உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த பிரபல சாராய வியாபாரி கைது

பிரபு (வயது 36). சாராய வியாபாரியான இவர், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 26-ந்தேதி வலசக்கல்பட்டி ஏரிக்கரையில் சாராயம் காய்ச்சினார்.டி.எஸ்.பி. ராமச்சந்திரன் மேற்பார்வை யில் சப்-இன்ஸ்பெக்டர் அல்லிமுத்து தலைமையிலான போலீசார் சுற்றி வளைத்தனர்.
உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த பிரபல சாராய வியாபாரி கைது
Published on

சேலம்:

சேலம் மாவட்டம் கெங்கவல்லி இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் பழனிமுத்து மகன் பிரபு (வயது 36). சாராய வியாபாரியான இவர், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 26-ந்தேதி வலசக்கல்பட்டி ஏரிக்கரையில் சாராயம் காய்ச்சியபோது டி.எஸ்.பி. ராமச்சந்திரன் மேற்பார்வை யில் சப்-இன்ஸ்பெக்டர் அல்லிமுத்து தலைமையிலான போலீசார் சுற்றி வளைத்தனர்.

அப்போது போலீசாரின் பிடியில் இருந்து தப்பிய பிரபு தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். இந்த நிலையில் அவர் கெங்கவல்லி அருகே நடுவலூரில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையிலான போலீசார் நேற்று இரவு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது உறவினர் வீட்டில் தங்கியிருந்த பிரபுவை போலீசார் சுற்றி வளைத்தனர்.

இதை பார்த்ததும் அவர்களை தள்ளி விட்டு பிரபு ஓட்டம் பிடித்தார். உடனே போலீசார் துரத்திச் சென்று மடக்கி பிடித்து அவரை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com