என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • போட்டி தேர்வர்களுக்கான பயிற்சி வகுப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
    • ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வேலைநாடும் இளைஞர்கள் படித்து பயன்பெறும் வகையில் தன்னார்வ பயிலும் வட்டம் இயங்கி வருகிறது.

    இத்தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு வகையான போட்டித்தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    தற்போது தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ள சார்பு ஆய்வாளர் பணிக்காலியிட அறிவிக்கை வெளியிடப்பட்டு 615 பணிக்காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த தேர்விற்கு விண்ணப்பதாரர்கள் www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக 1.6.2023 முதல் 30.6.2023 வரை விண்ணப்பித்துக்கொள்ளலாம். இதற்கான தேர்வுகட்டணம் ரூ.500- ஆகும்.

    இந்த போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக 17.5.2023 முதல் தொடங்கப்பட உள்ளது.

    இதில் கலந்து கொள்ள தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தொலைபேசி எண் 04567-230160 வாயிலாகவும் அல்லது 78670 80168 என்ற அலைபேசிக்கு வாட்ஸ்-அப் வாயிலாகவோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தினை நேரடியாகவோ தொடர்பு கொண்டு பங்கேற்கலாம்.

    மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்

    • மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் மாணவிகளுக்கு உணவு வழங்கப்பட்டது.
    • அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

    பனைக்குளம்

    அ.தி.மு.க. பொதுச்செய லாளர் எடப்பாடி பழனிசாமி பிறந்த தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் எம்.ஏ. முனியசாமி அறிவுரை யின்படி மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய கவுன்சிலருமான ஆர்.ஜி.மருதுபாண்டியன் இதற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

    முதல் கட்டமாக மண்டபம் மேற்கு ஒன்றியம் பட்டணம் காத்தான் முதல் நிலை ஊராட்சி பகுதிகளில் கட்சி நிர்வாகிகள் முன்னி லையில் அ.தி.மு.க கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கினர். இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைந்திட வேண்டியும், எடப்பாடி பழனிசசாமி நீண்ட ஆயுள் காலம் வாழ்ந்திட வேண்டியும் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது.

    இதைத்தொடர்ந்து வாலாந்தரவை கிராமத்தில் உள்ள செஸ்ட் ஏஞ்சலின் மன வளர்ச்சி குன்றியோர் பள்ளியில் உள்ள குழந்தை களுடன் ஒன்றிணைந்து அ.தி.மு.க. நிர்வாகிகள் முன்னிலையில் பிறந்தநாள் கேக் வெட்டப்பட்டு குழந்தைகளுக்கு வழங்கப்பட்டன. இதைத்தொடர்ந்து மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி ஒன்றிய செயலாளர் ஆர்.ஜி.மருது பாண்டியன் தலைமையில் நடந்தது.

    இதில் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர்கள் ராஜேந்திரன், பாரதி நகர் மாரியப்பன், முன்னாள் அரசு வழக்கறிஞர் கருணா கரன், ஜெயலலிதா பேரவை மாவட்ட இணை செயலாளர் ஜெய கார்த்திகேயன், இளைஞரணி துணை செயலாளர் சுமன், ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் கோபால், பிரதிநிதி முருகேசன், சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளர் அன்வர் அலி, முன்னாள் ஒன்றிய துணைச் செய லாளர் சண்முகவேல், ஒன்றிய மாணவரணி தலைவர் பரமகுரு, நகர் மாணவர் அணி செயலாளர் காளிதாஸ், ரோஸ் நகர் கிளைச்செயலாளர் கண்ணன், ஊராட்சி துணைத்தலைவர் வினோத், பாரதி நகர் இளைஞர் பாசறை செய லாளர் சுந்தர், பட்டணம் காத்தான் விக்கி உள் பட பலர் கலந்து கொண்டனர். அப்போது மாணவர்களுடன், ஒன்றிய செயலாளர் ஆர். ஜி.மருது பாண்டியன் உணவு சாப்பிட்டு மகிழ்ந்தார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மண்டபம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் செய்திருந்தனர். முடிவில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

    • ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு திருவிழா தொடங்குகிறது.
    • தர்கா ஹக்தார் நிர்வாக கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் பிரசித்தி பெற்ற மகான் குத்புல் அக்தாப் சுல்தான் செய்யது இப்ராகிம் ஷஹீது ஒலியுல்லா அடக்கமாகியுள்ளார். இந்த தர்காவில் வருடந்தோறும் உரூஸ் எனும் மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா நடைபெறும்.

    இந்த வருடம் 849-ம் ஆண்டு சந்தனக்கூடு திருவிழாவின் முதல் நிகழ்ச்சி வருகிற 21-ந்தேதி தொடங்குகிறது. அன்று முதல் தர்கா மண்டபத்தில் இருந்து ஹக்தார்களால் 23 நாட்களுக்கு புகழ்மாலை ஓதப்படும்.

    31-ந்தேதி பாதுஷா நாயகத்தின் பச்சை வர்ணக்கொடி யானை மேல் வைத்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கொடியேற்றமும், முக்கிய நிகழ்ச்சியாக உரூஸ் எனும் மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா ஜூன் 12-ந்தேதி மாலை தொடங்கி 13-ந் தேதி அதிகாலை மேளதாளங்கள் முழங்க யானைகள் அணிவகுக்க, குதிரைகள் நாட்டியமாட, சந்தனக்கூடு பவனி வர அனைத்து சமுதாயத்தினரின் அணிவகுப்புடன் புனித மக்பராவில் சந்தனம் பூசப்படும்.

    ஜூன் 19-ந்தேதி நிறைவு நிகழ்ச்சியாக அஸர் தொழுகைக்குப்பின் கொடியிறக்கம் நடைபெறும். இதனைத்தெடர்ந்து அன்று இரவு 7 மணிக்கு தப்ரூக் எனும் நெய்ச்சோறு விநியோகிக்கப்பட்டு சந்தனக்கூடு திருவிழா நிறைவு பெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை தர்கா ஹக்தார் நிர்வாக கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

    • ரூ.99¾ கோடி மதிப்பில் பிரதான கால்வாய்கள் சீரமைக்கப்படுகிறது.
    • பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பகைவென்றி ஊராட்சியில் நீர் பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் வைகை உப வடிநில ஆற்றுப்பகுதி சீர மைக்கப்பட்டுள்ளது. இதனை அரசின் கூடுதல் தலைமை செயலாளரும், திட்ட இயக்குநருமான தென்காசி ஜவகர் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தென்பகுதியான ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் அதனை ஒட்டியுள்ள சிவ கங்கை மாவட்ட உப வடிநில ஆற்றுப்பகுதிகளை சீர மைத்து பாசன பயன்பாட்டிற்கு பயன்பெறும் வகையில் கடந்த ஆண்டு ரூ99.75கோடி மதிப்பீட்டில் 59 கண்மாய்கள் மற்றும் அணைக்கட்டுகள் சீரமைக்கப்பட்டிருந்தன. அதன் மூலம் 5521.66 ஹெக்டேர் பரப்பளவு பாசனவசதி பெற்று பயன் பெற்றுள்ளார்கள்.தற்பொது வைகையாற்றில் உள்ள பார்த்திபனூர் வரும் மதகு அணைக்கு கீழ் இடது பிரதான கால்வாயின் மீதான 45 கி.மீ தூரம் மராமத்து பணிகள் மேல் மற்றும் கீழ் நாட்டார் கால்வாய் சீரமைத்தல் மற்றும் 48 தலைமதகுகளும், 13 குறுக்கு நீரொழுங்கிகள், 3 பாலங்கள், 6 கட்டுமானம் பணிகள் என ரூ53.66 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் 12639.00 ஹெக்டேர் பாசன வசதி பெறும் வகையில் இப்பணிகள் நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது வேளாண்மை மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.

    • இளம் புத்த துறவி பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
    • பிரஹ்போதி அறக்கட்டளை உறுப்பினர் பூவானி ஜான் நன்றி கூறினார்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை-கைகாட்டியை அடுத்த பூவானி கிராமத்தில் உள்ள பிரஹ் போதி புத்தஹாரில் மகாராஷ்ட்ரா மாநிலம் நாக்பூரைச் சேந்த விஜிதா மெத்தா, திருச்சியை சேர்ந்தயதின், சிவகங்கையை சேர்ந்த கனிஷ்கர், விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கவின், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த தமிழ் கோவை பிக்குனி ஆகியோர் சம்னேரா எனப்படும் இளம் புத்த துறவிக்கான பயிற்சி பெற்றனர்.

    இந்த துறவிகளுக்கு பயிற்சி நிறைவு விழா மகாராஷ்ட்ரா நாகபுரி பவுத்த துறவி பந்தே சுனிதி பிக்குனி தலைமையில் நடைபெற்றது. பிரஹ்போதி அறக்கட்டளை உறுப்பினர்கள் குமார், ரஸ்தா ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு சிறுபான்மை ஆணைய உறுப்பினர்பிக்கு மவுரியா புத்தா சான்றிதழ் வழங்கினார். புத்த பிக்கு சாக்கிய முனி வரவேற்று பேசினார்.

    டி.நாகனி பஞ்சாயத்து தலைவர் இந்திரா ராஜேந்திரன், ஓரிக்கோ ட்டை பஞ்சாயத்து தலைவர் காந்திமதி மகாலிங்கம் மற்றும் புத்த துறவிகள் கலந்து கொண்டனர். முடிவில் பிரஹ்போதி அறக்கட்டளை உறுப்பினர் பூவானி ஜான் நன்றி கூறினார்.

    • தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
    • பேச்சாளர் வில்வ சக்திநாதன், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தமிழ்செல்விபோஸ் ஆகியோர் பேசினர்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள புதுக்கோட்டையில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் சண்முகநாதன் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் கிழவராஜன், துணைச் செயலாளர் தங்கப்பாண்டி, மாவட்ட பிரதிநிதி நாகமணி முன்னிலை வகித்தனர். பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் அகமது நம்பி, பேச்சாளர் வில்வ சக்திநாதன், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தமிழ்செல்விபோஸ் ஆகியோர் பேசினர். வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன், தெற்கு ஒன்றிய செயலாளர் மனோகரன், துணை செயலாளர் அன்னமயில், நீதிராஜன், ஒன்றிய கவுன்சிலர் முத்துக்கிளி,பொருளாளர் செந்தூர்பாண்டி, மாவட்ட பிரதிநிதி முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • தி.மு.க. ஆட்சி என்பது தமிழக மக்களுக்கு பொற்கால ஆட்சி.
    • பரமக்குடியில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.

     பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம பரமக்குடி காந்தி சிலை முன்பு தெற்கு நகர தி.மு.க. சார்பில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.

    மாவட்ட செயலாளர் காதர்பாட்ஷா முத்துராம லிங்கம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நகர் மன்ற தலைவரும், தெற்கு தி.மு.க. நகர செயலாளருமான சேது கருணாநிதி வரவேற்றார்.

    இதில் அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டு பேசியதாவது:-

    கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பை ஏற்பதற்கு முன்பே கொரோனா தொற்றில் இருந்து நாட்டையும், மக்க ளையும் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக அதிகாரிகளை அழைத்து பேசி உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு கொரோனா வில் இருந்து மக்களை பாதுகாத்தவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் மக்களுக்கு அட்டவணையாக வழங்கப்பட்டுள்ளது. அந்த வாக்குறுதிகளில் 75 சதவீதத்திற்கு மேல் நிறைவேற்றப்பட்டுள்ளன. சொல்லாதவைகளையும் மக்களுக்காக செய்து வருகிறோம்.

    குறிப்பாக பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. ரூ.3 லட்சம் கோடியில் புதிய தொழில் முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளன. அதன் மூலம் 4 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல் அரசியல் சட்டத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டிருப் பவர்கள் கவர்னர் மாளி கைக்கு தன்னை வைத்துக் கொண்டு திராவிட மாடல் காலாவதி ஆகிவிட்டது என கவர்னர் கூறுகிறார். அப்படி என்றால் நாங்கள் அறிவித்து செயல்படுத்தி வரும் திட்டங்களும் காலாவதி ஆகிவிட்டதா?.

    தி.மு.க. ஆட்சி என்பது தமிழக மக்களுக்கு பொற்கால ஆட்சியாகும். எத்தனையோ திட்டங்களை மக்களுக்கு செயல்படுத்தி வருகிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் வடக்கு நகர செயலாளர் ஜீவரத்தினம், வக்கீல் பூமிநாதன், ஒன்றிய செயலாளர்கள் வக்கீல் குணசேகரன், ஜெயக்குமார், சக்தி, வக்கீல் கதிரவன், கிருஷ்ணமூர்த்தி, வாசு தேவன், அண்ணாமலை, போகலூர் ஒன்றிய குழு தலைவர் சத்யா குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சாயல்குடியில் தி.மு.க. சாதனை விளக்க கூட்டம் நடந்தது.
    • ஒன்றிய துணைச்செயலாளர்கள் லிங்கராஜ், ராணி ராஜ், பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே எஸ்.தரைக்குடி கிராமத்தில் சாயல்குடி தி.மு.க. தெற்கு ஒன்றியம் சார்பில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சாயல்குடி தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயபாலன் தலைமை தாங்கினார். சாயல்குடி தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் குலாம் முகைதீன், கடலாடி தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் ஆப்பனூர் ஆறுமுகவேல், முதுகுளத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பூபதி மணி, முதுகுளத்தூர் மத்திய ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் தமிழ் செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் இன்ப ரகு சிறப்புரையாற்றினார்.

    இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் ராஜாராம், செல்லபாண்டியன், ஒன்றிய கவுன்சிலர் பிச்சை, ஊராட்சி தலைவர்கள் மங்களசாமி, ஜெயலட்சுமி வடமலை, முனியசாமி, சாயல்குடி நகர் இளைஞரணி செயலாளர் விக்னேஷ்ராம், ஒன்றிய அவைத்தலைவர் தங்கபாண்டியன், ஒன்றிய துணைச்செயலாளர்கள் லிங்கராஜ், ராணி ராஜ், பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரேசன் கடை கட்ட பூமி பூஜை நடந்தது.
    • திருப்புல்லாணி கிழக்கு ஒன்றிய செயலாளர் நாகேசுவரன் தலைமை தாங்கினார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் பெரியபட்டினம் ஊராட்சி தெற்கு புதுகுடியிருப்பு கிராமத்தில் தனியார் கட்டிடத்தில் பல ஆண்டுகளாக ரேசன் கடை செயல்பட்டு வருகிறது.

    அந்த பகுதி பொதுமக்கள் ராமநாதபுரம் எம்.எல்.ஏ. காதர்பாட்சா முத்துராமலிங்கத்திடம் ரேசன் கடை கட்டிடம் கட்டிதர கோரி மனு அளித்தனர். அந்த கோரிக்கையை ஏற்று கட்டிடம் கட்ட சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.12 லட்சம் ஒதுக்கீடு செய்து பரிந்துரை செய்யப்பட்டது.அதன் அடிப்படையில் தெற்கு புதுகுடியிருப்பு பகுதியில் பொதுமக்கள் தானமாக வழங்கிய இடத்தில் புதிய ரேசன் கடை கட்டிடம் கட்ட பூமி பூஜை நடந்தது.

    திருப்புல்லாணி கிழக்கு ஒன்றிய செயலாளர் நாகேசுவரன் தலைமை தாங்கினார். மாவட்ட தி.மு.க. துணை செயலாளரும், திருப்புல்லாணி கிழக்கு பகுதி மாவட்ட கவுன்சிலருமான ஆதித்தன், பெரியபட்டினம் ஒன்றிய கவுன்சிலர் பைரோஸ் கான், ஊராட்சி மன்ற தலைவர் அக்பர்ஜான் பீவி, தி.மு.க. கிளை செயலாளரும்-மீனவர் கூட்டுறவு சங்க தலைவருமான அன்சார் அலி, ஒன்றிய துணை செயலாளர் பஷீர் முகம்மது, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முகமது அபிபுல்லா, ஊர் தலைவர் பாலு ஊராட்சி மன்ற உறுப்பினர் நாகலட்சுமி, கிருஷ்ணாபுரம் கிளை செயலாளர் கருப்பையா, முத்து கிருஷ்ணன் ,வண்ணாங்குண்டு கிளை செயலாளர் நஜிபுதீன், சிட்டாங்காடு கிளை செயலாளர் கருப்பையா, ரேசன் கடை பொறுப்பாளர் முருகேசன் மற்றும் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • முதுகுளத்தூர் யூனியனில் அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் வழங்க வேண்டும்.
    • தலைவர் வலியுறுத்தினார்.

    முதுகுளத்தூர்

    முதுகுளத்தூர் யூனியனில் 46 ஊராட்சிகளுக்கும் குடிநீர் வழங்குவதற்கான நீராதாரம் குறித்த கருத்தரங்கம் நடந்தது. பரமக்குடிசார் ஆட்சியர் அப்தாப் ரசூல் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குநர் பரமசிவம், யூனியன் தலைவர் சண்முகபிரியா ராஜேஷ் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) வரவேற்றார். இதில் யூனியன் தலைவர் சண்முக பிரியா ராஜேஷ் பேசுகையில், புழுதிக்குளம் எனது கவுன்சிலுக்கு உட்பட்டது. இந்த பகுதிக்கு பாம்பூர் ஜம்ப்பில் இருந்து காவிரி குடிநீர் வர வேண்டும். ஆனால் அது பரமக்குடி தாலுகா ஆகும். அங்கிருந்து குடிநீர் விடுவதில்லை. இப்படித்தான் முதுகுளத்தூர் யூனியன் முழுதும் ஜம்ப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. குடிநீர் கூட வழங்க முடியாவிட்டால் மக்கள் பிரதிநிதிகளை மக்கள் எப்படி மதிப்பார்கள்?. காவிரி குடிநீர் விரிவாக்கத்தில் அனைத்து கிராமத்திற்கும் குடிநீர் தொட்டிகளை அமைத்து கிராமங்களுக்கு தேவையான குடிநீரை வழங்க வேண்டும் என்றார்.

    பயிற்சி கலெக்டர் நாராயண சர்மா, மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் விஜயகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜானகி, ஊராட்சி மன்ற தலைவர்கள் விளங்குளத்தூர் கனகவள்ளிமுத்துவேல், செல்வநாயகபுரம் பால்சாமி, காக்கூர்ஜெயமணிராஜா, குமாரகுறிச்சி செந்தில்குமார், மைக்கேல் பட்டணம் குழந்தை தெரேஸ் சிங்கராயர், யூனியன் மேலாளர் சிவகாமி உள்பட பலர் கலந்துகொண்டு கருத்துக்களை தெரிவித்தனர்.

    • சமத்துவ எருதுகட்டு விழாவுக்கு முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.
    • ஏற்பாடுகளை விழா ஒருங் கிணைப்பாளர் ராஜேந்திரன் செய்து வருகிறார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் தாதனேந்தல் பஞ்சாயத்துக்குட்பட்ட பொக்கனாரேந்தல் கிராமத்தில் உள்ள மலை மேல் சாத்தார் உடையார் அய்யனார் கோவில் ஜல்லிக்கட்டு, எருது கட்டு, வடமாடு உரிமை யாளர்கள் நலச்சங்கம் சார்பில் 57-ம் ஆண்டு சமத்துவ எருதுகட்டு விழா நடைபெற உள்ளது. இதற்கு முகூர்த்தக்கால் நட்டு காப்பு கட்டும் வை பவம் இன்று நடைபெற்றது.

    வருகிற 19-ந் தேதி காலையில் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது.இந்நிகழ்ச்சிக்கு திமுக ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ தலைமை வகிக்க உள்ளார்.பொக்கனாரேந்தல், பால் கரை , பள்ளபச்சேரி,முத்து வீரப்பன் வலசை, ராஜ சூரிய மடை கோவிந்த னேந்தல், அச்சடிபிரம்பு, அம்மன் கோவில், இந்தியா நகர ்(திருப்புல்லாணி), ஆணைகுடி வீரன்வலசை, தெற்குத்தரவை, கொடிக்குளம், வித்தானூர், எல். கருங்குளம், ஆர். காவனூர், இந்திராநகர் (ராம நாதபுரம்), சிவஞான புரம், அரியகுடி புத்தூர், குமுக்கோட்டை, திருவரங்கம் மற்றும் கைக் கோளர்மடம் பாத்தியப்பட்ட அனைத்து கிராம பொறுப் பாளர்கள் முன்னிலை வகிக்க உள்ளனர்.இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா ஒருங் கிணைப்பாளர் ராஜேந்திரன் செய்து வருகிறார்.

    • அனைத்து பகுதிகளுக்கும் காவிரி குடிநீர் வழங்கப்படும்
    • 103 ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் நடந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் கடலாடி மற்றும் முது குளத்தூர் ஊராட்சிகளுக்கு உட்பட்ட 103 ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் நடந்தது.

    இதில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பேசியதாவது:-

    பொதுமக்களுக்கு அத்தியாவசிய தேவையான தண்ணீர் தேவையை நிறை வேற்றுவது ஒவ்வொருவரின் கடமையாகும். அந்த வகையில் ஒவ்வொரு ஊராட்சியிலும் மக்கள் தொகைக்கு ஏற்ப போதிய அளவு தண்ணீர் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து வழங்க இயலாத நிலை உள்ளது. அதை மாற்றி அனைத்து பகுதி களுக்கும் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து தண்ணீர் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இந்த கூட்டத்தின் நோக்கம் ஊராட்சி மன்றத் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்களுடன் கலந்து ஆலோ சித்து காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் அனைத்து பகுதி மக்களுக்கும் முழுமையான அளவு தண்ணீர் கிடைக்க தேவையான திட்டங்களை வடிவமைக்க வேண்டும். தற்பொழுது ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஒரு விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டுள்ளது.

    இதில் 20-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இதற்குண்டான பதில்களை பூர்த்தி செய்து வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் வழங்க வேண்டும்.

    குறிப்பாக பொது மக்களோடு ஆலோசித்து படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். இந்த படிவம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து சென்னையில் உள்ள நீர்வள ஆதார மையத்திற்கு சென்று அங்கிருந்து விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் கொண்ட குழுவினர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து கள ஆய்வு மேற்கொள்வார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் சண்முகநாதன், கடலாடி ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர்.முத்து லட்சுமி, முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் சண்முகபிரியா, சென்னை நீர்வள ஆதாரத்துறை பொறியாளர் சரவணன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் பரமசிவம், கடலாடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜா, ஆனந்த், முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜானகி, பிரியதர்ஷினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×