search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மத்திய அரசு சார்பில் கால்நடை நலனை மேம்படுத்த புதிய இணையதளம்
    X

    மத்திய அரசு சார்பில் கால்நடை நலனை மேம்படுத்த புதிய இணையதளம்

    • சேலம் மாவட்டத்தில் கால்நடை மருத்துவ நிலையங் களில் சிகிச்சை, செயற்கை முறை கருவூட்டல், குடற்புழு நீக்கம், மலடு நீக்க சிகிச்சை மற்றும் திட்டப் பணிகள் செயலாற்றும் பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.
    • தேசிய செயற்கை முறை கருவூட்டல் அபிவிருத்தித்திட்டம் இலவசமாக செயல்படுத் தப்பட்டு வருகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கால்நடை மருத்துவ நிலையங் களில் சிகிச்சை, செயற்கை முறை கருவூட்டல், குடற்புழு நீக்கம், மலடு நீக்க சிகிச்சை மற்றும் திட்டப் பணிகள் செயலாற்றும் பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. தேசிய செயற்கை முறை கருவூட்டல் அபிவிருத்தித்திட்டம் இலவசமாக செயல்படுத் தப்பட்டு வருகிறது.

    அனைத்து நிலையங்களிலும் பிரதி சனிக்கிழமை தோறும் கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய் தடுப்பூசி, தேசிய நோய் ஒழிப்பு திட்டத்தின்கீழ் பசு மற்றும் எருமை இனங்களுக்கு கோமாரிநோய் தடுப்பூசி, அஸ்காட் திட்டத்தின்கீழ் ஆடுகளுக்கு ஆட்டம்மை மற்றும் துள்ளுமாரி நோய் தடுப்பூசி, ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி திட்டத்தின்கீழ் நோய் கிளர்ச்சிக்குள்ளான பகுதிகளில் ஆட்டுக்கொல்லிநோய் தடுப்பூசி போடப்படுகிறது.

    மாவட்டத்தில் கால்நடை கிளை நிலையங்கள் - 9, கால்நடை மருந்தகங்கள் - 149, நடமாடும் கால்நடை மருந்தகங்கள் - 6, கால்நடை மருத்துவமனைகள் - 7, கால்நடை பன்முக மருத்துவமனை- 1, கால்நடை நோய் புலனாய்வுப்பிரிவு-1 ஆகியவை உள்ளன.

    விவசாயிகளால் 6 லட்சத்து 11 ஆயிரத்து 161 பசுக்கள், 46 ஆயிரத்து 420 எருமைகள், 3 லட்சத்து 37 ஆயிரத்து 733- செம்மறி ஆடுகள், 5 லட்சத்து 57 ஆயிரத்து 541 வெள்ளாடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் நாடு முழுவதும் கால்நடைகளின் நலனை மேம்படுத்துவதற்காக நேற்று என்.ஏ.என்.டி.ஐ. (புதிய மருந்து மற்றும் தடுப்பூசி முறை) இணையதளத்தை மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா தொடங்கி வைத்தார்.

    கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை, மத்திய மருந்து தரக்கட்டுப் பாட்டு அமைப்பின் சுகம் ஆகியவை இந்த இணையதளத்துடன் ஒருங்கிணைந்து கால்நடை உற்பத்திப் பொருட்களை மதிப்பீடு செய்வதற்கும், வெளிப்படை த்தன்மை யுடன் ஒழுங்குமுறை ஒப்புதல் அளிப்பதற்கும் தடையின்றி வழிவகுக்கும் என அவர் கூறினார்.

    இந்த முன்னெடுப்பு டிஜிட்டல் இந்தியாவை மேம்படுத்தவும், கால்நடைகள் நலன் மற்றும் கால்நடைகள் தொழில்துறையை மேம்படுத்தவும் உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×