என் மலர்
ராமநாதபுரம்
- சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் பிளஸ்-2 தேர்வை ஆர்வத்துடன் மாணவ-மாணவிகள் எழுதினர்.
- பிளஸ்-2 பொதுத்தேர்வு அடுத்த மாதம் 3-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது.

மதுரை ஈ.வே.ரா. நாகம்மையார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுதிய மாணவிகள்.
பரமக்குடி
தமிழகம் முழுவதும் இன்று பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு தொடங்கி யது. இந்த தேர்வை 8.75 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதினர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 7,920 மாணவர்கள், 8,147 மாணவிகள் என மொத்தம் 16,067 பேர் இன்று தேர்வு எழுதினர். 65 தேர்வு மையங்களில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது. மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் தேர்வு எழுதி னர். காலை 10 மணிக்கு தமிழ் மொழி பாட தேர்வு தொடங்கியது.
தேர்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பாகவே மாணவ மாணவிகள் தேர்வு மையத்திற்கு வந்திருந்தனர். அவர்கள் புத்தகங்களுடன் கடைசி நேர தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டு இருப்பதை காண முடிந்தது. மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியர்களும் தேர்வு குறித்து அறிவுரைகளை வழங்கினர்.
தேர்வு மையங்களுக்கு அனுமதிக்கப்பட்ட பொருட்களை தவிர வேறு எந்த பொருட்களையும் கொண்டு செல்லக்கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்க ப்பட்டிருந்தது. எனவே மாணவ-மாணவிகள் தீவிர சோதனைக்குட்படுத்த ப்பட்ட பின்னர் 9.45 மணி யளவில் தேர்வு அறைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
முன்னதாக தேர்வு மையத்திற்கு மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் நேரில் சென்று ஆய்வு செய்தார். தேர்வு பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரிய-ஆசிரி யைகள் ஈடுபடுத்தப்பட்ட னர். மாவட்டத்தில் தொலை தூரங்களில் இருந்து மாணவ -மாணவிகள் தேர்வு மையங்களுக்கு வர அரசு பஸ் வசதிகள் செய்யப் பட்டிருந்தது.
சிவகங்கை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் 7,625 மாணவர்கள், 8,808 மாணவிகள என மொத்தம் 16 ஆயிரத்து 433 மாணவ மாணவிகள் இன்று பிளஸ்-2 தேர்வு எழுதினர். தேர்வை கண்காணிக்க 46 வினாத்தாள் கட்டுப் பாட்டா ளர்கள், 79 முதன்மை கண்காணிப்பா ளர்கள், துறை அலுவலர்கள் 1239 அறை கண் காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
சிவகங்கையில் உள்ள மையத்திற்கு இன்று மாவட்ட கலெக்டர் மதுசுதன் ரெட்டி நேரடி ஆய்வு மேற்கொண்டார். அதேபோல் மாவட்ட முதன்மை கல்வி அலு வலர்கள் அதிகாரிகள் தேர்வு மையங்களுக்கு நேரடியாக சென்று பார்வையிட்டனர்.
விருதுநகர் மாவட்டத்தில் இன்று 10,985 மாணவர்கள், 12,383 மாணவிகள் என மொத்தம் 23 ஆயிரத்து 368 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதினர். காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வை மாவட்ட கலெக்டர் ஜெயசீலன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆகியோர் நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் விருதுநகர் மாவட்டம், மாநில அளவில் பிளஸ்-2 தேர்வு சதவீதத்தில் முதலிடம் பெற்று வருகிறது. இந்த ஆண்டும் அதனை தக்க வைக்க மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் தேர்வுக்கு தீவிரமாக தயார்படுத்தினர்.
3 மாவட்டங்களிலும் பறக்கும் படை குழு அமைக்கப்பட்டு தேர்வு மையங்களுக்கு அதிரடியாக சென்று சோதனை நடத்தி னர். தமிழ் மொழி பாட ேதர்வுடன் இன்று தொடங்கிய பிளஸ்-2 பொதுத்தேர்வு அடுத்த மாதம் 3-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது.
- இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
- இதில் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு பரிசோதிக்கப்பட்டன.
முதுகுளத்தூர்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஒன்றியம் கீழத்தூவல் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தனியார் கண் மருத்துவ மனை இனைந்து கொழுந்துரை கிராமத்தில் இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தியது.
கொழுந்துரை ஒன்றிய கவுன்சிலர் சரண்யா செல்வராஜ் வரவேற்று கண்சிகிச்சைக்கு வந்த அனைவருக்கும் இலவச உணவு வழங்கினார். இதில் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு பரிசோதிக்கப்பட்டன.
அமைச்சர் ராஜ கண்ணப்பன் முகாமை தொடங்கி வைத்து பொது மக்களுக்கு இலவச கண்ணாடிகளை அணிவித்தார். முதுகு ளத்தூர் வட்டா வளர்ச்சி அலுவலர் ஜானகி, முன்னாள் எம்.எல்.ஏ. முருகவேல், ஒன்றிய செயலாளர்கள் பூபதி மணி, கோவிந்தராஜ், கடலாடி ஆறுமுகவேல், சாயல்குடி குலாம் முகைதீன், ஜெய பால், மணலூர் ராமர், சத்தியேந்திரன், ரஞ்சித், கொழுந்துரை ஊராடசி மன்ற தலைவர் நஸ் ரீன்பானு, வாகைக் குளம் அர்ச்சுனன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பெண்ணைத் தாக்கிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- மிரட்டல் விடுத்த 2 பேரையும் தேடி வருகின்றனர்.
முதுகுளத்தூர்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா கீழத்தூவல் போலீஸ் சரகம் உடைகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கலைச்செல்வன். இவரது மனைவி ஜான்சி (34). இவரது தோட்டத்திற்குள் அதே ஊரைச் சேர்ந்த தவமணி என்பவரின் ஆட்டுக்குட்டி நுழைந்தபோது அதனை விரட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தவமணி மற்றும் அவரது மகன் அருண்குமார் ஆகியோர் ஜான்சியை அடித்து உதைத்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஜான்சி கீழத்தூவல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் பிரவீன்குமார் வழக்குப்பதிவு செய்து மிரட்டல் விடுத்த 2 பேரையும் தேடி வருகின்றனர்.
- 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுப் பணிக்கு ஆசிரியர்களை முன்னுரிமைப்படி நியமிக்க வேண்டும்.
- தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை வைத்துள்ளனர்.
ராமநாதபுரம்
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்டத்தலைவரும், ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான முருகேசன் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு முழுவதும் 10-ம் வகுப்பு மாணவர்க ளுக்கான ஆண்டு பொதுத் தேர்வு வருகிற ஏப்ரல் 6-ந் தேதி தொடங்க இருக்கிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.
பொதுத் தேர்வுவை நடத்துவதற்கு ஆசிரியர்க ளை துறை அலுவலர், வழித்தட அலுவலர், பறக்கும் படை அலுவலர், நிற்கும் படை அலுவலர் மற்றும் அறை கண்காணிப்பா ளர் என பிரிக்கப்பட்டு அவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலரால் தேர்வுப் பணி ஒதுக்கப்படுகிறது.
ஆசிரியர்களை துறை அலுவலர், வழித்தட அலுவலர் மற்றும் நிற்கும் படை போன்ற தேர்வுப்ப ணிக்கு ஆசிரியர்களை பணி மூப்பு அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும். இளையோரை துறை அலுவலராகவும், பணியில் மூத்தோரை கீழ்நிலைப் பணியில் நியமிக்கும் போது மூத்த ஆசிரியர்கள் மன உளைச்சல் அடைகிறார்கள். இதனால் அவர்களுக்கு கொடுக்கப்படும் பணியில் தொய்வு ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே அறை கண்காணிப்பாளர் பணியைத் தவிர மற்ற தேர்வுப் பணிகளில் பணிநியமன முன்னுரிமை படி நியமனம் செய்ய வேண்டும். அதே போல் ஆசிரியர்கள் பணிபுரியும் வட்டாரத்திலேயே தேர்வுப் பணி வழங்க வேண்டும்.
பெண் ஆசிரியர்களுக்கு பேருந்து வசதியுள்ள தேர்வு மையங்களுக்கு தேர்வுப் பணி வழங்க வேண்டும். மாவட்டத்தில் பணிபுரியும் ஒரு சில ஆசிரியர்கள் சொந்த வசிப்பிடத்தில் தங்கி நீண்ட தூரம் பயணம் செய்து பள்ளிக்கு வருகிறார்கள். அவர்களுக்கு தேர்வுப்பணி ஒதுக்கும் போது வசிப்பிடத்தை கணக்கில் கொள்ள வேண்டும்.
மேலும் கர்ப்பிணி பெண்கள், மாற்றுத் திறனாளிகள், நீண்ட நாள் மருத்துவம் செய்து வருபவர் போன்ற ஆசிரியர்களுக்கு தேர்வுப் பணியிலிருந்து விலக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- முடங்கி கிடந்த முதுகுளத்தூர் முன்னேறிய தொகுதியாக மாறிவருகிறது என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசினார்.
- கமுதி, முதுகுளத்தூர், கடலாடி பகுதிகள் நிரந்தர பாசன வசதி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
முதுகுளத்தூர்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தேவர் கல்லூரியில் பிற்பட்டோர் நல மாணவியர் விடுதி திறப்பு விழா நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் தலைமை தாங்கினார். மக்கள் தொடர்பு அலுவலா் பாண்டி வரவேற்றர். மாணவியர் விடுதியை அமைச்சர் ராஜகண்ணப்பன் திறந்து வைத்தார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
முடங்கி கிடந்த முதுகுளத் தூர் தொகுதி முன்னேறிய தொகுதியாக மாறிவருகிறது. திராவிட மாடல் ஆட்சியில் அனைவரும் சமம். கட்சி பாகுபாடு இல்லாமல் மக்களின் தேவைகள் நிறை வேற்றப்பட்டு வருகின்றன. கமுதி மற்றும் முதுகு ளத்தூருக்கு புறவழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
காவிரி குடிநீர் பிரச்சினை ஒரு ஆண்டில் முழுமையாக தீரும். பொது மக்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இங்கேயே ஒவ்வொரு வருக்கும் மாதம் ரூ.20 ஆயிரம் சம்பளம் கிடைக்கும் வகையில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.
கமுதியில் பாலிடெக்னிக் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். கடலாடியில் தொழிற்பயிற்சி நிலையம் கட்டப்பட்டு வருகிறது.
கமுதி, முதுகுளத்தூர், கடலாடி பகுதிகள் நிரந்தர பாசன வசதி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேவர் கல்லூ ரியில் கூடுதல் பாடப்பி ரிவுகள் கொண்டுவரவும், காலி இடங்களை நிரப்பவும், புதிய கட்டிட வசதிகள் செய்து கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. முருகவேல், கமுதி பேரூராட்சி சேர்மன் அப்துல் வஹாப் சகாரணி, ஒன்றிய செயலாளர்கள் முதுகுளத்தூர்பூபதி மணி, கோவிந்தராஜ், கடலாடி ஆறுமுகவேல், சாயல்குடி குலாம் முகைதீன், ஜெயபால், மணலூர் ராமர், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கல்லூரி முதல்வர் அருணாசலம் நன்றி கூறினார்.=
- விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன் கூறினார்.
- அந்தத் திட்டம் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கப்பட்டு இந்த மாவட்ட மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டது.
பரமக்குடி
பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
முன்னாள் தி.மு.க. தலைவர் கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்த போது ரூ.616 கோடியில் ராமநாதபுரம் மாவட்ட மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டையும், குடிநீர் தாகத்தை தீர்க்க காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
அந்தத் திட்டம் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கப்பட்டு இந்த மாவட்ட மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. தி.முக. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அந்த காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தால் ராமநாதபுரம் மாவட்ட த்தில் குடிநீர் தட்டுப்பாடே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
பரமக்குடியில் முதல் முதலாக அரசு கல்லூரியை ஏற்படுத்தியது தி.மு.க. ஆட்சியில் தான். தொடர்ந்து இந்த மாவட்டத்தின் மீது தனி கவனம் செலுத்தி இந்த மாவட்டத்தையும் மக்களையும் வலம் பெறச் செய்ய வேண்டும் என தி.மு.க. ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
தற்போதும் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
பருவமழை பெய்யா ததால் ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் பயிர்கள் கருகி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து குழு பார்வையிட்டு சென்று அறிக்கை சமர்ப்பித்துள்ளது. பாதிக்க ப்பட்ட விவசாயிகளுக்கு கண்டிப்பாக நிவாரணத் தொகை வழங்கப்படும். அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் நேரில் சந்தித்து வலியுறுத்தி உள்ளோம். இதுகுறித்து அறிக்கையினை அவர் தமிழக அரசுக்கும் முதல்வருக்கும் அனுப்பி உள்ளார். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கண்டிப்பாக நிவாரணத் தொகை வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ்-2 தோ்வு 15,808 போ் எழுதுகின்றனர்
- முதன்மைக் கல்வி அலுவலா் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பாலுமுத்து கூறியதாவது:-
பிளஸ்-2 அரசு பொதுத்தோ்வு மாா்ச் 13-ந் தேதி தொடங்குகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 70 அரசு மேல்நிலைப் பள்ளிகள், 37 அரசு உதவி பெறும் பள்ளிகள், 52 மெட்ரிக் பள்ளிகள், மாதிரி பள்ளி ஒன்று என 160 பள்ளிகளிலிருந்து 7,805 மாணவா்கள், 8,003 மாணவிகள் என மொத்தம் 15,808 போ் தோ்வு எழுதவுள்ளனா். இதற்காக 63 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பிளஸ் 1 பொதுத்தேர்வை 14,181 போ் எழுதுகின்றனர். மாவட்டத்தில் 161 பள்ளிகளிலிருந்து, 6,687 மாணவா்கள், 7,494 மாணவிகள் என மொத்தம் 14,181 போ் தோ்வு எழுதவுள்ளனா். 63 தோ்வு மையங்கள் அமைக்கப்ப ட்டுள்ளன.
பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு எழுதும் தனித் தோ்வா்க ளுக்கு ராமநாதபுரம் கல்வி மாவட்டத்தில் செய்யது அம்மாள் பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மையத்திலும், பரமக்குடி கல்வி மாவட்டத்தில் ஆயிர வைசிய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மையத்திலும் தோ்வு நடைபெற உள்ளது.
தனித் தோ்வா்களாக பரமக்குடி மையத்தில் பிளஸ்-2 வகுப்பில் 130 பேரும், பிளஸ்-1 வகுப்பில் 94 பேரும், ராமநாதபுரம் மையத்தில் பிளஸ் 2- வகுப்பில் 139 பேரும், பிளஸ் 1- வகுப்பில் 146 பேரும் தோ்வு எழுத உள்ளனா்.
பிளஸ் 1, பிளஸ் 2 அரசு பொதுத் தோ்வுகளுக்காக 70 போ் கொண்ட பறக்கும் படை அமைக்கப் பட்டு உள்ளது. தலைமை கண்காணிப்பா ளா்களாக 65 பேரும், அறை கண்காணிப்பாளா்களாக 1500 பேரும் நியமிக்கப்பட்டு உள்ளனா்.
மேலும், தோ்வை கண்காணிக்கவும், வினாத்தாள் கொண்டு செல்பவா், வினாத்தாள் காப்பாளா், விடைத்தாள் பொறுப்பாளா் என 100-க்கும் மேற்பட்ட ஆசிரி யா்கள், அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மகளிர் குழு பொருட்கள் விற்பனை கண்காட்சி நடந்தது.
- கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமை தாங்கி கண்காட்சி அரங்கத்தை திறந்து வைத்தார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், தாதனேந்தல் மற்றும் வண்ணாங்குண்டு ஊராட்சியில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் கைவினைப் பொருட்கள் தயார் செய்து பொதுமக்களுக்கான விற்பனை கண்காட்சி அரங்கம் திறப்பு விழா நடந்தது.
கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமை தாங்கி கண்காட்சி அரங்கத்தை திறந்து வைத்தார்.
பின்னர் அவர் பேசுகையில், ஒவ்வொரு மகளிரும் ஒற்றுமையுடன் ஒருங்கிணைந்து லட்சி யங்களை திட்டங்களாக வெளி கொண்டு வந்து செயல்படுத்தும்போது நிச்சயம் வெற்றி பெற முடியும்.
ஒவ்வொரு மகளிரும் ஒருங்கிணைந்து ஒவ்வொரு பகுதியிலும் அதன் சிறப்பு களுக்கு ஏற்பவும், மக்களின் தேவையை அறிந்தும் பொருட்களை உற்பத்தி செய்து சந்தைப்படுத்தும் போது பொதுமக்களின் தேவை நிறைவேறுவது மட்டுமின்றி நல்ல வரவேற்பை பெறுவதால், மகளிர் குழுக்களின் பொருளாதார வளர்ச்சியும் உயரும்.
பொருள்கள் உற்பத்தி செய்வதற்கு முன்பு மக்களை கவரும் வகையில் செயல்பாடுகள் அமைய வேண்டும். அதற்கு போதிய பயிற்சிகள் வழங்க மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது என்றார். வண்ணாங்குண்டு ஊராட்சியில் மகளிர் குழு வினர் பலன் தரும் மரம் வடிவில் நின்று பெண்கள் தின விழாவை கொண்டா டினர்.
இதில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரவீன் குமார், வேளாண்மை கல்லூரி விஞ்ஞானி முகிலன், திருப்புல்லாணி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேந்திரன், கணேஷ் பாபு, தாதனேந்தல் ஊராட்சி மன்றத்தலைவர் கோகிலா ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பி.ஆர்.ஓ.பாண்டி தொகுத்து வழங்கினார்.
- காமன் பண்டிகை கொண்டாட்டப்பட்டது.
- பெண்கள் மாவிளக்கு வழிபாடு செய்து பக்தர்களுக்கு மாவு உருண்டையை பிரசாதமாக வழங்கினர்.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் 160 ஆண்டுகளுக்கு மேலாக காமன் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
உலக நன்மைக்காக கைலாயத்தில் சிவ பெருமான் தவத்தில் இருந்தார். தேவ லோகத்தில் தலைவனானவருக்கும், தேவர்களுக்கும் இந்த தவத்தால் நன்மை கிட்டாமல் போகலாம் என்று எண்ணிய இந்திரன் முதலானோர் பலரை நாடினர். சிவனின் கோபத்திற்கு பயந்து யாரும் முன்வரவில்லை.
அப்போது மன்மதனின் உதவியை நாடிய தேவர்கள், அவரது மனதை மாற்றி சிவனுக்குள் புகுந்து காம எண்ணத்தை தூண்டினால் தவம் கலைந்துவிடும் என கூறினர். அதற்கு சம்மதித்த மன்மதனும் சிவனுக்கு அருகில் சென்று காம பானத்தை தொடுத்தான்.
தவத்தில் இருந்த சிவன் கோபமுற்று நெற்றிக் கண்ணைத் திறந்து மன்மதனை எரித்தார். இதனை அறிந்த மன்மதனின் மனைவியான ரதிதேவி சிவபெருமானிடம், தேவேந்திரனின் தூண்டுத லாலேயே மன்மதன் தங்களது தவத்தில் இடையூறு செய்தார். அவர்மீது எந்த தவறுமில்லை. இந்த செயலால் நான் கணவனை இழந்து வாழ வேண்டுமா? என்று முறையிட்டாள்.
ரதிதேவியின் வேண்டு தலை ஏற்ற சிவபெருமான், ரதிதேவியிடம் உன் கண்ணுக்கு மட்டுமே மன்மதன் தெரிவார் என்று கூறி மன்மதனின் உயிரை மீட்டு சாப நிவர்த்தி செய்தார். இந்த புராண சம்பவத்தை நினைவு கூறும் வகையில் சுமார் 160 ஆண்டுகளுக்கு மேலாக தொண்டியில் உள்ள வெள்ளாளர் தெரு சொசைட்டியினரால் மாசி மாதத்தில் காமன் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டும் காமன் பண்டிகையையொட்டி காமன் மேடையில் காப்பு கட்டுதல் நடந்தது. தினமும் மண்டகப்படிதாரர்களால் பூஜைகள் நடந்தன. அதனைத் தொடர்ந்து மன்மதனை எரிக்கும் நிகழ்வாக காம தகனம் நடந்தது. அப்போது பெண்கள் மாவிளக்கு வழிபாடு செய்து பக்தர்களுக்கு மாவு உருண்டையை பிரசாதமாக வழங்கினர்.
குழந்தை இல்லாதவர்கள் வேண்டுதல் நிறைவேறிய பின் கரும்புத் தொட்டிலில் குழந்தையை வைத்து காமன் மேடையைச் சுற்றி வந்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். இதற்கான ஏற்பாடுகளை தலைவர் பிச்சுமணி, பொருளாளர் சுந்தர மூர்த்தி, உறுப்பி னர்கள் விடுதலை முரசு, பட்டாபிராமன், ராஜகோபால், ராமநாதன், ராமமூர்த்தி, நாகராஜ், ராஜராமன் ஆகியோர் செய்திருந்தனர்.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- இதை நம்பி கூட்டுறவு சங்கத்தில் கடன் வாங்கி யதால் விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.
அபிராமம்
ராமநாதபுரத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் இழப்பீடு நிவாரண தொகையை உடனே தாமதமின்றி போர்க்கால அடிப்படையில் வழங்க வேண்டும் என்று வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் தமிழக அரசின் சிறப்பு செயலாளர் சமயமூர்த்தியிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
கமுதி தாலுகாவிற்கு உட்பட்ட அபிராமம் பகுதியில் பருவமழை குறைவால் நெற்பயிர்கள் சாகுபடி மகசூல் பாதிக்கப்பட்டது. வறட்சி நிவாரணம் வழங்ககோரி பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அபிராமம் பகுதியை சுற்றியுள்ள தரைக்குடி, வல்லகுளம், அகத்தாரிருப்பு, தீர்த்தாண்டதானம் உள்பட பல்வேறு கிராமங்களில் கடந்த ஆண்டு பருவமழை இல்லாததால் நெல் விவ சாயம் பாதிக்கப்பட்டது.
இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். மேலும் பொருளாதார நஷ்டம் ஏற்ப்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு கொடுத்த பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கூறினர். இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாய சங்க பொறுப்பாளர் முத்து ராமலிங்கம் கூறியதாவது:-
கடந்த ஆண்டு பருவமழை காலத்தில் மழை அளவு குறைந்துவிட்டதால் நெல் பயிர் விளையக்கூடிய நேரத்தில் மழை இல்லாமல் போய்விட்டது. இதனால் விவசாயிகளுக்கு பொருளாதார நஷ்டம் ஏற்பட்டது.
இதை நம்பி கூட்டுறவு சங்கத்தில் கடன் வாங்கி யதால் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். இதை மனதில்கொண்டு விவசாயி கள் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்வதுடன், பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். இதை குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது சம்பந்தமாக பலமுறை புகார் அளித்தும் எந்தவித பயனும் இல்லை. விவசாயிகளின் நிலையை கருத்தில் கொண்டு குறிப்பிட்ட காலத்திற்க்குள் நிவாரணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கஞ்சாவை கடத்திச்சென்ற மர்ம கும்பல் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ராமேசுரம் கடற்கரையில் கஞ்சா பார்சல் கிடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமேசுவரம்:
ராமேசுவரத்தில் இருந்து கடல் வழியாக சமூக விரோதிகள் கஞ்சா, தங்கம் உள்ளிட்டவற்றை கடத்துவது தொடர்ந்து நடந்து வருகிறது. இதை தடுக்க கடலோர காவல் படை போலீசார் கடற்கரைகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் ராமேசுவரம் கடற்கரை பகுதியில் பார்சல் ஒன்று கரை ஒதுங்கி கிடப்பதாக கடலோர பாதுகாப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கடலோர காவல் படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த பார்சலை கைப்பற்றினர்.
அதை பிரித்துபார்த்த போது 8 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இது பல லட்சம் மதிப்புள்ளது என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமேசுவரத்தில் இருந்து மர்ம நபர்கள் இலங்கைக்கு படகில் கடத்திச்சென்ற போது போலீசாரை கண்டதும் கஞ்சா பார்சலை வீசிச்சென்றார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கஞ்சாவை கடத்திச்சென்ற மர்ம கும்பல் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராமேசுரம் கடற்கரையில் கஞ்சா பார்சல் கிடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- தொண்டி அருகே உலக மகளிர் தின விழா கொண்டாட்டப்பட்டது.
- இதில் திருவாடானை பகுதியைச் சேர்ந்த பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே திருவெற்றியூர் சமுதாயக்கூடத்தில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு திட்ட அலகு, வருவாய்துறை, ஊரக வளர்ச்சி துறை, மாவட்ட சமூக நலத்துறை, மருத்துவத்துறை, சைல்டு லைன் மற்றும் வேல்டு விஷன் தொண்டு நிறுவனம் இணைந்து உலக மகளிர் தின விழாவை நடத்தின. ஸ்பீடு அரசு சாரா தொண்டு நிறுவன இயக்குநர் தேவராஜ் தலைமை தாங்கினார். திட்ட இயக்குநர் சந்திர எபிநேசர் வரவேற்றார். குழந்தைகள் பாதுகாப்பு அலகு வாசுகி, முதன்மை மருத்துவ அலுவலர் எட்வின், சமூக நல விரிவாக்க அலுவலர் மெர்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர். புனித நார்பட் பள்ளி மாணவிகளின் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் மற்றும் வேல்டு விஷன் தொண்டு நிறுவன ஊழியர்களின் கவிதை பாடும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முடிவில் தொண்டு நிறுவன தன்னார்வலர் பொன்னுத்தாயி நன்றி கூறினார். இதில் திருவாடானை பகுதியைச் சேர்ந்த பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.






