டிஎன்பிஎல்: சேலம் ஸ்பார்டன்ஸ் வெற்றி பெற 200 ரன்கள் நிர்ணயித்தது லைக்கா கோவை கிங்ஸ்

சேலம் அணியின் பந்துவீச்சாளர் சன்னி சந்து 3 விக்கெட் கைப்பற்றினார். சுஜய் - சாய் சுதர்சன் ஜோடி நிலைத்து நின்று ஸ்கோரை மளமளவென உயர்த்தியது.
சுஜய் - சாய் சுதர்சன்
சுஜய் - சாய் சுதர்சன்
Published on

சேலம்:

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு சேலத்தில் நடைபெறும் ஆட்டத்தில் லைக்கா கோவை கிங்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சேலம் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது.

லைக்கா கோவை கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் துவக்க வீரர் சுரேஷ் குமார் 4 ரன்னில் ஆட்டமிழந்த நிலையில், சுஜய் - சாய் சுதர்சன் ஜோடி நிலைத்து நின்று ஸ்கோரை மளமளவென உயர்த்தியது. சுஜய் 44 ரன்களும், சாய் சுதர்சன் 41 ரன்களும் எடுத்தனர். ஆதீக் ரஹ்மான் 31 ரன்களும், ராம் அரவிந்த் ஆட்டமிழக்காமல் 50 ரன்களும் அடிக்க, கோவை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் குவித்தது. சேலம் அணியின் பந்துவீச்சாளர் சன்னி சந்து 3 விக்கெட் கைப்பற்றினார்.

இதையடுத்து 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேலம் அணி களமிறங்குகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com