என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புத்திரகவுண்டம்பாளையம் கூத்தாண்டவர் , மாரியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்
    X

    தேரோட்டம் நடைபெற்றபோது எடுத்த படம்.

    புத்திரகவுண்டம்பாளையம் கூத்தாண்டவர் , மாரியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்

    • தேர்த் திருவிழாவை முன்னிட்டு இரவு ஸ்ரீ கூத்தாண்டவர், ஸ்ரீ மாரியம்மன் சுவாமி சக்திகளை நிகழ்ச்சி
    • அலகு குத்துதல், கேரளா செண்டை மேளம் மற்றும் மேளதாளம் முழங்க ஸ்ரீ மாரியம்மன் திருத்தேர் வடம் பிடித்தல்

    ஆத்தூர்

    சேலம் மாவட்டம் புத்திரகவுண்டம்பாளையம் கூத்தாண்டவர் சுவாமி, மாரியம்மன் சாமி தேர் திருவிழா வெகு விமர்சையாக தொடங்கியது. தேர்த் திருவிழாவை முன்னிட்டு இரவு ஸ்ரீ கூத்தாண்டவர், ஸ்ரீ மாரியம்மன் சுவாமி சக்திகளை நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.

    அதன் பின்னர் நேற்று முன்தினம் ஸ்ரீ கூத்தாண்டவர் சுவாமி கண் திறப்பு நடைபெற்றது. பல வண்ண மலர்களால் சுவாமி அலங்கரிக்கப்பட்டு மேலதாளம் முழங்க நூற்றுக்கணக்கான தேங்காய் தட்டுகளுடன் பக்தர்கள் கலந்துகொண்டு சாமியை வழிபாடு செய்து சுவாமி கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நூற்றுக்கணக்கான பெண்கள் பக்தி பரவசத்துடன் கைதட்டியும் சுவாமி ஆடியும் பரவசம் ஏற்படுத்தினார்கள். அதன் பின்னர் ஆயிரக்கணக்கா னோருக்கு சாமியின் முன் படையலில் வைக்கப் பட்டிருந்த பிரசாதத்தை வழங்கினார்கள்.

    இந்த பிரசாதத்தை வாங்கி சாப்பிடும் போது குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என ஐதீகம் என்பதால் ஆயிரக்கணக் கானோர் அதை வாங்கிச் சென்றனர். அதன் பின்னர் மதியம் 2 மணி அளவில் அலகு குத்துதல், கேரளா செண்டை மேளம் மற்றும் மேளதாளம் முழங்க ஸ்ரீ மாரியம்மன் திருத்தேர் வடம் பிடித்தல் நடை பெற்றது.

    மாரியம்மன் சுவாமி பல வண்ண மலர்களால் அலங்க ரிக்கப்பட்டு தேரில் வைக்கப் பட்டு முக்கிய வீதிகள் வழியாக திருத்தேரோட்டம் வெகு விமர்சியாக நடை பெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்ட னர்.

    Next Story
    ×