என் மலர்
ராமநாதபுரம்
- பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. செயலாளர் தேனிஅக்கிம் கோரிக்கை விடுத்தனர்.
- புதிய பஸ் நிலையத்தை நகரின் வெளியே அமைப்பது சாலச்சிறந்தது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பா.ம.க. செயலா ளர் தேனிஅக்கிம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
ராமநாதபுரம் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்துவதாக சட்ட சபையில்அறிவித்த அமைச்சர் கே.என். நேருவுக்கும், தமிழக அரசுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ராமநாதபுரம் பஸ் நிலையத்தை விரிவாக்கம் மற்றும் புதிய கட்டிடம் கட்டுவதற்கு ரூ.20 கோடியை நகராட்சி நிர்வாகம் ஒதுக்கி உள்ளது. ராமநாதபுரத்தில் பஸ் நிலையம் வரும் முக்கிய சாலைகளில் இருக்கும் தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு மருத்துவமனை, அரசு நிறுவனங்கள் என பல நிறுவனங்கள் உள்ளன.
தனியார் நிறுவனங்கள் பல இந்த சாலையை ஆக்கிரமித்து புதிய கட்டிடங்கள் கட்டி வருகிறது. அதனை ஒழுங்குபடுத்தாத நகராட்சி நிர்வாகம் இப்போது இருக்கும் பஸ் நிலைய விரிவாக்கத்திற்கு ரூ.20 கோடி ஒதுக்கி இருப்பது மக்களின் வரிப் பணத்தை வீணடிப்பது போன்றுள்ளது.
ராமநாதபுரத்தில் எந்த முக்கிய சாலையிலும் ஆக்கி ரமிப்புகள் அகற்றப்ப டவில்லை. மேலும் சாலைகள் விரிவுபடுத் தப்படவில்லை. அவசரத்திற்கு நோயாளிகளை ஏற்றி வரும் ஆம்புலன்சு வாகனங்கள் செல்ல வழி இல்லாமல் பல உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.
ஆக்கிரமிப்பால் பொது மக்களுக்கு பல இன்னல்கள் ஏற்பட்டு வருகிறது. போக்கு வரத்துக் காவல் துறைக்கும், வாகன ஓட்டிகளுக்கும் தினமும் பிரச்சினை மேல் பிரச்சினை வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
இப்போது இருக்கும் பஸ் நிலைய பகுதியில் விரிவாக்கம் என்ற நிலையில் புதிய பஸ் நிலையம் அமைக்க முற்பட்டால் நகரின் உள்ளே அதிகமான பஸ்கள் மற்றும் வாகனங்கள் வர வாய்ப்புள்ளது. அப்படி வாகனங்கள் வந்தால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும்.
மேலும் பஸ் நிலையம் அருகே உள்ள வார சந்தையை மட்டும் எடுத்துக் கொண்டால் போக்கு வரத்திற்கு உகந்த சாலை வசதிகள் செய்யப்படாமல் பெரிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டால் அது சில வருடங்களிலே உபயோக மற்றதாகிவிடும்.
ராமநாதபுரத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்த பழைய பஸ் நிலையம் இப்போது எதற்கும் உபயோகப்படாமல் உள்ளது போல் புதிய பஸ் நிலையமும் மாறிவிடும். முதல்வர் இதனை கருத்தில் கொண்டு அவசர கதியில் செய்யாமல் இன்னும் காலம் எடுத்து மிகச்சிறந்த முறையில் பெரிய நகரை விட்டு வெளியே ஒருங்கிணைந்த பெரியளவில் பஸ் நிலையம் அமைக்க முடிவு எடுக்க வேண்டும்.
இப்போதிருக்கும் புதிய பஸ் நிலையம் நகர போக்குவரத்துக்கு மட்டும் வந்து செல்லும் பஸ் நிலையமாக மாற்றப்பட வேண்டும். இதையே விரிவுபடுத்தி பஸ் நிலையம் அமைக்கும்போது வாகனங்களின் இப்போதைய நிலை சில ஆண்டுகளில் எந்த அளவுக்கு அதிகமாகும் என்பதனை கருத்தில் கொண்டு ஒருங்கிணைந்த புதிய பஸ் நிலையத்தை நகரின் வெளியே அமைப்பது சாலச்சிறந்தது.
இதுகுறித்து முதல்வர் சிறந்த முடிவு எடுத்து அறிவிக்க வேண்டும் என்பதே ராமநாதபுரம் மாவட்ட பொதுமக்கள் மற்றும் பா.ம.க. நிர்வாகி களின் ஒருமித்த கருத்தாக உள்ளது. இதையெல்லாம் தவிர்த்து இப்போது இருக்கும் புதிய பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்தே ஆக வேண்டும் என்று நினைத்தால் இது விழலுக்கு இறைத்த நீர் போல ஆகிவிடும்.
மக்களின் வரிப்பணம் ரூ.20 கோடியை முறையான வழியில் செலவு செய்ய வேண்டும். வீண் விரயம் செய்ய கூடாது என்பதை நன்கறிந்த முதல்வர் இதனை உடனே தடுத்து நிறுத்தி செம்மைப்படுத்தி நகரத்துக்கு வெளியே பஸ் நிலையம் உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- காளியம்மன் கோவில் முளைப்பாரி திருவிழா காப்புகட்டுதலுடன் தொடங்கியது.
- 1000-க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரியை தலையில் சுமந்துக்கொண்டு ஊர்வலமாக சென்றனர்.
பசும்பொன்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள தலைவ நாயக்கன்பட்டி கிராமத்தில் பங்குனி பொங்கல் திருவிழா காப்புகட்டுதலுடன் தொடங்கியது. பெண்கள், ஆண்கள், சிறுவர்கள் என ஏராளமானோர் காப்புகட்டி விரதத்தை தொடங்கினர். தினமும் அம்மனுக்கு விஷேச பூஜைகள் நடந்தன. முக்கிய நாளான நேற்று அதிகாலை அக்னிச்சட்டி திருவிழா நடந்தது. இதில் 300-க்கு மேற்பட்ட பத்தர்கள் அக்னிச்சட்டி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். ஏராளமானோர் மாவிளக்கு எடுத்தும், மொட்டையடித்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று மாலை கோவில் முன்பு முளைப்பாரியை வைத்து பெண்கள் பாட்டு பாடி, கும்மி அடித்தனர். பின்னர் 1000-க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரியை தலையில் சுமந்துக்கொண்டு ஊர்வலமாக சென்றனர். கோவிலில் இருந்து தொடங்கிய முளைப்பாரி ஊர்வலம் கரகாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம் மற்றும் வானவேடிக்கை, மேள தாளங்களுடன் நகர் வலம் வந்து கண்மாயில் முளைப்பாரியை கரைத்தனர்.
- உலக சுகாதார தின சைக்கிள் பேரணி நடந்தது.
- இதில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் நேரு யுவகேந்திரா,இந்தியன் ரெட்கிராஸ் மற்றும் நிக்கோலஸ் சிலம்பம் பயிற்சி பள்ளி சார்பில் உலக சுகாதார தின விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடந்தது. ஆரோக்கியத்தை வலியுறுத்தி சிலம்ப பயிற்சி மாணவர்கள் 50 பேர் சைக்கிள் பேரணியாக ஆயுதப்படை விளையாட்டு மைதானத்தில் இருந்து டி.பிளாக், அம்மா பூங்கா வழியாக வள்ளல் சீதக்காதி ஸ்டேடியம் வரை சென்றனர்.
டாக்டர்.அருண்ராஜ், இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சேர்மன் சுந்தரம், செயலாளர் ரமேஷ், பாலமுருகன், சிலம்ப மாஸ்டர் மேத்யு இம்மானுவேல், பயிற்சியாளர் திருமுருகன் தலைமை தாங்கி பேரணியை தொடங்கி வைத்தனர். இதில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
- முகம்மது சதக் பாலிடெக்னிக்கில் வேலை வாய்ப்பு கருத்தரங்கு நடந்தது.
- முதுநிலை விரிவுரையாளர் மரியதாஸ் நன்றி கூறினார்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் முகம்மது சதக் பாலிடெக்னிக்கில் வெளிநாட்டில் வேலை வாய்ப்பு பெறுவது குறித்த கருத்தரங்கு நடந்தது. முதல்வர் சலாவுதீன் தொடங்கி வைத்தார்.துணைமுதல்வர் சேக் முன்னிலை வகித்தார். எந்திரவியல் துறைத்தலைர் கணேஷ் வரவேற்றார். பன்னாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் திறமை மேம்பாட்டுதுறை மேலாளர் வேலு, பயிற்சி மேலாளர் பிரபு, தொழில்துறைப்பிரிவு மேலாளர் பழனி திருவேங்கடம், தொழில்துறைப்பிரிவு மேலாளர் ஹரி ஆகியோர் பேசினர். முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் முகம்மது சதக் ஐ.டி.ஐ., ராமேசுவரம் உதயம் பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து கலந்துகொண்ட 180 மாணவர்கள் வேலை வாய்ப்பு நேர்முக தேர்வு எழுதினர். இதில் 126 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு மாத ஊதியம் ரூ.19 ஆயிரத்து 500-டன் தங்குமிடம் வழங்கப்படும் என பன்னாட்டு நிறுவனத்தின் திறமை மேம்பாட்டுத்துறை மேலாளர் வேலு தெரிவித்தார். முதுநிலை விரிவுரையாளர் மரியதாஸ் நன்றி கூறினார்.
- ராமநாதபுரம் வீட்டு வசதி வாரிய அலுவலக பொருட்கள் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
- இந்த சம்பவம் ராமநாதபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் பட்டணம்காத்தான் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி ராக்கம்மாள். இவர்களதுமகள் சொர்ணவள்ளிக்கு பட்டினம்காத்தான் பகுதியில் 1.37 ஏக்கர் சொந்த நிலம் இருந்தது. அதனை வீட்டு வசதி வாரியம் கடந்த 1997ம் ஆண்டு 1 செண்ட் ரூ.5 ஆயிரம் என்று விலை நிர்ணயம் செய்து கையகப்படுத்தியது.
ஆனால் அதற்கு ரிய பணத்தை வழங்கவில்லை. இதனைத்தொடர்ந்து சொர்ணவள்ளி, வீட்டு வசதி வாரியத்துறை அதிகாரிகளிடம் சென்று தனக்கு தர வேண்டிய பணத்தை கேட்டுள்ளார். இருந்த போதிலும் பணத்தை கொடுக்கவில்லை.
இதனால் பாதிக்கப்பட்ட சொர்ணவள்ளி ராமநாதபுரம் சப்-கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை முடிவில் சொர்ணவள்ளிக்கு தர வேண்டிய அசல் மற்றும் வட்டி ஆகியவை சேர்த்து ரூ.39 லட்சத்தை வீட்டு வசதி வாரியம் வழங்கிட வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதன் பின்னரும் அவருக்கு பணம் வழங்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து அவர் மீண்டும் நீதிமன்றத்தில் புகார் செய்தார். அதனை விசாரித்த ராமநாதபுரம் சப்-கோர்ட் நீதிபதி கதிரவன், ராமநாதபுரத்தில் உள்ள வீட்டு வசதி வாரிய அலுவலக பொருட்களை ஜப்தி செய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டார்.இதனையடுத்து ராமநாதபுரம் சப்-கோர்ட் ஆமினா ராமநாதபுரம் பெரிய கடை வீதியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் உள்ள கணினி உள்ளிட்ட பொருட்களை ஜப்தி செய்து நீதிமன்றத்திற்கு எடுத்துச்சென்றார். இந்த சம்பவம் ராமநாதபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- பொது விநியோகத்திட்ட குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
- இந்த முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசின் ஆணைக்கிணங்க மாதந்தோறும் 2-வது சனிக்கிழமை மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் ஒரு கிராமத்தில் சுழற்சி முறையில் பொது விநியோகத்திட்ட குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாளை (8-ந் தேதி) கீழ்க்காணும் கிராமங்களில் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட உள்ளது.
ராமநாதபுரம் வட்டம்- புல்லங்குடி (நியாய விலைக்கடை, ராமேசுவரம் வட்டம்-அரியாங்குண்டு - (இ-சேவை மைய கட்டிடம்), திருவாடானை வட்டம் - புதுப்பட்டினம் (நியாய விலைக்கடை), பரமக்குடி வட்டம் - வாலங்குடி (இ-சேவை மைய கட்டிடம்.
முதுகுளத்தூர் வட்டம் -வெங்கலக்குறிச்சி (நியாயவிலைக்கடை), கடலாடி வட்டம் வாலி நோக்கம் (நியாய விலைக்கடை), கமுதி வட்டம்- தலவநாயக்கன்பட்டி (ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி).
கீழக்கரை வட்டம் குளபதம் (நியாய விலைக் கடை), ஆர்.எஸ்.மங்கலம் வட்டம் - ஆப்பிராய் (நியாய விலைக் கடை) ஆகிய இடங்களில் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.
இதில் அந்தந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்களுக்கு மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பம் செய்தல், குடும்ப அட்டைகளில் பிழை திருத்தம், புகைப்படம் பதிவேற்றம், பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு, மாற்றம் செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை,நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்படும்.மேலும் நியாயவிலைக் கடைகளில் பொருள் பெற வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் மற்றும் நோய்வாய்ப்பட்ட பயனாளிகளுக்கு அங்கீகாரச்சான்று வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பொது விநியோகக்கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் இருந்தால் அவற்றை பொதுமக்கள் இந்த முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பரமக்குடியில் அ.ம.மு.க. நிர்வாகிகள் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
- வார்டு செயலாளர் நாகராஜன், நயினார்கோவில் சிவக்குமார் உள்பட கலந்து கொண்டனர்.
பரமக்குடி
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தனியார் மண்டபத்தில் அ.தி.மு.க. ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனிய சாமி முன்னிலையில் அ.ம.மு.க. பரமக்குடி ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தங்களை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர்.
மாவட்ட இளைஞரணி செயலாளர் ஏழுமலையான், பரமக்குடி தெற்கு நகர் செயலாளர் உமா மகேஸ்வரன், மாவட்ட மாணவரணி இணைச்செயலாளர் ராஜீவ்காந்தி, பொதுக்குழு உறுப்பினர் தங்கமணி, மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் குணசேகரன்.
மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் ராஜா, அவைத்தலைவர் சங்கிலி, இணைச் செயலாளர் வனிதா தேவி, நிர்வாகிகள் உஷா, அர்ஜு னன், கிருஷ்ண பரமாத்மா, முனியசாமி, செல்வி, சசிகலா, கணேசன், பூமி நாதன், சிங்கம்துரை, அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் ரகு வீரபாண்டியன் மற்றும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. முத்தையா, பரமக்குடி ஒன்றிய செயலாளர் முத்தையா, கமுதி ஒன்றிய செயலாளர் காளிமுத்து, மாவட்ட துணைச் செய லாளர் பாதுஷா, பரமக்குடி நகரச்செயலாளர் ஜமால், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் தங்கவேலு.
ஒன்றிய கவுன்சிலர் சுப்பிரமணியன், மாவட்ட தகவல்தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சரவணக்குமார், காட்டுப் பரமக்குடி வார்டு செயலாளர் நாகராஜன், நயினார்கோவில் சிவக்குமார் உள்பட கலந்து கொண்டனர்.
- பரமக்குடியில் தொழில் பழகுநர் தேர்வு முகாம் வருகிற 10-ந்தேதி நடக்கிறது.
- 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தவர்கள், பட்டயம் பட்டதாரி மாணவர்கள் அனைவரும் நேரடியாக கலந்துகொண்டு பயன்பெறலாம்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அரசு தொழில் பயிற்சி நிலைய வளாகத்தில் பிரதமரின் தேசிய தொழில் பழகுபவர் பயிற்சிக்குரிய தேர்வு முகாம் வருகிற 10-ந்தேதி காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரையில் நடைபெறுகிறது. இந்த முகாமில் 5-க்கும் மேற்பட்ட அரசு நிறுவனங்கள் (தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், தமிழ்நாடு மின்சார வாரியம், வழுதூர் இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிறுவனம்,தமிழ்நாடு அரசு உப்பு உற்பத்தி கழகம்,தமிழ்நாடு அரசு பணிமனை) மற்றும் 50-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் நேரடியாக தொழில் பழகுநர் பயிற்சிக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.
இதில் ஐ.டி.ஐ-யில் என்.சி.வி.டி,எஸ்.சி.வி.டி பயிற்சி முடித்த வர்கள் 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தவர்கள், பட்டயம் பட்டதாரி மாணவர்கள் அனைவரும் நேரடியாக கலந்துகொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பங்குனி உத்திர திருவிழாவில் தி.மு.க.வினர் அன்னதானம் வழங்கினர்.
- நகர்மன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரத்தில் பங்குனி உத்தர திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம், பழச்சாறு மற்றும் மோர் வழங்கும் நிகழ்ச்சி தி.மு.க. சார்பில் நடந்தது. மாவட்ட செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ.யின் அறிவுரையின்படி நடந்த இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. செயற்குழு உறுப்பினர் குணசேகரன், அவரது மகன் அருண் குணசேகரன், ராமநாதபுரம் கார்மேகம், நகர்மன்ற துணைத்தலைவர் பிரவீன் தங்கம், முன்னாள் நகர்மன்ற தலைவர் ஜெகநாதன், முன்னாள் நகரச்செயலாளர் மங்களேஸ்வரன், தகவல் தொழில்நுட்ப அணி பழ.பிரதீப் பழனிவேல், நகர்மன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- மாணவர்களின் இடைநிற்றலை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் அறிவுறுத்தினார்.
- ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பள்ளி கல்வித்துறை மூலம் மேற்கொள்ளப்பட்ட, மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அவர் பேசும்போது கூறியதாவது:-
பள்ளி ஆசிரியர்கள் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே மாணவர்கள் யாரேனும் இடையில் நின்று விடுகிறார்களா? என கண்காணிக்க வேண்டும். அவ்வாறு மாணவர் யாரே னும் தொடர்ந்து வருகை தராமல் இருந்தால் அதற்கான காரணத்தை கண்டறிந்து அந்த மாண வரின் படிப்பை தொடர உறுதுணையாக இருக்க வேண்டும். இடைநிற்றலை தவிர்க்க தேவையான இடங்களில் உண்டு உறைவிட பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. மேலும் இல்லம் தேடி கல்வி எனும் திட்டத்தின் மூலம் மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த ஒவ்வொரு நாளும் மாலை நேரங்களில் ஆசிரியர்கள் மூலம் சிறப்பு வகுப்புகள் எடுக்கப்படுகின்றன.
அனைத்து அரசு பள்ளிகளிலும் தொடக்கத்தில் வருகை தந்த மாணவ -மாணவிகள் முழு ஆண்டு தேர்வு முடியும் வரை வருகை தருவதை ஆசிரியர்கள் உறுதிப்படுத்த வேண்டும். இதே போல பள்ளிக்குத் தேவையான உட் கட்டமைப்பு வசதிகளை ஒவ்வொரு ஆண்டும் தேவைக்கேற்ப விரிவுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் பள்ளி வளாகத்தில் பயன்பாடற்ற பழைய கட்டிடங்கள் இருந்தால் உடனடியாக அகற்றிட வேண்டும்.
குடிநீர் வசதி, கழிப்பறை கட்டிடங்கள் போதிய அளவு அமைத்திட வேண்டும். மேலும் தேர்வு குறித்த அச்சத்தை போக்கி மாண வர்களை ஊக்கப்படுத்தி தேர்வுகளை மகிழ்ச்சியோடு எதிர்கொள்ள ஆசிரியர்கள் துணையாக இருக்க வேண்டும்
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் பாலு முத்து, மாவட்ட கல்வி அலுவலர்கள் சுதாகர், பிரின்ஸ், முருகவேல், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் கணேசன் பாண்டி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
- சாட்டிலைட் போனின் சிக்னல் பாம்பன் அக்காள்மடம் பகுதியில் கிடைத்தது.
- இலங்கையை சேர்ந்தவரின் சாட்டிலைட் போன் எப்படி கிடைத்தது? என்று ஜான்பாலிடம் விசாரணை நடத்தப்பட்டது.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் குந்துகால் பகுதியில் ஒருவர் அனுமதியின்றி சார்டிலைட் போனை பயன்படுத்தி வருவதாக சென்னை டி.ஜி.பி. அலுவலகத்துக்கு ரகசிய தகவல் வந்தது. இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பாம்பன் பகுதியில் சார்டிலைட் போனை பயன்படுத்திவரும் நபரை கண்டுபிடித்து கைது செய்ய அவர் உத்தரவிட்டார். போலீஸ் சூப்பிரண்டு உத்தரவை அடுத்து சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் பாம்பன் குந்துகால் பகுதியில் சோதனை நடத்தினர்.
மேலும் சாட்டிலைட் போன் செயல்பாடு குறித்து கண்காணித்தனர். அப்போது சாட்டிலைட் போனின் சிக்னல் பாம்பன் அக்காள்மடம் பகுதியில் கிடைத்தது. அதனடிப்படையில் அந்த பகுதியில் போலீசார் சோதனை நடத்தினார்கள்.
அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமாக நின்ற ஒரு வாலிபரை பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர், பாம்பன் புயல் காப்பகம் பகுதியை சேர்ந்த ஜான்பால்(வயது25) என்பதும், அவர் வைத்திருந்த சாட்டிலைட் இலங்கையை சேர்ந்த சுந்தரசெல்வம் என்பவருடையது என்பதும் தெரியவந்தது.
இலங்கையை சேர்ந்தவரின் சாட்டிலைட் போன் எப்படி கிடைத்தது? என்று ஜான்பாலிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது பாம்பன் குந்துகால் பகுதியில் கிடந்த ஒரு பையில் ஒருவரது இலங்கை குடியுரிமை அடையாள அட்டை, இலங்கை பணம் ரூ.10ஆயிரம் மற்றும் சார்டிலைட் போன் ஆகியவை இருந்ததாகவும், அதனை தான் வைத்துக்கொண்டதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
சார்டிலைட் போனை சிறப்பு அனுமதி பெற்றவர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். மற்ற யாரும் பயன்படுத்த அனுமதி கிடையாது. இருந்தபோதிலும் சட்டவிரோதமாக கடத்தல்காரர்கள் மற்றும் பயங்கரவாதிகள் பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் ஜான்பால் சாட்டிலைட் போனுடன் சிக்கியிருக்கிறார்.
அவர் கூறியபடி கீழே கிடந்த பையில் இருந்துதான் சாட்டிலைட் போன் உள்ளிட்டவைகளை எடுத்தாரா? அல்லது அவருக்கு ஏதேனும் பயங்கரவாத கும்பலுடன் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் ஜான்பாலிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது.
முதற்கட்டமாக அனுமதியின்றி சார்டிலைட் போனை பயன்படுத்திய குற்றத்துக்காக ஜான்பாலை போலீசார் கைது செய்தனர்.
மேலும் சாட்டிலைட் போன் உரிமையாளரான இலங்கையை சேர்ந்த சுந்தர செல்வத்துக்கும், ஜால்பாலுக்கும் தொடர்பு உள்ளதா? அதனை மறைப்பதற்காக கீழே கிடந்தது என்று கூறுகிறாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இலங்கையை சேர்ந்தவரின் சார்டிலைட் போனுடன் பாம்பன் வாலிபர் சிக்கியுள்ள சம்பவம் ராமேசுவரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தனுஷ்கோடி கடற்கரையில் எலும்புக்கூடாக கிடந்த பெண் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மேலும் இது தொடர்பான உண்மை நிலையை அறிவதற்காக பெண் எலும்பு கூட்டை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
ராமேசுவரம்
ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி தெற்கு கடற்கரை பகுதியில் ஒரு மனித எலும்புக்கூடு கிடப்பதாக தனுஷ்கோடி போலீசுக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு கிடந்த எலும்பு கூடை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் அந்த எலும்புக்கூடு ஒரு பெண்ணின் எலும்புக்கூடு என்று தெரியவந்தது.
அந்த எலும்புக்கூடு எந்த பெண்ணின் எலும்புக்கூடு? என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்தப் பெண் எப்படி இறந்தார்? அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவரது சாவில் மர்மம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இது தொடர்பான உண்மை நிலையை அறிவதற்காக பெண் எலும்பு கூட்டை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் ராமேசுவரம் பகுதியை சேர்ந்த பெண்கள் யாரேனும் மாயமாகி உள்ளார்களா? யாரேனும் கடலில் குளித்து தற்கொலை செய்து கொண்டார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடந்தி வருகின்றனர்.






