search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
    X

    பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. செயலாளர் தேனிஅக்கிம் கோரிக்கை விடுத்தனர்.
    • புதிய பஸ் நிலையத்தை நகரின் வெளியே அமைப்பது சாலச்சிறந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பா.ம.க. செயலா ளர் தேனிஅக்கிம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    ராமநாதபுரம் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்துவதாக சட்ட சபையில்அறிவித்த அமைச்சர் கே.என். நேருவுக்கும், தமிழக அரசுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ராமநாதபுரம் பஸ் நிலையத்தை விரிவாக்கம் மற்றும் புதிய கட்டிடம் கட்டுவதற்கு ரூ.20 கோடியை நகராட்சி நிர்வாகம் ஒதுக்கி உள்ளது. ராமநாதபுரத்தில் பஸ் நிலையம் வரும் முக்கிய சாலைகளில் இருக்கும் தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு மருத்துவமனை, அரசு நிறுவனங்கள் என பல நிறுவனங்கள் உள்ளன.

    தனியார் நிறுவனங்கள் பல இந்த சாலையை ஆக்கிரமித்து புதிய கட்டிடங்கள் கட்டி வருகிறது. அதனை ஒழுங்குபடுத்தாத நகராட்சி நிர்வாகம் இப்போது இருக்கும் பஸ் நிலைய விரிவாக்கத்திற்கு ரூ.20 கோடி ஒதுக்கி இருப்பது மக்களின் வரிப் பணத்தை வீணடிப்பது போன்றுள்ளது.

    ராமநாதபுரத்தில் எந்த முக்கிய சாலையிலும் ஆக்கி ரமிப்புகள் அகற்றப்ப டவில்லை. மேலும் சாலைகள் விரிவுபடுத் தப்படவில்லை. அவசரத்திற்கு நோயாளிகளை ஏற்றி வரும் ஆம்புலன்சு வாகனங்கள் செல்ல வழி இல்லாமல் பல உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.

    ஆக்கிரமிப்பால் பொது மக்களுக்கு பல இன்னல்கள் ஏற்பட்டு வருகிறது. போக்கு வரத்துக் காவல் துறைக்கும், வாகன ஓட்டிகளுக்கும் தினமும் பிரச்சினை மேல் பிரச்சினை வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

    இப்போது இருக்கும் பஸ் நிலைய பகுதியில் விரிவாக்கம் என்ற நிலையில் புதிய பஸ் நிலையம் அமைக்க முற்பட்டால் நகரின் உள்ளே அதிகமான பஸ்கள் மற்றும் வாகனங்கள் வர வாய்ப்புள்ளது. அப்படி வாகனங்கள் வந்தால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும்.

    மேலும் பஸ் நிலையம் அருகே உள்ள வார சந்தையை மட்டும் எடுத்துக் கொண்டால் போக்கு வரத்திற்கு உகந்த சாலை வசதிகள் செய்யப்படாமல் பெரிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டால் அது சில வருடங்களிலே உபயோக மற்றதாகிவிடும்.

    ராமநாதபுரத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்த பழைய பஸ் நிலையம் இப்போது எதற்கும் உபயோகப்படாமல் உள்ளது போல் புதிய பஸ் நிலையமும் மாறிவிடும். முதல்வர் இதனை கருத்தில் கொண்டு அவசர கதியில் செய்யாமல் இன்னும் காலம் எடுத்து மிகச்சிறந்த முறையில் பெரிய நகரை விட்டு வெளியே ஒருங்கிணைந்த பெரியளவில் பஸ் நிலையம் அமைக்க முடிவு எடுக்க வேண்டும்.

    இப்போதிருக்கும் புதிய பஸ் நிலையம் நகர போக்குவரத்துக்கு மட்டும் வந்து செல்லும் பஸ் நிலையமாக மாற்றப்பட வேண்டும். இதையே விரிவுபடுத்தி பஸ் நிலையம் அமைக்கும்போது வாகனங்களின் இப்போதைய நிலை சில ஆண்டுகளில் எந்த அளவுக்கு அதிகமாகும் என்பதனை கருத்தில் கொண்டு ஒருங்கிணைந்த புதிய பஸ் நிலையத்தை நகரின் வெளியே அமைப்பது சாலச்சிறந்தது.

    இதுகுறித்து முதல்வர் சிறந்த முடிவு எடுத்து அறிவிக்க வேண்டும் என்பதே ராமநாதபுரம் மாவட்ட பொதுமக்கள் மற்றும் பா.ம.க. நிர்வாகி களின் ஒருமித்த கருத்தாக உள்ளது. இதையெல்லாம் தவிர்த்து இப்போது இருக்கும் புதிய பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்தே ஆக வேண்டும் என்று நினைத்தால் இது விழலுக்கு இறைத்த நீர் போல ஆகிவிடும்.

    மக்களின் வரிப்பணம் ரூ.20 கோடியை முறையான வழியில் செலவு செய்ய வேண்டும். வீண் விரயம் செய்ய கூடாது என்பதை நன்கறிந்த முதல்வர் இதனை உடனே தடுத்து நிறுத்தி செம்மைப்படுத்தி நகரத்துக்கு வெளியே பஸ் நிலையம் உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×