

சேலம்:
சேலம் கன்னங்குறிச்சி கொண்டப்பநாயக்கன்பட்டி புதிய காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (58). இவர் கொண்டப்ப நாயக்கன்பட்டியில் மரக்கடை நடத்தி வந்தார். இவருக்கு ஜெயா என்ற மனைவியும், ராகினி என்ற மகளும், பிரதாப் என்ற மகனும் உள்ளனர்.
நேற்று இவர், ஆடி அமாவாசையையொட்டி மொபட்டில் மேச்சேரி பத்திரகாளியம்மன் கோவிலுக்கு சென்று விட்டு இரவு டால்மியா போர்டு செட்டிச்சாவடி வழியாக கன்னங்குறிச்சிக்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக எதிரே வந்த மோட்டார் சைக்கிள் சுப்பிரமணியன் மொபட் மீது மோதியது. இதில் சுப்பிரமணியன் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்தில் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து கன்னங்குறிச்சி இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ
இடத்திற்கு சென்று சுப்பிர மணியன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.