வேளாண் கூட்டுறவு சங்கத்தை விவசாயிகள் முற்றுகை

காடையாம்பட்டி அருகே வேளாண் கூட்டுறவு சங்கத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர். அவர்களிடம் அதிகாரிகள், பேச்சுவார்த்தை நடத்தினர்.
முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள். 
முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள். 
Published on

காடையாம்பட்டி:

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியம் குண்டுக்கல் ஊராட்சியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அந்த பகுதியில் அரசு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது.

இந்த சங்கத்தில் அப்பகுதி விவசாயிகள், கடந்த 6 ஆண்டு காலமாக பயிர் கடன், நகை கடன், மாடு வாங்க கடன் ஆகிய எந்த லோன் கேட்டாலும் இன்று, நாளை என்று அதிகாரிகள் காலம் கடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இதனை கண்டித்து ஊர் மக்கள், விவசாயிகள் ஆகியோர் அரசு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரகள், பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com