search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தக்காளி ஒரு கிலோ ரூ.105 ஆக உயர்வு
    X

    நாடு முழுவதும் தக்காளி விளைச்சல் குறைந்ததால் விலை அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் சேலம் மாவட்டம் காடையாம்பட்டி பகுதியில் ஒரு சில விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்துள்ளனர். அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் தக்காளி பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தக்காளி ஒரு கிலோ ரூ.105 ஆக உயர்வு

    • தமிழகம் முழுவதும் தக்காளி வரத்து குறைந்துள்ளதால் அதன் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
    • சேலம் உழவர் சந்தைகளில் ஒரு கிலோ தக்காளி இன்று காலை ரூ.95-105 முறை விற்பனை ஆகிறது.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் தக்காளி வரத்து குறைந்துள்ளதால் அதன் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் சேலம் உழவர் சந்தைகளுக்கும் தக்காளி வரத்து அடியோடு குறைந்துள்ளது. இதனால் தக்காளி விலை பல மடங்கு உயர்ந்து உள்ளது.

    சேலம் உழவர் சந்தைகளில் ஒரு கிலோ தக்காளி இன்று காலை ரூ.95-105 முறை விற்பனை ஆகிறது. மற்ற காய்கறிகளின் விலை விவரம் வருமாறு:

    உருளைக் கிழங்கு - ரூ.30-60, சின்ன வெங்காயம் - ரூ.75-80, பெரிய வெங்காயம் - ரூ.25-28, பச்சை மிளகாய்- ரூ.80-85, கத்தரி -ரூ.40-44, வெண்டைக்காய்-ரூ.28-30, முருங்கைகாய்-ரூ.30-50, பீர்க்கங்காய் -ரூ.40,

    சுரைக்காய்- ரூ.20-24, புடலங்காய்-ரூ.24-25, பாகற்காய்-ரூ.50-55, தேங்காய் - ரூ.20-25, முள்ளங்கி -ரூ.20-24, பீன்ஸ் - ரூ.98-105, அவரை- ரூ.70-75, கேரட் - ரூ.60- 74, மாங்காய்- ரூ.25-30, வாழைப்பழம்-ரூ.35-45-55,

    கீரைகள் - ரூ.20-24, பப்பாளி - ரூ.20-24, கொய்யா-ரூ.40, சப்போட்டா - ரூ.35-40, ஆப்பிள் - ரூ.180-200, சாத்துக்குடி - ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    நாமக்கல் உழவர் சந்தையில் தக்காளி ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 250 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சேலம் மார்க்கெட்களில் ஒரு கிலோ இஞ்சி 300 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. இனிவரும் நாட்களில் மேலும் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×