என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • வருகிற 7-ந்தேதி காலை 6 மணியளவில் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி நடைபெற உள்ளது.
    • போட்டிகளில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கி றேன்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் பா.விஷ்ணு சந்தி ரன் வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    கலெக்டர் தகவல்

    2023-2024 ஆம் ஆண் டிற்கான விளையாட்டுத் துறை மானியக்கோரிக்கை யில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட் டுத்துறை அமைச்சரால் அன்றாட வாழ்வில் உடற்தகு தியை பேணுவது குறித்த விழிப்புணர்வை பொது மக்களிடையே ஏற்படுத்துவ தற்கும், உடற்தகுதி கலாசா ரத்தை இளைஞர்களிடையே புகுத்துவதற்கும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாரத்தான் போட்டிக்கு இணையான அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட் டப்போட்டி ஆண்டுதோறும் நடத்தப்பபடும் என அறி விக்கப்பட்டது.

    அதன் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் அக்டோபர் 7-ந்தேதி மாரத் தான் போட்டிக்கு இணை யான அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி யின் கீழ்காணும் 2 பிரிவுக ளில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலருக்கும் நடைபெற உள்ளது.

    ஆண்கள் 17 முதல் 25 வயதிற்குட்பட்டவர்கள் 8 கி.மீ., 25 வயதிற்கு மேற்பட்ட வர்கள் 10கி.மீ., பெண்கள் 17 முதல் 25 வயதிற்குட்பட் டவர்கள் 5 கி.மீ., 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் 5 கி.மீ. என அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி ராமநாதபுரம் பட்டிணம் காத்தான் நால்வழிச்சாலை பிரிவில் வருகிற 7-ந்தேதி காலை 6 மணியளவில் நடை பெற உள்ளது. ஓட்டப் போட்டியில் பங்குபெறும் அனைவரும் கண்டிப்பாக தங்கள் உடற்தகுதி குறித்து சுய உறுதிமொழி படிவம் பூர்த்தி செய்து தரவேண்டும்.

    மேலும் 17 முதல் 25 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகள் தாங்கள் பயிலும் பள்ளி தலைமையாசி ரியர், கல்லூரி முதல்வர்க ளிடம் கண்டிப்பாக வயது சான்றிதழ் தனித்தனியாக பெற்று வருதல் வேண்டும். ஆதார் கார்டு, பள்ளி, கல்லூரி அடையாள அட்டை கொண்டு வருதல் வேண்டும். 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் தங்களது பிறப்புச்சான்றிதழ், ஆதார் கார்டு நகல் கொண்டு வருதல் வேண்டும்.

    இப்போட்டியில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத் தொகையான தலா ரூ.5000-ம், ரூ.3000, ரூ.2000-ம் வீதமும், 4 முதல் 10 ஆம் இடம் வரை வெற்றி பெறுபவர்களுக்கு தலா ரூ.1000 வீதம் பரிசுத் தொகை வங்கி மாற்று வழியாக வழங்கப்ப டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

    எனவே மேற்காணும் போட்டியில் கலந்து கொள் ளும் ஆண்கள் மற்றும் பெண்கள் உடற்தகுதி குறித்து சுய உறுதிமொழி படிவம் பூர்த்தி செய்திட மற்றும் வயதுச்சான்றிதழ் சரிபார்ப்பதற்கு 04.10.2023 அன்று முதல் 06.10.2023 அன்று மாலை 6 மணிக்குள் சீதக்காதி சேதுபதி விளை யாட்டரங்கிற்கு நேரில் வந்து பதிவுசெய்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. பதிவு செய்வதற்கு பதிவு கட்டணம் இல்லை. போட்டிகளில் கலந்து கொண்டு பயன்பெ றுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • மண்டபம் ரெயில் நிலையம் முன்பு டி.ஆர்.இ.யூ. தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • நடந்த நிர்வாகிகள் தேர்வு கூட்டத்தில் புதிய நிர்வா கிகள் தேர்வு நடைபெற்றது.

    மண்டபம்

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ரெயில் நிலையம் முன்பு டி.ஆர்.இ.யூ. தொழிற் சங்கத்தினர் அடிப்படை சம்பளத்திற்கு ஏற்ப போனஸ் வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய சட்டத்தை ரத்து செய்தல், காலி பணி யிடங்களை நிரப்புதல் உள் ளிட்ட 6 அம்ச கோரிக் கையை வலியுறுத்தி ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.

    மதுரை கோட்ட பொரு ளாளர் சரவணன் தலைமை தாங்கினார். உதவி தலைவர் காளிதாஸ் முன்னிலை வகித்தார். அதைதொடர்ந்து, நடந்த நிர்வாகிகள் தேர்வு கூட்டத்தில் புதிய நிர்வா கிகள் தேர்வு நடைபெற்றது.

    இதில் தலைவராக அய்யப்பன், செயலாளராக முனியாண்டி, பொருளாள ராக கேசவன்துரை, உதவி செயலாளராக செல்லத் துரை உள்ளிட்டவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

    • கமுதி அருகே முதல்-அமைச்சரின் எல்லாருக்கும் எல்லாம் திட்டம் குறித்து கீழராமநதி கிராமசபை கூட்டத்தில் விளக்கம் அளித்தனர்.
    • துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துராம லிங்கம் முன்னிலை வகித்தார்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கீழராமநதி ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தமிழ்ச்செல்வி போஸ் தலைமையில் கிராமசபை கூட்டம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் பழனிஅழகர்சாமி முன்னிலை வகித்தார்.துணைத் தலைவர் மைதீன், கிராம நிர்வாக அலுவலர் நாகராஜன், ஊராட்சி செயலர் முத்துராமு உள்பட கிராம மக்கள் கலந்து கொண்டனர். மேலும் கூட்டத்தில் முதல்-அமைச்சரின் எல்லாருக்கும் எல்லாம் திட்டம் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. இதில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, நான் முதல்வன், புதுமைப்பெண் ஆகிய திட்டங்கள் குறித்து, ஊராட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

    இதே போல் தலைவநாயக்கன்பட்டியில் ஊராட்சி மன்ற தலைவர் புளியம்மாள் மாரிமுத்து தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துராம லிங்கம் முன்னிலை வகித்தார். இதில் துணைத் தலைவர் ஜெயராமன் கிராம நிர்வாக அலுவலர் புனிதா, ஊராட்சி செயலர் முகம்மதுஹக்கீம் உள்பட கிராம மக்கள் கலந்து கொண்டனர். இதேபோல் பாக்குவெட்டி, ஆனையூர், பேரையூர், புதுக்கோட்டை, இடையங்குளம் உள்பட ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

    • நகர்மன்ற கூட்டரங்கில் தி.மு.க. கவுன்சிலருக்கு மிரட்டல் விடுத்த பா.ஜ.க. கவுன்சிலர் மீது போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் கொடுத்துள்ளனர்.
    • விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப் பாளரும், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி உறுப்பினர் நகராட்சி கவுன்சிலருமான முகமது ஜஹாங்கீர், நகர சபை தலைவர் கார்மேகத்து டன் சென்று மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார்.

    பின்னர் நிருபர்களிடம் கூறுகையில், கடந்த மாதம் நகராட்சி அலுவலகம் முன்பு நடந்த பா.ஜ.க. ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியை சேர்ந்த கவுன்சிலர் குமார் மத பிரச்சினையை தூண்டும் வகையில் பேசினார். கடந்த வாரம் நடைபெற்ற நகர சபை கூட்டத்தில் இதே பிரச்சினையை எழுப்பி தி.மு.க. கவுன்சிலர்களுடன் மோதலில் ஈடுபட்டார்.

    இதனை தட்டி கேட்டதற்காக என்னை அச்சுறுத்தும் வகையில் பேசி மிரட்டல் விடுத்தார்.அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு அளித்துள்ளோம் என்றார்.

    இது குறித்து நகரசபைத் தலைவர் கார்மேகம் கூறு கையில், பா.ஜ.க. 31-வது வார்டு கவுன்சிலர் குமார் தொடர்ந்து எங்களை மக்கள் பணி செய்ய விடா மல் மறைமுகமாக தடுத்து வருகிறார். அதைப்பற்றி நாங்கள் துளியும் கவலைப் பட மாட்டோம். தொடர்ந்து மக்கள் பணி செய்வோம்.

    அவரது இந்த செய லானது ராமநாதபுரம் மாவட்டத்தில் சமூக நல்லி ணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் உள்ளது.எல்லா வற்றிற்கும் மேலாக கவுன்சி லர்களை ஒருமையில் பேசி வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. முதல்-அமைச்சரின் திராவிட மாடல் ஆட்சியில், தி.மு.க. மாவட்ட செயலாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் வழிகாட்டுதலின்படி ராமநாதபுரம் நகராட்சியில் மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

    இந்நிலையில் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த கவுன் சிலர் ஒருவரை பொதுக் கூட்டத்தில் ஒருமையில் பேசி, நகர் மன்ற கூட்ட ரங்கில் அவருக்கு மிரட்டல் விடுத்து அச்சுறுத்தியிருப்பது குறித்து போலீஸ் சூப்பி ரண்டிடம் புகார் அளித்துள் ேளாம். விரைவில் நடவ டிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • சக்கரக்கோட்டை ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது.
    • முடிவில் ஊராட்சி செயலர் காசி நாதன் நன்றி கூறினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மன்ற தலைவர் யாழினி புஷ்ப வள்ளி தலைமை தாங்கினார். துணை வட்டார வளர்ச்சி அலுவ லர் முனீஸ்வரன் முன்னிலை வகித்தார்.

    இக்கூட்டத்தில் வரும் நிதியாண்டில் நிறை வேற்றப்பட வேண்டிய வளர்ச்சி திட்ட பணிகள் தேர்வு செய்யப்பட்டு கிராம சபையில் ஒப்புதல் பெறப் பட்டது. 100 நாள் வேலை திட்டம் சம்பந்தமான குறைகள் கிராம மக்கள் முன்னிலையில் விவாதிக்கப்பட்டு தீர்வு காணப்பட்டது.

    பொது மக்கள் குடிநீர், மின் வசதி, கழிவுநீர் வாய்க்கால் அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு கோரிக்கை மனு அளித்தனர்.

    இந்த மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்படும் என உறுதியளித்தனர். முடிவில் ஊராட்சி செயலர் காசி நாதன் நன்றி கூறினார்.

    • காத்தனேந்தல் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது.
    • 10 ஊராட்சிகளில் சங்கரத்தேவன் கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசா யிகள், பொதுமக்களின் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள பறை யங்குளம் மலட்டாறு அணைக்கட்டில் இருந்து பிரிந்து செல்லும் சங்கரத் தேவன் கால்வாய் பல ஆண்டுகளாக தூர்வ ரப்படாமல், கருவேல மரங்கள் அடர்ந்து, புதர் மண்டி காணப்படுவதால், கடலாடி, சாயல்குடி உள்ளிட்ட பகுதிகளில் விவசாய பணிகளுக்காக கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து ஆப்பநாடு இளைஞர் சங்கம் மற்றும் விவசாயிகள் சபை சார்பில் மாவட்ட நிர்வாகம், நீர்வளத் துறை அதிகாரி களுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். கடந்த 2 ஆண்டு களுக்கு முன்புதான் அந்த கால்வாய் தூர்வாரப்பட் டது. அதனால் குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு பின்பு மட்டுமே தூர்வாரப்படும் என அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். மேலும் ஆப்பநாடு இளைஞர்கள் சங்கம், விவசாயிகள் சபை சார்பில் தன்னார்வலர்கள் துணையோடு இளை ஞர்களே கால்வாயை தூர் வார அதிகாரிகள் அனுமதி அளித்தால் போதும் என பலமுறை மாவட்ட நிர்வா கத்திடமும் நீர்வளத்துறை அதிகாரிகளிடமும் மனு அளித்து வருகின்றனர்.

    அதிகாரிகள் அனுமதி தர மறுத்து வருவதால் காந்திெஜயந்தி சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கமுதி, கடலாடியை சுற்றி உள்ள எஸ்.கீரந்தை, நாராயணபுரம், புதுக் கோட்டை, காத்தனேந்தல், ஏனாதி, எ.தரைக்குடி, எஸ்.எம்.இலந்தைகுளம், ஆப்பநாடு, மறவர் கரிசல் குளம், ஏ.உசிலங்குளம் உள்ளிட்ட 10 ஊராட்சிகளில் சங்கரத்தேவன் கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசா யிகள், பொதுமக்களின் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

    • கிராம சபைக் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் சாபம் விட்டனர்.
    • இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    முதுகுளத்தூர்

    முதுகுளத்தூர் அருகே பயிர்காப்பீடு, வறட்சி நிவாரணம் வழங்காததை கண்டித்து, கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் வயலில் இறங்கி மண்ணை வாரி தூற்றி அதிகாரிகளுக்கு சாபம் விடுத்ததால் அப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே பொன்னக்கனேரி ஊராட்சிக்கு உட்பட்ட மட்டியாரேந்தல் கிராமத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சத்திய பிரியா தலைமை தாங்கினார்.

    இதில் ஒன்றியக்குழு உறுப்பினர் அர்சுணன், வைகை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் பாக்கிய நாதன் உள்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத் தில் இப்பகுதி விவசாயி களுக்கு கடந்த 2 ஆண்டு களாக வறட்சி நிவாரணம், பயிர் காப்பீட்டுத்தொகை அதிகாரிகளின் அலட்சியம், ஒருதலைப் பட்சமான நடவடிக்கையால் புறக்கணிக்கப்பட்டு வருவதாக புகார் தெரிவித்தனர்.

    மேலும் மானாவாரி நெல் சாகுபடி செய்த வயலில் இறங்கி மண்ணை வாரி தூற்றி அதிகாரிகளுக்கு சாபம் விடுத்து தங்களது கண்ட னத்தை தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • ராமேசுவரத்தில் தனியார் பேருந்து இல்லாத நிலையில் அனைத்து பயணிகளும் அரசு பேருந்தில் மட்டுமே திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டது.
    • பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் பேருந்து நிலையத்தில் பல மணி நேரம் காத்திருந்தனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திற்கு பள்ளிகளுக்கான காலாண்டு தேர்வு விடுமுறை, காந்தி ஜெயந்தி உள்ளிட்ட தொடர் விடுமுறையை முன்னிட்டு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.

    இதில் பெரும்பாலான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அரசு பேருந்தில் வந்திருந்தார்கள். ராமேசுவரத்தில் தனியார் பேருந்து இல்லாத நிலையில் அனைத்து பயணிகளும் அரசு பேருந்தில் மட்டுமே திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டது.

    இந்நிலையில், இரவு நேரத்தில் மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து வந்த பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் திரும்பி செல்ல போதிய பேருந்து இயக்கப்படாத நிலையில் கடும் அவதிக்குள்ளாகினர்.

    இதில், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் பேருந்து நிலையத்தில் பல மணி நேரம் காத்திருந்தனர். ராமேசுவரத்திற்கு ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்ட நிலையில் அரசு பேருந்தில் மட்டுமே பயணம் மேற்கொள்ளும் நிலையில் பயணிகள் வருகைக்கு ஏற்றவாறு பேருந்துக்கள் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

    இந்த நிலையில், போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் பின்னர் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்பட்டு பயணிகள் புறப்பட்டு சென்றனர்.

    • இரு தரப்பினர் மோதல்; 9 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
    • கீழத்தூவல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை அடுத்துள்ளது கீழக்குளம் கிராமம். இங்குள்ள மந்திரமூர்த்தி அய்யனார் கோவிலில் கடந்த வாரம் புரவிடுப்பு விழா தொடங்கி யது. இந்த திருவிழா தொடர்பாக கீழக்கு ளத்தைச் சேர்ந்தவரும் கே.ஆர். பட்டணம் ஊராட்சியின் துணைத் தலைவருமான பெரியசாமி தரப்பிற்கும், முதுகுளத்தூர் திமுக ஒன்றிய செயலா ளரான சண்முகம் தரப்பிற்கும் முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

    கோவில் திருவிழா முடிந்து அன்னதானம் நடந்த போது இருதரப்பி னரிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது அரிவாள், கத்தி, கம்பு, கிரிக்கெட் மட்டை ஆகிய வற்றால் தாக்கியும், கற்களை வீசி எறிந்தும் இருதரப்பி னரும் கடுமை யாக மோதி கொண்டனர்.

    இதில் கீழக்குளத்தை சேர்ந்த சந்திரசேகர் (வயது42), சண்முகவேலு(67), பெருங்கருணையைச் சேர்ந்த சண்முகம்(47), கீழக்குளம் முருகன்(46) முத்துராமலிங்கம் மனைவி கஸ்தூரி(50), மகாலிங்கம் மகன் உதயகுமார்(19), முத்துக்குமார்(30), மாரி முத்து (43), ஜெகதீஸ்வரன்(33) ஆகியோருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இவர்கள் மதுரை, ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    இந்த மோதலின் போது பாது காப்பு பணியில் ஈடுபட்ட அபிராமத்தை சேர்ந்த காவலர் சரவணன் காயம் அடைந்தார். இவர் கமுதி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த மோதல் குறித்து கீழத்தூவல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • கீழக்கரை அரசு மருத்துவமனையில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
    • மருத்துவக் குழுவினர் 400-க்கும் மேற்பட்ட நோயாளிகளை பரிசோதனை செய்து மருந்து, மாத்திரை வழங்கினர்.

    கீழக்கரை

    கீழக்கரை அரசு ஆஸ் பத்திரியில் முதல்-அமைச் சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் மற்றும் ஆயுஷ்மான் பாரத் யோஜ னா திட்டத்தின் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் மாவட்ட சுகாதார இணை இயக்குனர் சகாய ஸ்டீபன் ராஜ் அறிவுறுத்தலின் பேரில் கீழக்கரை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ஜவாஹிர் உசேன் தலைமையில் நடந் தது.

    இம்முகாமில் டாக்டர்கள் பிரவீன் ராஜ்(பொது), சரத் குமார் (அறுவை சிகிச்சை நிபுணர்), பிரகாஷ் (எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை) ராஜ வசந்த குமாரி(பெண்கள் நலம்) ஆகியோர் கலந்து கொண்டு இலவச மருத்துவ பரிசோதனை செய்தனர். இதில் ஏராளமானோருக்கு இலவச இ.சி.ஜி., எக்ஸ்ரே சோதனை நடந்தது.

    மேலும் முதல்-அமைச்சர் காப்பீடு, பிரதமர் காப்பீடு திட்டத்திற்கானபுதிய மருத் துவ காப்பீட்டு திட்டம் பதிவு நடைபெற்றது. இஸ் லாமியா மெட்ரிக்.மேல் நிலைப்பள்ளி பிளஸ்-1 மாணவர்கள் மருத்துவ முகாமிற்கு வந்த பொது மக்களுக்கு உதவி புரிந்தனர். மருத்துவக் குழுவினர் 400-க்கும் மேற்பட்ட நோயாளிகளை பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கி மருந்து, மாத்திரை வழங்கினர்.

    • விதிமுறைகளின் படி அனைவருக்கும் பொது வான வகையில் நம்பர் பிளேட்டுகள் இருக்க வேண்டும்.
    • விபத்துக்கள் ஏற்படுத்திவிட்டு தப்புவதை வாகனங்களின் எண்களைக் கொண்டு போலீசாரும், பொது மக்களும் அடையாளம் காண்கின்றனர்.

    ராமநாதபுரம்

    மக்கள் தொகை அதிகரிப்பால் வாகனங்கள் பயன்படுத்துபவர்களும் அதிகரித்து வருகின்றனர். வாகன நெருக்கடி அதிகரித் தாலும் சாலைகளின் அளவு அதிகரிக்க முடியாத நிலை யில் அடிக்கடி விபத்துகளும், இதன் மூலம் பல்வேறு குற்ற செயல்களும் நடைபெறு கிறது.

    இது போன்ற குற்றச்சம்ப வங்கள் விபத்துக்கள் ஏற் படுத்திவிட்டு தப்புவதை வாகனங்களின் எண்களைக் கொண்டு போலீசாரும், பொது மக்களும் அடையா ளம் காண்கின்றனர்.

    வாகன எண்களை நம்பர் பிளேட்டுகளில் எழுதுவ தற்கு ஒவ்வொரு எண் ணிற்கும் இடைவெளி, உய ரம், நிறம் என்ற விதிமுறை கள் உள்ள நிலையில் பல் வேறு தரப்பினரும் தங்கள் இஷ்டமான வடிவங்களில் வாகன பதிவு எண்களை எழுதி வலம் வருகின்றனர்.

    ஹெல்மெட், லைசென்ஸ் போன்ற கண்காணிப்புகளில் காட்டும் ஈடுபாட்டை போலீ சார் முறையற்ற நம்பர் பிளேட்டுகளில் காட்டாத தால் அதிகாரத்தை பொறுத்து கட்சி வண்ணங் களில், மிரட்டல் எழுத்துக் கள் வருவது போன்றும், தங் கள் பதவியையும், வாகன எண்களுக்கு பதில் அரசியல், ஜாதி கட்சி தலைவர்களின் உருவங்களை பொறித்தும், ஆங்கில எழுத்துக்களுக்கு பதில் தமிழில் மாற்றியும் வைத்துள்ளனர். இது போன்ற செயல்களால் முக்கியமான நேரங்களில் நழுவி செல்லும் வாகனங் களை அடையாளம் காண முடிவதில்லை.

    எனவே விதிமுறைகளின் படி அனைவருக்கும் பொது வான வகையில் நம்பர் பிளேட்டுகளில் எண்களை எழுத வாகன உரிமையாளர் களுக்கும், இவற்றை எழுதும் ஸ்டிக்கர் கடைகளுக்கும் அறிவுறுத்துவதுடன் மீறு பவர்களுக்கு அபராதம் விதித்து கண்காணிக்க வேண்டும் என்பதே பொது மக்களின் எதிர்பார்ப்பு.

    • பட்டப்பகலில் 2 வீடுகளில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
    • சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகிறார்.

    பசும்பொன்

    கமுதி அருகே உள்ள அச்சங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் மனைவி பால தீபா (வயது 30). இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு மின் மீட்டர் பெட்டியில் சாவியை வைத்து விட்டு வயலுக்கு சென்று விட்டார்.

    மதியம் வீட்டிற்கு வந்து பார்த்தபோது போது வீட்டின் கதவுகள் திறந்து கிடந்தன. மேலும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 16 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டு இருந்தது. இதுகுறித்து பால தீபா அபிராமம் போலீசில் புதார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து மர்ம ஆசாமியை தேடி வருகின்ற னர்.

    முதுகுளத்தூர்

    முதுகுளத்தூர் பஜாரில் உள்ள ஒய்.காம்ப்ளக்ஸில் குடியிருந்து வருபவர் பெரிய சங்கர் மகன் முத்துச் சாமி (வயது 28). இவர் தனது வீட்டின் சாவியை மாடிப்படியில் வைத்து விட்டு, காளீஸ்வரன் என்ப வரிடம் செல்போனை வாங்கி இவரது மனைவியி டம் பேசிவிட்டு வியாபா ரத்திற்கு சென்றுவிட்டாராம்.

    மாலையில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் ரூ.1.50 லட்சம் ரொக்க பணம் திருடு போயிருந்தது.

    இதுபற்றி முத்துச்சாமி காளீஸ்வரன் மீது முதுகுளத் தூர் போலீஸ் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகிறார்.

    ×