என் மலர்
உள்ளூர் செய்திகள்

விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டிய 196 பேரின் லைசென்ஸ் ரத்து
- சரக்கு வாகனத்தில் பொதுமக்களை ஏற்றுவது போன்ற சாலை விதிமீறல்க ளில் ஈடுபடுவோரின் உரிமம் தற்காலிகமாக ரத்து
- போதையில் வாகனம் ஓட்டுவது போன்ற செயலில் ஈடுபடுவதற்கு 3 மாதம் ஓட்டுநர் உரிமம் ரத்து
சேலம்:
சேலம் மாவட்டத்தில் சாலை விபத்துகளை குறைக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற னர். அதிவேகமாக வாகனம் ஓட்டுவது, சிக்னலை மீறு வது, அதிக பாரம் ஏற்று வது, சரக்கு வாகனத்தில் பொதுமக்களை ஏற்றுவது போன்ற சாலை விதிமீறல்க ளில் ஈடுபடுவோரின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு வருகிறது.
செல்போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவது, போதையில் வாகனம் ஓட்டுவது போன்ற செயலில் ஈடுபடுவதற்கு 3 மாதம் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படுகிறது.
சேலம் சரகத்தில் கடந்த மாதத்தில் அதிவேகமாக வாகனம் ஓட்டிய 30 பேர், அதிக பாரம் ஏற்றி வந்த ஒருவர், சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி வந்த 25 டிரைவர்கள், சிவப்பு விளக்கு மீறி இயக்கிய 45 பேர், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய 50 பேர், சாலை விபத்தில் உயிரிழப்பு ஏற்படுத்திய 34 டிரைவர்கள் உட்பட 196 பேரின் லைசென்ஸ் ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு போலீசார் பரிந்துரை செய்தனர்.
இதையடுத்து போக்கு வரத்து விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டிய 196 பேரின் ஓட்டுநர் உரிமம் 3 மாதத்திற்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. குடி போதையில் வாகனம் ஓட்டிய 5 பேரின் லைசென்ஸ் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.






