என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கியாஸ் சிலிண்டர் விநியோகம் செய்யும் ஊழியர் தற்கொலை
    X

    முருகன்

    கியாஸ் சிலிண்டர் விநியோகம் செய்யும் ஊழியர் தற்கொலை

    • முருகன் (வயது 34). இவர் அதே பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவரது கியாஸ் ஏஜென்சியில் கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்யும் ஊழியராக வேலைபார்த்து வந்தார்.
    • இதையடுத்து முருகன் பலரிடம் கடன் வாங்கி ரூ.2½ லட்சம் வரை திருப்பி கொடுத்ததாக கூறப்படுகிறது.

    சேலம்:

    சேலம் ஓமலூர் அருகே உள்ள வட்டமுத்தாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 34). இவர் அதே பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவரது கியாஸ் ஏஜென்சியில் கியாஸ் சிலிண்டர் வினி யோகம் செய்யும் ஊழியராக வேலைபார்த்து வந்தார்.

    இவர் கடைகளுக்கு வர்த்தக சிலிண்டர்கள் வினியோகம் செய்ததில் ரூ.3½ லட்சம் வரை கடன் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கியாஸ் ஏஜென்சி உரிமையாளர் முருகனிடம் பணத்தை கட்டுமாறு கூறியுள்ளார். இதையடுத்து முருகன் பலரிடம் கடன் வாங்கி ரூ.2½ லட்சம் வரை திருப்பி கொடுத்ததாக கூறப்படுகிறது.

    தொடர்ந்து முருகன் வழக்கம்போல் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் மீண்டும் உரிமை யாளர் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த முருகன் விஷம் குடித்தார். இதையடுத்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட முருகன் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

    உருக்கமான கடிதம்

    தற்கொலை செய்து கொண்ட முருகன், என்னுடைய மரணத்திற்கு உரிமையாளர் தான் காரணம். அவர் பணத்தை கட்ட சொல்லி தினமும் கூறியதால் மன உளைச்சல் அடைந்ததாக அதில் கூறியிருந்தார். இதையடுத்து முருகனின் உறவினர்கள் சேலம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு திரண்டு வந்து கியாஸ் ஏஜென்சி உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுத்தனர்.

    Next Story
    ×