என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "salemdistrict 2024 பிப்ரவரி மாதத்தில் நடைபெறும் ரோபோ வடிவமைப்பு போட்டி Robot design competition to be held in February 2024"

    • விஞ்ஞானி பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஹசானே ஒச்சேயிட் என்பவரை திருமணம்
    • மாணவர்களுக்கு ரோபா தொழில்நுட்பம் குறித்து பயிற்சி

    வாழப்பாடி

    வாழப்பாடியைச் சேர்ந்த பெண் பொறியாளர் கிருத்திகா (30), ஜெர்மன் நாட்டில் சர்வதேச அளவிலான முன்னணி ரோபோ தயாரிப்பு நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இதே துறையில் பணிபுரியும் விஞ்ஞானி பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஹசானே ஒச்சேயிட் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர், தமிழகத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவ–மாணவிகளுக்கு, ரோபோ தொழில்நுட்பம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அடிப்படை பயிற்சி அளிக்கும் நோக்கில், மையா மற்றும் ரோபாட்டிக் பவுன்டேசன் என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளார்.

    இந்த அமைப்பின் வாயிலாக வாழப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கணித மற்றும் எந்திரவியல் மன்றத்துடன் இணைந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு ரோபா தொழில்நுட்பம் குறித்து பயிற்சி அளிக்கும் திட்டத்தை தொடங்கியுள்ளார். பள்ளி கணினி ஆய்வகத்தில் நேற்று நடைபெற்ற தொடக்க விழாவிற்கு, தலைமை ஆசிரியர் சுப்ரமணியன் தலைமை வகித்தார். கணினி ஆசிரியர் ஸ்ரீமுனிரத்தினம் வரவேற்றார்.

    பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் கலைஞர்புகழ், குணாளன், ரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாழப்பாடி போலீஸ் டி.எஸ்.பி. ஹரிசங்கரி பயிற்சியை தொடங்கி வைத்தார். பெண் பொறியாளர் கிருத்திகா மற்றும் இவரது ரோபோ தொழில்நுட்ப விஞ்ஞானி ஹசானே ஒச்சேயிட் ஆகியோர் ஜெர்மனியில் இருந்து, ரோபா தொழில்நுட்பம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு கருத்துரை வழங்கினர்.

    விழாவில், ரோபோ தொழில்நுட்ப பயிற்சியாளர் செந்தில்குமார், சதீஸ்குமார் ஆசிரியர்கள் பரிமளா, ஜோதிசுடர், பழனிமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு போதிய பயிற்சி அளித்து 2024 பிப்ரவரி மாதத்தில் நடைபெறும் ரோபோ வடிவமைப்பு போட்டியில் பங்கேற்க செய்ய திட்டமிட்டுள்ளதாக, பெண் பொறியாளர் கிருத்திகா தெரிவித்தார்.

    ×