குடற்புழு நீக்கம், மலடு நீக்க சிகிச்சை மற்றும் திட்டப் பணிகள் செயலாற்றும் பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.
- தேசிய செயற்கை முறை கருவூட்டல் அபிவிருத்தித்திட்டம் இலவசமாக செயல்படுத் தப்பட்டு வருகிறது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கால்நடை மருத்துவ நிலையங் களில் சிகிச்சை, செயற்கை முறை கருவூட்டல், குடற்புழு நீக்கம், மலடு நீக்க சிகிச்சை மற்றும் திட்டப் பணிகள் செயலாற்றும் பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. தேசிய செயற்கை முறை கருவூட்டல் அபிவிருத்தித்திட்டம் இலவசமாக செயல்படுத் தப்பட்டு வருகிறது.
அனைத்து நிலையங்களிலும் பிரதி சனிக்கிழமை தோறும் கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய் தடுப்பூசி, தேசிய நோய் ஒழிப்பு திட்டத்தின்கீழ் பசு மற்றும் எருமை இனங்களுக்கு கோமாரிநோய் தடுப்பூசி, அஸ்காட் திட்டத்தின்கீழ் ஆடுகளுக்கு ஆட்டம்மை மற்றும் துள்ளுமாரி நோய் தடுப்பூசி, ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி திட்டத்தின்கீழ் நோய் கிளர்ச்சிக்குள்ளான பகுதிகளில் ஆட்டுக்கொல்லிநோய் தடுப்பூசி போடப்படுகிறது.
மாவட்டத்தில் கால்நடை கிளை நிலையங்கள் - 9, கால்நடை மருந்தகங்கள் - 149, நடமாடும் கால்நடை மருந்தகங்கள் - 6, கால்நடை மருத்துவமனைகள் - 7, கால்நடை பன்முக மருத்துவமனை- 1, கால்நடை நோய் புலனாய்வுப்பிரிவு-1 ஆகியவை உள்ளன.
விவசாயிகளால் 6 லட்சத்து 11 ஆயிரத்து 161 பசுக்கள், 46 ஆயிரத்து 420 எருமைகள், 3 லட்சத்து 37 ஆயிரத்து 733- செம்மறி ஆடுகள், 5 லட்சத்து 57 ஆயிரத்து 541 வெள்ளாடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் நாடு முழுவதும் கால்நடைகளின் நலனை மேம்படுத்துவதற்காக நேற்று என்.ஏ.என்.டி.ஐ. (புதிய மருந்து மற்றும் தடுப்பூசி முறை) இணையதளத்தை மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா தொடங்கி வைத்தார்.
கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை, மத்திய மருந்து தரக்கட்டுப் பாட்டு அமைப்பின் சுகம் ஆகியவை இந்த இணையதளத்துடன் ஒருங்கிணைந்து கால்நடை உற்பத்திப் பொருட்களை மதிப்பீடு செய்வதற்கும், வெளிப்படை த்தன்மை யுடன் ஒழுங்குமுறை ஒப்புதல் அளிப்பதற்கும் தடையின்றி வழிவகுக்கும் என அவர் கூறினார்.
இந்த முன்னெடுப்பு டிஜிட்டல் இந்தியாவை மேம்படுத்தவும், கால்நடைகள் நலன் மற்றும் கால்நடைகள் தொழில்துறையை மேம்படுத்தவும் உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.
- ஓமலூர் அரசு உதவி பெறும் பள்ளியின் முன்பு குழந்தைகளை சொந்த வாகனத்தில் ஏற்றிய 5 வாகனத்தை பறிமுதல் செய்தார்.
- அந்த வாகனங்களை அவர் ஓமலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
ஓமலூர்:
ஓமலூர் காடையாம் பட்டி, தாரமங்கலம் உள்ளிட்ட பகுதியில் 50-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளில் பயின்று வரும் மாணவ-மாணவிகளை அழைத்து செல்வதற்காக தனியார் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் சிலர் சொந்த பயன்பாட்டுக்கு உரிய வாகனங்களை வாடகைக்கு இயக்கியதாக ஓமலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் கவிதாவுக்கு புகார்கள் வந்தன. இதை தொடர்ந்து ஓமலூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பள்ளிகளில் நேற்று அவர் அதிரடி ஆய்வு செய்தார். அப்போது ஓமலூர் அரசு உதவி பெறும் பள்ளியின் முன்பு குழந்தைகளை சொந்த வாகனத்தில் ஏற்றிய 5 வாகனத்தை பறிமுதல் செய்தார். அந்த வாகனங்களை அவர் ஓமலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அந்த வாகனங்களில் இருந்த பள்ளிக் குழந்தைகளை வாடகை வாகனத்தை வரவழைத்து பத்திரமாக அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைத்தார்.
இது குறித்து மோட்டார் வாகன ஆய்வாளர் கவிதா கூறியதாவது:-
வாடகைக்கு என தனியாக டீ போர்டு வாகனங்கள் உள்ளன. இவர்கள் தனியாக வரி செலுத்தி வாடகைக்கு ஓட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் சொந்தத் திற்காக பயன்படுத்தப்படும் வாகனத்தை வாடகைக்கு சிலர் ஓட்டுவதாக வந்த புகாரை தொடர்ந்து ஆய்வு செய்த போது 5 வாகனங்களை பறிமுதல் செய்து உள்ளோம். மேலும் இதுபோன்ற ஆய்வுகள் தொடரும். சொந்த பயன்பாட்டுக்காக உள்ள வாகனத்தை வாடகைக்கு விட்டால் கடுமையான நட வடிக்கை எடுக்கப்படுவ தோடு அதன் உரிமம் ரத்து செய்யப்படும்.
இத்தகைய வாகனங் களால் ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் அதில் இன்சூரன்ஸ் உள்ளிட்ட எந்தப் பயன்களும் பெற முடியாது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக வாடகை வாகனத்தை பயன்படுத்தி அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சேலம் மாவட்டம் ஓமலூர் உட்கோட்ட காவல்துறை சரகத்தில் 6 சட்டம் ஒழுங்கு காவல் நிலையம் உட்பட 8 போலீஸ் நிலையங்கள் உள்ளன.
- இந்த போலீஸ் நிலைய பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டது.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூர் உட்கோட்ட காவல்துறை சரகத்தில் 6 சட்டம் ஒழுங்கு காவல் நிலையம் உட்பட 8 போலீஸ் நிலையங்கள் உள்ளன. இந்த போலீஸ் நிலைய பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டது.
தொடர்ந்து போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றுகளும் வழங்கினார். மேலும், போட்டிகளில் கலந்துகொண்ட அனைத்து மாணவர்களுக்கும் திருக்குறள் புத்தகங்களையும் வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
மாணவ சமுதாயம் நினைத்தால், போதை பொருட்கள் விற்பனையை தடுத்து ஒழிக்க முடியும். மாணவர்கள் தங்களது பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சுற்றுபுறத்தில் உள்ளவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, போதை பழக்கத்தை கைவிட வைக்க முடியும். மேலும், சட்டவிரோதமாக போதை பொருட்கள் விற்பனை செய்வது தெரிந்தால், காவல்துறை அதிகாரிகளுக்கு தெரியபடுத்தி அவற்றை தடுக்க முடியும். மேலும், மாணவர்கள் தங்களது சுற்றுபுறங்களை தூய்மையாக வைத்துகொள்ள வேண்டும். சாலை பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்க வேண்டும். பெற்றோர்கள் ஹெல்மெட் அணிந்து செல்ல வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் ஓமலூர் டி.எஸ்.பி. சங்கீதா, இன்ஸ் பெக்டர்கள் ஓமலூர் செல்வராசன், தீவட்டிப் பட்டி ஞானசேகரன் மற்றும் போலீஸ் அதிகாரிகள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் பலரும் கலந்து கொண்டனர்.
- சேலம் அருகே இரும்பாலை ரோடு தளவாய்பட்டி பகுதியில் மத்திய அரசின் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் (இ.பி.எப்.ஓ) செயல்பட்டு வருகிறது.
- விண்ணப்பிக்க கூடுதலாக ஜூன் மாதம் 26-ந்தேதி வரையிலும் அவகாசம் வழங்கியது.
சேலம்:
சேலம் அருகே இரும்பாலை ரோடு தளவாய்பட்டி பகுதியில் மத்திய அரசின் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் (இ.பி.எப்.ஓ) செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பணி ஓய்வுக்கு பிறகு ஓய்வூதியம் மற்றும் பணப்பலன்களை வழங்குகிறது.
ஊழியர்கள் மற்றும் ஊழியர்கள் பணிபுரியும் நிறுவனத்திடமிருந்து மாதந்தோறும் பெறப்படும் நிதியைக் கொண்டு, ஊழியரின் கணக்கில் வரவு வைக்கும் பணியை இந்த நிறுவனம் செய்து வருகிறது. ஊழியர்கள் தங்களது பணியில் இருந்து ஓய்வு பெறும் போது அவரது கணக்கில் இருக்கும் நிதிக்கு வட்டியுடன் சேர்த்து வருங்கால வைப்பு தொகையை இந்நிறுவனம் வழங்கி வரும் பணியை மேற்கொள்கிறது.
புதிய வழிகாட்டுதல்
இந்த நிலையில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியில் இருக்கும் பணியாளர்கள், ஓய்வு பெற்ற பிறகு அதிக ஓய்வூதியம் பெற உச்சநீதிமன்றம் வெளியிட்ட உத்தரவையடுத்து தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் புதிய வழிகாட்டுதலை வழங்கி யுள்ளது.
இதன் மூலம் தற்போது ஓய்வூதிய திட்டத்தில் இணைந்துள்ள மாத ஊதிய தாரர்கள் அதிக ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்க முடியும். இதற்காக விண்ணப்பிக்க மார்ச் மாதம் 3-ந்தேதி வரை வழங்கப்பட்டு இருந்த கால அவகாசத்தை முதலில் ேம மாதம் 3-ந்தேதி வரையிலும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் நீட்டித்தது.
தொடர்ந்து பணியாளர் களின் கோரிக்கையை ஏற்று விண்ணப்பிக்க கூடுதலாக ஜூன் மாதம் 26-ந்தேதி வரையிலும் அவகாசம் வழங்கியது. இந்த கெடு நேற்றுடன் முடிவடைந்தது. இருப்பினும் அவர்களின் நலன் கருதி விண்ணப்பிப் பதற்கு அடுத்த மாதம் 11-ந்தேதி வரை நீட்டித்து தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் உத்திரவிட்டுள்ளது.
- டி.என்.பி.எல். கோட்யின் 20-வது ‘லீக்’ ஆட்டம் இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கிறது.
- திருப்பூர் தமிழன்ஸ் 2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது.
சேலம்:
8 அணிகள் பங்கேற்கும் 7-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தற்போது சேலத்தில் நடைபெற்று வருகிறது.
நேற்று நடந்த 19-வது 'லீக்' ஆட்டத்தில் கோவை கிங்ஸ்-சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதின. இதில் கோவை அணி 79 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அந்த அணி பெற்ற 5-வது வெற்றியாகும். இதன் மூலம் 10 புள்ளிகளுடன் கோவை கிங்ஸ் முதல் அணியாக 'பிளேஆப்' சுற்றுக்கு தகுதி பெற்றது. அந்த அணி கடைசி ஆட்டத்தில் மதுரை பாந்தர்சை ஜூலை 2-ந்தேதி சந்திக்கிறது. சேலம் அணி 4-வது தோல்வியை தழுவியது. 2 புள்ளியுடன் இருக்கும் அந்த அணி 6-வது போட்டியில் திருப்பூர் தமிழன்சை 1-ந்தேதி எதிர்கொள்கிறது.
டி.என்.பி.எல். கோட்யின் 20-வது 'லீக்' ஆட்டம் இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கிறது. இதில் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ்-சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன.
திண்டுக்கல் அணி 3 வெற்றி, 1 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி திருப்பூர் தமிழன்சை வீழ்த்தி 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இருக்கிறது.
திருப்பூர் தமிழன்ஸ் 2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 3-வது வெற்றிக்காக காத்திருக்கிறது.
- சேலம் மாநகரில் தி.மு.க. கவுன்சிலர்கள் 2 பேர் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ள சம்பவம் கட்சியினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஏற்கனவே பகுதிச் செயலாளராக இருந்த சர்க்கரை சரவணன் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
சேலம்:
தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடந்த 10-ந்தேதி சேலம் வந்தார். அப்போது தி.மு.க நிர்வாகிகள் கூட்டம், 5 ரோடு பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் நடந்தது.
இதில் நிர்வாகிகள் பலர் மனு கொடுத்தனர். அப்போது தலைமை செயற்குழு உறுப்பினரும் மாநகராட்சி கவுன்சிலருமான ஜெயக்குமார், மாவட்ட நிர்வாகிகள் குறித்து முதலமைச்சரிடம் கொடுத்த புகார் மனு சமூக வலைதளங்களில் பரவியது.
அதேபோல் மற்றொரு தி.மு.க. கவுன்சிலர் சக்கரை சரவணன் மத்திய மாவட்ட செயலாளருக்கு எதிராக சமூக வலைதளத்தில் கருத்து வெளியிட்டார். இது கட்சியினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து சேலம் மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., தி.மு.க தலைமைக்கு புகார் அளித்தார். அதன் அடிப்படையில் கவுன்சிலர்கள் சக்கரை ஆ.சரவணன், ஜெயக்குமார் ஆகியோர் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக தி.மு.க பொதுசெயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
சேலம் மாநகரில் தி.மு.க. கவுன்சிலர்கள் 2 பேர் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ள சம்பவம் கட்சியினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே பகுதிச் செயலாளராக இருந்த சர்க்கரை சரவணன் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது கட்சியில் எந்த பதவியும் இல்லாத நிலையில் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டு உள்ளார்.
ஜெயக்குமார் மாநகர செயலாளராக இருந்த நிலையில் அதிலிருந்து நீக்கப்பட்டு, கடந்த ஆண்டு தலைமை செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயக்குமார் மாநகராட்சியில் ஆளும்கட்சி தலைவர் பதவி வகித்து வருகிறார். தற்போது கட்சியில் இருந்து நீக்கப்பட்டதால் அந்த பதவிக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
- 1,886 கன அடி நீர்வரத்து உள்ள நிலையில், 1000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
- நீண்ட நாள் பயிரான சம்பா சாகுபடி சுமார் 12 லட்சம் ஏக்கரில் நடைபெறும்.
சேலம்:
கேரள மற்றும் கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும்போது மைசூர் சிமோகா, காசன், பெல்லாரி, பீதர் உட்பட காவிரி நீர் படிப்பு பகுதியில் கனமழை பெய்யும்.
இதனால் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும். நடப்பாண்டில் ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என வானிலை மையம் அறிவித்த நிலையில், கர்நாடகா காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை தொடங்கவில்லை.
எதிர்பார்த்த மழை ஏமாற்றியதால் நீர்வரத்து நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. நேற்றைய நிலவரப்படி 124.8 அடி உயரம் கொண்ட கிருஷ்ணராஜ சாகர் அணையில் 77.76 அடி நீர்மட்டம் உள்ளது.
நீர்மட்டம் குறைந்துள்ளதால் பாசன கால்வாய்களில் நீர் திறப்பு நிறுத்தப்பட்டு குடிநீர் தேவைக்கு மட்டுமே தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர்வரத்து 760 கனஅடியாகவும், வெளியேற்றம் 308 கன அடியாகவும் உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் கிருஷ்ணராஜ சாகர் அணை நீர்மட்டம் 106.61 அடியாக இருந்தது.
அதேபோல், 65 அடி உயரம் கொண்ட கபினி அணையில் தற்போது 31.62 அடி நீர்மட்டம் உள்ளது. 1,886 கன அடி நீர்வரத்து உள்ள நிலையில், 1000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் கர்நாடக மாநிலத்தில் கொட்டி தீர்த்த மழையால் 3-வது வாரத்தில் 2 அணைகளும் நிரம்பி ஒரு லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது.
நடப்பாண்டில் தற்போது அணைகளின் நீர்மட்டம் குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தரவேண்டிய ஜூலை மாதத்திற்கான தண்ணீரை வழங்குவதில் சிக்கல் உருவாகியுள்ளது.
ஏற்கனவே மழை பெய்யும் என்று எதிர்பார்ப்பில் கடந்த ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு, படிப்படியாக நேற்று 13 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
அதே நேரம் மேட்டூர் அணை நீர்வரத்து குறைவாக உள்ளது. அணை நீர்மட்டம் 92.40 அடியாக சரிந்துள்ளது. இதே அளவு மேட்டூர் அணையிலிருந்து தொடர்ந்து தண்ணீர் விடும் பட்சத்தில் ஒரு வாரத்தில் 70 அடியாக நீர்மட்டம் சரிய வாய்ப்புள்ளது.
காவிரியில் நீர்வரத்து அதிகரிக்காவிட்டால் சம்பா சாகுபடிக்கு முழுமையாக நீர் திறந்து விடுவதிலும் சிக்கல் ஏற்படும். இதனால் மழையை நம்பியும், மேட்டூர் அணை நீரை நம்பியும் பயிர் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், தற்போது தென் மேற்கு பருவமழை எதிர்பார்த்து அளவு பெய்யவில்லை. ஆனால் ஜூலை முதல் வாரத்துக்கு பின் எதிர்பாராத அளவு மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதனால் டெல்டா பாசனத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்கும். விவசாயிகள் அச்சப்பட வேண்டாம் எனக் கூறியுள்ளனர்.
காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறையில் ஆண்டுதோறும் சுமார் 15 லட்சம் ஏக்கர் நெற்பயிர் சாகுபடி நடைபெறுகிறது.
மேட்டூர் அணையில் திறக்கப்படும் தண்ணீரை கொண்டு முதல் கட்டமாக சுமார் 3 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெறும். அதன் பின்னர் அதே பரப்பளவில் தாளடி சாகுபடி நடைபெறும். இந்த சாகுபடிகள் ஜூன் மாதம் தொடங்கி பிப்ரவரி மாதம் நிறைவடையும். நீண்ட நாள் பயிரான சம்பா சாகுபடி சுமார் 12 லட்சம் ஏக்கரில் நடைபெறும்.
நடப்பாண்டு மேட்டூர் அணையில் 100 அடிக்கும் மேல் தண்ணீர் இருந்ததால் வழக்கம் போல் ஜூன் 12-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார். 76 கோடி மதிப்பிலான குறுவை தொகுப்பு திட்டத்தையும் அறிவித்தார்.
வேளாண்துறை அமைச்சரும் டெல்டா மாவட்டங்களில் 5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குருவை சாகுபடி நடைபெறும் என பெருமிதத்துடன் கூறிய நிலையில், உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டதை தொடர்ந்து விவசாயிகள் உற்சாகத்துடன் குறுவை சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் படிப்படியாக டெல்டா மாவட்டங்கள் அடைந்தாலும் ஆறுகளில் மிகவும் குறைந்த அளவே தண்ணீர் செல்கிறது. பல வாய்க்கால்களை தாண்டி தண்ணீர் எட்டி பார்க்காததால் வயல்களில் விதை நெல் காயும் நிலைய ஏற்பட்டுள்ளது.
தண்ணீர் திறக்கப்பட்டு சுமார் 15 நாளாகியும் தண்ணீர் கிடைக்காதால் விவசாயிகள் சில இடங்களில் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
- முதலில் ஆடிய கோவை அணி 199 ரன்கள் குவித்தது.
- தொடர்ந்து ஆடிய சேலம் அணி 120 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
சேலம்:
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரவு சேலத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் லைக்கா கோவை கிங்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சேலம் அணி பீல்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய கோவை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 199 ரன்கள் குவித்தது. ராம் அரவிந்த் அதிரடியாக ஆடி 50 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். சுஜய் 44 ரன்களும், சாய் சுதர்சன் 41 ரன்களும், ஆதீக் ரஹ்மான் 31 ரன்களும் எடுத்தனர்.
சேலம் அணியின் சார்பில் சன்னி சந்து 3 விக்கெட் கைப்பற்றினார்.
இதையடுத்து, 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேலம் அணி களமிறங்கியது. கோவை அணியினரின் துல்லியமான பந்துவீச்சில் சேலம் அணி வீரர்கள் சிக்கினர். இதனால் விக்கெட்டுகள் விரைவில் வீழ்ந்தன. சன்னி சந்து அதிகபட்சமாக 29 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், சேலம் அணி 120 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் கோவை அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலிலும் முதலிடத்தில் நீடிக்கிறது.
கோவை அணி சார்பில் தாமரைக் கண்ணன் 3 விக்கெட்டும், ஷாருக் கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- சேலம் அணியின் பந்துவீச்சாளர் சன்னி சந்து 3 விக்கெட் கைப்பற்றினார்.
- சுஜய் - சாய் சுதர்சன் ஜோடி நிலைத்து நின்று ஸ்கோரை மளமளவென உயர்த்தியது.
சேலம்:
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு சேலத்தில் நடைபெறும் ஆட்டத்தில் லைக்கா கோவை கிங்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சேலம் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது.
லைக்கா கோவை கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் துவக்க வீரர் சுரேஷ் குமார் 4 ரன்னில் ஆட்டமிழந்த நிலையில், சுஜய் - சாய் சுதர்சன் ஜோடி நிலைத்து நின்று ஸ்கோரை மளமளவென உயர்த்தியது. சுஜய் 44 ரன்களும், சாய் சுதர்சன் 41 ரன்களும் எடுத்தனர். ஆதீக் ரஹ்மான் 31 ரன்களும், ராம் அரவிந்த் ஆட்டமிழக்காமல் 50 ரன்களும் அடிக்க, கோவை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் குவித்தது. சேலம் அணியின் பந்துவீச்சாளர் சன்னி சந்து 3 விக்கெட் கைப்பற்றினார்.
இதையடுத்து 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேலம் அணி களமிறங்குகிறது.
- நேற்று இரவு அதே பகுதியில் உள்ள பெயிண்ட் கடை முன்பு பிரபு நின்று கொண்டு இருந்தார்.
- அப்போது அங்கு வந்த சுரேஷ், தன் மனைவியின் மொபைல் போனில் பேசுவது குறித்து கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
சேலம்:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள மேட்டுப்பட்டி சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் பிரபு (வயது 38). இவர் மீது, காட்டூர் ஆனந்தன் கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.
இவர் காரிப்பட்டி போலீஸ் நிலையத்தில் ரவுடி பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
இந்த நிலையில், இவர் அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் மனைவி உமாராணி (25) என்பவருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு கடந்த சில நாட்களாக தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து உமாராணி தன் கணவர் சுரேசிடம் தெரிவித்தார். நேற்று இரவு அதே பகுதியில் உள்ள பெயிண்ட் கடை முன்பு பிரபு நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த சுரேஷ், தன் மனைவியின் மொபைல் போனில் பேசுவது குறித்து கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த சுரேஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து பிரபுவின் தலையில் அறிவாளால் சரமாரியாக வெட்டினார். ரத்த வெள்ளத்தில் மிதந்தவரை அந்த பகுதியினர் மீட்டு சேலத்தில் 3 ரோடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் ரவுடியை வெட்டி விட்டு தப்பி ஓடிய சுரேஷ் உட்பட 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
- சேலம் மாநகராட்சி 36-வது டிவிசனுக்கு உட்பட்ட பகுதியில் தாதம்பட்டி அல்லிக்குட்டை ஏரி உள்ளது.
- ஏரியில் மாநகராட்சி சார்பில் புனரமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளது. இந்த பணிக்காக ஏரி பகுதியில் உள்ள புதர்களை அகற்றாமல் அப்படியே தீ வைத்து எரித்து வருகின்றனர்.
சேலம்:
சேலம் மாநகராட்சி 36-வது டிவிசனுக்கு உட்பட்ட பகுதியில் தாதம்பட்டி அல்லிக்குட்டை ஏரி உள்ளது. இந்த ஏரியில் மாநகராட்சி சார்பில் புனரமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளது. இந்த பணிக்காக ஏரி பகுதியில் உள்ள புதர்களை அகற்றாமல் அப்படியே தீ வைத்து எரித்து வருகின்றனர்.
இதனால் இந்த பகுதி புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. புகையால், அருகில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, தாதம்பட்டி அல்லிக்குட்டை ஏரியை சுற்றி 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். தற்போது மாநகராட்சி சார்பில் புனரமைப்பு பணி நடக்கிறது. இதை நாங்கள் வரவேற்கிறோம்.
ஆனால் முறையாக புதர்களை அகற்றாமல், அப்பேடியே தீ வைத்து வருகின்றனர். இதனால் இப்பகுதி புகைமண்டலமாக காட்சி அளிக்கிறது. மேலும் இப்பகுதி பொதுமக்கள் கண் எரிச்சலால் பாதிக்கப்பட்டு தூக்கமுடியாமல் தவித்து வருகின்றோம்.
எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் பொதுமக்கள் திரண்டு போராட்டம் நடத்துவோம் என்றனர்.
- சேலம் அய்யந்திரு மாளிகை தொடக்கப்பள்ளி வளாகத்தில் அறிவுசார் மையம் மற்றும் ஆய்வு மைய கட்டிடம் சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ் ரூ.2.50 கோடி மதிப்பில் அமைக்கும் பணிகள் முடிவுற்று விரைவில் திறக்கப்பட உள்ளது.
- இந்த மையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் இன்று ஆய்வு செய்தார்.
சேலம்:
சேலம் அய்யந்திரு மாளிகை தொடக்கப்பள்ளி வளாகத்தில் அறிவுசார் மையம் மற்றும் ஆய்வு மைய கட்டிடம் சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ் ரூ.2.50 கோடி மதிப்பில் அமைக்கும் பணிகள் முடிவுற்று விரைவில் திறக்கப்பட உள்ளது. இந்த மையம் தரைதளம், முதல் தளம் ஆகிய 2 தளங்களை கொண்டது.
தரை தளத்தில் 60 நபர்கள் அமரக்கூடிய வாசிப்பு அறை, 10 எண்ணிக்கை கொண்ட கணினி மையம், நூலக அறை, கண்காணிப்பு கேமராவுடன் கூடிய கட்டுப்பாட்டு அறை, முதல் தளத்தில் 35 நபர்கள் அமரக்கூடிய வாசிப்பு அறை, 5 எண்ணிக்கை கொண்ட கணினி மையம், 30 நபர்களுக்கான ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இம்மையத்தில் சிறப்பு அம்சங்களான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், 16 எண்ணிக்கையிலான கண்காணிப்பு கேமரா, 75 இஞ்ச் எல்.சி.டி 2 தொலைக்காட்சி, 2 புரஜெக்டர், ஸ்மார்ட் வகுப்புகளுக்கான மைக் மற்றும் சுவர் ஒலி பெருக்கிகள், புத்தக அலமாரிகள், சைகை மொழி பேனர்கள், அபாகஸ் உபகரணங்கள், டிக்டாக் டோ உபகரணங்கள், கண்ணாடி புரம்மை உபகரணங்கள், தளவாட பொருட்கள், மையத்திற்கு வெளியில் அமர்வதற்கான இருக்கைகள், கழிப்பறை வசதிகள் போன்ற சிறப்பு அம்சங்கள் உள்ளன.
இந்த மையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் இன்று ஆய்வு செய்தார். அனைத்து பணிகளும் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளதா என்பதையும் கேட்டறிந்து தொடர்ந்து மையத்தை நன்கு பராமரிப்பு செய்திட வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.
ஆய்வின்போது செயற் பொறியாளர் கு.செந்தில்குமார், உதவி செயற் பொறியாளர் எஸ்.செந்தில்குமார், உதவி பொறியாளர் அன்புசெல்வி ஆகியோர் உடனிருந்தனர்.






