தென்னிந்திய கராத்தே போட்டி

பரமக்குடியில் தென்னிந்திய கராத்தே போட்டி நடந்தது. இதற்கான ஏற்பாட்டை தத்துக்குமார், முத்து கிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.
தென்னிந்திய கராத்தே போட்டி
Published on

பரமக்குடி

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் யூனிக் ஸ்போர்ட்ஸ் கராத்தே அகாடமி அண்ட் கிறிசின் கான் சித்தோரியோ கராத்தே பள்ளி சார்பில் தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டி பரமக்குடி ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. 8 வயது முதல் 21 வயது வரை பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. ஆயிரவைசிய சபைத் தலைவர் ராசி.என்.போஸ் தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் எஸ்.கே.பி.லெனின்குமார், ஆயிர வைசிய மெட்ரிக் பள்ளி தாளாளர் முருகானந்தம், பொருளாளர் ராஜேஷ் கண்ணன் முன்னிலை வகித்தனர். கியோசி ரவி மற்றும் மாஸ்டர் கியோசி ராமமூர்த்தி, மாஸ்டர் பாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர்.

வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கோப்பைகள், சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி, தமிழ்நாடு உள்பட 1200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியினை ஆசிரியர் ஜெயபிரகாஷ் தொகுத்து வழங்கினார். இதற்கான ஏற்பாட்டை தத்துக்குமார், முத்து கிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com