சேலம் தனியார் நிறுவன ஊழியர் விபத்தில் பலி

கணபதி (வயது 20). இவர் சேலத்தில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். நேற்று மாலை பணி முடிந்து வீட்டிற்கு தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
சேலம் தனியார் நிறுவன ஊழியர் விபத்தில் பலி
Published on

தாரமங்கலம்:

தாரமங்கலம் அருகிலுள்ள தெசவிளக்கு கிராமம் செங்கோடனுர் பகுதியை சேர்ந்தவர் பழனி, கூலி தொழிலாளி. இவரது மகன் கணபதி (வயது 20). இவர் சேலத்தில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

நேற்று மாலை பணி முடிந்து வீட்டிற்கு தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். கே.ஆர்.தோப்பூர் பவர் கவுஸ் அருகே முன்னால் சென்று கொண்டிருந்த ஆட்டோ திடீர் என்று திரும்பியதால் ஆட்டோவில் மோதி கீழே விழுந்த கணபதி தலையில் பலத்த அடிபட்டு மயங்கி விழுந்தார்.

உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி கணபதியின் தந்தை பழனி கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com