என் மலர்tooltip icon

    சேலம்

    • சேலம் அருகே ரெயிலில் அடிபட்டு ஒருவர் பலியானார்.
    • அவர் யார் என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம்- வீரபாண்டி ரெயில் நிலையங்களுக்கிடையே நேற்று முன்தினம் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இது பற்றி சேலம் ரெயில் நிலைய அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் சேலம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்த நபருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்த நபர் பெயர்? மற்றும் எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இதனால், அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க முடியாத நிலை உள்ளது. இறந்த நபர் நீலம் மற்றும் பச்சை நிறத்தில் கட்டம் போட்ட சட்டை, அதே நிறத்தில் லுங்கி அணிந்திருந்தார்.

    பச்சை, வெள்ளை நிறம் கலந்த துண்டு வைத்திருந்தார். அவருடைய வலது பக்க கன்னத்தில் ஒரு கருப்பு மச்சம் காணப்படுகிறது என போலீசார் தெரிவித்தனர். அவரை பற்றி அறிந்தவர்கள் சேலம் ரெயில்வே போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

    • விஞ்ஞானி பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஹசானே ஒச்சேயிட் என்பவரை திருமணம்
    • மாணவர்களுக்கு ரோபா தொழில்நுட்பம் குறித்து பயிற்சி

    வாழப்பாடி

    வாழப்பாடியைச் சேர்ந்த பெண் பொறியாளர் கிருத்திகா (30), ஜெர்மன் நாட்டில் சர்வதேச அளவிலான முன்னணி ரோபோ தயாரிப்பு நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இதே துறையில் பணிபுரியும் விஞ்ஞானி பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஹசானே ஒச்சேயிட் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர், தமிழகத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவ–மாணவிகளுக்கு, ரோபோ தொழில்நுட்பம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அடிப்படை பயிற்சி அளிக்கும் நோக்கில், மையா மற்றும் ரோபாட்டிக் பவுன்டேசன் என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளார்.

    இந்த அமைப்பின் வாயிலாக வாழப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கணித மற்றும் எந்திரவியல் மன்றத்துடன் இணைந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு ரோபா தொழில்நுட்பம் குறித்து பயிற்சி அளிக்கும் திட்டத்தை தொடங்கியுள்ளார். பள்ளி கணினி ஆய்வகத்தில் நேற்று நடைபெற்ற தொடக்க விழாவிற்கு, தலைமை ஆசிரியர் சுப்ரமணியன் தலைமை வகித்தார். கணினி ஆசிரியர் ஸ்ரீமுனிரத்தினம் வரவேற்றார்.

    பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் கலைஞர்புகழ், குணாளன், ரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாழப்பாடி போலீஸ் டி.எஸ்.பி. ஹரிசங்கரி பயிற்சியை தொடங்கி வைத்தார். பெண் பொறியாளர் கிருத்திகா மற்றும் இவரது ரோபோ தொழில்நுட்ப விஞ்ஞானி ஹசானே ஒச்சேயிட் ஆகியோர் ஜெர்மனியில் இருந்து, ரோபா தொழில்நுட்பம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு கருத்துரை வழங்கினர்.

    விழாவில், ரோபோ தொழில்நுட்ப பயிற்சியாளர் செந்தில்குமார், சதீஸ்குமார் ஆசிரியர்கள் பரிமளா, ஜோதிசுடர், பழனிமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு போதிய பயிற்சி அளித்து 2024 பிப்ரவரி மாதத்தில் நடைபெறும் ரோபோ வடிவமைப்பு போட்டியில் பங்கேற்க செய்ய திட்டமிட்டுள்ளதாக, பெண் பொறியாளர் கிருத்திகா தெரிவித்தார்.

    • சேலம் அருகே மேச்சேரி பகுதியில் வடமாநில இளம்பெண் பாட்டிலால் தாக்கப்பட்டார்.
    • இது தொடர்பாக செல்வராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    சேலம்:

    உத்தரபிரதேச மாநிலம் ஜெயின்பூர் குஷிநகரை சேர்ந்தவர் சைலேஷ். இவர் தனது மனைவி கிரண்தேவி (20). இந்த தம்பதியினர் சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள எம்.காளிப்பட்டி அமரத்தானூரில் வசித்து வருகின்றனர். கிரண் தேவி நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள மளிகை கடைக்கு சென்றார்.

    அங்கு கடை உரிமையாளர் கலையரசியுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த அப்பகுதியை சேர்ந்த செல்வராஜ் (36) என்பவர் கலையரசி, கிரண்தேவியிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வெளி மாநிலத்தில் இருந்து வந்து என்னையே எதிர்த்து பேசு கிறாயா? என கூறி சோடா பாட்டிலை எடுத்து உடைத்து கிரண்தேவியை தாக்கினார்.

    அதில் கிரண்தேவிக்கு காயம் ஏற்பட்டது. இதை யடுத்து அவரை மேச்சேரியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது பற்றி மேச்சேரி போலீ சில் கிரண்தேவி புகார் கொடுத்தார்.

    அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, செல்வராஜ் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாக இருந்த செல்வராஜை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை மேட்டூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    • கடந்த 2 நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது.
    • ஏற்காட்டில் கடும் குளிர் நிலவி வருகிறது.

    சேலம்

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஏற்காட்டிலும் கடந்த 2 நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. பனிமூட்டமும் காணப்படுகிறது.

    இதனால் ஏற்காட்டில் கடும் குளிர் நிலவி வருகிறது. குறிப்பாக ஏற்காட்டில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் தான் கடும் குளிர் நிலவும். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக தற்போது ஏற்காட்டில் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்களும் வீட்டில் முடங்கியுள்ளனர்.

    சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் குறைவாக உள்ளது. இதனால் ஏற்காட்டில் படகு குழாம், அண்ணா பூங்கா, மான் பூங்கா, ரோஜா தோட்டம், பக்கோடா பாயிண்ட், சேர்வராயன் கோயில் லேடீஸ் சீட் ஜெண்ட் சீட், மீன் பண்ணை என அனைத்து பகுதிகளிலும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச் சோடி காணப்படுகிறது.

    இதனால் கடைகளிலும் வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

    • பால வாடியை சேர்ந்த சக்திவேல் மற்றும் அவரது மனைவி ஆகியோர் பாதிக்கப்பட்டுள் ளனர்.
    • மேட்டூர் பகுதியில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பால வாடி வெடிகாரனுர் மற்றும் காவிரிபுரம் வெளியிட்ட பகுதிகளில் காய்ச்சல் வேக மாக பரவி வருகிறது. பால வாடியை சேர்ந்த சக்திவேல் மற்றும் அவரது மனைவி ஆகியோர் பாதிக்கப்பட்டுள் ளனர். அதேபோல் சுற்று வட்டார பகுதிகளில் ஏராள மான குழந்தைகளும் பாதிக் கப்பட்டுள்ளன.

    மேலும் மேட்டூர் பகுதியில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    அதேபோல் தனியார் மருத்துவமனைகளிலும் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறு வார்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே காய்ச்சலை தடுக்க அதிகாரி கள் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அனைத்து ரேஷன் கடைகளிலும் யூ.பி.ஐ., கியூ.ஆர். கோடு மூலம் ரொக்க மில்லா பண பரிவர்த்தனை வசதி
    • கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் ரேஷன் கடை களில் பே.டி.எம்., கூகுள் பே, போன் பே போன்ற யு.பி.ஐ. வசதிகள் மூலம் பணம் பரி மாற்றம்

    சேலம்:

    தமிழகத்தில் கூட்டுறவுத் துறை சார்பில் 35 ஆயிரத் துக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

    இதன் மூலம் 2.20 கோடி ரேஷன் கார்டுகளுக்கு இலவச அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்களும், சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்க ளும் வழங்கப்பட்டு வரு கிறது. இந்த நிலையில் கூட்டு றவுத்துறை மூலம் செயல்ப டும் அனைத்து ரேஷன் கடைகளிலும் யூ.பி.ஐ., கியூ.ஆர். கோடு மூலம் ரொக்க மில்லா பண பரிவர்த்தனை வசதிகளை ஏற்படுத்த கூட்டு றவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டு உள்ளார்.

    இது தொடர்பாக இணை பதிவாளர்களுக்கு அனுப்பப் பட்டுள்ள சுற்றறிக்கையில், கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் ரேஷன் கடை களில் பே.டி.எம்., கூகுள் பே, போன் பே போன்ற யு.பி.ஐ. வசதிகள் மூலம் பணம் பரி மாற்றம் செய்வதற்கு தேவை யான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியுடன் இணைந்து மேற்கொள்ள வேண்டும். அனைத்து ரேஷன் கடைகளிலும் யு.பி.ஐ. வசதி மூலம் ரொக்கமற்ற பண பரிவர்த்தனை மேற்கொள் ளப்படுவதை உறுதி செய்து அதன் அறிக்கையை அனுப்பி வைக்க வேண்டும்.

    தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி மற்றும் அனைத்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி களிலும் ஒருங்கிணைந்த பண பரிவர்த்தனை தரவும் யு.பி.ஐ. வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது. பேடிஎம் நிறு வனத்துடன் மாத கட்ட ணத்தில் ரொக்கமற்ற பண பரிமாற்றம் செய்வதற்கு தேவையான நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும்.

    அனைத்து ரேஷன் கடை களிலும் யு.பி.ஐ. முறை மூலம் ரொக்கமற்ற பண பரிவர்த்தனை மேற்கொள் ளப்படுவதற்கு தேவையான நடவடிக்கையை மேற்கொள் ளும் போது, பே.டி.எம். நிறுவனத்தின் கட்டண விவரங்களையும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என அதில் கூறப் பட்டுள்ள. இதை அடுத்து அனைத்து ரேஷன் கடைகளி லும் ரொக்கமற்ற பண பரி வர்த்தனை செய்ய நடவடிக் கைகள் தொடங்கி யுள்ளன. இதனால் விரைவில் அனைத்து ரேஷன் கடைகளி லும் மின்னணு பண பரி மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • கடைக்கு வந்த மர்ம நபர்கள் 2 பேர், இவரிடம் கத்தி யைக்காட்டி மிரட்டி இவ ரிடம் இருந்த ரூ.50 ஆயி ரத்தை பறிப்பு
    • கண்கா ணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து பணம் பறித்த மர்ம நபர்களை அடை யாளம் கண்டனர்.

    வாழப்பாடி

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த வெள்ளளாகுண்டம் கிரா மத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 45). இவர் இதே கிராமத்தில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தி னம் பட்டப்பகலில் இவரது கடைக்கு வந்த மர்ம நபர்கள் 2 பேர், இவரிடம் கத்தி யைக்காட்டி மிரட்டி இவ ரிடம் இருந்த ரூ.50 ஆயி ரத்தை பறித்து சென்றனர்.

    இதுகுறித்து பழனிச்சாமி வாழப்பாடி போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் இன்ஸ்பெக்டர் உமாசங்கர் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தீவிர விசா ரணை நடத்தினர். கண்கா ணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து பணம் பறித்த மர்ம நபர்களை அடை யாளம் கண்டனர்.

    பள்ளிப்பாளையத்தை சேர்ந்தவர்கள்

    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த இருவரும் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (28) மற்றும் வினோத் (24) என்பது தெரியவந்தது. இவர்கள் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன.

    இதனையடுத்து இருவரையும் நேற்று இரவு அதிரடியாக போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்பு அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஆத்தூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    பட்டப்பகலில் கத்திமுனையில் பணம் பறித்த கொள்ளையர்களை ஒரே நாளில் கைது செய்து பணத்தை மீட்ட வாழப்பாடி போலீசாருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    • சரக்கு வாகனத்தில் பொதுமக்களை ஏற்றுவது போன்ற சாலை விதிமீறல்க ளில் ஈடுபடுவோரின் உரிமம் தற்காலிகமாக ரத்து
    • போதையில் வாகனம் ஓட்டுவது போன்ற செயலில் ஈடுபடுவதற்கு 3 மாதம் ஓட்டுநர் உரிமம் ரத்து

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் சாலை விபத்துகளை குறைக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற னர். அதிவேகமாக வாகனம் ஓட்டுவது, சிக்னலை மீறு வது, அதிக பாரம் ஏற்று வது, சரக்கு வாகனத்தில் பொதுமக்களை ஏற்றுவது போன்ற சாலை விதிமீறல்க ளில் ஈடுபடுவோரின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு வருகிறது.

    செல்போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவது, போதையில் வாகனம் ஓட்டுவது போன்ற செயலில் ஈடுபடுவதற்கு 3 மாதம் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படுகிறது.

    சேலம் சரகத்தில் கடந்த மாதத்தில் அதிவேகமாக வாகனம் ஓட்டிய 30 பேர், அதிக பாரம் ஏற்றி வந்த ஒருவர், சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி வந்த 25 டிரைவர்கள், சிவப்பு விளக்கு மீறி இயக்கிய 45 பேர், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய 50 பேர், சாலை விபத்தில் உயிரிழப்பு ஏற்படுத்திய 34 டிரைவர்கள் உட்பட 196 பேரின் லைசென்ஸ் ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு போலீசார் பரிந்துரை செய்தனர்.

    இதையடுத்து போக்கு வரத்து விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டிய 196 பேரின் ஓட்டுநர் உரிமம் 3 மாதத்திற்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. குடி போதையில் வாகனம் ஓட்டிய 5 பேரின் லைசென்ஸ் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த மாதம் 12-ந்தேதி முதல் 12 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
    • கடந்த 2-ந்தேதி மாலை முதல் டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் அளவு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது.

    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்துள்ளது. ஒகேனக்கல் காவிரியில் கடந்த 3 நாட்களாக நீர்வரத்து 700 கன அடியாக இருந்த நிலையில், நேற்று காலை முதல் விநாடிக்கு 500 கன அடியாக சரிந்துள்ளது.

    அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று 142 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை வினாடிக்கு 226 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த மாதம் 12-ந்தேதி முதல் 12 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    அதன் பிறகு 13 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. பின்னர் கடந்த 2-ந்தேதி மாலை முதல் டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் அளவு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. தற்போது பாசனத்திற்கான தண்ணீர் தேவை மீண்டும் அதிகரித்துள்ளது.

    இதனை கருத்தில் கொண்டு இன்று காலை 6 மணி முதல் பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    நீர்வரத்து வினாடிக்கு 300 கன அடிக்கு கீழ் குறைந்துள்ள நிலையில் அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் அளவு மேலும் அதிகரிக்கப்பட்டு உள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

    நேற்று 85.16 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி அணை நீர்மட்டம் 84.34 அடியாக சரிந்தது.

    • சேலம் இரும்பாலை போலீசார் கடந்த 29-ந்தேதி நள்ளிரவில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • போலீசாரை கண்டதும் ஒரு கும்பல் நாட்டு துப்பாக்கி, மோட்டார் சைக்கிளை அங்கு போட்டு விட்டு தப்பி ஓடியது.

    சேலம்:

    சேலம் இரும்பாலை போலீசார் கடந்த 29-ந்தேதி நள்ளிரவில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். நாயக்கன் பட்டி என்ற இடத்தில் ரோந்து சென்றபோது போலீசாரை கண்டதும் ஒரு கும்பல் நாட்டு துப்பாக்கி, மோட்டார் சைக்கிளை அங்கு போட்டு விட்டு தப்பி ஓடியது. போலீசார், இவற்றை பறிமுதல் செய்து, விசாரித்து வந்தனர்.

    விசாரணையில் வேடு காத்தாம்பட்டியை சேர்ந்த சரவணன் (வயது 23), திருமலைகிரி பச்சா கவுண்டர் தெருவை சேர்ந்த மோகன் ராஜ் (19) ஆகியோர் இந்த துப்பாக்கி மற்றும் மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு ஓடியதும், இவர்கள் அடிக்கடி வனவிலங்குகள் வேட்டையில் ஈடுபடுவதும் தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, நேற்று 2 பேரையும் கைது செய்தனர். மேலும் போலீசார், இவர்களது கூட்டாளியை தேடி வருகின்றனர்.

    • புதிய பாரத எழுத்தறிவுத்திட்டம் (2022-2027) அனைத்து மாவட்டங்க ளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • முற்றிலும் எழுதப் படிக்க தெரியாத 15 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு கல்வியை வழங்கிடும் வகையில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    சேலம்:

    தமிழ்நாடு எழுத்தறிவு முனைப்பு ஆணையத்தின் கீழ் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் வாயிலாக புதிய பாரத எழுத்தறி வுத்திட்டம் (2022-2027) அனைத்து மாவட்டங்க ளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    முற்றிலும் எழுதப் படிக்க தெரியாத 15 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு கல்வியை வழங்கிடும் வகையில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    சேலம் மாவட்டம்

    சேலம் மாவட்டத்தில் நடப்பாண்டு இத்திட்டத்தின் கீழ் 10,694 ஆண்கள், 21,710 பெண்கள், 9 திருநங்கைகள் என மொத்தம் 32,413 பேருக்கு அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு கல்வி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களில் எஸ்.சி.பிரிவை சேர்ந்த 6,485 பேரும், எஸ்.டி. பிரிவை சேர்ந்த 358 பேரும், சிறுபான்மையினர் 3,882 பேரும், பொதுப்பிரி வினர் 21,688 பேரும் அடங்குவர்.

    முதற்கட்டமாக மாவட் டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களை சார்ந்த நகர்ப்புற, மற்றும் கிரா மப்புற குடியிருப்பு பகுதி களில் வசிக்கும் 15 வயதிற்கு மேற்பட்ட முற்றிலும் எழுதப்படிக்க தெரியாதோ ருக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பணிகளை இம்மாதம் 3-வது வாரத்தில் முடிக்க ஆசிரியகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கே.எஸ்.பேட்டை பகுதியை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி. (வயது 25). என்ஜினீயரான இவர் பெங்களூருவில் உள்ள ஒரு கிரானைட் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
    • இந்த நிலையில் இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தொளசம்பட்டி அமரகுந்தி கே.எஸ்.பேட்டை பகுதியை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி. (வயது 25). என்ஜினீயரான இவர் பெங்களூருவில் உள்ள ஒரு கிரானைட் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

    இவருக்கும், பொட்டியபுரம் பகுதியை சேர்ந்த என்ஜினீயரான ஷாலினி (வயது 20) என்பவருக்கும் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    இந்த நிலையில் இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மாலை ஷாலினி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படு கிறது.

    இதையடுத்து உறவி னர்கள், அவரது உடலை போலீசாருக்கு தெரியாமல் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற் கொண்டு வந்தனர். இது பற்றிய தகவல் தொளசம்பட்டி போலீசாருக்கு கிடைத்தது. உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஷாலினி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கணவரிடம் விசாரணை

    இது தொடர்பாக ஷாலினியின் தாய் பழனியம்மாள் அளித்த புகாரின்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஷாலினியின் கணவர் வெள்ளியங்கிரியிடம் ஷாலினிக்கும், உங்களுக்கும் இடையே என்ன பிரச்சினை இருந்தது? அவர் எப்படி இறந்தார்? என பல்வேறு கேள்விகள் கேட்டு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணம் ஆன 40 நாட்களிலேயே புதுப்பெண் ஷாலினி இறந்துள்ளதால் மேட்டூர் ஆர்.டி.ஓ. தணிகாசலம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    இன்று பிரேத பரிசோதனை

    ஷாலினி உடல் இன்று சேலம் அரசு ஆஸ்பத்திரியில் வைத்து பிரேத பரிசோ தனை செய்யப்படுகிறது. பிரேத பரிசோதனை கூடம் முன்பு அவரது உறவினர்கள் கதறி அழுதபடி திரண்டு உள்ளனர். இதனால் அந்த பகுதி ேசாகமாக காட்சி அளித்தது. பிரேத பரி சோதனை முடிந்ததும் உடல், பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

    இதையொட்டி ஆஸ்பத்திரி வளாகம் முழுவதும் ஓமலூர் டி.எஸ்.பி. மேற்பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக பிரேத பரிசோ தனை கூடம் முன்பு ஏராள மான போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர்.

    பிரேத பரிசோதனை அறிக்கையில், ஷாலினி இறந்ததற்கான விபரங்கள் தெரிவிக்கப்படும். அதன் பிறகு விசாரணையை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    ×