என் மலர்
ராமநாதபுரம்
- பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் முதல்-அமைச்சருக்கு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை வைத்துள்ளனர்.
- அத்தியவாச செலவுகளுக்கு பணம் இல்லாமல் திண்டாடி வரும் நிலை இருந்து வருகிறது.
ராமநாதபுரம்
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் ராமநாத புரம் மாவட்டத் தலைவரும், ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான முருகேசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
கடந்த 31.3.2003 முன்பு வரை தமிழ்நாடு அரசுப்பணியில் சேர்ந்த அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அனைவரும் பழைய பென்சன் திட்டத்தில் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்கள் அனைவரும் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கும். ஓய்வுக்கு பிறகு அவர்கள் எந்த உறவுகளையும் சார்ந்து இருக்க தேவையில்லை. தன்னுடைய இறுதிக்காலத்தில் நிம்மதி யாக இருப்பார்கள்.
மத்திய அரசின் ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு எதிரான கொள்கையால் கடந்த 31.3.2003 பிறகு பணியமர்த்தப்பட்ட அனைத்து ஆசிரியர், அரசு ஊழியர்கள் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் என்ற பதிய ஓய்வூதிய திட்டத்தில் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.
இந்த திட்டம் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு எதிரான திட்டம். பழைய ஓய்வூதிய திட்டத்தில் கீழ் பணத்தை சேமிக்கும் பணியாளர்கள் சேமித்த தொகையில் 6 மாதத்திற்கு குறிப்பிட்ட தொகையை முன்பணமாக பெற்றுக்கொண்டு அதனை மீண்டும் செலுத்தலாம். இது குழந்தைகளின் படிப்பு மற்றும் திருமண செலவுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஆனால் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சேமித்த பணத்தை பணி ஓய்வு பெறும் வரை சிறிதளவு கூட முன்தொகையாக பெற முடியாது.
இதனால் தங்களுடைய குழந்தைகளின் படிப்புப் செலவு, திருமண செலவு போன்ற அத்தியவாச செலவுகளுக்கு பணம் இல்லாமல் திண்டாடி வரும் நிலை இருந்து வருகிறது.
மேலும் பணி ஓய்வுக்கு பிறகு இவர்களுக்கு மாதாந்திர ஓய்வவூதியம் இல்லாததால் உணவு, உடை, மருத்துவம் போன்ற அத்தியாவசிய தேவை களுக்கு மற்றவர் களை சார்ந்திருக்க வேண்டிய நிலை இருக்கிறது. இதனால் ஓய்வுக்கு பிறகு பழைய ஓய்வூதிய திட்டத்தில் பணிபுரிந்து வருபவர்கள் பெரும் மன உளைச்சலுடன் வேலை செய்து வருகிறார்கள்.
கடந்த ஆட்சியில் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டி போராடிய ஆசிரியர்-அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக பேசிய மு.க.ஸ்டாலின் ஆசிரியர், அரசு ஊழியர்க ளின் நியாயமான கோரிக்கையை கனிவுடன் பரிசீலனை செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- காவிரி குடிநீருக்கு 10 ஆண்டுகளாக கிராம மக்கள் காத்திருக்கின்றனர்.
- நீண்டநாள் கோரிக்கையான காவிரி குடிநீர் வருவதற்கு அதிகாரி கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
அபிராமம்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அபிராமம் பகுதிக்கு உட்பட்ட தரைக்குடி, புனவாசல், வல்லகுளம் ஆகிய இடங்களில் 750-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு 10 ஆண்டுகளுக்கும் மேலாக காவிரி குடிநீர் வராததால் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் கிராம மக்கள் காவிரி தண்ணீ ருக்காக தொடர்ந்து காத்திருக்கின்றனர். மேலும் குடிநீரை விலை கொடுத்து வாங்கி வருகின்றனர்.
இது தொடர்பாக அந்த பகுதியைச் சேர்ந்த சிலர் கூறும்போது, தரைக்குடி, புனவாசல், வல்லகுளம் பகுதிக்கு உட்பட்ட 15 கிராம மக்கள் தண்ணீர் குடம் ரூ.15 -க்கு வாங்கி வருகிறோம். டிராக்டரில் கொண்டு வரப்படும் குடிநீரை விலைக்கு வாங்கி குடித்து வருகிறோம். அதுவும் வராவிட்டால் குடிதண்ணீருக்கு மிகவும் சிரமம் ஏற்படும். இந்த குடிநீரை குடிப்பதால் முதி யோர்கள், குழந்தைகளுக்கு உடல் உபாதைகள் ஏற்படுகி றது.
காவிரி குடிநீர் வராதது குறித்து பலமுறை புகார் செய்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.கிராமத்திற்கு வரும் காவிரி குடிநீர் குழாய்களில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி றது. எனவே நீண்டநாள் கோரிக்கையான காவிரி குடிநீர் வருவதற்கு அதிகாரி கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- பருத்தியை தாக்கும் நோயால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
- கோடை காலத்தில் பருத்தி விவசாயத்தில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அபிராமம்
ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஆண்டு பருவமழை இல்லததால் நெல் விவசாயம் பாதிக்கப் பட்டது. இந்த நிலையில் கோடை காலத்தில் பருத்தி விவசாயத்தில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். காலையில் பனிபொழிவும், பகலில் வெயிலின் தாக்கமும் அதிகரித்து ள்ளதால் பருத்தியில் இலை சுருட்டு புழு தாக்குதல் உள்ளது.
அபிராமம் மற்றும் சுற்றுப்புற பகுதியான அச்சங்குளம். தீர்த்தாண்ட தானம் வல்லகுளம் டி.புன வாசல் பள்ளபச்சேரி. அகத்தாரிருப்பு பாப்பனம் பொட்டகுளம் முத்தனேரி வேப்பங்குறிச்சி விரதக்கு ளம் உடைய நாதபுரம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராம பகுதிகளில் பருத்தி சாகுபடி செய்து ள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் நெல் அறுவடைக்கு பிறகு கண்மாய் குளங்களில் உள்ள தண்ணீரை பயன்படுத்தி விவசாயிகள் பருத்தி நடவு செய்துள்ளனர் பருத்தி செடிகளை பொருத்தவரை லேசான ஈரப்பதத்திலும் கடும் வறட்சி நேரத்தில் அதிக மகசூல் தரக்கூடிய தன்மை உடையது. இதனால் கோடை சாகுபடியாக பருத்த சாகுபடி செய்வதில் அபிராமம் பகுதி விவசாயிகள் ஆர்வம் செலுத்தி வந்தாலும் இந்த ஆண்டு போதிய பருவமழை இல்லாததால் வெயில் கொடுமை அதிகரி த்ததாலும் அதிகாலையில் பனிப்பொழிவு அதிகமாக இருப்பதாலும் பருத்தியை நோய் தாக்கி வருகிறது.
குறிப்பாக இலை சுருட்டு புழு நோய் தாக்குதல் அதிகமாக உள்ளது. இதனால் இந்த ஆண்டு பருவமழை இல்லாததால் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டதுடன் பருத்தியில் இலை சுருட்டு புழு தாக்குவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
- ராமநாதபுரத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று தர்மர் எம்.பி. பேட்டியளித்துள்ளார்.
- இதுநாள் வரை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு எந்தவித நிவாரணத் தொகையும் வழங்கப்படவில்லை.
பரமக்குடி
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அ.தி.மு.க. எம்.பி. தர்மர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
ராமநாதபுரம் மாவட்டம் என்றாலே வறட்சியான மாவட்டம் என்றுதான் அழைப்பார்கள். அரசு அதிகாரிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்றால் இந்த மாவட்டத்திற்கு தான் பணி மாறுதல் செய்வார்கள். ஆனால் அந்த நிலையை மாற்றி பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி இந்த மாவட்டத்தையும் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தையும் வளர்ச்சி அடைய செய்தது அ.தி.மு.க. ஆட்சி தான்.
வறண்ட மாவட்டம் என்ற நிலை மாறி, வளர்ச்சி அடைந்த மாவட்டம் என்ற நிலையை உருவாக்கியது அ.தி.மு.க. அரசுதான். ஆனால் கடந்த ஆண்டு போதிய மழை பெய்யாததாலும், கண்மாய்கள், குளங்களில் தண்ணீர் இல்லாததாலும் நெற்பயிர்கள் கருகி விவசாயிகள் நஷ்டத்திற்கும், துயரத்திற்கும் ஆளாகி விட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 2 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு தமிழக அரசு நிவாரணத் தொகையாக ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என்று ஏற்கனவே கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இதுநாள் வரை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு எந்தவித நிவாரணத் தொகையும் வழங்கப்படவில்லை.
தற்போது தமிழக அரசு மதுரை, சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை உள்பட டெல்டா மாவட்டங்களை மட்டும் வறட்சி மாவட்டமாக அறிவித்துள்ளது. இது ராமநாதபுரம் மாவட்டத்தையும், ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளையும் வஞ்சிக்கும் செயலாகும். இது கண்டனத்திற்குரியது.
ஏற்கனவே பல்வேறு துயரங்களுக்கு ஆளாகி வங்கிகளிலும், வெளியில் வட்டிக்கும் பணம் வாங்கி அந்த கடன்களை எப்படி அடைப்பது? என்று விவசாயிகள் விழி பிதுங்கி இருக்கும் இந்த வேளையில் ராமநாதபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அரசு அறிவிக்காதது மாவட்ட மக்களுக்கு இழைக்கும் துரோகம் ஆகும். ராமநாதபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக ஏன் அறிவிக்கவில்லை? என்ன காரணம்? என்பதை அரசு விளக்க வேண்டும்.
இந்த மாவட்டத்தில் அமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் இருந்தும் ஏன் வறட்சி மாவட்டமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கவில்லை? ராமநாதபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். இதுகுறித்து தமிழக அரசுக்கும், விவசாய துறை செயலாளருக்கும், இ-மெயில் மூலம் அறிக்கை அனுப்பப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தொண்டி பஸ் நிலையத்தில் உயர்கோபுர மின் விளக்கு அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
- ஏர்வாடி, ராமேசுவரம், கன்னியாகுமரி செல்லும் அரசு மற்றும் சுற்றுலா பஸ்களும் இங்கிருந்து செல்கிறது.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியானது முதல் நிலை பேரூராட்சி பகுதியாகவும், வளர்ந்து வரும் நகரமாகவும் உள்ளது. இங்குள்ள புதிய பஸ் நிலையத்தில் இருந்து தினமும் ஏராளமான அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் சிதம்பரம், வேளாங்கண்ணி ஆகிய பகுதிகளிலிருந்து ஏர்வாடி, ராமேசுவரம், கன்னியாகுமரி செல்லும் அரசு மற்றும் சுற்றுலா பஸ்களும் இங்கிருந்து செல்கிறது.
இந்த நிலையில் பயணிகளின் வசதிக்காகவும், பஸ் நிலைய பகுதியில் குற்றச் ம்பவங்கள் நடைபெறுவதைத் தடுக்கும் வகையிலும் ஹைமாஸ் எனப்படும் உயர் கோபுர மின் விளக்கு அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி எம்.பி. நிதியில் இருந்து ரூ.4½ லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உயர் கோபுர மின்விளக்கு அமைப்பதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
- பரமக்குடியில் தென்னிந்திய கராத்தே போட்டி நடந்தது.
- இதற்கான ஏற்பாட்டை தத்துக்குமார், முத்து கிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.
பரமக்குடி
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் யூனிக் ஸ்போர்ட்ஸ் கராத்தே அகாடமி அண்ட் கிறிசின் கான் சித்தோரியோ கராத்தே பள்ளி சார்பில் தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டி பரமக்குடி ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. 8 வயது முதல் 21 வயது வரை பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. ஆயிரவைசிய சபைத் தலைவர் ராசி.என்.போஸ் தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் எஸ்.கே.பி.லெனின்குமார், ஆயிர வைசிய மெட்ரிக் பள்ளி தாளாளர் முருகானந்தம், பொருளாளர் ராஜேஷ் கண்ணன் முன்னிலை வகித்தனர். கியோசி ரவி மற்றும் மாஸ்டர் கியோசி ராமமூர்த்தி, மாஸ்டர் பாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர்.
வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கோப்பைகள், சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி, தமிழ்நாடு உள்பட 1200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியினை ஆசிரியர் ஜெயபிரகாஷ் தொகுத்து வழங்கினார். இதற்கான ஏற்பாட்டை தத்துக்குமார், முத்து கிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.
- திட்டப்பணிகளை தாமதமின்றி முடிக்க வேண்டும் என்று ஊராட்சித்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
- குடிநீர் திட்ட பணிகளுக்கு சிறப்பு கவனம் எடுத்து பொதுமக்களின் தேவைக்கேற்ப பணிகளை முடிக்க வேண்டும்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் முன்னிலையில், ஊரக வளர்ச்சி, ஊராட்சித்துறை ஆணையர் தாரேஸ் அகமது தலைமையில் நடந்தது.
கடந்த நிதியாண்டு மற்றும் நடப்பு நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆணையர் ஆய்வு செய்தார். இதில் அவர் பேசியதாவது:-
ஊரக வளர்ச்சித்து றையின் மூலம் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் புதிய அங்கன்வாடி மையம் கட்டிடம் கட்டுதல், அங்கன்வாடி கட்டிடம் சீரமைக்கும் பணி, பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 15-வது நிதி குழுவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், சமத்துவபுரம் வீடுகளை சீரமைக்கும் பணிகள், ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குடிநீர் திட்ட பணிகளுக்கு சிறப்பு கவனம் எடுத்து பொதுமக்களின் தேவைக்கேற்ப பணிகளை முடிக்க வேண்டும்.
அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் மற்றும் பிரதமரின் குடியிருப்பு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளை பயனாளிகளுக்கு காலதாமதமின்றி கட்டுமான பொருட்களை வழங்க வேண்டும்.
ஒவ்வொரு நிதியாண்டி லும் மேற்கொள்ளப்பட தேர்வு செய்யப்பட்ட பணிக ளுக்கான ஆணைகளை காலதாமதமின்றி பயனா ளிகளுக்கு வழங்கி பணிகளை திட்டமிட்ட காலத்திற்குள் முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக மண்டபம் ஊராட்சி ஒன்றிய அலுவ லகம் மற்றும் மண்டபம் ஊராட்சி அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்த பதிவேடுகளை ஆணையர் பார்வையிட்டார். பின்னர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள உதவி இயக்குநர் ஊராட்சிகள் அலுவலகம், மாவட்ட ஊராட்சி அலுவலகம் ஆகியவற்றை பார்வையிட்டு திட்டப்பணிகள் ஊராட்சிகளுக்கு உரிய காலத்தில் அனுமதி வழங்கப்படுகிறதா? என்று ஆய்வு செய்து காலதா மதமின்றி பணிகளை வழங்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரவீன் குமார், உதவி கலெக்டர் (பயிற்சி) நாராயண சர்மா, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் சுந்தரேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- வழுதூர் முத்துவேலம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
- ஊராட்சி மன்ற தலைவர் முத்தமிழ்செல்வி பூரணவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் அருகே உள்ள வழுதூர் கிராமத்தில் அமைந்துள்ள பழமையான முத்துவேலம்மன், ஆண்டி ஐயா ஆகிய பரிபால தெய்வங்களின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடந்தது. யாகசாலை பூஜை, கோமாதா பூஜை, நாடி சந்தானம், பூர்ணாகுதி நடைபெற்ற பின்னர் யாகசாலையில் இருந்து கடம் புறப்பட்டது. புனிதநீர் குடங்களை வேத விற்பன்னர்கள் சுமந்து கோபுரத்திற்கு எடுத்துச் சென்றனர். கருடபகவான் வானத்தில் வட்டமிட பெண்கள் குலவை முழக்கத்துடன் முத்துவேல் அம்மன் மற்றும் ஆண்டி அய்யா, நாகநாதர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு கோபுர கலசத்தில் திருப்புல்லாணி பாபு சாஸ்திரி குழுவினர் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். மூலவருக்கு நடந்த சிறப்பு அபிஷேகம், தீபாராதனையில் பக்தர்கள் கலந்து கொண்டு சந்தன காப்பு அலங்காரத்தில் சுவாமியை தரிசனம் செய்தனர்.
அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவை காண வழுதூர், வாலாந்தரவை, தெற்கு காட்டூர், உடைச்சியார் வலசை, ஏந்தல், மொட்டையன் வலசை, அளம், பட்டணம் காத்தான் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். கோவில் நிர்வாகிகள் ராஜகோபால், செல்வம், கார்மேகம், தினகரன், ஜோதி, நந்தகுமார் மற்றும் வழுதூர் கிராம மக்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர். பி.டி.ராஜா,
எம். கே.பாலு, துரை, ஜெயபால், சிவசாமி, குணசேகரன், மோகன், தரணி முருகேசன், வாலாந்தரவை ஊராட்சி மன்ற தலைவர் முத்தமிழ்செல்வி பூரணவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு மின்சார வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
- அனுமதி இன்றி மின்கம்பத்தில் கட்டப்பட்டுள்ள கேபிள் டிவி வயர்களை மின்வாரியமே அப்புறப்படுத்தும் என கூறியுள்ளது.
கமுதி
கமுதி மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் பகிர்மானம் விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கமுதி உபகோட்டத்திற்கு உட்பட்ட பகுதியான கமுதி நகர், கமுதி தெற்கு, கமுதி வடக்கு மற்றும் பெருநாழி அபிராமம் பிரிவு உட்பட்ட பகுதிகளில் மின்வாரிய அனுமதி இன்றி மின் கம்பத்தில் கட்டப்பட்டுள்ள கேபிள் டிவி வயர்கள் மற்றும் சாதனங்களை மின் விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் கேபிள் டிவி உரிமையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தவறும் பட்சத்தில் பொதுமக்கள், மாணவ-மாணவியர் நலன் கருதி மின் கட்டமைப்புகளில் அனுமதி இன்றி மின்கம்பத்தில் கட்டப்பட்டுள்ள கேபிள் டிவி வயர்களை மின்வாரியமே அப்புறப்படுத்தும் என இதன் மூலம் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பல்வேறு திட்ட பணிகள் குறித்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர் தாரேஸ் அகமது ஆய்வு செய்தார்.
- ரூ.46.57 லட்சம் மதிப்பீட்டில் 1,200 மீட்டர் சாலை அமைக்கும் பணிகளையும் பார்வையிட்டார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், தில்லையேந்தல் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்ட பணிகள் குறித்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர் தாரேஸ் அகமது, கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சாலை, குடிநீர், தெருவிளக்கு வசதி, முதியோர் உதவித்தொகை மற்றும் அடிப்படை வசதி குறித்து ஆய்வு செய்ததுடன் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆணையர் தாரேஸ் அகமது பொதுமக்களிடம் வீடு, வீடாக சென்று கேட்டறிந்தார்.
முன்னதாக மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பார்த்திபனூர் பகுதியில் பயனாளிகளுக்கு நடமாடும் வாகனம் மூலம் சிகிச்சைகள் மற்றும் மருந்து, மாத்திரைகள் அளிக்கப்படுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பரமக்குடி ஊராட்சி ஒன்றியம் அரியனேந்தல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய பொது நிதி திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சத்து 38 ஆயிரம் மதிப்பீட்டில் மாசு நீர் சுத்திகரிப்பு பணி நடைபெற்று வருவதையும், அரியனேந்தல் ஆதிதிராவிடர் காலனியில் 15-வது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் மகளிர் சுகாதார வளாகம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதையும், இந்திரா நகர் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சத்து 41 ஆயிரம் மதிப்பீட்டில் செங்குத்து உறிஞ்சிக்குழி பணிகள் நடைபெறுவதையும் பார்வையிட்டார்.
நெல்மடுவலூர் ஊராட்சியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வட்டார பொது சுகாதார மையத்தின் கட்டுமான பணிகளையும், போகலூர் ஊராட்சி ஒன்றியம், பூவிளத்தூர் கிராமத்தில் தமிழ்நாடு கிராம சாலைகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் ரூ.46.57 லட்சம் மதிப்பீட்டில் 1,200 மீட்டர் தொலைவில் வணங்கானேந்தல் வழியாக பூவிளத்தூர் வரை சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரவீன் குமார், பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பரமசிவன், உதவி இயக்குநர் (தணிக்கை) அருள் சேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரமோகன், ரவி, போகலூர் செயற்பொ றியாளர் சுந்தரேசன், உதவி செயற்பொறியாளர்கள் அழகேசன், கல்யாண சுந்தரம், தில்லையேந்தல் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- அழகு சாதனவியல், சிகை அலங்காரம் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- அழகு நிலையங்களில் பணிபுரிய 100 சதவீதம் வேலை வாய்ப்பு அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இன மாணாக்கர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது சென்னையிலுள்ள மகா அழகு கலை பயிற்சி நிலையத்தின் மூலமாக புகழ் பெற்ற அழகு நிலையங்களில் பணிபுரியவும் மற்றும் சுய தொழில் தொடங்கு வதற்கும் அழகு சாதன வியல் மற்றும் சிகை அலங்காரம் செய்வதற்கான பயிற்சியினை தாட்கோ சார்பில் அளிக்கப்பட உள்ளது.
இப்பயிற்சியில் ஆதி திராவிடர், பழங்குடியி னத்தைச் சார்ந்த பத்தாம் வகுப்பு படித்த 18 முதல் 30 வயது வரை உள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கான கால அளவு 45 நாட்கள் ஆகும்.
சென்னையில் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தில் தங்கி படிக்கும் வசதியும், இப்பயிற்சியினை முழுமையாக முடிக்கும் மாணவர்களுக்கு இந்திய தேசிய திறன் மேம்பாடு அங்கீகரிக்கப்பட்ட தரச் சான்றிதழ் வழங்கப்படும்.
இப்பயிற்சியினை பெற்றவர்கள் தனியார் அழகு நிலையங்களில் பணிபுரிய 100 சதவீதம் வேலை வாய்ப்பு அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இப்பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும் மாணவர்களுக்கு ஆரம்ப கால மாத சம்பளமாக ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை பெறலாம். மற்றும் சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்காரம் தொழில் செய்ய தாட்கோ மூலமாக ரூ.2.25 லட்சம் மானியத்துடன் கூடிய ரூ.10 லட்சம் கடன் வழங்கப்படும். இப்பயிற்சியினை பெற தாட்கோ இணையதளமான www.tahdco.com விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பட்டணம் காத்தான், பனைக்குளம், உச்சிப்புளியில் நாளை மின்தடை ஏற்படும்.
- மதியம் 1 மணி முதல் மாலை 4 மணி வரை ஏற்படும்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மின் பகிர்மான உதவி செயற்பொறியாளர் (ஊரகம்) செந்தில்குமார் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பெருங்குளம் துணை மின் நிலையத்தில் நாளை (8-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக பனைக்குளம் சுற்றியுள்ள பகுதிகள், பனைக்குளம், ஆற்றாங்கரை, தேர்போகி, புதுவலசை, அழகன்குளம், பட்டணம் காத்தான், வாணி, காரிகூட்டம், சாத்தான்குளம், கழுகூரனி, குடிசைமாற்று குடியிருப்பு, ஏ.ஆர். குடியிருப்பு, ஆர்.எஸ்.மடை, ஆதம் நகர், உச்சிப்புளி, கீழ நாகாச்சி, செம்படையார்குளம், தாமரைக்குளம், ரெட்டையூரணி, புதுமடம், இருமேனி, பிரப்பன்வலசை, மானாங்குடி, நொச்சியூரணி, எஸ்.கே. வலசை, பெருங்குளம், வழுதூர், வாலாந்தரவை, குயவன்குடி. ஏந்தல், மொட்டையன் வலசை, வாணியங்குளம், பெருங்குளம், இந்திராநகர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மதியம் 1 மணி முதல் மாலை 4 மணி வரை மன்தடை ஏற்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






