என் மலர்
உள்ளூர் செய்திகள்

வட மாநில இளம்பெண்ணை பாட்டிலால் தாக்கியவர் கைது
- சேலம் அருகே மேச்சேரி பகுதியில் வடமாநில இளம்பெண் பாட்டிலால் தாக்கப்பட்டார்.
- இது தொடர்பாக செல்வராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
சேலம்:
உத்தரபிரதேச மாநிலம் ஜெயின்பூர் குஷிநகரை சேர்ந்தவர் சைலேஷ். இவர் தனது மனைவி கிரண்தேவி (20). இந்த தம்பதியினர் சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள எம்.காளிப்பட்டி அமரத்தானூரில் வசித்து வருகின்றனர். கிரண் தேவி நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள மளிகை கடைக்கு சென்றார்.
அங்கு கடை உரிமையாளர் கலையரசியுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த அப்பகுதியை சேர்ந்த செல்வராஜ் (36) என்பவர் கலையரசி, கிரண்தேவியிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வெளி மாநிலத்தில் இருந்து வந்து என்னையே எதிர்த்து பேசு கிறாயா? என கூறி சோடா பாட்டிலை எடுத்து உடைத்து கிரண்தேவியை தாக்கினார்.
அதில் கிரண்தேவிக்கு காயம் ஏற்பட்டது. இதை யடுத்து அவரை மேச்சேரியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது பற்றி மேச்சேரி போலீ சில் கிரண்தேவி புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, செல்வராஜ் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாக இருந்த செல்வராஜை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை மேட்டூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.






