என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • சாயல்குடி அருகே நரிப்பையூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
    • நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    சாயல்குடி

    சாயல்குடி அருகே நரிப் பையூர் கிராமத்தில் முதுகு ளத்தூர் சட்டமன்றத்தொ குதி நாம் தமிழர் கட்சி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற் றது.

    இந்நிகழ்ச்சிக்கு மாநில இளைஞர் பாசறை ஒருங்கி ணைப்பாளர் பசீர் அகமது தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் சிவக்குமார், தொகுதி செய லாளர் வெங்கடேஷ், ஒன் றியச் செயலாளர் பழனி முருகன், பென்னகரம் ராஜ பாண்டி, ஆகியோர் முன் னிலை வகித்தனர்.

    நாம் தமிழர் கட்சியில் புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் கட்சியில் சேர்ந்த புதிய உறுப்பினர்களுக்கு கட்சியில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு அடை யாள அட்டை வழங்கப்பட் டது. இந்நிகழ்ச்சியில் தொகுதி தலைவர் ராஜ பாண்டியன், ஒன்றிய தலை வர் விமல்ராஜ், தொகுதி தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் அருள் ராஜ், ஒன்றிய இணைச் செயலாளர் சக்திவேல், நரிப்பையூர் சிவா, கிளைச் செயலாளர் அந்தோணி ஜேசுபாலன், கிளைத்தலை வர் சேசு ரமேஷ் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகி கள் பங்கேற்றனர்.

    • ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியல் வருவாய் ரூ. 1.39 கோடி கிடைத்துள்ளது.
    • உண்டியல் எண்ணும் பணியில் ஆன்மீக பணியாளர்கள் ஈடுபட்டள்ளனர்.

    ராமேசுவரம்

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் மாதந்திர உண்டியல் வருவாய் எண்ணும் பணி நேற்று காலையில் அம்பாள் சன்னதி முன்புள்ள பழைய திருமண மண்டபத்தில் இணை ஆணையர் செ.சிவராம்குமார், உதவி ஆணையர் பா.பாஸ்கரன் தலைமையில் தொடங்கியது.

    இதில் உண்டியல் வருவாயாக ரூ. 1 கோடியே 39 லட்சத்து 22 ஆயிரத்து ரூ 935-ம், 216 கிராம் 200 மில்லி கிராம் தங்கம், 9 கிலோ 515 கிராம் வெள்ளி கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    உண்டியல் எண்ணும் பணியில் ஆய்வர் அ.பிரபாகரன், பேஸ்கார்கள் பஞ்சமூர்த்தி, கமலநாதன் மற்றும் உளவார ஆன்மீக பணியாளர்கள் என 150 க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டள்ளனர்.

    • பரமக்குடி அருகே சின்ன அக்கிரமேசி கிராமத்தில் புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு விழா நடந்தது.
    • முருகேசன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    பரமக்குடி

    பரமக்குடி அருகே நயினார்கோவில் ஒன்றியத்தில் உள்ள சின்ன அக்கிரமேசி கிராமத்தில் ரூ.29.3 லட்சம் மதிப்பிலான புதிய வகுப்பறை கட்டிடங்களை முருகேசன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை குழந்தை நேயப்பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் சார்பில் நயினார்கோவில் ஒன்றிய சின்ன அக்கிரமேசி கிராமத்தில் கட்டப்பட்ட புதிய வகுப்பறை கட்டிடம், சித்தனேந்தல், பந்தப்பனேந்தல் ஆகிய கிராமங்களிலும் தலா ரூ.29.3 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 2 வகுப்பறைகள் கொண்ட பள்ளிக்கூட கட்டிடங்களை திறந்து வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் நயினார்கோயில் மேற்கு ஒன்றிய செயலாளர் சக்தி, ஒன்றிய கவுன்சிலர் இளவரசி மணிமன்னன், நயினார்கோவில் ஒன்றிய துணைச்செயலாளர் திலகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராமேசுவரத்தில் முருங்கைக்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது.
    • மரம் வளர்ப்பில் ஈடுபடுபவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ராமேசுவரம்

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் விவசாயம் பணி என்பது இல்லாத நிலையில் வீடுகளில் உள்ள காலி இடங்களில் முருங்கைக்காய் மரம் வளர்ப்பது வழக்கமான ஒன்று. அதில் விளையும் முருங்கைக்காய்களை வீட்டு தேவைக்கு பயன்படுத்தி விட்டு மற்ற காய்களை விற்பனை செய்கின்றனர்.

    இந்த நிலையில் தற்போது வீடுகளில் வளர்க்கப்பட்டு வரும் முருங்கைக்காய் மரங்களில் விளைச்சல் அதிகரித்து உள்ளது. ஒவ்வொரு மரங்களிலும் 500-க்கும் மேற்பட்ட முருங்கைக்காய் காய்ந்துள்ள தால் மரம் வளர்ப்பில் ஈடுபடுபவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மேலும் ஒரு முருங்கைக்காய் ரூ.10 முதல் 15 வரை மார்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஆயிரக்கணக்கில் லாபம் கிடைத்துள்ளதாக மரம் வளர்ப்பில் ஈடுபடு பவர்கள் தெரிவித்தனர்.

    • இலங்கை கடற்படை தாக்குதலில் காயமடைந்த மீனவரிடம் உளவுத்துறை போலீசார் விசாரணை நடத்தினர்.
    • ராமேசுவரம் ஓலைக்குடாவை சேர்ந்த மீனவர் செங்கோல் பிராங்கிளின் காலில் காயமடைந்த நிலையில் கரை திரும்பினர்.

    ராமேசுவரம்

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 200-க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசை படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது 5 ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படை யினர் மீனவர்கள் மீது கற்கள் மற்றும் பாட்டில்களை கொண்டு தாக்குதல் நடத்தி விரட்டியடித்தனர்.

    இதில், ராமேசுவரம் ஓலைக்குடாவை சேர்ந்த மீனவர் செங்கோல் பிராங்கி ளின் காலில் காயமடைந்த நிலையில் கரை திரும்பினர். பின்னர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வீட்டுக்கு திரும்பினர்.

    இந்த நிலையில் காய மடைந்த மீனவர் பிராங்கிளி னிடம் உளவுத்துறை போலீ சார் விசாரணை நடத்தினர். அவரிடம் இந்திய கடல் பகுதியில் இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி யதா? அல்லது இலங்கை கடல் பகுதியில் நடை பெற்றதா? என விசாரணை மேற்கொண்டனர்.

    • எத்தனை ஆண்டுகள் ஆனாலும் யாராலும் வீழ்த்த முடியாத இயக்கம் தி.மு.க. என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசினார்.
    • துணை அமைப்பாளர்கள் ரமேஷ் கண்ணா, குமரகுரு, சத்தி யேந்திரன், கோபிநாத், தௌபீக் ரகுமான் உள் ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் தி.மு.க. மாவட்ட இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. மாவட்ட அமைப் பாளர் சம்பத் ராஜா தலைமை தாங்கினார். மாநில இளைஞரணி துணைச் செயலாளர்கள் ராஜா, இன்பா, ரகு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்து ராமலிங்கம், பரமக்குடி முருகேசன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    தி.மு.க.வின் நம்பிகை யாக இருப்பது இளைஞரணி.இளைஞரணி நிர்வாகிகள் வீடு, வீடாக சென்று தி.மு.க. ஆட்சியின் திட்டங்களை எடுத்துக்கூறி இளை ஞர்களை இணைக்க வேண்டும்.

    தி.மு.க.வை வீழ்த்தி விடாலாம் என நினைக்கி றார்கள். ஆனால் அது எத்தனை ஆண்டுகள் ஆனா லும் நடக்காது. யார் பெரியவன் என்ற சண்டையில் தான் பா.ஜ.க.-–அதி.மு.க. கூட்டணி முறிந்துள்ளது. இது நிரந்தரமல்ல. நாளையே சேர்ந்து விடுவார்கள். அதை பற்றி நமக்கு கவலையில்லை.

    முதல்-அமைச்சரின் செயல்பாட்டை மக்களிடம் கொண்டு சென்று 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் துணை அமைப்பாளர்கள் ரமேஷ் கண்ணா, குமரகுரு, சத்தி யேந்திரன், கோபிநாத், தௌபீக் ரகுமான் உள் ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக மாநில இளைஞரணி மாநாட்டில் 20 ஆயிரம் பேர் பங்கேற்பது, தொகுதி வாரியாக கலைஞர் நூலகம் அமைப்பது, இல்லம் தேடி இளைஞரணி உறுப்பி னர்கள் சேர்ப்பது, மாரத் தான் போட்டி நடத்துவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டது.

    • அரியமான் கடற்கரையில் தூய்மை பணியை முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து கடற்கரையில் மரக்கன்றுகளை நட்டார்.
    • பங்கேற்ற மாணவ, மாணவி களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    மண்டபம்

    ராமநாதபுரம் மாவட்ட சுற்றுலாத்துறை சார்பாக கரு ணாநிதி நூற்றாண்டு விழா மற்றும் உலக சுற்றுலா தினத்தை யொட்டி சாத்தக்கோன்வலசை ஊராட்சி அரியமான் கடற் கரையை சுத்தம் செய்யும் பணி நடந்தது. காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தூய்மை பணியை தொடங்கி வைத்து கடற்கரையில் மரக்கன்று களை நட்டார். இதில் ஊராட்சி மன்ற தலைவர் நாகேஸ்வரி வீர பத்திரன், ராமேஸ்வரம் நக ராட்சி தலைவர் நாசர்கான், ராமநாத புரம் நகராட்சி தலைவர் கார்மேகம், துணைத்தலைவர் பிரவீன் தங்கம், மண்டபம் வட்டார வளர்ச்சி அலுவலர் நட ராஜன், மாவட்ட வன அலுவலர் ஹேமலதா, மாவட்ட சுற்றுலா அலுவலர் அருண் பிரசாத், ஊராட்சி செயலர் விஸ்வநாதன் உட்பட சுற்றுலாத்துறை அலுவ லர்கள் மற்றும் கிராம பணி யாளர்கள் கலந்து கொண்டனர். தூய்மை பணியில் கல்லூரி மாணவ, மாணவி கள் கலந்து கொண்டு அரியமான் கடற்கரையினை சுத்தம் செய்தனர். பங்கேற்ற மாணவ, மாணவி களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    • பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • தலைமை ஆசிரியை சுமையா ஜரின் பர்ஹானா தலைமை தாங்கினார்.

    பசும்பொன்

    கமுதி இக்பால் தொடக்கப்பள்ளியில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியை சுமையா ஜரின் பர்ஹானா தலைமை தாங்கினார். கமுதி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலர் சந்திரசேகரன், முன்னணி தீயணைப்பு வீரர் உத்தண்டசாமி, முத்துராஜ், காந்தி, தினேஷ்குமார், காளீஸ்வரன் ஆகியோர் கொண்ட குழுவினர் மாணவர்களுக்கு செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர். நிகழ்ச்சியில் பேரிடர் காலங்களில் மாணவ-மாணவிகள் தங்களை எப்படி காப்பாற்றிக் கொள்ள வேண்டும், பேரிடர்களில் சிக்கிக் கொண்ட பொதுமக்களை எவ்வாறு காப்பாற்ற வேண்டும், பாதிக்கப்பட்ட வர்களுக்கு எப்படி முதலுதவி செய்ய வேண்டும் உள்பட பல்வேறு விழிப்புணர்வு செய்முறைகள் செய்து காண்பிக்கப்பட்டது.

    • திடீரென கடல் 100 மீட்டர் முதல் 300 மீட்டர் வரை உள்வாங்கியது.
    • கடந்த சில வருடங்களாக கடல் அடிக்கடி உள்வாங்கும் நிகழ்வு நடக்கிறது.

    ராமேசுவரம்:

    ராமேசுவரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ராமநாத சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் அங்குள்ள அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம்.

    அதன்படி இன்று காலை பக்தர்கள் வழக்கமாக அக்னி தீர்த்த கடலுக்கு நீராட வந்தனர். அப்போது திடீரென கடல் 100 மீட்டர் முதல் 300 மீட்டர் வரை உள்வாங்கியது. இதனால் பாறைகள் வெளியே தெரிந்தது. பக்தர்கள் விட்டுச் சென்ற பொருட்கள் சேறும் சகதியுமாக காணப்பட்டது. ஆனால் சில நிமிடங்களில் கடல் மீண்டும் இயல்பு நிலைக்கு மாறியது. இதையடுத்து பக்தர்கள் புனித நீராடினர்.

    இதேபோல் ராமேசுவரத்தில் உள்ள ஓலைக்குடா, சங்குமால் உள்ளிட்ட பகுதிகளிலும் கடல் உள்வாங்கியது. இதன் காரணமாக அங்கு நிறுத்தப்பட்டிருந்த படகுகள் தரை தட்டியது.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், கடந்த சில வருடங்களாக கடல் அடிக்கடி உள்வாங்கும் நிகழ்வு நடக்கிறது. அதிகாலையில் கடலில் நீரோட்டம் மாறுபடுவதால் இதுபோன்று நடக்கிறது. சில நிமிடங்களில் கடல் இயல்பு நிலைக்கு மாறிவிடும். இது வழக்கமான ஒன்றுதான் என்றனர்.

    கடல் உள்வாங்கியது உள்ளூர் மக்களுக்கு வழக்கமான நிகழ்வுதான் என்றாலும் வெளியூரில் வந்த சுற்றுலா பயணிகள் வியப்புடன் பார்த்தனர். 

    • மீனவர்கள் நள்ளிரவில் கச்சத்தீவு அருகே உள்ள நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
    • கடந்த 2 நாட்களுக்கு முன்பு செருதூர் மீனவர்கள் 4 பேர் கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் பாலு என்பவருக்கு சொந்தமான விசைப்படகு ஒன்றில் ராமேசுவரம் சுடுகாட்டம்பட்டி பகுதியை சேர்ந்த செங்கோல் பிராங்க்ளின் (வயது 34), ஜஸ்டின், அஸ்வால்ட் உள்ளிட்ட 4 மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

    இந்த மீனவர்கள் நள்ளிரவில் கச்சத்தீவு அருகே உள்ள நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது 2 ரோந்து கப்பலில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் திடீரென ராமேசுவரம் மீனவர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

    மேலும் அவர்களை அங்கு மீன்பிடிக்க விடாமல் விரட்டி அடித்தனர். இலங்கை கடற்படையினர் கற்களை வீசியதில் மீனவர் செங்கோல் பிராங்கிளினின் வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும், படகில் இருந்த மற்ற 3 மீனவர்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த 4 மீனவர்களும் அவசர அவசரமாக கரை திரும்பினர்.

    இதையடுத்து நேற்று காயம் அடைந்த செங்கோல் பிராங்கிளினை ராமேசுவரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சைக்கு பின்னர் அவர் வீடு திரும்பினார்.

    இதற்கிடையே மீன்துறை அதிகாரிகளும், மத்திய, மாநில உளவு பிரிவு போலீசாரும் காயமடைந்த மீனவரை சந்தித்து இலங்கை கடற்படை தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

    கடந்த வாரம் ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களை துப்பாக்கியால் சுட்டு இலங்கை கடற்படையினர் விரட்டியடித்த நிலையில் தற்போது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதில் மீனவர் ஒருவர் படுகாயம் அடைந்த சம்பவம் ராமேசுவரம் மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதற்கிடையே கோடியக்கரை அருகே 10 நாட்டிக்கல் தூரத்தில் நேற்று முன்தினம் இரவு மீன் பிடித்துக்கொண்டிருந்த நாகை செருதூர் மீனவர்கள் 5 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதுடன், ரூ.4 லட்சம் மதிப்புள்ள பொருட்களையும் பறித்து சென்றனர்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு செருதூர் மீனவர்கள் 4 பேர் கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

    • ராமநாதபுரத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 512 மனுக்கள் பெறப்பட்டன.
    • துறைசார்ந்த அலுவலர்கள் சிறப்பு கவனம் எடுத்து செயல்பட வேண்டுமென கலெக்டர் தெரிவித்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் கலெக்டர் அவர்கள் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் குறித்த 512 மனுக்கள் பெறப்பட்டன.

    பொதுமக்கள் வழங்கும் மனுக்களுக்கு துறைசார்ந்த அலுவலர்கள் சிறப்பு கவனம் எடுத்து செயல்பட வேண்டுமென கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்தார்.

    கூட்டத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து இழப்பீடு நிவாரணத் தொகையாக 2 பயனாளி களுக்கு தலா ரூ.1 லட்சத்திற்கான காசோலை, ரூ.50 ஆயிரம் மதிப்பீட்டில் 5 பயனாளிகளுக்கு தையல் எந்திரங்கள், 2 பயனாளி களுக்கு சலவை பெட்டி களும் என மொத்தம் 9 பயனாளிகளுக்கு ரூ.2.50 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜூலு, உதவி கலெக்டர் (பயிற்சி) சிவானந்தம், மாவட்ட வழங்கல் அலுவலர் நாராயணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சிவசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முதுகுளத்தூரில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • வீடுகளில் பயன்படாமல் கிடக்கும் பொருட்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அரசுத் தொழில் பயிற்சி நிலையத்தில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது. இந்த முகாமிற்கு பயிற்சி நிலைய முதல்வர் வாளையானந்தம் தலைமை தாங்கினார். கீழத்தூவல் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் நெப்போலியன் முன்னிலை வகித்தார். இதில், டெங்கு கொசுக்கள் உருவாகும் விதம், டெங்குவால் ஏற்படும் ஆபத்துக்கள், காய்ச்சல் அறிகுறிகள் ஏற்பட்டால் பொதுமக்கள் செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்து, மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மேலும் வீடுகளில் பயன்படாமல் கிடக்கும் பொருட்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில், தொழில் பயிற்சி நிலைய மாணவர்கள், ஆசிரியர்கள், கீழத்தூவல் ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர்கள் நேதாஜி, கருணாகர சேதுபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×