என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கைது செய்தனர்."

    • சேலம் அருகே மேச்சேரி பகுதியில் வடமாநில இளம்பெண் பாட்டிலால் தாக்கப்பட்டார்.
    • இது தொடர்பாக செல்வராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    சேலம்:

    உத்தரபிரதேச மாநிலம் ஜெயின்பூர் குஷிநகரை சேர்ந்தவர் சைலேஷ். இவர் தனது மனைவி கிரண்தேவி (20). இந்த தம்பதியினர் சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள எம்.காளிப்பட்டி அமரத்தானூரில் வசித்து வருகின்றனர். கிரண் தேவி நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள மளிகை கடைக்கு சென்றார்.

    அங்கு கடை உரிமையாளர் கலையரசியுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த அப்பகுதியை சேர்ந்த செல்வராஜ் (36) என்பவர் கலையரசி, கிரண்தேவியிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வெளி மாநிலத்தில் இருந்து வந்து என்னையே எதிர்த்து பேசு கிறாயா? என கூறி சோடா பாட்டிலை எடுத்து உடைத்து கிரண்தேவியை தாக்கினார்.

    அதில் கிரண்தேவிக்கு காயம் ஏற்பட்டது. இதை யடுத்து அவரை மேச்சேரியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது பற்றி மேச்சேரி போலீ சில் கிரண்தேவி புகார் கொடுத்தார்.

    அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, செல்வராஜ் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாக இருந்த செல்வராஜை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை மேட்டூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    • வாய்ஸ் டிரான்ஸ் மீட்டர்’ என்னும் கருவியை பொருத்தி தேர்வெழுதியது கண்டு பிடிக்கப்பட்டது.
    • இந்திரலேகா என்பவர் வெளியில் இருந்து செல்போன் மூலம் நவீன் தேர்வு எழுத உதவியதும் தெரியவந்தது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அதியமான் பொறியியல்கல்லூரியில் அமைக்கப்பட்ட தேர்வு மையத்தில் நேற்று போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது.

    இந்த தேர்வு எழுத 4 ஆயிரத்து 591 தேர்வர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில் 3 ஆயிரத்து 559 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். காலை பொது அறிவு தேர்வும், மதியம் தமிழ் தேர்வும் நடைபெற்றது.

    இந்த நிலையில் பொது அறிவு தாள் தேர்வை அனைவரும் மும்முரமாக எழுதி கொண்டிருந்தனர். அப்போது தேர்வு அறையில் திடீரென சத்தம் கேட்டது. உடனடியாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் தேர்வு எழுதியவர்களை சோதனை செய்தனர்.

    அப்போது தேர்வு எழுதிய வாலிபர் ஒருவர் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். சினிமா பாணியில் முககவ சத்தில் `வாய்ஸ் டிரான்ஸ் மீட்டர்' என்னும் கருவியை பொருத்தி வெளியில் இருந்து தகவலை கேட்டு தேர்வெழுதியது கண்டு பிடிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் விசாரணையில் அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே பச்சியூரை சேர்ந்த நவீன் (வயது 26) என்பது தெரிய வந்தது. மேலும் அவருடைய உறவினர் இந்திரலேகா என்பவர் வெளியில் இருந்து செல்போன் மூலம் நவீன் தேர்வு எழுத உதவியதும் தெரியவந்தது.

    இதையடுத்து ஓசூர் அட்கோ போலீசார் இரு வரையும் கைது செய்தனர். நவீன் தேர்வுக்காக ஆன்லைன் மூலம் சிறிய அளவிலான `வாய்ஸ் டிரான்ஸ்மீட்டரை' வாங்கி அதை கறுப்பு நிறமுககவசத்தில் வைத்து தைத்து அதை அணிந்தவாறு தேர்வெழுத வந்துள்ளார்.

    ஆனால் அந்த `வாய்ஸ்டி ரான்ஸ் மீட்டரில்' எழுந்த சத்தம் அவரை காட்டி கொடுத்து விட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து மதியம் நடந்த தமிழ் தேர்வு எழுத வந்த அனைத்து தேர்வர்களும் தீவிர சோதனைக்கு பின்னரே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

    ×