என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • கமுதியில் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாமை காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
    • மத்திய ஒன்றிய செயலாளர் சண்முகநாதன் வரவேற்றார்.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் பஸ் நிலையம் முன்பு நடந்தது. மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான காதர் பாட்சா முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார். முதுகுளத்தூர் தொகுதி பொறுப்பாளரும், மதுரை முன்னாள் மேயருமான குழந்தைவேலு, முகாமை தொடங்கி வைத்தார். கமுதி பேரூர் செயலாளர் பாலமுருகன், வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன் முன்னிலை வகித்தனர். ஊராட்சி ஒன்றியகுழு தலைவர் தமிழ் செல்விபோஸ், துணைத் தலைவர் சித்ராதேவி அய்யனார், ஊராட்சி மன்ற தலைவர் காவடிமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதே போல் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் நடந்த புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமிற்கு மாவட்டச் செயலாளர் காதர்பாட்சாமுத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.தொகுதி பொறுப்பாளர் குழந்தைவேலு தொடங்கி வைத்தார்.மத்திய ஒன்றிய செயலாளர் சண்முகநாதன் வரவேற்றார்.

    • தொண்டியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • இதுசம்பந்தமாக எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி முதல்நிலை பேரூராட்சி பகுதிக்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது நிலவும் கடும் வெப்பத்தால் வழக்கமாக வழங்கப்படும் குடிநீரின் அளவை விட மிகக்குறைந்த அளவே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

    பொதுமக்களின் அத்தியாவசிய தேவையை தடையின்றி வழங்க தொண்டி பேரூராட்சி தலைவர் ஷாஜஹான் பானு ஜவஹர் அலிகான், திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ. கரு.மாணிக்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.

    தொண்டி பேரூராட்சி பகுதியில் சூரிய ஒளியில் இயங்கும் விளக்குகள் பொருத்தவும், மீன் வளத்துறைக்குச் சொந்தமான இடத்தில் முன்பு செயல்பட்டு வந்த ஐஸ் பிளாண்ட்டை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். தொண்டி ஜெட்டி பாலத்தை சீரமைக்கவும், தொண்டியை தனி தாலுகாவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தொண்டி-மதுரை சாலையில் உள்ள செய்யது முகமது அரசு ஆண்கள் மேல்நி லைப்பள்ளி உட்புறம் மினி விளையாட்டு அரங்கம் அமைக்க வேண்டும், புதிதாக அங்கன்வாடி கட்டிடம் கட்டித் தர வேண்டும், தொண்டி பேரூராட்சிக்கு சொந்தமாக சேந்தனி போர்வெல் பழுதடைந்துள்ளதால் அதன் அருகில் புதிதாக போர்வெல் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி எம்.எல்.ஏ.விடம் மனுவை வழங்கினர்.

    அப்போது தொண்டி நகர காங்கிரஸ் தலைவர் காத்தராஜா, தி.மு.க. செயலாளர் இஸ்மத் நானா ஆகியோர் உடனிருந்தனர்.

    • அபிராமம் பகுதியில் பருத்தி விலை குறைவால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
    • நெல் பயிரிட்ட விவசாயிகள் அரசின் நிவாரணம் மற்றும் பயிர் காப்பீடு நிவாரணத்தை நம்பி காத்திருக்கின்றனர்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் பகுதியில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை பொய்த்து போனதால் வைகை பாசன பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் நெல் விவசாயம் கருகி நஷ்டம் ஏற்பட்டுவிட்டது.

    நெல் பயிரிட்ட விவசாயிகள் அரசின் நிவாரணம் மற்றும் பயிர் காப்பீடு நிவாரணத்தை நம்பி காத்திருக்கின்றனர்.

    இந்தநிலையில் நெற்பயிர்களை அறுத்துவிட்டு அதில் பருத்தியை விவசாயிகள் பயிரிட்டனர். நவம்பர்மாத இறுதியில் தொடங்கிய பருத்தி சாகுபடி பணிகள் தற்போது ஒரளவுக்கு விளைய தொடங்கி உள்ளது.

    முதல் போக சாகுபடி செய்து அறுவடை செய்ய தெடங்கியுள்ள விவசாயிகள் அதனை விற்பனை செய்ய கமிஷன் கடைக்கு கொண்டு சென்றபோது அங்கு விவசாயிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

    கடந்த ஆண்டு பருத்தி நன்றாக விளைந்ததோடு மட்டுமில்லாமல் அதிக விலைக்கு விற்பனையானது. இந்த ஆண்டு பருத்தி ஓரளவுக்கு விளைந்த போதும் உரிய விலை கிடைக்கவில்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

    இதுகுறித்து அபிராமம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-

    கடந்த ஆண்டு பருத்தி நல்ல மகசூல் இருந்தபோதும், நல்ல விலையும் கிடைத்தது. ஒரு கிலோ பருத்தி ரூ.60 முதல் ரூ.110 வரை கிடைத்தது. இந்த ஆண்டு பருத்தியை ஆரம்பத்தில் அறுவடை செய்து கமிஷன் கடைக்கு கொண்டு சென்றபோது ரூ.65-க்கு தான் வாங்குகின்றனர்.

    விலை உயரும் என்ற நம்பிக்கையுடன்தான் தொடர்ந்து பருத்தியை பிரித்தெடுக்கும் பணி செய்து வருகிறோம். அரசு பருத்தி விலையை நிர்ணயம் செய்து விவசாயிகளின் மனக்கவலையை போக்க வேண்டும். பருத்தியில் நோய் தாக்குதல் அதிகமாக உள்ளது.

    மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், திருவாடனை, ஆர்.எஸ்.மங்கலம், முதுகுளத்தூர், பரமக்குடி, கடலாடி, கமுதி, அபிராமம் உள்ளிட்ட பகுதிகளில் நெல், மிளகாய்க்கு அடுத்தபடியாக பருத்தி விவசாயம் செய்துவருகிறேம்.

    இந்த ஆண்டு பருத்தியில நோய் தாக்குதலும் அதிக மாக உள்ளது. சில நாட்களுக்கு முன் பெய்த கோடை மழை பருத்தி பயிருக்கு ஏற்ற மழையாகும். பருத்திக்கு விலை ஓரளவாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தினமும் இரவு சுவாமி திருவீதி உலா நடைபெற்று வருகிறது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நாமக்கல் நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நரசிம்மர் சுவாமி, அரங்கநாதர் மற்றும் ஆஞ்சநேயர் கோவில் பங்குனி தேர்த்திருவிழா ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான கடந்த புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தினமும் இரவு சிறப்பு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெற்று வருகிறது. நரசிம்மர்-ஸ்ரீதேவி பூதேவி, அரங்கநாதர்-ஸ்ரீதேவி, பூதேவி தாயார் திருக்கல்யாண விழா நாமக்கல் குளக்கரை நாமகிரி தாயார் திருமண மண்டபத்தில் நேற்று இரவு நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் மொய் சமர்ப்பித்தனர். பின்னர் விருந்து உபசரிப்பு நடந்தது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை(வியாழக்கிழமை) நடைபெறுகிறது. நாளை காலை 9 மணிக்கு நரசிம்ம ஸ்வாமி உடனுறை நாமகிரி தாயார் தேரோட்டமும், மாலை 4:30 மணிக்கு அரங்கநாதர், ஆஞ்சநேயர் தேரோட்டமும் நடைபெற உள்ளது.

    இதை ஒட்டி கோவிலை சுற்றி 2 டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    தேர் வீதி உலா வரும் 4 ரதவீதிகளிலும் உரிய பாதுகாப்பு மற்றும் தேரோட்டத்தின்போது ட்ரோன் கேமரா மூலமாக குற்றங்கள் எதுவும் நடக்காமல் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவிலை சுற்றி 10 இடங்களில் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    காலையில் ஸ்ரீ நரசிம்மர் கோவில் தேரோட்டத்தின்போது கோட்டை ரோட்டில் போக்குவரத்து தடை செய்யப்படுகிறது. 4 சக்கர வாகனம் மற்றும் 2 சக்கர வாகனங்கள் நாமக்கல் பஸ் நிலையத்திலிருந்து உழவர் சந்தை வழியாக பொய்யேரி கரை ரோடு வழியாக திருச்செங்கோடு ரோட்டுக்கும், சேலம் ரோட்டுக்கும் செல்லும் வகையில் போக்குவரத்து மாற்ரப்படுகிறது.

    நாமக்கல் ரங்கநாதர் மற்றும் ஆஞ்சநேயர் தேரோட்டம் நாளை மாலை கடைவீதியில் இருந்து புறப்பட்டு பலபட்டறை மாரியம்மன் கோவில் வழியாக சேந்தமங்கலம் ரோடு ஜங்ஷன், பேட்டை பள்ளிவாசல் வழியாக சென்று நிலையை அடைகிறது.

    தேர்வழி வரும் வழிகளிலும் தேரின் 4 பக்கமும் 150 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். ட்ரோன் மூலமும் கண்காணிக்கப்பட்டு படுகிறது. இதையொட்டி மாலையில் சேலம் ரோடு, திருச்செங்கோடு ரோடுகளில் இருந்து 4 சக்கர வாகனங்கள் மற்றும் 2 சக்கர வாகனங்கள் மற்றும் கடைவீதி வழியாக வரும் வாகனங்களை கோட்டை ரோடு, உழவர் சந்தை ரோடு வழியாக நாமக்கல் பஸ் நிலையம் வர ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    ரத வீதியில் அனுமதி இல்லாமல் ட்ரம்ஸ் போன்றவற்றை பயன்படுத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • ராமநாதபுரத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ராமநாதபுரம்

    இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவரும்,நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தியை தகுதி நீக்கம் செய்த பா.ஜ.க. அரசை கண்டித்து ராமநாதபுரம் அரண்மனை முன்பு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மாநில துணைத்தலைவர் நவாஸ்கனி எம்.பி., தலைமை வகித்தார். மாவட்டத்தலைவர் வருசைமுகம்மது வரவேற்றார். மதசார்பாற்ற முற்போக்கு கூட்டணி நிர்வாகிகள் தி.மு.க. மாவட்ட கழக செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. பேசினார்.

    இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொருளாளர் ஷாஜகான், திருவாடானை சட்டப்பேரவை உறுப்பினர் கரு.மாணிக்கம், சி.பி.எம். மாவட்ட செயலாளர் வி.காசிநாததுரை, சி.பி.ஐ மாவட்ட செயலாளர் என்.எஸ்.பெருமாள், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் எம்.பேட்ரிக், ஆதிதமிழர் பேரவை மாவட்ட நிர்வாகி புவனேஷ், பெரியார் பேரவை நிர்வாகி நாகேஷ்வரன், நகர்மன்ற தலைவர் ஆர்.கே.கார்மேகம், துணைத்தலைவர் டி.ஆர்.பிரவின்தங்கம், மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளர்கள் ரமேஸ்பாபு, தெய்வேந்திரன், ராஜாராம் பாண்டியன், மகிளா காங்கிரஸ் மாவட்டத் தலைவர் என்.ராமலட்சுமி, சி.பி.எம். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என்.கலையரசன், ஆர்.குருவேல், எம்.ராஜ்குமார், கண்ணகி, தாலுகா செயலாளர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முதுகுளத்தூர் பஸ் நிலையத்தில் கடைகள் 32 ஆண்டுகளாக ஏலம் விடாமல் உள்ளன.
    • நடவடிக்கை எடுக்க கவுன்சிலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேரூராட்சி கவுன்சில் கூட்டம் சேர்மன் ஏ.ஷாஜகான் தலைமையில், செயல் அலுவலர் மாலதி, உதவி சேர்மன் வயணப்பெருமாள் முன்னிலையில் நடந்தது. ராஜேஷ் வரவேற்றார். தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    சேகர் உள்ளிட்ட கவுன்சிலர்கள் பேசுகையில், பஸ் நிலைய பகுதிகளில் உள்ள பேரூராட்சி கடைகள் 32 ஆண்டுகளாக ஏலம் விடப்படாமல் உள்ளது. இதனால் பேரூராட்சிக்கு இழப்பு ஏற்படுகிறது. இந்த கடைகளை ஏலத்தில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • ராமநாதபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
    • இந்த முகாமில் பல்வேறு கோரிக்கைகள் குறித்த 310 மனுக்கள் பெறப்பட்டன.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் குறித்த 310 மனுக்கள் பெறப்பட்டன.

    இந்த மனுக்களுக்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஒருமாத காலத்திற்குள் மனுதாரர்களுக்கு தீர்வு வழங்க வேண்டும், தீர்வு வழங்க முடியாத மனுக்களின் நிலை குறித்து மனுதாரர்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என்றும் அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜுலு, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) மாரிச்செல்வி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • முதுகுளத்தூர் பகுதிகளில் டிரோன் மூலம் பூச்சிக்கொல்லி தெளிக்கப்பட்டது.
    • இந்தப் பணிகளை வேளாண்மை உதவி இயக்குநர் ஆய்வு செய்தார்.

    முதுகுளத்தூர்

    முதுகுளத்தூர் வட்டாரத்தில் சுமார் 8,200 ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. பருத்தியை பொறுத்த வரை விதைப்பு முதல் அறுவடை வரை பல்வேறு நிலைகளில் சாறு உறிஞ்சும் பூச்சிகள், புழுக்கள் உள்ளிட்டவை ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து தீவிர கண்காணிப்பு மேற் கொள்வது அவசியமாகிறது.

    இந்தநிலையில் நிலைக்கத்தக்க பருத்தி சாகுபடி இயக்கத்தின்கீழ் டிரோன் மூலம் பருத்தி வயல்களில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் பணிகள் திருவரங்கம், வளநாடு, கருமல் ஆகிய கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டது. மேலும் விவசாயிகளுக்கு டிரோன் மூலம் மருந்து தெளிப்பதற்கான செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

    20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த செயல் விளக்கத்தில் பங்கேற்றனர். இந்தப் பணிகளை வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) நாகராஜன் ஆய்வு செய்தார். அப்போது வேளாண் உதவி இயக்குநர் கேசவராமன் உடனிருந்தார்.

    இதற்கான ஏற்பாடுகளை துணை வேளாண்மை அலுவலர் தனதுரை, உதவி வேளாண்மை அலுவலர்கள் மணிகண்டன், முத்துராஜ் மற்றும் ஜெயக்கண்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • தொண்டி, திருவாடானை, சோழவந்தான் சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
    • 12 திரவிய பொருட்களால் அபிஷேகம் நடந்தது.



    சோழவந்தான் பிரளயநாதர் கோவில் பிரதோஷ விழாவில் சுவாமி வலம் வந்த காட்சி.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி, திருவாடானை பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. தொண்டி அருகே உள்ள நம்புதாளை அன்னபூரனேசுவரி சமேத நம்பு ஈசுவரர் கோவிலில் நந்திக்கு பால், பழம், பன்னீர், இளநீர், தயிர், விபூதி, அரிசி மாவு, அபி ஷேக பொடி, பழங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    உற்சவ மூர்த்தி சுவாமி வீதி உலா நடந்தது. பரிவார தெய்வங்களான விநாயகர், முருகன், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், விஷ்ணு துர்க்கை, காலபைரவர், நாகநாதர் மற்றும் கல்யாண நவக்கிரகங்களுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. பக்தர்களுக்கு சர்க்கரைப்பொங்கல், எள் சாதம், சுண்டல் பிரசாதமாக வழங்கப்பட்டது. பூஜை ஏற்பாடுகளை வாசு, கருப்பசாமி, சுவாமி நாதன் ஆகியோர் செய்திருந்தனர்.

    இதேபோல் திருவாடானை ஆதிரத்தினேசுவரர், ஓரியூர் சேயுமானோர், தீர்த்தாண்ட தானம் சர்வ தீர்த்தேசுவரர், தளிர் மருங்கூர் சிவாலயம், தொண்டி சிதம்பரேசுவரர் சிவாலயங்களிலும் நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ள பிரளயநாதர் சுவாமி சிவன் கோவிலில் பிரதோஷ விழா நடந்தது. சனீசுவரலிங்கம் நந்திகேசு வரருக்கு பால், தயிர் உள்பட 12 திரவிய பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமியும், அம்மனும் ரிஷப வாகனத்தில் கோவிலை வலம் வந்தனர்.

    ஏற்பாடுகளை பா.ஜ.க. விவசாய அணி மாநில துணைத்தலைவர், எம்.வி.எம். குழும தலைவர் மணிமுத்தையா, நிர்வாகி வள்ளிமயில், சோழவந்தான் நகர அரிமா சங்க தலைவர் மருதுபாண்டியன் ஆகியோர் செய்திருந்தனர். இதேபோல் திருவேடகம் ஏடகநாதர் கோவிலிலும், விக்கிரமங்கலம் கோவில் பட்டி மருததோதைய ஈசுவரர் கோவிலிலும், மன்னாடிமங்கலம் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலிலும், தென்கரை அகிலாண்டே சுவரி சமேத மூலநாத சுவாமி கோவிலிலும், பேட்டை அருணாசல ஈசுவரர் கோவிலிலும், திருவாலவாயநல்லூர் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலிலும் பிரதோஷ விழா நடந்தது.

    • ராமநாதபுரத்தில் மதுபான கடையை அகற்றகோரி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • சிக்கலை தலைமையிடமாக கொண்டு புதிய ஒன்றியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் ஆதம் நகரில் செயல்படும் மதுபான கடையை அகற்ற வேண்டும், கடலாடி ஒன்றியத்தை இரண்டாக பிரித்து சிக்கலை தலைமை இடமாக கொண்டு புதிய ஒன்றியம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மாவட்ட செயலாளர் அக்கிம் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் ஆயிஷா, மாவட்ட அமைப்பாளர் சதாம்ராஜா, மாவட்ட அமைப்பு தலைவர் ஜீவா, மாவட்ட துணைச் செயலாளர் தொண்டி ராசிக், கடலாடி ஒன்றிய செயலாளர் இருளாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட இளைஞர் சங்கதலைவர் பாலா, மாவட்ட தலைவர் சந்தானதாஸ், தொழிற்சங்க தலைவர் லட்சுமணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    ராமநாதபுரம் நகர செயலாளர் இப்ராஹிம், ஒன்றிய செயலாளர் இஸ்மாயில், திருவாடானை ஒன்றிய செயலாளர் தர்மராஜ், திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் மக்தூம், ராமநாதபுரம் ஒன்றிய இளைஞர் சங்கத் தலைவர் ஜகுபர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மாவட்ட மாணவர் சங்க செயலாளர் சந்தோஷ் நன்றி கூறினார்.

    • சாயல்குடி அன்னை வேளாங்கண்ணி ஆலயம் சார்பில் குருத்தோலை பவனி நடந்தது.
    • பெண்கள் குருத்தோலை ஏந்தி ஊர்வலமாக வந்து அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தை வந்தடைந்தனர்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அன்னை வேளாங்கண்ணி ஆலயம் சார்பில் குருத்தோலை பவனி நடந்தது. பாதிரியார் பாஸ்கர் டேவிட் தலைமை தாங்கினார். தொன்போஸ்கோ பள்ளி தாளாளர் ஆரோக்கியம், முதல்வர் ஆல்பிரட், நிர்வாகிகள் சார்லஸ், பிரபு, ரோஷன் முன்னிலை வகித்தனர். வி.வி.ஆர்.நகரில் இருந்து பெண்கள் குருத்தோலை ஏந்தி ஊர்வலமாக தூத்துக்குடி- ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து வந்து அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தை வந்தடைந்தனர். பின்பு மாதா கோவிலில் ஜெபம் செய்யப்பட்டது. இதில் மாதா கோவில் தலைவர் அந்தோணிராஜ், செயலாளர் ஆனந்தராஜ், பொருளாளர் பரலோக ராஜ், முன்னாள் தலைவர் ஜெயராஜ், முன்னாள் செயலாளர் காமராஜ், நிர்வாகி அருள் பால்ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • ராமநாதபுரம் மாவட்ட இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்பட்டார்.
    • தலைவர் புத்தேந்தல் குரு.பிரகலாதன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகளுக்கு மாதவன் நன்றி தெரிவித்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் போகலூரை சேர்ந்த மாதவன் தமிழ்நாடு யாதவ மகா சபையின் ராமநாதபுரம் மாவட்ட இளைஞரணி தலைவராக நியமனமிக்கப் பட்டுள்ளார். அவர் மாநில பொதுச் செயலாளர் வேலு மனோகரனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    இளைஞரணி தலைவராக நியமனம் செய்து சமுதாய பணியாற்ற வாய்ப்பளித்த மாநில தலைவர் நாசே ராமச்சந்திரன், பொதுச் செயலாளர் வேலு மனோகரன், பரிந்துரை செய்த மாவட்ட தலைவர் புத்தேந்தல் குரு.பிரகலாதன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகளுக்கு மாதவன் நன்றி தெரிவித்தார்.

    ×