கல்லூரி மாணவர் விபத்தில் பலி

கார்த்திகேயன் (21). இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு படித்து வந்தார்.சேலம் கருப்பூர் என்ஜினீயரிங் கல்லூரி அருகே சாலையை நடந்து சென்று கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
கல்லூரி மாணவர் விபத்தில் பலி
Published on

சேலம்:

சேலம் காடையாம்பட்டி அருகே உள்ள பூசாரிபட்டியை சேர்ந்தவர் வெங்கடேஷ்குமார். இவரது மகன் கார்த்திகேயன் (21). இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி சேலம் கருப்பூர் என்ஜினீயரிங் கல்லூரி அருகே சாலையை நடந்து சென்று கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

இதில் படுகாயம் அடைந்த அவரை சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அதிகாலை கார்த்திகேயன் பரிதாபமாக இறந்தார். இதை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர். இந்த சம்பவம் குறித்து கருப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com