சாலை விபத்தில் கூலித்தொழிலாளி பலி

மேட்டுப்பட்டி பெருமாபாளையம் கிராமத்திற்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.விபத்தில் படுகாய மடைந்த அண்ணாதுரை, சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்டார்.
சாலை விபத்தில் கூலித்தொழிலாளி பலி
Published on

வாழப்பாடி:

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த கவர்கல்பட்டி காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி அண்ணா துரை (வயது 44). இவர், நேற்று காலை, கவர்கல்பட்டியில் இருந்து மேட்டுப்பட்டி பெருமா பாளையம் கிராமத்திற்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

சாலை வளைவில் திரும்பியபோது எதிர்பா ராத விதமாக, இரு சக்கர வாகனம் நிலைதடுமாறி முன்னே சென்ற டிராக்டர் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாய மடைந்த அண்ணாதுரை, சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாப மாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வாழப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com