சங்கராபுரம் அருகே விபத்தில் வாலிபர் பலி

இளந்தமிழன் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்த இளந்தமிழன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சங்கராபுரம் அருகே  விபத்தில் வாலிபர் பலி
Published on

கள்ளக்குறிச்சி:

சங்கராபுரம் அருகே ஆற்கவாடி பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை மகன் இளந்தமிழன்(வயது30). சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். சம்பவத்தன்று இவர் மூங்கில்துறைப்பட்டு மரப்பட்டறை அருகே நடந்து சென்ற போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்த இளந்தமிழன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் மூங்கில்துறைப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com