சுற்றுலாத்துறை விருதுகளை பெற விண்ணப்பிக்க அழைப்பு

தமிழக அரசு சார்பாக சுற்றுலாத்துறை விருந்துகள் வழங்கப்பட உள்ளன. இவற்றை பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கபட்டு உள்ளது.
சுற்றுலாத்துறை விருதுகளை பெற விண்ணப்பிக்க அழைப்பு
Published on

சேலம்:

உலக சுற்றுலா தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் ஆண்டு தோறும் விருதுகள் வருகிற செப்டம்பர் மாதம்  வழங்கப்படுகிறது.

அதன்படி தமிழ்நாட்டிற்கான சிறந்த சுற்றுலா ஏற்பாட்டாளர், சிறந்த உள் நாட்டு சுற்றுலா ஏற்பட்டாளர், சிறந்த பயண பங்குதா ரர், சுற்றுலா ஊக்குவிப்பதற்கான சிறந்த மாவட்டம் உள்ளிட்ட 17 வகையான விருதுகள் வழங்கப்படுகிறது.

விருதுகளுக்காக தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு சுற்றுலாத்துறை சார்பில் உலக சுற்றுலா தின நிகழ்ச்சியில் விருதுகள் வழங்கப்படும். விண்ணப்பங்கள் தமிழ்நாடு அரசு சுற்றுலாதுறை இணையதளத்தில் அடுத்த மாதம் 15-ந் தேதிக்குள் பூர்த்தி செய்து, சமர்ப்பிக்கவேண்டும். இந்த தகவலை சுற்றுலாத்துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com