search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்
    X

    பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்

    • பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் முதல்-அமைச்சருக்கு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை வைத்துள்ளனர்.
    • அத்தியவாச செலவுகளுக்கு பணம் இல்லாமல் திண்டாடி வரும் நிலை இருந்து வருகிறது.

    ராமநாதபுரம்

    தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் ராமநாத புரம் மாவட்டத் தலைவரும், ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான முருகேசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    கடந்த 31.3.2003 முன்பு வரை தமிழ்நாடு அரசுப்பணியில் சேர்ந்த அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அனைவரும் பழைய பென்சன் திட்டத்தில் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்கள் அனைவரும் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கும். ஓய்வுக்கு பிறகு அவர்கள் எந்த உறவுகளையும் சார்ந்து இருக்க தேவையில்லை. தன்னுடைய இறுதிக்காலத்தில் நிம்மதி யாக இருப்பார்கள்.

    மத்திய அரசின் ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு எதிரான கொள்கையால் கடந்த 31.3.2003 பிறகு பணியமர்த்தப்பட்ட அனைத்து ஆசிரியர், அரசு ஊழியர்கள் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் என்ற பதிய ஓய்வூதிய திட்டத்தில் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.

    இந்த திட்டம் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு எதிரான திட்டம். பழைய ஓய்வூதிய திட்டத்தில் கீழ் பணத்தை சேமிக்கும் பணியாளர்கள் சேமித்த தொகையில் 6 மாதத்திற்கு குறிப்பிட்ட தொகையை முன்பணமாக பெற்றுக்கொண்டு அதனை மீண்டும் செலுத்தலாம். இது குழந்தைகளின் படிப்பு மற்றும் திருமண செலவுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    ஆனால் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சேமித்த பணத்தை பணி ஓய்வு பெறும் வரை சிறிதளவு கூட முன்தொகையாக பெற முடியாது.

    இதனால் தங்களுடைய குழந்தைகளின் படிப்புப் செலவு, திருமண செலவு போன்ற அத்தியவாச செலவுகளுக்கு பணம் இல்லாமல் திண்டாடி வரும் நிலை இருந்து வருகிறது.

    மேலும் பணி ஓய்வுக்கு பிறகு இவர்களுக்கு மாதாந்திர ஓய்வவூதியம் இல்லாததால் உணவு, உடை, மருத்துவம் போன்ற அத்தியாவசிய தேவை களுக்கு மற்றவர் களை சார்ந்திருக்க வேண்டிய நிலை இருக்கிறது. இதனால் ஓய்வுக்கு பிறகு பழைய ஓய்வூதிய திட்டத்தில் பணிபுரிந்து வருபவர்கள் பெரும் மன உளைச்சலுடன் வேலை செய்து வருகிறார்கள்.

    கடந்த ஆட்சியில் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டி போராடிய ஆசிரியர்-அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக பேசிய மு.க.ஸ்டாலின் ஆசிரியர், அரசு ஊழியர்க ளின் நியாயமான கோரிக்கையை கனிவுடன் பரிசீலனை செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×