search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவர்களின் இடைநிற்றலை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்-கலெக்டர் அறிவுறுத்தல்
    X

    கலெக்டர் அலுவலகத்தில் பள்ளி கல்வித்துறை ஆய்வு கூட்டம் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் நடந்தது.

    மாணவர்களின் இடைநிற்றலை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்-கலெக்டர் அறிவுறுத்தல்

    • மாணவர்களின் இடைநிற்றலை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் அறிவுறுத்தினார்.
    • ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பள்ளி கல்வித்துறை மூலம் மேற்கொள்ளப்பட்ட, மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அவர் பேசும்போது கூறியதாவது:-

    பள்ளி ஆசிரியர்கள் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே மாணவர்கள் யாரேனும் இடையில் நின்று விடுகிறார்களா? என கண்காணிக்க வேண்டும். அவ்வாறு மாணவர் யாரே னும் தொடர்ந்து வருகை தராமல் இருந்தால் அதற்கான காரணத்தை கண்டறிந்து அந்த மாண வரின் படிப்பை தொடர உறுதுணையாக இருக்க வேண்டும். இடைநிற்றலை தவிர்க்க தேவையான இடங்களில் உண்டு உறைவிட பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. மேலும் இல்லம் தேடி கல்வி எனும் திட்டத்தின் மூலம் மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த ஒவ்வொரு நாளும் மாலை நேரங்களில் ஆசிரியர்கள் மூலம் சிறப்பு வகுப்புகள் எடுக்கப்படுகின்றன.

    அனைத்து அரசு பள்ளிகளிலும் தொடக்கத்தில் வருகை தந்த மாணவ -மாணவிகள் முழு ஆண்டு தேர்வு முடியும் வரை வருகை தருவதை ஆசிரியர்கள் உறுதிப்படுத்த வேண்டும். இதே போல பள்ளிக்குத் தேவையான உட் கட்டமைப்பு வசதிகளை ஒவ்வொரு ஆண்டும் தேவைக்கேற்ப விரிவுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் பள்ளி வளாகத்தில் பயன்பாடற்ற பழைய கட்டிடங்கள் இருந்தால் உடனடியாக அகற்றிட வேண்டும்.

    குடிநீர் வசதி, கழிப்பறை கட்டிடங்கள் போதிய அளவு அமைத்திட வேண்டும். மேலும் தேர்வு குறித்த அச்சத்தை போக்கி மாண வர்களை ஊக்கப்படுத்தி தேர்வுகளை மகிழ்ச்சியோடு எதிர்கொள்ள ஆசிரியர்கள் துணையாக இருக்க வேண்டும்

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் பாலு முத்து, மாவட்ட கல்வி அலுவலர்கள் சுதாகர், பிரின்ஸ், முருகவேல், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் கணேசன் பாண்டி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×