search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "racer"

    • வருகிற 7-ந்தேதி காலை 6 மணியளவில் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி நடைபெற உள்ளது.
    • போட்டிகளில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கி றேன்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் பா.விஷ்ணு சந்தி ரன் வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    கலெக்டர் தகவல்

    2023-2024 ஆம் ஆண் டிற்கான விளையாட்டுத் துறை மானியக்கோரிக்கை யில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட் டுத்துறை அமைச்சரால் அன்றாட வாழ்வில் உடற்தகு தியை பேணுவது குறித்த விழிப்புணர்வை பொது மக்களிடையே ஏற்படுத்துவ தற்கும், உடற்தகுதி கலாசா ரத்தை இளைஞர்களிடையே புகுத்துவதற்கும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாரத்தான் போட்டிக்கு இணையான அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட் டப்போட்டி ஆண்டுதோறும் நடத்தப்பபடும் என அறி விக்கப்பட்டது.

    அதன் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் அக்டோபர் 7-ந்தேதி மாரத் தான் போட்டிக்கு இணை யான அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி யின் கீழ்காணும் 2 பிரிவுக ளில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலருக்கும் நடைபெற உள்ளது.

    ஆண்கள் 17 முதல் 25 வயதிற்குட்பட்டவர்கள் 8 கி.மீ., 25 வயதிற்கு மேற்பட்ட வர்கள் 10கி.மீ., பெண்கள் 17 முதல் 25 வயதிற்குட்பட் டவர்கள் 5 கி.மீ., 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் 5 கி.மீ. என அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி ராமநாதபுரம் பட்டிணம் காத்தான் நால்வழிச்சாலை பிரிவில் வருகிற 7-ந்தேதி காலை 6 மணியளவில் நடை பெற உள்ளது. ஓட்டப் போட்டியில் பங்குபெறும் அனைவரும் கண்டிப்பாக தங்கள் உடற்தகுதி குறித்து சுய உறுதிமொழி படிவம் பூர்த்தி செய்து தரவேண்டும்.

    மேலும் 17 முதல் 25 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகள் தாங்கள் பயிலும் பள்ளி தலைமையாசி ரியர், கல்லூரி முதல்வர்க ளிடம் கண்டிப்பாக வயது சான்றிதழ் தனித்தனியாக பெற்று வருதல் வேண்டும். ஆதார் கார்டு, பள்ளி, கல்லூரி அடையாள அட்டை கொண்டு வருதல் வேண்டும். 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் தங்களது பிறப்புச்சான்றிதழ், ஆதார் கார்டு நகல் கொண்டு வருதல் வேண்டும்.

    இப்போட்டியில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத் தொகையான தலா ரூ.5000-ம், ரூ.3000, ரூ.2000-ம் வீதமும், 4 முதல் 10 ஆம் இடம் வரை வெற்றி பெறுபவர்களுக்கு தலா ரூ.1000 வீதம் பரிசுத் தொகை வங்கி மாற்று வழியாக வழங்கப்ப டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

    எனவே மேற்காணும் போட்டியில் கலந்து கொள் ளும் ஆண்கள் மற்றும் பெண்கள் உடற்தகுதி குறித்து சுய உறுதிமொழி படிவம் பூர்த்தி செய்திட மற்றும் வயதுச்சான்றிதழ் சரிபார்ப்பதற்கு 04.10.2023 அன்று முதல் 06.10.2023 அன்று மாலை 6 மணிக்குள் சீதக்காதி சேதுபதி விளை யாட்டரங்கிற்கு நேரில் வந்து பதிவுசெய்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. பதிவு செய்வதற்கு பதிவு கட்டணம் இல்லை. போட்டிகளில் கலந்து கொண்டு பயன்பெ றுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×