search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "confinement in jail"

    • லட்சுமி (வயது 42). இவர், 3-வதாக பிரபல ரவுடி மேட்டூர் ரகு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
    • கடந்த மாதம் 19-ந்தேதி சமத்துவபுரத்தில் உள்ள வீட்டில் லட்சுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    சேலம்:

    சேலம் சீரகாபாடி சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் காளியம்மாள் என்கிற லட்சுமி (வயது 42). இவர், 3-வதாக பிரபல ரவுடி மேட்டூர் ரகு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

    கடந்த மாதம் 19-ந்தேதி சமத்துவபுரத்தில் உள்ள வீட்டில் லட்சுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது தொடர்பாக அவரது 3-வது கணவரான மேட்டூர் ரகுவை போலீசார் தேடி வந்த நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் கோர்ட்டில் சரண் அடைந்தார். மேலும் அவரது கூட்டாளிகளான ேஷக் மைதீன்(29), ஜோசப் என்கிற பாலாஜி(19), ஆனந்த் (28) ஆகியோர் பவானி கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

    இதையடுத்து ஆட்டையாம்பட்டி போலீசார் கடந்த 29-ந்தேதி ரகுவை காவலில் எடுத்து விசாரித்ததில் லட்சுமி கள்ளத்தொடர்பை கைவிடாததால் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தார். பின்னர் ரகுவை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    கார் பறிமுதல்

    இந்த வழக்கில் தொடர்புடைய ரகுவின் கூட்டாளிகள் ேஷக் மைதீன், ஜோசப் என்கிற பாலாஜி , ஆனந்த் ஆகியோரிடம் விசாரிக்க ஆட்டையாம்பட்டி போலீசாருக்கு சேலம் 4-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2 நாட்கள் அனுமதி கொடுத்தது.

    இதையடுத்து நேற்று முன்தினம் முதல் அவர்களிடம் நடத்திய விசாரணையில் லட்சுமி கொலையில் 3 பேரும் உடந்தையாக இருந்ததும், இதற்காக ெசாகுசு கார் ஒன்றை பயன்படுத்தியதும் தெரியவந்தது. இந்த காரை போலீசார் பறிமுதல் செய்து, போலீஸ் நிலையத்தில் கொண்டு வந்து நிறுத்தினர்.

    ஜெயிலில் அடைப்பு

    மேலும் இவர்கள் 3 பேருடைய போலீஸ் காவல் நேற்றுடன் முடிவடைந்ததால் அவர்களை போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • மின் பாதையை மாற்றி அமைக்க சென்றனர்
    • லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார்

    வெம்பாக்கம்,

    திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் அடுத்த ஆலந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர் மகன் சக்திவேல். இவர் சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

    ரூ.2 ஆயிரம் லஞ்சம்

    இவர் ஆலந்தாங்கல் கிராமத்தில் உள்ள தனக்கு சொந்தமான இடத்தில் சில மாதங்களாக புதிதாக வீடு கட்டி வருகிறார். அந்த வீட்டின் மேல்பகுதி வழியாக மின் கம்பி செல்கிறது.

    அதனால் கடந்த ஜனவரி மாதம் முதல் கட்டிடப் பணியை நிறுத்தி வைத்துள்ளார். வீட்டின் மேல்பகுதியில் செல்லும் மின் கம்பி பாதையை மாற்றி அமைக்க, சக்திவேல் வெம்பாக்கம் மின்வாரிய உதவி பொறியாளர் அஜித்பிரசாத்தை தொடர்பு கொண்டார்.

    அப்போது திட்ட மதிப்பீடு தொகை ரூ.37 ஆயிரம் கொடுத்தால் போதும் என்று உதவி பொறியாளர் கூறிஉள்ளார்.

    அதன்படி சக்திவேல் மின்வாரியம் பெயரில் ரூ.37 ஆயிரத்துக்கான தொகையை டி.டி.யாக எடுத்துக் கொடுத்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் உதவிப் பொறியாளர் மற்றும் தொழிலாளர்கள் 10 பேர் வீட்டின் மீது செல்லும் மின் பாதையை மாற்றி அமைக்க சென்றனர். அப்போது மீண்டும் ரூ.2 ஆயிரம் பணம் கேட்டனர்.

    சக்திவேல் பணம் தர மறுக்கவே, மின்வாரிய அதிகாரி வேலையை தொடர்ந்து செய்ய மறுத்தார்.

    இதனால் மனமுடைந்த சக்திவேல், உதவிப் பொறியாளர் அஜித் பிரசாத் மீது திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு வேல்முருகன் தலைமையிலான போலீசார் நேற்று ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை சக்திவேலிடம்கொடுத்து, அதை உதவி பொறியாளர் அஜித்பிரசாத்திடம் கொடுக்கும்படி கூறி அனுப்பி வைத்தனர்.

    ஜெயிலில் அடைப்பு

    அதன்படி அவரிடம் பணத்தை கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், உதவிப்பொறியாளர் அஜித் பிரசாத்தை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

    போலீசார் விசாரணையை தொடர்ந்து மின்வாரிய உதவிப் பொறியாளர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • புதுவலவு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. அவரது மனைவி பழனியம்மாள் (58). இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.
    • பழனியம்மாளுக்கும், செங்கோட்டுவேலனுக்கும் வாய் தகராறு ஏற்பட்டது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி அருகே மாவுருட்டி புதுவலவு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. அவரது மனைவி பழனியம்மாள் (58). இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் செங்கோட்டுவேலன்(39). பொறியியல் பட்டதாரி யான இவர், காளான் பண்ணை வைத்து நடத்தி வருகிறார். பழனியம்மாள் தனது மகள் ரம்யாவை கடந்த 12 வருடங்களுக்கு முன் செங்கோட்டு வேலனுக்கு திருமணம் செய்து வைத்தார். அவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் செங்கோட்டுவேலனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தாக கூறப்படுகிறது. இதனால் செங்கோட்டுவேலனிடம் கோபித்துக் கொண்டு ரம்யா தனது 2 குழந்தைகளுடன் தாய் பழனியம்மாள் வீட்டிற்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன் சென்று விட்டார்.

    இதையடுத்து நேற்று

    மாமியார் பழனியம்மாள் வீட்டுக்கு சென்று மனை வியை வீட்டுக்கு வரும்படி செங்கோட்டுவேலன் அழைத்துள்ளார். ஆனால் ரம்யா வர மறுத்துவிட்டார். அப்போது பழனியம்மாளுக்கும், செங்கோட்டுவேலனுக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செங்கோட்டுவேலன், தனது கையில் வைத்திருந்த கத்தியால் பழனியம்மாளை குத்தியுள்ளார். வலி தாங்க முடியா மல் அவர் சத்தம் போடவே, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்தனர். அப்போது செங்கோட்டுவேலன் அங்கி ருந்து தப்பி சென்றுவிட்டார். பழனியம்மாளை நாமக்கல் லில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து பரமத்தி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, பழனியம்மாளை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற செங்கோட்டுவேலனை கைது செய்து, பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தி பரமத்தி கிளைச் சிறையில் அடைத்தனர்.


    • வெண்ணந்தூர் அருகே உள்ள தொட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வெள்ளையன் (வயது 43). கூலி தொழிலாளி.
    • அவரின் 10 மற்றும் 11 வயதுள்ள 2 மகள்களுக்கும், வெள்ளை யன் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாட்டம் ராசிபுரம் தாலுகா வெண்ணந்தூர் அருகே உள்ள தொட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வெள்ளையன் (வயது 43). கூலி தொழிலாளி.

    இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரின் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றதாக கூறப்படுகிறது.

    அப்போது அவரின் 10 மற்றும் 11 வயதுள்ள 2 மகள்களுக்கும், வெள்ளை யன் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து சிறுமிகள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து, சிறுமி களின் பெற்றோர் வெண்ணந்தூர் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார், வெள்ளையனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். 

    • வெண்ணந்தூர் பெரிய மாரியம்மன் கோவில் தெரு ராகவேந்திர நகரை சேர்ந்தவர் கணேசன் (வயது 40). தறி தொழிலாளி.
    • மல்லசமுத்திரம் அருகே உள்ள ஓட்டலுக்கு சென்று அங்கு சாப்பிட்டனர். ஓட்டலில் சாப்பிட்டு விட்டு அவர் பணம் தரவில்லை என்று கூறப்படுகிறது.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள வெண்ணந்தூர் பெரிய மாரியம்மன் கோவில் தெரு ராகவேந்திர நகரை சேர்ந்தவர் கணேசன் (வயது 40). தறி தொழிலாளி.

    சம்பவத்தன்று வடுகம்பா–ளையம் கிராமத்தைச் சேர்ந்த தறி தொழிலாளி தனபால் (31), வெண்ணந்தூர் பகுதியைச் சேர்ந்த மணி ஆகிய இருவரும் கணேசனை அழைத்துக் கொண்டு மல்லசமுத்திரம் அருகே உள்ள ஓட்டலுக்கு சென்று அங்கு சாப்பிட்டனர். ஓட்டலில் சாப்பிட்டு விட்டு அவர் பணம் தரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    இந்த நிலையில் கணேசன் வீட்டிற்கு சென்ற தனபால் அங்கிருந்த கணேசனின் மனைவி லோகேஸ்வரியிடம் தகராறு செய்து லோகேஸ்வரியை தாக்கியதாக கூறப்படுகிறது. இது பற்றி லோகேஸ்வரி(38) வெண்ணந்தூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் வெண்ணந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமாவதி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் வழக்கு பதிவு செய்து தனபாலை கைது செய்தனர். பின்னர் ராசிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ராசிபுரம் கிளை ஜெயிலில் தனபால் அடைக்கப்பட்டார்.

    ×