என் மலர்
உள்ளூர் செய்திகள்

கைது செய்யப்பட்ட தனபால்
வெண்ணந்தூரில் பெண்ணை தாக்கிய தறி தொழிலாளி ஜெயிலில் அடைப்புd
- வெண்ணந்தூர் பெரிய மாரியம்மன் கோவில் தெரு ராகவேந்திர நகரை சேர்ந்தவர் கணேசன் (வயது 40). தறி தொழிலாளி.
- மல்லசமுத்திரம் அருகே உள்ள ஓட்டலுக்கு சென்று அங்கு சாப்பிட்டனர். ஓட்டலில் சாப்பிட்டு விட்டு அவர் பணம் தரவில்லை என்று கூறப்படுகிறது.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள வெண்ணந்தூர் பெரிய மாரியம்மன் கோவில் தெரு ராகவேந்திர நகரை சேர்ந்தவர் கணேசன் (வயது 40). தறி தொழிலாளி.
சம்பவத்தன்று வடுகம்பா–ளையம் கிராமத்தைச் சேர்ந்த தறி தொழிலாளி தனபால் (31), வெண்ணந்தூர் பகுதியைச் சேர்ந்த மணி ஆகிய இருவரும் கணேசனை அழைத்துக் கொண்டு மல்லசமுத்திரம் அருகே உள்ள ஓட்டலுக்கு சென்று அங்கு சாப்பிட்டனர். ஓட்டலில் சாப்பிட்டு விட்டு அவர் பணம் தரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில் கணேசன் வீட்டிற்கு சென்ற தனபால் அங்கிருந்த கணேசனின் மனைவி லோகேஸ்வரியிடம் தகராறு செய்து லோகேஸ்வரியை தாக்கியதாக கூறப்படுகிறது. இது பற்றி லோகேஸ்வரி(38) வெண்ணந்தூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் வெண்ணந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமாவதி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் வழக்கு பதிவு செய்து தனபாலை கைது செய்தனர். பின்னர் ராசிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ராசிபுரம் கிளை ஜெயிலில் தனபால் அடைக்கப்பட்டார்.