search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "accident victim"

    • கார்த்திகேயன் (21). இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
    • சேலம் கருப்பூர் என்ஜினீயரிங் கல்லூரி அருகே சாலையை நடந்து சென்று கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

    சேலம்:

    சேலம் காடையாம்பட்டி அருகே உள்ள பூசாரிபட்டியை சேர்ந்தவர் வெங்கடேஷ்குமார். இவரது மகன் கார்த்திகேயன் (21). இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி சேலம் கருப்பூர் என்ஜினீயரிங் கல்லூரி அருகே சாலையை நடந்து சென்று கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதில் படுகாயம் அடைந்த அவரை சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அதிகாலை கார்த்திகேயன் பரிதாபமாக இறந்தார். இதை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர். இந்த சம்பவம் குறித்து கருப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பழனிச்சாமி (58). இவர் கொண்டப்ப நாயக்கன்பட்டியில் மரக்கடை நடத்தி வந்தார்.
    • எதிரே வந்த மோட்டார் சைக்கிள் சுப்பிரமணியன் மொபட் மீது மோதியது. இதில் சுப்பிரமணியன் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

    சேலம்:

    சேலம் கன்னங்குறிச்சி கொண்டப்பநாயக்கன்பட்டி புதிய காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (58). இவர் கொண்டப்ப நாயக்கன்பட்டியில் மரக்கடை நடத்தி வந்தார். இவருக்கு ஜெயா என்ற மனைவியும், ராகினி என்ற மகளும், பிரதாப் என்ற மகனும் உள்ளனர்.

    நேற்று இவர், ஆடி அமாவாசையையொட்டி மொபட்டில் மேச்சேரி பத்திரகாளியம்மன் கோவிலுக்கு சென்று விட்டு இரவு டால்மியா போர்டு செட்டிச்சாவடி வழியாக கன்னங்குறிச்சிக்கு வந்து கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக எதிரே வந்த மோட்டார் சைக்கிள் சுப்பிரமணியன் மொபட் மீது மோதியது. இதில் சுப்பிரமணியன் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்து கன்னங்குறிச்சி இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ

    இடத்திற்கு சென்று சுப்பிர மணியன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கணபதி (வயது 20). இவர் சேலத்தில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
    • நேற்று மாலை பணி முடிந்து வீட்டிற்கு தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகிலுள்ள தெசவிளக்கு கிராமம் செங்கோடனுர் பகுதியை சேர்ந்தவர் பழனி, கூலி தொழிலாளி. இவரது மகன் கணபதி (வயது 20). இவர் சேலத்தில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

    நேற்று மாலை பணி முடிந்து வீட்டிற்கு தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். கே.ஆர்.தோப்பூர் பவர் கவுஸ் அருகே முன்னால் சென்று கொண்டிருந்த ஆட்டோ திடீர் என்று திரும்பியதால் ஆட்டோவில் மோதி கீழே விழுந்த கணபதி தலையில் பலத்த அடிபட்டு மயங்கி விழுந்தார்.

    உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி கணபதியின் தந்தை பழனி கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • இளந்தமிழன் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர்.
    • வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்த இளந்தமிழன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே ஆற்கவாடி பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை மகன் இளந்தமிழன்(வயது30). சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். சம்பவத்தன்று இவர் மூங்கில்துறைப்பட்டு மரப்பட்டறை அருகே நடந்து சென்ற போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்த இளந்தமிழன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் மூங்கில்துறைப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • இவர் கள்ளக்குறிச்சியில் இருந்து சங்கராபுரம் நோக்கி இன்று காலை லாரியை ஓட்டிவந்தார்.
    • போலீசார் விரைந்து சென்று லாரியை பொக்லைன் எந்திரம் மூலம் இழுத்து சீரமைத்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் மாமாந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 32). லாரி டிரைவர். இவர் கள்ளக்குறிச்சியில் இருந்து சங்கராபுரம் நோக்கி இன்று காலை லாரியை ஓட்டிவந்தார். மேலேறி கிராமம் ஏரி கரையோரம் லாரி சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. தறிகெட்டு ஓடிய அந்த லாரி எதிர்பாராத விதமாக சாலையோரம் நின்ற புளியமரத்தில் மோதியது. இந்த விபத்தில் லாரி டிரைவர் முருகன் சம்பவ இடத்தி லேயே உடல் நசுங்கி பலியானார்.

    விபத்தில் சிக்கிய லாரி நடுரோட்டில் நின்றதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த சங்கராபுரம் போலீசார் விரைந்து சென்று லாரியை பொக்லைன் எந்திரம் மூலம் இழுத்து சீரமைத்தனர். விபத்தில் பலியான முருகனின் உடல் பிரேத பரிசோத னைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சங்கராபுரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மேட்டுப்பட்டி பெருமாபாளையம் கிராமத்திற்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
    • விபத்தில் படுகாய மடைந்த அண்ணாதுரை, சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்டார்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த கவர்கல்பட்டி காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி அண்ணா துரை (வயது 44). இவர், நேற்று காலை, கவர்கல்பட்டியில் இருந்து மேட்டுப்பட்டி பெருமா பாளையம் கிராமத்திற்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

    சாலை வளைவில் திரும்பியபோது எதிர்பா ராத விதமாக, இரு சக்கர வாகனம் நிலைதடுமாறி முன்னே சென்ற டிராக்டர் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாய மடைந்த அண்ணாதுரை, சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாப மாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வாழப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டெல்லியில் விபத்தில் காயமடைந்த டிரைவரிடம் பணம் பறித்தது தொடர்பாக 2 போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். #DelhiAccident #ConstablesSuspended
    புதுடெல்லி:

    டெல்லியின் கோத்வாலி பகுதியில், சனிக்கிழமை இரவு ஒரு லாரி விபத்துக்குள்ளானது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, போலீசார் வைத்திருந்த பேரிகார்டுகளை இடித்து தள்ளிவிட்டு, எதிரே வந்த சில வாகனங்கள் மீது மோதி பின்னர் கவிழ்ந்தது. இதில் லாரியை ஓட்டி வந்த டிரைவர் காயமடைந்தார்.

    போலீசார் அங்கு சென்று டிரைவரை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

    ஆனால், விபத்தில் காயமடைந்த டிரைவரிடம் போலீசார் மிரட்டி அவரிடம் இருந்து 3000 ரூபாய் பணத்தை பறித்ததாகவும், மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்பு, காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று அடித்ததாகவும் அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குற்றம் சாட்டப்பட்ட 2 போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். #DelhiAccident #ConstablesSuspended
    ×