என் மலர்
சேலம்
- சாக்கடை கால்வாய் அமைக்க கோரி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து பொதுமக்கள் மறியலில் ஈடுப்பட்டனர்.
- கொண்டலாம்பட்டி போலீசார் அங்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் மாநகராட்சி அதிகாரிகளும் அங்கு விரைந்து, அவர்களது கோரிக்கை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர்.
சேலம்:
சேலம் கொண்டலாம்பட்டி திவ்யா தியேட்டர் அருகே ஊத்துக்குளி என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் அவர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பகுதி மக்கள் சுமார் 15 பேர், கொண்டலாம்பட்டியில் இருந்து சீலநாயக்கன்பட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து, கொண்டலாம்பட்டி போலீசார் அங்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் மாநகராட்சி அதிகாரிகளும் அங்கு விரைந்து, அவர்களது கோரிக்கை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர்.
இதை அடுத்து சாலை மறியலை கைவிட்டு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் சிறிது நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- கலெக்டர் அலுவலகம் நுழைவு வாயிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநகர் மாவட்ட செயலாளர் சண்முகராஜா தலைமையில் பலர் சாலை மறியல் ஈடுபட்டனர்.
- இந்த மறியல் போராட்டத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறித்து டவுன் சப்-இன்ஸ்பெக்டர் கோகிலா புகார் கொடுத்தார்.
சேலம்:
இந்திய ஜனநாயக வாலிபர் சங்க சேலம் மாநகர் மாவட்ட செயலாளராக இருப்பவர் பெரியசாமி (வயது 35). இவர் சேலம் தாதகாப்பட்டியில் நேற்று முன்தினம் தாக்கப்பட்டார். இதில் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இது குறித்து விசாரணை நடத்திய அன்னதானப்பட்டி போலீசார் 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே தாக்குதலுக்கு காரணமான லாட்டரி சீட்டு விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கேட்டு கலெக்டர் அலுவலகம் நுழைவு வாயிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநகர் மாவட்ட செயலாளர் சண்முகராஜா தலைமையில் பலர் சாலை மறியல் ஈடுபட்டனர். இந்த மறியல் போராட்டத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறித்து டவுன் சப்-இன்ஸ்பெக்டர் கோகிலா புகார் கொடுத்தார். அதன் பெயரில் சண்முகராஜா உட்பட 57 பேர் மீது அனுமதியின்றி கூடுதல், போக்குவரத்து இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
அதேபோல், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியது குறித்து டவுன் கிராம நிர்வாக அலுவலர் கோபிநாத் கொடுத்த புகாரின் பேரில் போலீசார், சங்கத்தின் வடக்கு மாவட்ட செயலாளர் குரு பிரசன்னா உள்பட 27 பேர் மீது அனுமதியின்றி கூடியது, போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தியது ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
சேலம் மாநகரில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை சமீப காலமாக அதிகரித்துள்ளது. தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையை தடுத்து சம்பந்தப்பட்ட சமூக விரோதிகள் கைது செய்யப்பட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அஸ்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி கொலை முயற்சி பிரிவில், 4பேர் மீதும் வழக்குப்பதிந்த னர்.
- ஹரிஹரசுதனுக்கு, 3ஆண்டு சிறை தண்டனை, 1000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டது.
சேலம்:
சேலம், மணக்காட்டை சேர்ந்தவர் சுப்ரமணி (வயது 30). பூ தோரணம் கட்டும் தொழிலாளி. இவர் கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அதே பகுதியில் உள்ள செல்லியம்மன் கோவில் அருகே நின்றி ருந்தார். அப்போது, மணக்காட்டை சேர்ந்த ஹரி ஹரசுதன் (34), சதீஸ்குமார் (34), செந்தில்முருகன் (32), அன்வர் (32) ஆகியோர் அங்கு வந்தனர். அவர்க ளுக்கும், சுப்ரமணிக்கும் இடையே மோதல் ஏற்பட் டது. அப்போது சுப்ர மணி கத்தியால் குத்தப் பட்டார். இதில் அவர் படு காய மடைந்தார்.
இந்த சம்பவம் குறித்து அஸ்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி கொலை முயற்சி பிரிவில், 4பேர் மீதும் வழக்குப்பதிந்த னர். இந்த வழக்கு சேலம் ஜே.எம்.எண்.3 நீதிமன்றத்தில் நடந்தது. செந்தில்முருகன் இறந்து விட்டதால் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஹரிஹரசுதனுக்கு, 3ஆண்டு சிறை தண்டனை, 1000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டது. சதீஷ் குமார், அன்வர் விடுவிக்கப் பட்டனர். ஹரிஹரசுதன் தனியார், டிவியில் காமிரா மேனாக பணிபுரிகிறார்.
சேலம்:
தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகத்தில், சேலம் கோட்டம் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கியது. இம்மமாவட் டங்களிர் டவுன் பஸ், புறநகர் பஸ், மலை பஸ் என சேலம் மண்ட லத்தில் 1047 பஸ்களும், தர்மபுரி மண்டலத்தில் 853 பஸ்களும் என மொத்தம் 1900 பஸ்கள் தினசரி இயக்கப்பட்டு வருகிறது.
தினசரி 9 லட்சத்து 19 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு, 6 லட்சம் மக ளிர் மற்றும் 14 லட்சம் பய ணிகள் பயணம் செய்கின்ற னர். வார இறுதி நாட்கள் விடுமுறையை முன்னிட்டு, சேலம் கோட்டம் சார்பில், 17-ந் தேதி வரை 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
இந்த சிறப்பு பஸ்கள் சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட், பெங்களூரு பஸ் ஸ்டாண்ட், சென்னை கோயம்படு, ஓசூர் பஸ் ஸ்டாண்ட், கோவை காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட், திருப்பூர் பஸ் ஸ்டாண்ட், திருவண்ணா மலை பஸ் ஸ்டாண்ட், சிதம்பரம் பஸ் ஸ்டாண்ட் ஆகிய பஸ் ஸ்டாண்டில் இருந்து இயக்கப்படுகிறது.
இந்த வழித்தடங்களில் பயணிகளின் வசதிக்காக அரசு விரைவு போக்கு வரத்து கழக முன்பதிவு மையம் வழியாகவும், இணையதளம் மற்றும் ஆப் வழியாகவும் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஓசூர், தர்மபுரி மற்றும் மேட்டூ ருக்கும், சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, பெங்களூ ருவுக்கும், ஓசூரில் இருந்து சென்னை, திருச்சி, மதுரைக்கும், நாமக்கல்லில் இருந்து சென்னைக்கும், திருச்சியில் இருந்து ஓசூ ருக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இத்தக வலை சேலம் கோட்ட நிர் வாக இயக்குனர் பொன் முடி தெரிவித்துள்ளார்.
மாதேஸ்வரன் மலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்
வரும் 17-ந் தேதி ஆடி அமாவாசையை முன்னிட்டு சேலம் டவுன் பஸ் ஸ்டாண்டில் இருந்து சித்தர் கோவிலுக்கும், சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்தும், மேட்டூர் மற்றும் தர்மபுரி பஸ் ஸ்டாண்டில் இருந்து மாதேஸ்வரன் மலைக்கு 35 சிறப்பு பஸ்கள் இயக்கப்படு கிறது என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரி வித்தனர்.
- நெடுஞ்சாலைத் துறை மூலம் ஓமலூரிலிருந்து சங்ககிரி, திருச்செங்கோடு, பரமத்திவேலூர் வரை 4 வழிச்சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது.
- மாநில நெடுஞ்சாலைத் துறை தலைமை திட்ட இயக்குனர் பிரபாகர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
சங்ககிரி:
ஆசிய வளர்ச்சி வங்கியின் 50 சதவீத நிதி உதவியுடன் சென்னை- கன்னியாகுமரி தொழிற்தடத் திட்டம், நெடுஞ்சாலைத் துறை மூலம் ஓமலூரிலிருந்து சங்ககிரி, திருச்செங்கோடு, பரமத்திவேலூர் வரை 4 வழிச்சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது.
இந்தப் பணியை மாநில நெடுஞ்சாலைத் துறை தலைமை திட்ட இயக்குனர் பிரபாகர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஒப்பந்ததாரர்களிடம் சாலை பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்க அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வின்போது தலைமை பொறியாளர் செல்வன், கோட்டப் பொறியாளர் சசிகுமார், தனி மாவட்ட வருவாய் அலுவலர் லதா, உதவி கோட்ட பொறியாளர், உதவி பொறியாளர் மற்றும் சாலைப் பணியின் ஒப்பந்ததாரர்கள், மேற்பார்வை ஆலோசகர்களும் உடன் இருந்தனர்.
- தொடர்ந்து குற்றங்களில் ஈடுபடுவதால் பாபுவை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீசார் பரிந்துரைத்தனர்.
- வழிப்பறி, கொலை முயற்சி உள்பட 5-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
சேலம்:
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள வியாசராஜபுரத்தைச் சேர்ந்தவர் பாபு (வயது 33). இவர் தற்போது சேலம் செவ்வாய்பேட்டை நரசிம்மசெட்டி தெருவில் வசித்து வருகிறார்.
செவ்வாபேட்டை போலீஸ் நிலையத்தில் ரவுடி பட்டியலில் உள்ள இவர் மீது அன்னதானப்பட்டி, செவ்வாய்பேட்டை நிலையங்களில் வழிப்பறி, கொலை முயற்சி உள்பட 5-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
தொடர்ந்து குற்றங்களில் ஈடுபடுவதால் பாபுவை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீசார் பரிந்துரைத்தனர். அதனை ஏற்று போலீசார் கமிஷனர் விஜயகுமாரி நேற்று உத்தரவிட்டார். இதனால் சேலம் மத்திய சிறையில் உள்ள அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. அதற்கான உத்தரவு நகலும் அவரிடம் வழங்கப்பட்டது.
- மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை தொட்டதும் 16 கண் மதகு வழியாக உபரி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்படும்.
- மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் 16 கண் மதகுகள் வெறிச்சோடி காணப்படுகிறது.
மேட்டூர்:
மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை தொட்டதும் 16 கண் மதகு வழியாக உபரி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்படும். கடந்த வருடம் ஜூலை மாதத்தில் 16 கண் மதகுகள் வழியாக உபரி நீர் திறக்கப்பட்டது.
மேலும் இந்த தண்ணீரை பார்ப்பதற்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடும் காட்சியை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் இந்த ஆண்டு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் 16 கண் மதகுகள் வெறிச்சோடி காணப்படுகிறது.
- தங்கநகைகள் மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்று விட்டனர்.
- கும்பலை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாழப்பாடி:
வாழப்பாடி அடுத்த கவர்கல்பட்டி பி.என்.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி மனைவி ராணி (வயது 71). தினந்தோ றும் இவரது மகன்கள் இருவரும் வேலைக்கு சென்று விடுவதால், இவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். நேற்று பகல் 2 மணியளவில் இவரது வீட்டிற்கு சென்ற மர்ம நபர்கள் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி ராணியை சேலையால் கட்டிப்போட்டு விட்டு, வீட்டில் இருந்து ஆறரை சவரன் தங்கநகைகள் மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்று விட்டனர்.
மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து வாழப்பாடி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீஸார், பட்டப்பகலில் வீடு புகுந்து கைவரிசை காட்டிய மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில்,
இரு தினத்திற்கு முன் மூதாட்டி வீட்டிற்கு, வேலைக்கு ஆள் வேண்டுமா எனக் கேட்டு பெண் ஒருவர் வந்து சென்றது தெரிய வந்துள்ளது. இதனால், வீட்டில் மூதாட்டி தனியாக இருப்பதை உளவு பார்த்து மர்ம கும்பல் இந்த துணிகர கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது உறுதியானதால், இந்த கும்பலை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த மாதம் 28-ந்தேதி காலை 2-வது அக்ரஹாரம் பகுதியில் தனியார் பஸ் மோதியதில் பாப்பாத்தி உயிரிழந்தார்.
- இது குறித்து டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்பாபு கண்ணா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
சேலம்:
சேலம் மறைமலை அடிகள் தெருவை சேர்ந்தவர் பாப்பாத்தி (வயது 46). இவர் கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார். இவருக்கு கல்லூரி படித்து வரும் மகளும், மகனும் உள்ளனர்.
கடந்த மாதம் 28-ந்தேதி காலை 2-வது அக்ரஹாரம் பகுதியில் தனியார் பஸ் மோதியதில் பாப்பாத்தி உயிரிழந்தார்.
இது குறித்து டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்பாபு கண்ணா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவை ஆய்வு செய்தபோது, அவர், சம்பவம் நடப்பதற்கு முன்னதாக, டவுன் பகுதியில் இருந்து சென்ற பஸ்சில் விழுவதற்கு ஓடி சென்றபோது மோட்டார்சைக்கிள் ஒன்று குறுக்கே வந்துள்ளது. அதில் மோதி பாப்பாத்தி கீழே விழுந்ததும், 2-வதாக வந்த பஸ்சிற்குள் ஓடிச்சென்று விழுந்து தற்கொலை செய்து ெகாள்ளும் காட்சியும் இடம் பெற்றிருந்தது. அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப்படிப்பு களில் சேர க்யூட் எனப்படும் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு நடத்தப்படு கிறது.
- இந்த நுழைவு தேர்வு கடந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டது.
சேலம்:
நாட்டில் உள்ள மத்திய, மாநிலத்திற்கு உட்பட்ட 200 பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப்படிப்பு களில் சேர க்யூட் எனப்படும் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு நடத்தப்படு கிறது. இந்த நுழைவு தேர்வு கடந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டது.
சேலம், நாமக்கல்
மத்திய கல்வி அமைச்சகத்தின் தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) இந்த தேர்வை நடத்துகிறது. இந்த ஆண்டுக்கான க்யூட் தேர்வை எழுத 14 லட்சம் மாணவர்கள் விண்ணப் பித்தனர். நாடு முழுவதும் 271 நகரங்களில் உள்ள 447 மையங்களில் தேர்வு நடைபெற்றது.
இதில் பிளஸ்- 2 தேர்ச்சி பெற்ற மாணவ- மாணவி கள் பங்கேற்று எழுதினர். குறிப்பாக சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இருந்தும் பலர் எழுதினர்.
17-ந்தேதி வெளியாகிறது
இந்த நிலையில் தேர்வு முடிவுகள் வருகிற 17-ந்தேதி வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானிய குழுவின் தலைவர் ஜெக தீஷ்குமார் தெரிவித் துள்ளார்.
- சேலம் மத்திய சிறையில் சாதாரண கைதிகள், தண்டனை கைதிகள் என 800-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர்.
- இத னால் அழகிரியை சென்னை புழல் சிறைக்கு மாற்றம் செய்ய சேலம் ஜெயில் சூப்பிரண்டு (பொறுப்பு) வினோத் பரிந்துரைத்தார்.
சேலம்:
சேலம் மத்திய சிறையில் சாதாரண கைதிகள், தண்டனை கைதிகள் என 800-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த ஜெயிலில் அடிக்கடி போலீசார், சிறை வார்டன்கள் சோதனை நடத்தி கைதிகளிடம் இருந்து செல்போன், கஞ்சா உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர்.
தொடர்ந்து ஜெயிலில் தீவிரமாக கண்காணித்தும் வருகிறார்கள். இந்த நிலை யில் திருச்சியை சேர்ந்த பிரபல ரவுடி அழகிரி (வயது 40) என்பவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப் பட்டிருந்தார். இவர் செல்போனை பயன்படுத்தி, ஆள் கடத்த லில் ஈடுபட்டு வருவது சிறை அதிகாரிகள் விசா ரணையில் தெரிய வந்தது.
மேலும் அழகிரி மீது
20-க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளன. இத னால் அழகிரியை சென்னை புழல் சிறைக்கு மாற்றம் செய்ய சேலம் ஜெயில் சூப்பிரண்டு (பொறுப்பு) வினோத் பரிந்துரைத்தார். இதையடுத்து சிறை துறை டி.ஜி.பி. அம்ரேஷ் பூஜாரி உத்தரவின்பேரில் நேற்று அழகிரி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
- சேலம் குகை பகுதியில் வீட்டில் இருந்து மாயமான சிறுமி மாய மானார்.
- இது குறித்து செவ்வாய் பேட்டை போலீசில் புகார் செய்தனர். போலீசார் தீவிர விசாரணை மேற் கொண்ட தில் , அந்த சிறுமி கொண்ட லாம்பட்டியில் உள்ள தனது பாட்டி வீட்டில் இருப்பது தெரியவந்தது.
சேலம்:
சேலம் குகை பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியின் 13 வயது மகள், அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று இரவு 9 மணி அளவில் வீட்டில் இருந்த அந்த சிறுமி திடீரென மாய மானார். இதனால் பதட்டம அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அக்கம் பக்கம் முழுவதும் தேடினர். எங்கும் அந்த சிறுமி கிடைக்காததால் இது குறித்து செவ்வாய் பேட்டை போலீசில் புகார் செய்தனர். போலீசார் தீவிர விசாரணை மேற் கொண்ட தில் , அந்த சிறுமி கொண்ட லாம்பட்டியில் உள்ள தனது பாட்டி வீட்டில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, இன்று அதிகாலையில், அந்த சிறுமியை கொண்டலாம்பட் டியில் உள்ள அவரது பாட்டி வீட்டில் இருந்து போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.






