என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Women’s Group Products"

    • மகளிர் குழு பொருட்கள் விற்பனை கண்காட்சி நடந்தது.
    • கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமை தாங்கி கண்காட்சி அரங்கத்தை திறந்து வைத்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், தாதனேந்தல் மற்றும் வண்ணாங்குண்டு ஊராட்சியில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் கைவினைப் பொருட்கள் தயார் செய்து பொதுமக்களுக்கான விற்பனை கண்காட்சி அரங்கம் திறப்பு விழா நடந்தது.

    கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமை தாங்கி கண்காட்சி அரங்கத்தை திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் பேசுகையில், ஒவ்வொரு மகளிரும் ஒற்றுமையுடன் ஒருங்கிணைந்து லட்சி யங்களை திட்டங்களாக வெளி கொண்டு வந்து செயல்படுத்தும்போது நிச்சயம் வெற்றி பெற முடியும்.

    ஒவ்வொரு மகளிரும் ஒருங்கிணைந்து ஒவ்வொரு பகுதியிலும் அதன் சிறப்பு களுக்கு ஏற்பவும், மக்களின் தேவையை அறிந்தும் பொருட்களை உற்பத்தி செய்து சந்தைப்படுத்தும் போது பொதுமக்களின் தேவை நிறைவேறுவது மட்டுமின்றி நல்ல வரவேற்பை பெறுவதால், மகளிர் குழுக்களின் பொருளாதார வளர்ச்சியும் உயரும்.

    பொருள்கள் உற்பத்தி செய்வதற்கு முன்பு மக்களை கவரும் வகையில் செயல்பாடுகள் அமைய வேண்டும். அதற்கு போதிய பயிற்சிகள் வழங்க மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது என்றார். வண்ணாங்குண்டு ஊராட்சியில் மகளிர் குழு வினர் பலன் தரும் மரம் வடிவில் நின்று பெண்கள் தின விழாவை கொண்டா டினர்.

    இதில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரவீன் குமார், வேளாண்மை கல்லூரி விஞ்ஞானி முகிலன், திருப்புல்லாணி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேந்திரன், கணேஷ் பாபு, தாதனேந்தல் ஊராட்சி மன்றத்தலைவர் கோகிலா ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பி.ஆர்.ஓ.பாண்டி தொகுத்து வழங்கினார்.

    ×