என் மலர்
நீங்கள் தேடியது "salemdistrict காய்ச்சலை தடுக்க அதிகாரி கள் நடவ டிக்கை Officials to plant tick to prevent fever"
- பால வாடியை சேர்ந்த சக்திவேல் மற்றும் அவரது மனைவி ஆகியோர் பாதிக்கப்பட்டுள் ளனர்.
- மேட்டூர் பகுதியில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
சேலம்:
சேலம் மாவட்டம் கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பால வாடி வெடிகாரனுர் மற்றும் காவிரிபுரம் வெளியிட்ட பகுதிகளில் காய்ச்சல் வேக மாக பரவி வருகிறது. பால வாடியை சேர்ந்த சக்திவேல் மற்றும் அவரது மனைவி ஆகியோர் பாதிக்கப்பட்டுள் ளனர். அதேபோல் சுற்று வட்டார பகுதிகளில் ஏராள மான குழந்தைகளும் பாதிக் கப்பட்டுள்ளன.
மேலும் மேட்டூர் பகுதியில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது.
அதேபோல் தனியார் மருத்துவமனைகளிலும் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறு வார்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே காய்ச்சலை தடுக்க அதிகாரி கள் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






