என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Apply for higher pension"

    • சேலம் அருகே இரும்பாலை ரோடு தளவாய்பட்டி பகுதியில் மத்திய அரசின் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் (இ.பி.எப்.ஓ) செயல்பட்டு வருகிறது.
    • விண்ணப்பிக்க கூடுதலாக ஜூன் மாதம் 26-ந்தேதி வரையிலும் அவகாசம் வழங்கியது.

    சேலம்:

    சேலம் அருகே இரும்பாலை ரோடு தளவாய்பட்டி பகுதியில் மத்திய அரசின் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் (இ.பி.எப்.ஓ) செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பணி ஓய்வுக்கு பிறகு ஓய்வூதியம் மற்றும் பணப்பலன்களை வழங்குகிறது.

    ஊழியர்கள் மற்றும் ஊழியர்கள் பணிபுரியும் நிறுவனத்திடமிருந்து மாதந்தோறும் பெறப்படும் நிதியைக் கொண்டு, ஊழியரின் கணக்கில் வரவு வைக்கும் பணியை இந்த நிறுவனம் செய்து வருகிறது. ஊழியர்கள் தங்களது பணியில் இருந்து ஓய்வு பெறும் போது அவரது கணக்கில் இருக்கும் நிதிக்கு வட்டியுடன் சேர்த்து வருங்கால வைப்பு தொகையை இந்நிறுவனம் வழங்கி வரும் பணியை மேற்கொள்கிறது.

    புதிய வழிகாட்டுதல்

    இந்த நிலையில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியில் இருக்கும் பணியாளர்கள், ஓய்வு பெற்ற பிறகு அதிக ஓய்வூதியம் பெற உச்சநீதிமன்றம் வெளியிட்ட உத்தரவையடுத்து தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் புதிய வழிகாட்டுதலை வழங்கி யுள்ளது.

    இதன் மூலம் தற்போது ஓய்வூதிய திட்டத்தில் இணைந்துள்ள மாத ஊதிய தாரர்கள் அதிக ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்க முடியும். இதற்காக விண்ணப்பிக்க மார்ச் மாதம் 3-ந்தேதி வரை வழங்கப்பட்டு இருந்த கால அவகாசத்தை முதலில் ேம மாதம் 3-ந்தேதி வரையிலும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் நீட்டித்தது.

    தொடர்ந்து பணியாளர் களின் கோரிக்கையை ஏற்று விண்ணப்பிக்க கூடுதலாக ஜூன் மாதம் 26-ந்தேதி வரையிலும் அவகாசம் வழங்கியது. இந்த கெடு நேற்றுடன் முடிவடைந்தது. இருப்பினும் அவர்களின் நலன் கருதி விண்ணப்பிப் பதற்கு அடுத்த மாதம் 11-ந்தேதி வரை நீட்டித்து தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் உத்திரவிட்டுள்ளது.

    ×