என் மலர்
உள்ளூர் செய்திகள்

கடும் குளிரால் வெறிச்சோடிய சுற்றுலா தலங்கள்
- கடந்த 2 நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது.
- ஏற்காட்டில் கடும் குளிர் நிலவி வருகிறது.
சேலம்
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஏற்காட்டிலும் கடந்த 2 நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. பனிமூட்டமும் காணப்படுகிறது.
இதனால் ஏற்காட்டில் கடும் குளிர் நிலவி வருகிறது. குறிப்பாக ஏற்காட்டில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் தான் கடும் குளிர் நிலவும். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக தற்போது ஏற்காட்டில் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்களும் வீட்டில் முடங்கியுள்ளனர்.
சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் குறைவாக உள்ளது. இதனால் ஏற்காட்டில் படகு குழாம், அண்ணா பூங்கா, மான் பூங்கா, ரோஜா தோட்டம், பக்கோடா பாயிண்ட், சேர்வராயன் கோயில் லேடீஸ் சீட் ஜெண்ட் சீட், மீன் பண்ணை என அனைத்து பகுதிகளிலும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச் சோடி காணப்படுகிறது.
இதனால் கடைகளிலும் வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.






