search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    டிஎன்பிஎல் கிரிக்கெட் - 79 ரன்கள் வித்தியாசத்தில் சேலத்தை வீழ்த்தியது கோவை
    X

    டிஎன்பிஎல் கிரிக்கெட் - 79 ரன்கள் வித்தியாசத்தில் சேலத்தை வீழ்த்தியது கோவை

    • முதலில் ஆடிய கோவை அணி 199 ரன்கள் குவித்தது.
    • தொடர்ந்து ஆடிய சேலம் அணி 120 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    சேலம்:

    டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரவு சேலத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் லைக்கா கோவை கிங்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சேலம் அணி பீல்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய கோவை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 199 ரன்கள் குவித்தது. ராம் அரவிந்த் அதிரடியாக ஆடி 50 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். சுஜய் 44 ரன்களும், சாய் சுதர்சன் 41 ரன்களும், ஆதீக் ரஹ்மான் 31 ரன்களும் எடுத்தனர்.

    சேலம் அணியின் சார்பில் சன்னி சந்து 3 விக்கெட் கைப்பற்றினார்.

    இதையடுத்து, 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேலம் அணி களமிறங்கியது. கோவை அணியினரின் துல்லியமான பந்துவீச்சில் சேலம் அணி வீரர்கள் சிக்கினர். இதனால் விக்கெட்டுகள் விரைவில் வீழ்ந்தன. சன்னி சந்து அதிகபட்சமாக 29 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், சேலம் அணி 120 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் கோவை அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலிலும் முதலிடத்தில் நீடிக்கிறது.

    கோவை அணி சார்பில் தாமரைக் கண்ணன் 3 விக்கெட்டும், ஷாருக் கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    Next Story
    ×