search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்
    X

    நெல் விவசாயம் பாதிக்கப்பட்ட நிலையில் மாட்டுக்கு உணவாக்க கதிர்களை அறுக்கும் விவசாயி.

    விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
    • இதை நம்பி கூட்டுறவு சங்கத்தில் கடன் வாங்கி யதால் விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.

    அபிராமம்

    ராமநாதபுரத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் இழப்பீடு நிவாரண தொகையை உடனே தாமதமின்றி போர்க்கால அடிப்படையில் வழங்க வேண்டும் என்று வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் தமிழக அரசின் சிறப்பு செயலாளர் சமயமூர்த்தியிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

    கமுதி தாலுகாவிற்கு உட்பட்ட அபிராமம் பகுதியில் பருவமழை குறைவால் நெற்பயிர்கள் சாகுபடி மகசூல் பாதிக்கப்பட்டது. வறட்சி நிவாரணம் வழங்ககோரி பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அபிராமம் பகுதியை சுற்றியுள்ள தரைக்குடி, வல்லகுளம், அகத்தாரிருப்பு, தீர்த்தாண்டதானம் உள்பட பல்வேறு கிராமங்களில் கடந்த ஆண்டு பருவமழை இல்லாததால் நெல் விவ சாயம் பாதிக்கப்பட்டது.

    இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். மேலும் பொருளாதார நஷ்டம் ஏற்ப்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு கொடுத்த பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கூறினர். இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாய சங்க பொறுப்பாளர் முத்து ராமலிங்கம் கூறியதாவது:-

    கடந்த ஆண்டு பருவமழை காலத்தில் மழை அளவு குறைந்துவிட்டதால் நெல் பயிர் விளையக்கூடிய நேரத்தில் மழை இல்லாமல் போய்விட்டது. இதனால் விவசாயிகளுக்கு பொருளாதார நஷ்டம் ஏற்பட்டது.

    இதை நம்பி கூட்டுறவு சங்கத்தில் கடன் வாங்கி யதால் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். இதை மனதில்கொண்டு விவசாயி கள் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்வதுடன், பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். இதை குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இது சம்பந்தமாக பலமுறை புகார் அளித்தும் எந்தவித பயனும் இல்லை. விவசாயிகளின் நிலையை கருத்தில் கொண்டு குறிப்பிட்ட காலத்திற்க்குள் நிவாரணம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×