என் மலர்tooltip icon

    சேலம்

    • வேளாண் விற்பனை ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. இங்கு விவசாயிகள் விளை விக்கும் பல்வேறு பொருட்க ளையும் விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
    • இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடம் இ.நாமில் இணைக்கப்பட்டுள்ளதால், தேசிய அளவில் பொருட் களை சந்தை படுத்த முடியும்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள இந்திராநகரில் வேளாண் விற்பனை ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. இங்கு விவசாயிகள் விளை விக்கும் பல்வேறு பொருட்க ளையும் விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள் ளது. இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடம் இ.நாமில் இணைக்கப்பட்டுள்ளதால், தேசிய அளவில் பொருட் களை சந்தை படுத்த முடியும்.

    இந்த நிலையில், இ நாம் மூலம் தேங்காய் கொப்பரை பருப்பு மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில்,1.253 மெட்ரிக் டன் எடையுள்ள 39 மூட்டை கொப்பரை பருப்பை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். மொத்தம் 12.53 குவிண்டால் அளவிற்கு இருந்த கொப்பரை பருப்பு 83 ஆயிரத்து 548 ரூபாய்க்கு வியாபாரிகள் ஏலத்தில் எடுத்தனர்.

    இதில், ஒரு கிலோ அதிக விலையாக 70 ரூபாய் 55 காசுக்கும், குறைந்தவிலை யாக 55 ரூபாய் 75 காசுக்கும், சராசரியாக 66 ரூபாய் 25 காசுக்கும் விற்பனை செய்யப் பட்டது. மற்ற இடங்களை விட ஓமலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப் பரை கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்யப்படு கிறது. அதனால், கொப்பரை உற்பத்தியாளர்கள் ஓமலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்து பயனடையலாம்.

    அதேபோல பல்வேறு விளைபொருட்களையும் இங்கு கொண்டு வந்து விற்பனை செய்து பயனடை யலாம். தேசிய அளவில் வியாபாரிகள் பங்கேற்ப தால், விவசாயிகளுக்கு கூடுதல் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும், இங்கு அதிகளவில் விவசாய விலை பொருட்களை இருப்பு வைப்பதற்கான இட வசதி உள்ளது.

    மேலும், இங்கு இருப்பு வைக்கப்படும் விவசாய உற்பத்தி பொருட்களுக்கு ஈட்டு கடன் வழங்கபடுகிறது. அதனையும் விவசாயிகள் பெற்று பயனடையலாம் என்று ஓமலூர் ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளர் ஆனந்தி தெரிவித்துள்ளார்.

    • வாழப்பாடி அருகே பிரசித்திப் பெற்ற பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் நேற்று 7 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது.
    • புது மணத் தம்பதியருக்கு ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான சீர் வரிசை வழங்கி திரு மணத்தை நடத்தி வைத்தனர். நிறைவாக, புதுமணத் தம்பதிகள், சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் உறவினர்களுக்கு திருமண விருந்து வழங்கப்பட்டது.

    வாழப்பாடி:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த திருக்கோவில்களில் எளி யோருக்கு இலவச திருமணம் நடத்தும் திட்டத்தின் கீழ், சேலம் மண்டல இந்து சமய அறநிலையத்துறை சார்பில், வாழப்பாடி அருகே பிரசித்திப் பெற்ற பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் நேற்று 7 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது.

    சேலம் மண்டல இணை ஆணையர் சபர்மதி, உதவி ஆணையர் ராஜா, வாழப் பாடி வட்டார வேளாண்மை அட்மா குழு தலைவர் எஸ்.சி.சக்கர வர்த்தி, பேளூர் பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயசெல்வி பாலாஜி, துணைத்தலைவர் பேபி, தி.மு.க. நகர செயலா ளர் சுப்பிரமணியன், செயல் அலுவலர் கஸ்தூரி, ஆய்வா ளர் சங்கர் ஆகியோர் புது மணத் தம்பதியருக்கு ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான சீர் வரிசை வழங்கி திரு மணத்தை நடத்தி வைத்தனர். நிறைவாக, புதுமணத் தம்பதி கள், சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் உறவினர்களுக்கு திருமண விருந்து வழங்கப் பட்டது.

    அரசு சார்பில் தங்கத்தா லியுடன் திருமணம் நடத்தி வைத்ததோடு, புதிய குடித் தனத்திற்கு தேவையான அனைத்து சீர்வரிசைகளும் வழங்கப்பட்டன. இதற்கு தமிழக அரசுக்கு புதுமணத் தம்பதிகளும், பெற்றோர்க ளும் நன்றி தெரிவித்தனர்.

    • பல்வேறு இடங்களிலிருந்து சுற்றுலா வரும் பயணிகள், ஏரியில் படகு சவாரி செய்யாமல் செல்வதில்லை.
    • தேன் நிலவு கொண்டாண்டத்திற்காக வரும் புதுமணத்தம்பதிகள், காதல் ஜோடிகள், இருவர் மட்டும் வசதியாக அமர்ந்து செல்லக்கூடிய வகையில் இந்த மிதிபடகு வடிவமைக்கப்பட்டு உள்ளது.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான ஏற்காட்டிற்குள் நுழைந்ததும், சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக பிரமாண்ட ஏரி அமைந்துள்ளது.

    பல்வேறு இடங்களிலிருந்து சுற்றுலா வரும் பயணிகள், ஏரியில் படகு சவாரி செய்யாமல் செல்வதில்லை. குடும்பத்தோடும், ஜோடியாகவும் படகு சவாரி செய்து மகிழ்கின்றனர். அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக, படகு இல்லத்தில் பல்வேறு ரகங்களில் படகுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    10 பேர் அமர்ந்து செல்லக்கூடிய மோட்டார் பொருத்திய விசைப்படகுகள், முழுக்க முழுக்க மனித சக்தியால் இயக்கப்படும் துடுப்பு படகுகள், தாங்களே இயக்கக்கூடிய மிதிபடகுகள், குழந்தைகளை கவரும் விதமாக மிக்கிமவுஸ், அன்னப்பறவை உருவங்களை கொண்ட மிதிபடகு போன்றவற்றில் சுற்றுலா பயணிகள் உல்லாச சவாரி செய்வது வழக்கம்.

    தற்போது, புதிய வரவாக நவீன படகு ஒன்று வரவழைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து படகு குழாம் அதிகாரிகள் கூறுகையில், முழுக்க முழுக்க மனித சக்தியால் இயங்கக்கூடிய மிதிவண்டி வடிவிலான படகு புதிய வரவாக வந்துள்ளது. தேன் நிலவு கொண்டாண்டத்திற்காக வரும் புதுமணத்தம்பதிகள் மற்றும் காதல் ஜோடிகள், இருவர் மட்டும் வசதியாக அமர்ந்து செல்லக்கூடிய வகையில் இந்த மிதிபடகு வடிவமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த படகு வந்த முதல் நாளிலேயே, ஏராளமானோர் சவாரி செய்ய மிகுந்த ஆர்வம் காட்டினர். முழங்கால் வலி ஏற்படாத வகையில், இந்த படகு வடிவமைக்கப்பட்டுள்ளது சிறப்பம்சமாகும். வயதானவர்கள் கூட சுலபமாக இயக்க முடியும். சுற்றுலா பயணிகளிடையே வரவேற்பினை பொறுத்து, கூடுதல் படகுகள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.

    • மேட்டூர் அணைக்கு நேற்று 226 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை வினாடிக்கு 174 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
    • காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து 12 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.

    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்துள்ளது. ஒகேனக்கல் காவிரியில் கடந்த 3 நாட்களாக நீர்வரத்து 700 கன அடியாக இருந்த நிலையில், நேற்று காலை முதல் விநாடிக்கு 500 கன அடியாக சரிந்துள்ளது.

    அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று 226 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை வினாடிக்கு 174 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும், காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து 12 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.

    நீர்வரத்து வினாடிக்கு 200 கன அடிக்கு கீழ் குறைந்துள்ள நிலையில் அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் அளவு மேலும் அதிகரிக்கப்பட்டு உள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. நேற்று 84.34 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 83.35 அடியாக சரிந்தது.

    • கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 193 ரன்களை குவித்தது.
    • 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது.

    7-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி தமிழ்நாட்டில் 4 இடங்களில் நடந்துவருகிறது.

    8 அணிகள் பங்கேற்ற இப்போட்டியில் லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களைப் பிடித்த நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ் (12 புள்ளி), திண்டுக்கல் டிராகன்ஸ் (12 புள்ளி), நெல்லை ராயல் கிங்ஸ் (10 புள்ளி), மதுரை பாந்தர்ஸ் (8 புள்ளி) ஆகிய அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறின.

    4 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (6 புள்ளி), திருப்பூர் தமிழன்ஸ் (4 புள்ளி), சேலம் ஸ்பார்டன்ஸ் (4 புள்ளி), பால்சி திருச்சி (0) அணிகள் வெளியேறின.

    இந்நிலையில், சேலம் அருகே வாழப்பாடியில் உள்ள எஸ்.சி.எப். மைதானத்தில் இன்று அரங்கேறும் முதல் தகுதிச்சுற்றில் லைகா கோவை கிங்சும், திண்டுக்கல் டிராகன்சும் மோதின.

    டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 193 ரன்களை குவித்தது.

    அந்த அணியின் சச்சின் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். முகிலேஷ் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். சச்சின் 46 பந்தில் 70 ரன்னும், முகிலேஷ் 27 பந்தில் 44 ரன்னும் குவித்து ஆட்டமிழந்தனர்.

    3-வது விக்கெட்டுக்கு சச்சின், முகிலேஷ் ஜோடி 82 ரன்கள் சேர்த்தது. சுரேஷ்குமார் 26 ரன்னும், சுஜய் 12 ரன்னும் எடுத்தனர். திண்டுக்கல் அணியின் சுபோத் பதி 4 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி களமிறங்கியது.

    இதில் அதிகபட்சமாக சரத் குமார் அரை சதம் அடித்து 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    தொடர்ந்து, பூபதி குமார் 25 ரன்களிலும், பாபா இந்திரஜித் 21 ரன்களிலும், சுபோத் பாதி 14 ரன்களிலும், சிவம் சிங் 10 ரன்களிலும், மதிவாணன் 9 ரன்களிலும், ஆதித்யா கணேஷ் 5 ரன்களிலும், வருண் சக்ரவர்த்தி 4 ரன்களிலும் சரவண குமார் மற்றுமு் கிஷோர் தலா 2 ரன்களிலும், விமல் குமார் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தார்.

    இதனால், 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்ட முடியாமல் திண்டுக்கல் அணி தோல்வியடைந்தது.

    இதனால், லைகா கோவை கிங்ஸ் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல்லை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

    இந்த வெற்றின் மூலம் நடப்பு டிஎன்பிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்குள் லைகா கோவை கிங்ஸ் நுழைந்தது.

    https://www.dailythanthi.com/Sports/Cricket/lyca-kovai-kings-won-by-30-runs-against-dindigul-dragons-1002903

    • டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
    • முதலில் ஆடிய கோவை அணி 193 ரன்களை குவித்துள்ளது.

    சேலம்:

    7-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி தமிழ்நாட்டில் 4 இடங்களில் நடந்துவருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இப்போட்டியில் லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களைப் பிடித்த நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ் (12 புள்ளி), திண்டுக்கல் டிராகன்ஸ் (12 புள்ளி), நெல்லை ராயல் கிங்ஸ் (10 புள்ளி), மதுரை பாந்தர்ஸ் (8 புள்ளி) ஆகிய அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறின.

    4 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (6 புள்ளி), திருப்பூர் தமிழன்ஸ் (4 புள்ளி), சேலம் ஸ்பார்டன்ஸ் (4 புள்ளி), பால்சி திருச்சி (0) அணிகள் வெளியேறின.

    இந்நிலையில், சேலம் அருகே வாழப்பாடியில் உள்ள எஸ்.சி.எப். மைதானத்தில் இன்று அரங்கேறும் முதல் தகுதிச்சுற்றில் லைகா கோவை கிங்சும், திண்டுக்கல் டிராகன்சும் மோதுகின்றன. டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 193 ரன்களை குவித்துள்ளது. அந்த அணியின் சச்சின் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். முகிலேஷ் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.

    சச்சின் 46 பந்தில் 70 ரன்னும், முகிலேஷ் 27 பந்தில் 44 ரன்னும் குவித்து ஆட்டமிழந்தனர். 3-வது விக்கெட்டுக்கு சச்சின், முகிலேஷ் ஜோடி 82 ரன்கள் சேர்த்தது. சுரேஷ்குமார் 26 ரன்னும், சுஜய் 12 ரன்னும் எடுத்தனர்.

    திண்டுக்கல் அணியின் சுபோத் பதி 4 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி களமிறங்குகிறது.

    • மேச்சேரி அருகே திருமணமான ஒரு ஆண்டில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
    • தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மேச்சேரி காளிகவுண்டனூரை சேர்ந்தவர் சிவப்பிரகாசம் (வயது 28). இவருக்கும், தீவட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த கந்தசாமி மகள் சந்தியா (28) என்பவருக்கும் ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இருவரும் காளிகவுண்ட னூரில் வசித்து வந்தனர்.

    கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டதில், மனம் உடைந்த சந்தியா வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மேச்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இளம்பிள்ளையில் ஆன்லைன் மூலம் சேலைகள் விற்று ரூ.30 லட்சம் மோசடி நடந்தது.
    • இது தொடர்பாக பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டார்கள்.

    சேலம்:

    சேலம் அருகே உள்ள இளம்பிள்ளை சவுடேஸ்வரி நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி சுபா (வயது 33). இவர் அதே பகுதியில் டெக்ஸ்டைல் நிறுவனம் நடத்தி வருகிறார்.

    இவரது நிறுவனத்தில், ஆன்லைன் மூலமும் சேலை கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த பிரிவில் இளம்பிள்ளை பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்ப வரின் மகள் உமா மகேஸ்வரி வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த 2021-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை ஆன்லைன் மூலம் சுபா மற்றும் இவரது கணவரின் சகோதரர் அருண் என்பவர் கடைகளில் இருந்து விற்ற சேலைகளின் பணம் ரூ.30 லட்சத்தை உமா மகேஸ்வரி தனது சகோதரர் மாணிக்கம் வங்கி கணக்கிலும், மும்பையில் உள்ள நண்பர் உமா பிள்ளை என்பவரது கூகுள் பே கணக்கிலும் பெற்று மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து சுபா சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து, இதுகுறித்து விசாரணை நடத்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

    இதன் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. இளமுருகன் மற்றும் சந்திரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து, இன்று காலை உமா மகேஸ்வரி, மாணிக்கம், உமா பிள்ளை ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தேர்த் திருவிழாவை முன்னிட்டு இரவு ஸ்ரீ கூத்தாண்டவர், ஸ்ரீ மாரியம்மன் சுவாமி சக்திகளை நிகழ்ச்சி
    • அலகு குத்துதல், கேரளா செண்டை மேளம் மற்றும் மேளதாளம் முழங்க ஸ்ரீ மாரியம்மன் திருத்தேர் வடம் பிடித்தல்

    ஆத்தூர்

    சேலம் மாவட்டம் புத்திரகவுண்டம்பாளையம் கூத்தாண்டவர் சுவாமி, மாரியம்மன் சாமி தேர் திருவிழா வெகு விமர்சையாக தொடங்கியது. தேர்த் திருவிழாவை முன்னிட்டு இரவு ஸ்ரீ கூத்தாண்டவர், ஸ்ரீ மாரியம்மன் சுவாமி சக்திகளை நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.

    அதன் பின்னர் நேற்று முன்தினம் ஸ்ரீ கூத்தாண்டவர் சுவாமி கண் திறப்பு நடைபெற்றது. பல வண்ண மலர்களால் சுவாமி அலங்கரிக்கப்பட்டு மேலதாளம் முழங்க நூற்றுக்கணக்கான தேங்காய் தட்டுகளுடன் பக்தர்கள் கலந்துகொண்டு சாமியை வழிபாடு செய்து சுவாமி கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நூற்றுக்கணக்கான பெண்கள் பக்தி பரவசத்துடன் கைதட்டியும் சுவாமி ஆடியும் பரவசம் ஏற்படுத்தினார்கள். அதன் பின்னர் ஆயிரக்கணக்கா னோருக்கு சாமியின் முன் படையலில் வைக்கப் பட்டிருந்த பிரசாதத்தை வழங்கினார்கள்.

    இந்த பிரசாதத்தை வாங்கி சாப்பிடும் போது குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என ஐதீகம் என்பதால் ஆயிரக்கணக் கானோர் அதை வாங்கிச் சென்றனர். அதன் பின்னர் மதியம் 2 மணி அளவில் அலகு குத்துதல், கேரளா செண்டை மேளம் மற்றும் மேளதாளம் முழங்க ஸ்ரீ மாரியம்மன் திருத்தேர் வடம் பிடித்தல் நடை பெற்றது.

    மாரியம்மன் சுவாமி பல வண்ண மலர்களால் அலங்க ரிக்கப்பட்டு தேரில் வைக்கப் பட்டு முக்கிய வீதிகள் வழியாக திருத்தேரோட்டம் வெகு விமர்சியாக நடை பெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்ட னர்.

    • போராட் டத்தில் சுழற்சி முறையில் நாள்தோ றும் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொள்கிறார்கள்
    • தென்னை, பனை மரங்க ளில் இருந்து பதநீர் இறக்கி விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் கொளத்தூர் ஊராட்சி ஒன்றி யத்திற்கு உட்பட்ட கண்ணா மூச்சி கிராமம் மூலப் பனங்காடு பகுதியில் தமிழக விவ சாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் பல்வேறு கோரிக்கையை வலி யுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். தமிழக விவசாய பாதுகாப்பு சங்கத்தின் மாநில துணைத்தலை வர் முத்துசாமி தலைமையில் தொடங்கியுள்ள இந்த போராட் டத்தில் சுழற்சி முறையில் நாள்தோ றும் 100-க்கும் மேற்பட்ட விவசா யிகள் கலந்து கொள்கிறார்கள்.

    தென்னை, பனை மரங்க ளில் இருந்து பதநீர் இறக்கி விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும். மேட்டூர் அணை யின் உபரி நீரை கொளத்தூர் அருகே உள்ள சென்றாய பெருமாள் கோயில் அருகே இருந்து உயர் அழுத்தம் மூலம் எடுத்து பாலமலை அடிவாரத்தை ஒட்டி குழாய்கள் மூலம் ஈரோடு மாவட்டம் அந்தியூர் வரை எடுத்து சென்று வழியில் உள்ள ஏரி, குளங்களில் நிரப்பி னால் சுமார் 25 ஆயி ரம் விவசா யிகள் பயன் பெறு வார்கள். இந்த திட்டத்தை செயல்படுத்த வேண் டும் . விவசாயிகளின் அனைத்து கடன்களை ரத்து செய்ய வேண்டும். தமிழக அரசும் ஆண்டுதோறும் ஏக்கருக்கு ரூ. 10 ஆயிரம், உழவு மானியமாக விவ சாயிகளுக்கு வழங்க வேண்டும் என்பது உட்பட கோரிக்கையை வலியுறுத்தி இந்த போராட்டத்தை தொடங்கி உள்ளார்கள். இதில் பெண் விவசாயிகள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • காடையாம்பட்டி அருகே வேளாண் கூட்டுறவு சங்கத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
    • அவர்களிடம் அதிகாரிகள், பேச்சுவார்த்தை நடத்தினர்.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியம் குண்டுக்கல் ஊராட்சியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அந்த பகுதியில் அரசு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது.

    இந்த சங்கத்தில் அப்பகுதி விவசாயிகள், கடந்த 6 ஆண்டு காலமாக பயிர் கடன், நகை கடன், மாடு வாங்க கடன் ஆகிய எந்த லோன் கேட்டாலும் இன்று, நாளை என்று அதிகாரிகள் காலம் கடத்தி வருவதாக கூறப்படுகிறது.

    இதனை கண்டித்து ஊர் மக்கள், விவசாயிகள் ஆகியோர் அரசு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரகள், பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

    • தமிழக அரசு சார்பாக சுற்றுலாத்துறை விருந்துகள் வழங்கப்பட உள்ளன.
    • இவற்றை பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கபட்டு உள்ளது.

    சேலம்:

    உலக சுற்றுலா தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் ஆண்டு தோறும் விருதுகள் வருகிற செப்டம்பர் மாதம்  வழங்கப்படுகிறது.

    அதன்படி தமிழ்நாட்டிற்கான சிறந்த சுற்றுலா ஏற்பாட்டாளர், சிறந்த உள் நாட்டு சுற்றுலா ஏற்பட்டாளர், சிறந்த பயண பங்குதா ரர், சுற்றுலா ஊக்குவிப்பதற்கான சிறந்த மாவட்டம் உள்ளிட்ட 17 வகையான விருதுகள் வழங்கப்படுகிறது.

    விருதுகளுக்காக தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு சுற்றுலாத்துறை சார்பில் உலக சுற்றுலா தின நிகழ்ச்சியில் விருதுகள் வழங்கப்படும். விண்ணப்பங்கள் தமிழ்நாடு அரசு சுற்றுலாதுறை இணையதளத்தில் அடுத்த மாதம் 15-ந் தேதிக்குள் பூர்த்தி செய்து, சமர்ப்பிக்கவேண்டும். இந்த தகவலை சுற்றுலாத்துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

    ×