என் மலர்
ராமநாதபுரம்
- உலக செவிலியர் தின விருது வழங்கப்பட்டது.
- செவிலியர் வீராம்மாள் நன்றி கூறினார்.
ராமநாதபுரம்
உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் முகவை தாய்ப்பாசம் அறக்கட்டளை சார்பில் கொரோனா நோய்த்தொற்று காலங்களில் பங்காற்றிய செவிலியர்களை கவுரவிக்கும் வகையில் அப்துல்லா விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அறக்கட்டளை நிறுவனர் பாதுஷா நூருல் சமது தலைமை தாங்கினார். செவிலியர் ராஜசேகரன் வரவேற்றார். மருத்துவர் கண்ணகி முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக செய்யதம்மாள் அறக்கட்டளை தலைவர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா கலந்து கொண்டு விருதுகள் வழங்கினார். செவிலியர் கண்காணிப்பாளர் சரளா, இந்திராகாந்தி ஆகியோர் ஒருங்கிணைத்தனர். செவிலியர் வீராம்மாள் நன்றி கூறினார்.
- பிளஸ்-2 தேர்வில் கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி முதலிடம் பெற்றது.
- தாளாளர் ஷாஜகான் தலைமை தாங்கினார்.
பரமக்குடி
பிளஸ்-2 பொது தேர்வில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி கே.ஜே.கீழ முஸ்லீம் மேல்நிலைப்பள்ளி 99 சதவீத தேர்ச்சி பெற்று நகரில் முதலிடத்தை பெற்றது. இந்த பள்ளி மாணவி தீபிகா முதலிடத்தையும், சபிதா 2-ம் இடத்தையும், கோபிகா 3-ம் இடத்தையும் பெற்றனர். விலங்கியல் பாடத்தில் தீபிகா 100 மதிப்பெண்ணும், கணக்கியல் பாடத்தில் மாணவி கோபிகா 100 மதிப்பெண்ணும் பெற்றனர்.
இவர்களுக்கு பள்ளியின் சார்பில் பாராட்டு விழா நடந்தது. தாளாளர் ஷாஜகான் தலைமை தாங்கினார். கீழ முஸ்லிம் ஜமாத் சபை தலைவர் சாகுல் ஹமீது, செயலர் சாதிக் அலி, பொருளாளர் லியாகத் அலி மற்றும் கல்விக்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் அஜ்மல் கான் வரவேற்றார். முதல் 3 இடங்களை பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு பரிசும், 100 மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு சிறப்பு பரிசும் வழங்கப்பட்டன. உதவி தலைமை ஆசிரியர் புரோஸ்கான் நன்றி கூறினார்.
- தேவிபட்டினம் இலங்கம்மன் காளி கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
- அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் காந்திநகர் கிராமத்தில் இலங்கம்மன் காளி கோவில் உள்ளது. இந்த கோவில் ஜீரணோத்தாரண அஷ்ட பந்தன கும்பாபிஷேக விழா கணபதி ஹோமத்துடன் இன்று தொடங்கியது.
வேத விற்பன்னர்கள் மந்திரம் முழங்க புனித நீர் அடங்கிய கலசத்திற்கு பூஜை நடைபெற்று கடம் புறப்பாடாகி கோவிலை 3 முறை வலம் வந்து கும்பத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
பின்னர் அம்மனுக்கு அபிஷேகம் செய்து சிறப்பு தீபாராதனைக்கு பின் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை தேவிபட்டினம் காந்திநகர் கிராம மக்கள் செய்திருந்தனர்.
- பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
- ஆசிரியர்கள் பாராட்டி பரிசு வழங்கினர்.
பரமக்குடி
பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் ராமநாதபுரம் பரமக்குடி ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவி லக்சிதா ஸ்ரீ 579 மதிப்பெண்களும், மாணவர்கள் அதீஸ்வரன் 576 மதிப்பெண்களும், பாலாஜி 571 மதிப்பெண்களும் பெற்றனர்.
அதேபோல் தரணி என்ற மாணவி பொருளியல், கணக்குப்பதிவியல் ஆகிய படங்களில் தலா 100 மதிப்பெண்களும், மாணவன் பிரவீன் பாண்டி வணிகவியல், வரலாறு ஆகிய பாடங்களில் தலா 100 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். தனுஸ்ரீ என்ற மாணவி கணிப் பொறியியல் பாடத்தில் 100 மதிப்பெண்களும், மாணவி துர்கா கணிப்பொறியியல் பாடத்தில் 100 மதிப்பெண்களும், மாணவன் இந்திரஜித் தாவரவியல் பாடத்தில் 100 மதிப்பெண்களும், மாணவி பிரியா வணிகவியல் பாடத்தில் 100 மதிப்பெண்களும் பெற்றனர்.
இந்த மாணவ-மாணவிகளை பள்ளியின் கல்வி குழு தலைவர் ராசி போஸ், இணைத்தலைவர் பாலுசாமி, பள்ளியின் தாளாளர் லெனின் குமார், ஆயிர சபை செயலாளர் செல்வராஜ், கவுரவ செயலாளர் வக்கீல் செந்தில்குமார், தலைமை ஆசிரியர் ஜஸ்டின் ஞானசேகர், உதவி தலைமை ஆசிரியை சுமதி, கல்விக்குழு உறுப்பினர்கள் சுதர்சன், பூபாலன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி பரிசு வழங்கினர்.
- ஆர். எஸ். மங்கலம் அருகே நடந்த மக்கள் தொடர்பு முகாமில் ரூ. 26 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வழங்கினார்.
- அரசின் நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் அருகே உள்ள புல்லமடை ஊராட்சி தெற்கனேந்தல் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் கலந்து கொண்டு பல்வேறு துறைகளின் சார்பில் 141 பயனாளிகளுக்கு ரூ.26.14 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து 126 கோரிக்கை மனுக்களை கலெக்டர் பெற்றுக் கொண்டார்.
முகாமில் கலெக்டர் பேசியதாவது:-
மக்கள் தொடர்பு முகாம் நடைபெறும் கிராமத்தில் ஒரு மாதத்திற்கு முன்பாக அரசின் அனைத்துத் துறைகளின் அலுவலர்கள் சம்மந்தப்பட்ட கிராமத்தில் முகாமிட்டு அக்கிராம மக்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுவினை நேரடியாக பெறுவார்கள். மக்களைத் தேடி வந்து மனுக்களை மட்டும் பெறாமல் மனுக்கள் மீதான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. தீர்வு காணப்பட்ட மனுக்க ளுக்கு அரசின் நலத்திட்டங் கள் வழங்கப்படுகின்றன.
மக்கள் தொடர்பு முகாமில் அனைத்து துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் அரசின் திட்டங்களை அறிந்து கொண்டு பயன் பெறலாம்.
பொதுமக்கள் முன்வைத்த கோரிக்கையான குடிநீர் வசதி முழுமையான அளவு வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் சாலை வசதிகள் தேவைக்கேற்ப அமைக்கப்பட்டு வருகிறது. எனவே தனிநபர் பொரு ளாதர முன்னேற்றத்திற்கு அரசு எண்ணற்ற திட்டங்களை வழங்கி வருகிறது. அதை தகுதியுடையோர் பெற்று பயனடைய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் உதவி கலெக்டர் (பயிற்சி) நாராயணசர்மா, வருவாய் கோட்டாட்சியர் கோபு, தனித்துணை கலெக்டர் மாரிச்செல்வி, ஆர்.எஸ்.மங்கலம் வட்டாட்சியர் சிரோன்மணி, ஊராட்சி மன்றத்தலை வர்கள் கனிமொழி (புல்ல மடை), ஜெயபாரதி (சனவேலி), பூபதி (காவண கோட்டை) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- போலீசார் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- சாக்கு மூட்டைகளில் 250 கிலோ தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் கடத்தி செல்வதற்கு பதுக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்டு கைப்பற்றப்பட்டது.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி, வேதாளை, பாம்பன், மண்டபம் உள்ளிட்ட கடல்பகுதிகள் இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால் சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக நாட்டுப் படகுகளில் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடல் அட்டை, சமையல் மஞ்சள், கடல் பல்லி, கஞ்சா உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட பொருட்கள் கடத்தி செல்வது அதிகரித்துள்ளது.
மேலும் இலங்கையில் இருந்து கடல் வழியாக தமிழகத்திற்கு தங்கம் கடத்திவரப்படுவதால் இந்திய-இலங்கை சர்வதேச கடல் எல்லையில் இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல் படை போலீசார் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மண்டபம் அடுத்த வேதாளை-அரியமான் இடையே வடக்கு கடற்கரை பகுதியில் கடலோர இந்திய கடலோர காவல் படையினர் ரோந்து சென்றனர். அப்போது கடற்கரை ஓரமாக கிடந்த சாக்கு மூட்டைகளை பிரித்து சோதனை செய்தனர். இதில் சாக்கு மூட்டைகளில் 250 கிலோ தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் கடத்தி செல்வதற்கு பதுக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்டு கைப்பற்றப்பட்டது.
இதனையடுத்து கடல் அட்டைகளை பறிமுதல் செய்த இந்திய கடலோர காவல் படையினர் அதனை மண்டபம் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
இதேபோல் ராமேசுவரம் சேராங்கோட்டை கடற்கரை பகுதியில் சாக்கு மூட்டைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 200 கிலோ கடல் அட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
- பாம்பன், ராமேசுவரம் துறைமுகத்தில் அலைகள் பனைமரம் அளவுக்கு எழுந்தன.
- கடல் சீற்றம் காரணமாக இன்று ராமேசுவரம், பாம்பனில் குறைந்த அளவு நாட்டு படகு மீனவர்களே மீன்பிடிக்க சென்றனர்.
ராமேசுவரம்:
தமிழகத்தில் தென்கிழக்கு வங்கக்கடல், அதனை ஒட்டியுள்ள தெற்கு அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று புயலாக வலுபெறக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக ராமேசுவரம், பாம்பன் மற்றும் அதனை சுற்றியுள்ள கடல் பகுதிகளில் நேற்று இரவு முதல் வழக்கத்தை விட காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது. பாம்பன், ராமேசுவரம் துறைமுகத்தில் அலைகள் பனைமரம் அளவுக்கு எழுந்தன.
இன்று காலையும் இதே நிலை நீடித்தது. காற்றின் தீவிரம் காரணமாக கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. இதையடுத்து இன்று காலை மீனவர்களுக்கு அறிவுறுத்தும் வகையில் பாம்பன் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. கடல் சீற்றம் காரணமாக இன்று ராமேசுவரம், பாம்பனில் குறைந்த அளவு நாட்டு படகு மீனவர்களே மீன்பிடிக்க சென்றனர்.
இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாக உள்ளதால் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. ஆழ்கடல் பகுதியில் காற்றின் தீவிரம் அதிகமாக இருப்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனர்.
- வீட்டுமனை பட்டாக்களை முறைகேடு செய்து விற்கப்படுகிறது.
- பட்டாக்கள் மீதான ஒப்படைப்பு ஆணையை ரத்து செய்ய வேண்டும்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டம் காஞ்சிரங்குடி பகுதியில் ஆதிதிராவிட பயனாளிகளுக்கு 1995-ம் ஆண்டில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. தற்போது அது தொடர்பான ஆணைகளில் திருத்தம் செய்ய வேண்டி இருப்பதாகவும், அதற்காக தாசில்தார் அவற்றைக் கேட்பதாகவும் கூறி, சில தனிநபர்கள் பட்டாக்களை பயனாளிகளிடம் வாங்கிச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் அந்த நபர்கள் பட்டா ஆவணங்களை வைத்துக் கொண்டு சம்பந்தப்பட்ட இடங்களை வேலி அமைத்து ஆக்கிரமித்து வருவதாகவும், போலி ஆவணங்கள் தயாரித்து அந்த இடங்களை விற்பனை செய்து வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி மீட்டுத்தர வேண்டும் என காஞ்சிரங்குடி காலனி கிராமத்தை சேர்ந்தவர்கள் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீசிடம் மனு அளித்தனர்.
அதில், கடந்த 1995-ம் ஆண்டு பட்டாக்கள் வழங்கப்பட்ட பயனாளிகளுக்கு இ-பட்டா வழங்க வேண்டும் என்றும், புதிதாக வழங்கப்பட்டுள்ள பட்டாக்கள் மீதான ஒப்படைப்பு ஆணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அனைத்து பகுதிகளுக்கும் காவிரி கூட்டுக்குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஊராட்சி தலைவர்களுக்கு கலெக்டர் வலியுறுத்தினார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ராமநாதபுரம் மற்றும் மண்டபம் ஊராட்சிகளுக்கு உட்பட்ட 53 ஊராட்சி மன்றத்தலை வர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் கலந்து கொண்டு பேசியதாவது:-
பொதுமக்களுக்கு அத்தியாவசிய தேவையான தண்ணீர் தேவையை நிறைவேற்றுவது ஒவ்வொருவரின் கடமையாகும். அந்த வகையில் ஒவ்வொரு ஊராட்சியிலும் மக்கள் தொகைக்கு ஏற்ப போதியளவு தண்ணீர் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்திலிருந்து வழங்க இயலாத சூழ்நிலை தற்பொழுது உள்ளது. அதை மாற்றி அனைத்து பகுதிகளுக்கும் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து தண்ணீர் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
குடிநீர் திட்ட பணிகள் மேற்கொள்ளும் பொழுது அனைத்து பகுதிகளுக்கும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் 2054-ஆம் ஆண்டு வரை பொதுமக்களுக்கு தேவையான தண்ணீர் வழங்கிடும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே தற்பொழுது உள்ள நிலையை சரியாக மதிப்பிட்டு படிவத்தை பூர்த்தி செய்து வருங்கால சந்ததியினருக்கு தடையின்றி குடி தண்ணீர் கிடைத்திட உறுதுணையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் பிரவீன்குமார், உதவி கலெக்டர் நாராயண சர்மா, ஊராட்சிகள் உதவி இயக்குநர் பரமசிவம் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
- சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
- மாவட்ட பிரதிநிதி அமீர் ஹம்சா நன்றி கூறினார்.
சாயல்குடி
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி தி.மு.க. கிழக்கு ஒன்றியம் சார்பில் ஏர்வாடி பகுதியில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் குலாம்முகைதீன் தலைமை தாங்கினார். சாயல்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயபாலன், கடலாடி வடக்கு ஒன்றிய செயலாளர் ஆப்பனூர் ஆறுமுகவேல், ஒன்றிய கவுன்சிலர் பிச்சை, சாயல்குடி நீர் பாசன சங்கத் தலைவர் ராஜாராம், ஊராட்சி தலைவர்கள் மங்களசாமி, தென்னரசி செல்ல பாண்டியன், ஒன்றிய பொருளாளர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். ஏர்வாடி பாலமுருகன் வரவேற்றார். தலைமைக்கழக பேச்சாளர்களான சிவகங்கை மாவட்ட அவைத் தலைவர் கணேசன், சாத்தங்குடி வில்வலிங்கம், மாநில விவசாய அணி துணைச் செயலாளர் கணேசன் ஆகியோர் பேசினர்.
முன்னாள் ஒன்றிய பிரதிநிதி நாகேந்திரன், சாயல்குடி நகர இளைஞரணி செயலாளர் விக்னேஷ் ராம், முன்னாள் ஊராட்சித் தலைவர்கள் வஹிதாசகுபர், இளங்கோவன், முன்னாள் சாயல்குடி பேரூராட்சி துணை சேர்மன் காமராஜ், முன்னாள் மாவட்ட பிரதிநிதி ராஜேந்திரன், ஒன்றிய துணைச் செயலாளர்கள் ஜலில், பழனிச்சாமி, பொன்னுத்தாய் பாண்டி, மாவட்ட பிரதிநிதி ஜெயபாலன், கிளை செயலாளர் ஏர்வாடி காதர்பாட்சா, மாரியூர் காசி, வாலிநோக்கம் சகுபர், மேலகிடாரம் குமாரராஜா, காவாகுளம் முருகேசன், கீழக் கிடாரம் முத்துகிருஷ்ணன், செய்யது அபுதாஹிர், ஒப்பிலான் செய்யது இப்ராஹிம், மேலமுந்தல் சண்முகம், சாயல்குடி குருசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாவட்ட பிரதிநிதி அமீர் ஹம்சா நன்றி கூறினார்.
- தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது.
- இதில் தி.மு.க. கிளைச் செயலாளர், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரத்தை அடுத்த அச்சுந்தன் வயல் கிராமத்தில் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் நாகலிங்கம் தலைமையில் தமிழக அரசின் சாதனை 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. ஈஸ்வரி கருப்பையா, கருப்பையா, பரமேசுவரன் அனீஸ் பாத்திமா, பாலசுப்பிரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி மன்ற தலைவரும், கிளைச் செயலாளருமான லிங்கம் சசிகலா வரவேற்றார். முன்னாள் மதுரை மாநகராட்சி மேயர்- தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் குழந்தைவேலு சிறப்புரையாற்றினார்.
இதில் தி.மு.க. கிளைச் செயலாளர், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- தி.மு.க. சார்பில் மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
- வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
பசும்பொன்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பெருநாழியில் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் மனோகரன் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் காந்தி முன்னிலை வகித்தார். தலைமை கழக பேச்சாளர் ரவிச்சந்திர ராமவன்னி சிறப்புரையாற்றினார்.
வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன், மத்திய ஒன்றிய செயலாளர் சண்முகநாதன், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தமிழ்ச்செல்விபோஸ், ஒன்றிய துணைச் செயலாளர்கள் முருகன், உதயகுமார், ஆதிமுத்து, ஒன்றிய பொருளாளர் கந்தசாமி, மாவட்ட பிரதிநிதிகள் கிருஷ்ணசாமி, ராமசாமி, போஸ், நெசவாளரணி மாரிச்சாமி, செந்தூரான், செந்தூர்பாண்டி, கலைஞர் பகுத்தறிவு பாசறை முனியசாமி, பொதுக்குழு உறுப்பினர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கிளைச் செயலாளர் மன்சூர் அலிகான் வரவேற்றார். ஒன்றிய பிரதிநிதி சண்முகவேல் நன்றி கூறினார். இதையொட்டி பெருநாழியில் இருந்து அருப்புக்கோட்டை சாலையில் மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.






