என் மலர்
சேலம்
- சேலம் வீராணம் அருகே உள்ள ஆச்சாங்குட்டப்பட்டி ஆதிதிராவிடர் காலனி பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி.
- இவர், அந்தப் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.
சேலம்:
சேலம் வீராணம் அருகே உள்ள ஆச்சாங்குட்டப்பட்டி ஆதிதிராவிடர் காலனி பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் வீரமணி (வயது 27). திருமணம் ஆகாத இவர், அந்தப் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில், வீரமணி இன்று அதிகாலை வீராணம் மெயின் ரோடு சுக்கம்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் உள்ள சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உடல் நசுங்கி பரிதாபமாக இறந்து கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து வீராணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வீரமணியின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து வீரமணியின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பிரபல ரவுடி சூரி (வயது 65). இவர் மீது பிரபல ரவுடி செல்லத்துரை கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
- கொலை வழக்கு தொடர்பாக 2 நாட்களுக்கு முன்பு கிச்சிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சூரியிடம் விசாரணை நடத்தினார்.
சேலம்:
சேலம் கிச்சிப்பாளை யத்தை சேர்ந்தவர் பிரபல ரவுடி சூரி (வயது 65). இவர் மீது பிரபல ரவுடி செல்லத்துரை கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த தங்கபாண்டி என்பவர் கொலை வழக்கு தொடர்பாக 2 நாட்களுக்கு முன்பு கிச்சிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சூரியிடம் விசாரணை நடத்தினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முருகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நாட்டாமை கட்டிடம் முன்பு நடைபெற்றது.
அப்போது போலீசாருக்கு எதிராக அவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர். இதை அடுத்து அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 4 பெண்கள் உள்பட 14 பேரையும் கைது செய்தனர்.
- லட்சுமி (வயது 42). இவர், 3-வதாக பிரபல ரவுடி மேட்டூர் ரகு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
- கடந்த மாதம் 19-ந்தேதி சமத்துவபுரத்தில் உள்ள வீட்டில் லட்சுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
சேலம்:
சேலம் சீரகாபாடி சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் காளியம்மாள் என்கிற லட்சுமி (வயது 42). இவர், 3-வதாக பிரபல ரவுடி மேட்டூர் ரகு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
கடந்த மாதம் 19-ந்தேதி சமத்துவபுரத்தில் உள்ள வீட்டில் லட்சுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது தொடர்பாக அவரது 3-வது கணவரான மேட்டூர் ரகுவை போலீசார் தேடி வந்த நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் கோர்ட்டில் சரண் அடைந்தார். மேலும் அவரது கூட்டாளிகளான ேஷக் மைதீன்(29), ஜோசப் என்கிற பாலாஜி(19), ஆனந்த் (28) ஆகியோர் பவானி கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
இதையடுத்து ஆட்டையாம்பட்டி போலீசார் கடந்த 29-ந்தேதி ரகுவை காவலில் எடுத்து விசாரித்ததில் லட்சுமி கள்ளத்தொடர்பை கைவிடாததால் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தார். பின்னர் ரகுவை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கார் பறிமுதல்
இந்த வழக்கில் தொடர்புடைய ரகுவின் கூட்டாளிகள் ேஷக் மைதீன், ஜோசப் என்கிற பாலாஜி , ஆனந்த் ஆகியோரிடம் விசாரிக்க ஆட்டையாம்பட்டி போலீசாருக்கு சேலம் 4-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2 நாட்கள் அனுமதி கொடுத்தது.
இதையடுத்து நேற்று முன்தினம் முதல் அவர்களிடம் நடத்திய விசாரணையில் லட்சுமி கொலையில் 3 பேரும் உடந்தையாக இருந்ததும், இதற்காக ெசாகுசு கார் ஒன்றை பயன்படுத்தியதும் தெரியவந்தது. இந்த காரை போலீசார் பறிமுதல் செய்து, போலீஸ் நிலையத்தில் கொண்டு வந்து நிறுத்தினர்.
ஜெயிலில் அடைப்பு
மேலும் இவர்கள் 3 பேருடைய போலீஸ் காவல் நேற்றுடன் முடிவடைந்ததால் அவர்களை போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- பிரபு (வயது 36). சாராய வியாபாரியான இவர், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 26-ந்தேதி வலசக்கல்பட்டி ஏரிக்கரையில் சாராயம் காய்ச்சினார்.
- டி.எஸ்.பி. ராமச்சந்திரன் மேற்பார்வை யில் சப்-இன்ஸ்பெக்டர் அல்லிமுத்து தலைமையிலான போலீசார் சுற்றி வளைத்தனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் கெங்கவல்லி இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் பழனிமுத்து மகன் பிரபு (வயது 36). சாராய வியாபாரியான இவர், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 26-ந்தேதி வலசக்கல்பட்டி ஏரிக்கரையில் சாராயம் காய்ச்சியபோது டி.எஸ்.பி. ராமச்சந்திரன் மேற்பார்வை யில் சப்-இன்ஸ்பெக்டர் அல்லிமுத்து தலைமையிலான போலீசார் சுற்றி வளைத்தனர்.
அப்போது போலீசாரின் பிடியில் இருந்து தப்பிய பிரபு தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். இந்த நிலையில் அவர் கெங்கவல்லி அருகே நடுவலூரில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையிலான போலீசார் நேற்று இரவு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது உறவினர் வீட்டில் தங்கியிருந்த பிரபுவை போலீசார் சுற்றி வளைத்தனர்.
இதை பார்த்ததும் அவர்களை தள்ளி விட்டு பிரபு ஓட்டம் பிடித்தார். உடனே போலீசார் துரத்திச் சென்று மடக்கி பிடித்து அவரை கைது செய்தனர்.
- பண்ணப் பட்டி மாட்டுக்காரன்புதூர் பகுதியை சேர்ந்தவர் ரவி குமார் சமையல் அறையில் கியாஸ் சிலிண்டர் பயன்படுத்தி சமையல் செய்து வந்தார்.
- நேற்று ரெகுலேட்டர் டியூப்பில் கியாஸ் கசிவு ஏற்பட்டுள்ளது.
காடையாம்பட்டி:
சேலம் மாவட்டம் காடை யாம்பட்டி அருகே பண்ணப் பட்டி மாட்டுக்காரன்புதூர் பகுதியை சேர்ந்தவர் ரவி குமார் (வயது 45). தொழி லாளி. இவர் வீட்டில் சமையல் அறையில் கியாஸ் சிலிண்டர் பயன்படுத்தி சமையல் செய்து வந்தார்.
நேற்று ரெகுலேட்டர் டியூப்பில் கியாஸ் கசிவு ஏற்பட்டுள்ளது. இதை அவரது குடும்பத்தினர் கவனிக்கவில்லை. இதனால் கியாஸ் கசிவு சமயல் அறை முழுவதும் பரவி தீப்பிடித்தது.
இதனை கண்ட ரவிகுமார் குடும்பத்தினர் உடனடியாக காடையாம்பட்டி தீய ணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். காடை யாம்பட்டி நிலைய அலுவ லர் ராஜசேகரன் தலைமை யில் தீயணைப்புத் துறையி னர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இத னால் தீ மற்ற பகுதிகளுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது.
- தமிழகம் முழுவதும் தக்காளி வரத்து குறைந்துள்ளதால் அதன் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
- சேலம் உழவர் சந்தைகளில் ஒரு கிலோ தக்காளி இன்று காலை ரூ.95-105 முறை விற்பனை ஆகிறது.
சேலம்:
தமிழகம் முழுவதும் தக்காளி வரத்து குறைந்துள்ளதால் அதன் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் சேலம் உழவர் சந்தைகளுக்கும் தக்காளி வரத்து அடியோடு குறைந்துள்ளது. இதனால் தக்காளி விலை பல மடங்கு உயர்ந்து உள்ளது.
சேலம் உழவர் சந்தைகளில் ஒரு கிலோ தக்காளி இன்று காலை ரூ.95-105 முறை விற்பனை ஆகிறது. மற்ற காய்கறிகளின் விலை விவரம் வருமாறு:
உருளைக் கிழங்கு - ரூ.30-60, சின்ன வெங்காயம் - ரூ.75-80, பெரிய வெங்காயம் - ரூ.25-28, பச்சை மிளகாய்- ரூ.80-85, கத்தரி -ரூ.40-44, வெண்டைக்காய்-ரூ.28-30, முருங்கைகாய்-ரூ.30-50, பீர்க்கங்காய் -ரூ.40,
சுரைக்காய்- ரூ.20-24, புடலங்காய்-ரூ.24-25, பாகற்காய்-ரூ.50-55, தேங்காய் - ரூ.20-25, முள்ளங்கி -ரூ.20-24, பீன்ஸ் - ரூ.98-105, அவரை- ரூ.70-75, கேரட் - ரூ.60- 74, மாங்காய்- ரூ.25-30, வாழைப்பழம்-ரூ.35-45-55,
கீரைகள் - ரூ.20-24, பப்பாளி - ரூ.20-24, கொய்யா-ரூ.40, சப்போட்டா - ரூ.35-40, ஆப்பிள் - ரூ.180-200, சாத்துக்குடி - ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது.
நாமக்கல் உழவர் சந்தையில் தக்காளி ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 250 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சேலம் மார்க்கெட்களில் ஒரு கிலோ இஞ்சி 300 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. இனிவரும் நாட்களில் மேலும் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
- ஏற்காட்டில் இருந்து நாகலூர் கிராமம் செல்லும் சாலையில் உள்ள தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் அருகில் ராட்சத மரம் ஒன்று சாலையின் குறுக்கே விழுந்தது.
- மரம் விழும் சமயத்தில் அந்த சாலையில் வாகனங்கள் எதுவும் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
ஏற்காடு:
ஏற்காட்டில் இருந்து நாகலூர் கிராமம் செல்லும் சாலையில் உள்ள தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் அருகில் ராட்சத மரம் ஒன்று சாலையின் குறுக்கே விழுந்தது. மரம் விழும் சமயத்தில் அந்த சாலையில் வாகனங்கள் எதுவும் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
மரம் மின்சார கம்பிகள் மீது விழுந்ததில் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மின்சார துறையினர், வருவாய் துறையினர் மற்றும் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பொதுமக்கள் உதவியுடன் சாலையின் குறுக்கே விழுந்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த சாலையில் பெரும் போக்குவரத்து பதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து சுமார் 1½ மணிநேரம் போராட்டத்திற்கு பிறகு மாலை 4. 45 மணிக்கு சாலையின் குறுக்கே விழுந்த மரத்தை அப்புறப் படுத்தியதை தொடர்ந்து அந்த சாலையில் போக்கு வரத்து சரி செய்யப்பட்டது.
- முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில விளையாட்டு போட்டிகள் சென்னையில் கடந்த 1-ந்தேதி தொடங்கியது.
- சேலம் மாவட்ட பள்ளி பிரிவினை சார்ந்த மாண விகள் தங்கப்பதக்கம் வென்றுள்ளனர்.
சேலம்:
முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில விளையாட்டு போட்டிகள் சென்னையில் கடந்த 1-ந்தேதி தொடங்கியது. வருகிற 25-ந்தேதி வரை போட்டிகள் நடைபெறு கிறது. இதில் ஏற்கனவே, சேலம் மாவட்டத்தின் சார்பில் கலந்து கொண்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் சுருள்வாள் வீச்சுப் பிரிவில் வெள்ளி மற்றும் வெண் கலப் பதக்கமும், அலங்கார வீச்சுப் பிரிவில் வெள்ளி பதக்கமும் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் கையுந்து விளையாட்டு போட்டியில் சேலம் மாவட்ட பள்ளி பிரிவினை சார்ந்த மாண விகள் தங்கப்பதக்கம் வென்றுள்ளனர். மாவட்ட அளவில் பள்ளி பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவிகள் மாநில அள விலான போட்டியில் வெற்றிபெற்று ரொக்கப் பரிசு ரூ.6 லட்சம் பெற்றுள்ளனர்.
கையுந்து போட்டியில் வெற்றி பெற்ற அபிநயா, யாமினி, நிஷித்திரா, ரஞ் சினி, கனிஷ்கா, லாவண்யா ஸ்ரீ, செல்வி, மோனிகா, காயத்ரி, ஜுவிகா, கிருத்திகா, எம்.மோனிகா ஆகிய மாணவிகள் மாவட்ட கலெக்டர் கார்மேகத்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவர்களுக்கு கலெக்டர் கார்மேகம் பாராட்டு தெரிவித்தார்.
அப்போது மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன், மாவட்ட கையுந்துப்பந்து சங்க செயலாளர் சண்முகவேல், கையுந்துப்பந்து சங்கத்தலை வர் ராஜ்குமார், சங்க தலைமை புரவலர் தமிழர சன் ஆகியோர் உடனிருந்த னர்.
- மேட்டூரில் 600 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட புதிய அனல் மின் நிலையமும், 840 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட பழைய அனல் மின் நிலையமும் இயங்கி வருகிறது.
- புதிய அனல் மின் நிலையத்தில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக நேற்று மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் தொடங்கப்பட்டது .
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூரில் 600 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட புதிய அனல் மின் நிலையமும், 840 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட பழைய அனல் மின் நிலையமும் இயங்கி வருகிறது. பழைய அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 4 யூனிட்டுகள் செயல்பட்டு வருகிறது.
பராமரிப்பு பணிகள்
இந்த நிலையில் தற்போது புதிய அனல் மின் நிலையத்தில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக நேற்று மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் தொடங்கப்பட்டது .
இதன் காரணமாக மின் உற்பத்தி அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது.
1-வது யூனிட்
இது போன்று பழைய அனல் மின் நிலையத்தில் 1-வது யூனிட்டில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மீதமுள்ள 3 யூனிட்டுகளில் மட்டுமே மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.
அதாவது 840 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட பழைய அனல் மின் நிலையத்தில் தற்போது 630 மெகா வாட் மின் உற்பத்தி மட்டுமே நடை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
- கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, போக்குவரத்துக் கழக பணியாளர்கள் விம்ஸ் மருத்துவமனை பங்களிப்புடன் ஜான்சன்பேட்டை கிளை வளாகத்தில் சிறப்பு மருத் துவ முகாம் நடைபெற்றது.
- இதில் சுமார் 270-க்கும் மேற்பட்ட பணி யாளர்கள் மற்றும் அவர்தம் குடும்ப உறுப்பினர்களும், மற்றும் விம்ஸ் மருத்துவமனை மருத்துவ குழுவினரும் பங்கேற்றனர்.
சேலம்:
கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, போக்குவரத்துக் கழக பணியாளர்கள் மற்றும் அவர்தம் குடும்ப உறுப்பி னர்களுக்கு விம்ஸ் மருத்து வமனை பங்களிப்புடன் ஜான்சன்பேட்டை கிளை வளாகத்தில் சிறப்பு மருத் துவ முகாம் நடைபெற்றது.
தொடர்ந்து இன்று ராம கிருஷ்ணா சாலையில் உள்ள தலைமை அலுவல கத்தில் சிறப்பு முகாம் நடை பெற்றது. முகாமில் போக்கு வரத்து கழக பணியாளர் களுக்கு ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவை கண்டறியும் பரி சோதனை, இ.சி.ஜி. மற்றும் இ.சி.ஓ. பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
மேலும், இதில் சுமார் 270-க்கும் மேற்பட்ட பணி யாளர்கள் மற்றும் அவர்தம் குடும்ப உறுப்பினர்களும், சேலம் மண்டல பொது மேலாளர், துணை மேலா ளர்கள், கோட்ட மேலாளர், உதவி மேலாளர்கள், அனைத்துத்துறை பணியா ளர்கள், தொழிற் சங்க பிரதிநிதிகள் மற்றும் விம்ஸ் மருத்துவமனை மருத்துவ குழுவினரும் பங்கேற்றனர்.
முகாமை சேலம் மண்டல அரசு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் பொன் முடி தொடங்கி வைத்தார். நாளை(வெள்ளிக்கிழமை) நாமக்கல் கிளை வளாகத்தில் முகாம் நடைபெற உள்ளது. இந்தசிறப்பு மருத்துவ முகா மினை பயன்படுத்தி பணி யாளர்கள் தங்கள் உடல் நலனை காத்திடுமாறு நிர் வாக இயக்குநர் பொன்முடி கேட்டுக்கொண்டுள்ளார்.
- சேலம் இரும்பாலை போலீசார் கடந்த 29-ந்தேதி நள்ளிரவில் ரோந்து பணி யில் ஈடுபட்டனர்.
- நாயக்கன் பட்டி என்ற இடத்தில் ரோந்து சென்றபோது போலீசாரை கண்டதும் ஒரு கும்பல் நாட்டு துப்பாக்கி, மோட்டார் சைக்கிளை அங்கு போட்டு விட்டு தப்பி ஓடியது.
சேலம்:
சேலம் இரும்பாலை போலீசார் கடந்த 29-ந்தேதி நள்ளிரவில் ரோந்து பணி யில் ஈடுபட்டனர். நாயக்கன் பட்டி என்ற இடத்தில் ரோந்து சென்றபோது போலீசாரை கண்டதும் ஒரு கும்பல் நாட்டு துப்பாக்கி, மோட்டார் சைக்கிளை அங்கு போட்டு விட்டு தப்பி ஓடியது. போலீசார், இவற்றை பறிமுதல் செய்து, விசாரித்து வந்தனர்.
விசாரணையில் வேடு காத்தாம்பட்டியை சேர்ந்த சரவணன் (வயது 23), திரு மலைகிரி பச்சா கவுண்டர் தெருவை சேர்ந்த மோகன் ராஜ் (19) ஆகியோர் இந்த துப்பாக்கி மற்றும் மோட் டார் சைக்கிளை போட்டு விட்டு ஓடியதும், இவர்கள் அடிக்கடி வனவிலங்குகள் வேட்டையில் ஈடுபடுவதும் தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, நேற்று 2 பேரையும் கைது செய்தனர். மேலும் போலீ சார், இவர்களது கூட்டா ளியை தேடி வருகின்றனர்.
- சேலம் அம்மாப்பேட்டை செங்கல் அணை சாலையை சேர்ந்தவர் செல்வம் இவரது தம்பி ராஜகணபதி இவர்கள் இடையே சொத்து தகராறு இருந்தது.
- ஜூன் மாதம் 18-ந்தேதி அவர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் செல்வம் தனது தம்பி ராஜகணபதியை கட்டையால் தாக்கினார்.
ேசலம்:
சேலம் அம்மாப்பேட்டை செங்கல் அணை சாலையை சேர்ந்தவர் செல்வம் (வயது 42). இவரது தம்பி ராஜகணபதி (45). இவர்கள் இடையே சொத்து தகராறு இருந்தது. கடந்த ஜூன் மாதம் 18-ந்தேதி அவர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் செல்வம் தனது தம்பி ராஜகணபதியை கட்டையால் தாக்கினார். அதில் ராஜகணபதி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலை குறித்து அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வத்தை கைது செய்து சேலம் மத்திய ெஜயிலில் அடைத்தனர். தொடர்ந்து அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இதனால் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள செல்வம் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.






