என் மலர்
ராமநாதபுரம்
- இஸ்லாமியா கல்வி நிறுவனங்களுக்கு நவாஸ்கனி எம்.பி. விருது வழங்கினார்.
- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொரு ளாளர் ஷாஜகான் முன்னிலை வகித்தார்.
ராமநாதபுரம்
இந்திய நாட்டில் முதல் கல்வித்துறை அமைச்சராக இருந்த அபுல்கலாம் ஆசாத் நினைவாக ஆண்டு தோறும் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி தலைமையில் கல்வி ரத்னா விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சி யாக 4-ம் ஆண்டு கல்வி ரத்னா விருது வழங்கும் நிகழ்ச்சி தனியார் மஹாலில் நடைபெற்றது. நவாஸ்கனி எம்.பி தலைமை வகித்தார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொரு ளாளர் ஷாஜகான் முன்னிலை வகித்தார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில், கல்வியில் சிறந்த பயிற்சியாளர், ஆசிரியர், மாணவர்கள் என 150 பேருக்கு கல்வி ரத்னா விருதுகளை நவாஸ்கனி எம்.பி. வழங்கினார். இதில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் சிறந்த கல்வி சேவையாற்றி வரும் இஸ்லாமியா கல்வி நிறுவனங்களுக்கு கல்வி ரத்னா விருதும்,துணை முதல்வர் ராமருக்கு நல்லாசி ரியர் விருதும் வழங்கி கவுர விக்கப்பட்டது.
தாளாளர் எம்.எம்.கே.முஹைதீன் இபுராஹிம், முதல்வர் மேபல் ஜெஸ்டஸ், தலைமையாசிரியர் மலைச்சாமி ஆகியோர்களை பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் வருசை முகமது, மாவட்ட செயலா ளர் முகமது பைசல், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் அன்சாரி, துணைச்செயலாளர் ஆசீகட உசேன் மற்றும் மாநில செய்தி தொடர்பாளர் அப்துல் ஜப்பார், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் வேலுச்சாமி, மாவட்ட கவுன்சிலர் ரவிச்சந்திர ராமவன்னி மற்றும் ஆசிரியர்கள், கல்வி யாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
- உழவு செய்து நிலத்தை மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது.
- ஆழமாக உழுவதால் களைகள் வேரோடு வெளியேற்றப் படுகிறது.
அபிராமம்
ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பெய்த கோடை மழையால் முதுகுளத்தூர், கடலாடி, கமுதி, சாயல்குடி, அபிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கோடை உழவு செய்து வருகின்றனர்.
கோடைகாலத்தில் வயல்களில் உழவு செய்வ தன் மூலம் ஆழமாகவும், வயலை சாய்வு மற்றும் குறுக்காக உழுவதால் நிலத்தின் மேற்பரப்பில் உள்ள மண்கட்டிகள் உடைந்து மண் அரிப்பு தடுக்கப்பட்டு சத்துக்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மழைகாலத்தில் பெய்யும் மழைநீர் வடிந்து வீணாகாமல் மண்ணுக்குள் செல்வதால் நிலத்தடி நீர்மட்டம் உயருகிறது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு கோடைமழை பெய்ததால் கோடை உழவு செய்ய வாய்ப்பிருக்கிறது. கோடை உழவு செய்வதன் மூலம் மண்ணின் ஈரப்பதம் அதிக ரிப்பதுடன் மண்ணின் வளமும் அதிகரிக்கிறது.இதனால் பருவகாலத்தில் ஒரளவு மழை பெய்தாலும் நெல் உள்பட அனைத்து பயிர்களும் பயன்தரும் என்றார்.மேலும் இதுகுறித்து வேளாண்மை துறையினர் கூறியதாவது:-
கோடைகாலத்தில் நிலத்தை உழுவதால் மண்ணின் காற்றோட்டம் அதிகரிக்கிறது. களைக்கொல்லி' பூச்சிக்கொல்லி, எச்சம் மற்றும் முந்தைய பயிர்களின் வேர், களைகள் மூலம் வெளிப்படும் தீங்கான ரசாயனம் விரைவாக சிதைவ டைகிறது. மண்ணின் மூலம் பரவும் பூச்சி, முட்டை, புழு மற்றும் கூட்டுப்புழுக்கள் அழிந்து விடுகிறது. அடுத்தடுத்த பயிர் சாகுபடியில் பூச்சி களால் ஏற்படும் பாதிப்பு குறைகிறது. பூச்சிக் கொல்லி களை பயன்ப டுத்துவதும் குறைவதால் விவசாயிகளுக்கு செலவும் குறைகிறது. கோடை உழவின் காரண மாக தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா வித்துக்கள் மற்றும் பூஞ்சை நுண்ணு யிரிகள் இறக்கின்றன. கோடை உழவு, பயிர் சுழற்சி ஆகியவை புழுக்களை கட்டுப்படுத்தும். ஆழமாக உழுவதால் களைகள் வேரோடு வெளியேற்றப் படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
- பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கோடை விடுமுறை காலம் என்பதால் அவர்கள் தங்களது பெற்றோருடன் ராமேசுவரம் மற்றும் தனுஷ்கோடிக்கு அதிகளவில் வருகை தருகின்றனர்.
- கடற்கரை பகுதியில் பக்தர்கள் இளைப்பாற போதிய நிழற்கூடங்கள் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமேசுவரம்:
ராமேசுவரம், தனுஷ்கோடி தீவு பகுதியில் அமைந்துள்ளன. ராமேசுவரம் கோவில் புண்ணிய திருத்தலமாக போற்றப்படுவதால் இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்ய வெளிமாநில பக்தர்கள் அதிகளவில் வருகை தருவார்கள்.
இங்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் அவர்கள் ஆத்மா சாந்தியடையும் என்ற நம்பிக்கை உள்ளதால் பல்வேறு இடங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து தினமும் இங்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வார்கள்.
ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலுக்குள் தீர்த்த கிணறுகள் அமைந்துள்ளன. இந்த தீர்த்தங்களில் குளித்தால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் தீரும் என்று பக்தர்கள் கருதுவதால் அங்கு நீராடி சாமி தரிசனம் செய்வதை பக்தர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.
இதேபோல் ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடல் மற்றும் தனுஷ்கோடி கடல் ஆகியவற்றிலும் பக்தர்கள் புனித நீராடுவார்கள். தனுஷ்கோடி பல ஆண்டுகளுக்கு முன்பு கடல் சீற்றம் காரணமாக அழிந்து போன ஒரு நகரமாகும். இங்கு சுற்றுலா பயணிகளுக்கு போதிய அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. இருந்தபோதிலும் அங்கு சென்று பார்ப்பதை சுற்றுலா பயணிகள் விரும்புகின்றனர்.
தற்போது பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கோடை விடுமுறை காலம் என்பதால் அவர்கள் தங்களது பெற்றோருடன் ராமேசுவரம் மற்றும் தனுஷ்கோடிக்கு அதிகளவில் வருகை தருகின்றனர்.
நேற்று ஞாயிறு விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் வருகை வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. இன்றும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதி வருகிறது. கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அக்னி தீர்த்தக்கடலிலும் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்.
கோடை வெயில் காரணமாக பக்தர்கள் மிகவும் அவதிப்பட்டனர். அவர்கள் கடற்கரை பகுதியில் பக்தர்கள் இளைப்பாற போதிய நிழற்கூடங்கள் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பார்த்திபனூர் புறவழிச்சாலை அமைக்கும் பணிக்காக நெடுஞ்சாலைத்துறை தணிக்கை குழு அதிகாரிகள் ஆய்வு நடத்தியது.
- திட்டப்பணிகளை தணிக்கை செய்யும் பணி நடந்து வருகிறது.
பரமக்குடி
தமிழக முழுவதும் கடந்த 9-ந்தேதி முதல் நெடுஞ் சாலைத்துறை அலுவல கங்களில் செயல்பட்டு வரும் திட்டப்பணிகளை தணிக்கை செய்யும் பணி நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பார்த்திபனூர் புறவழிச் சாலை சாலை மேம்பாட்டு பணிகளை மதுரை நெடுஞ் சாலை, திட்டங்கள் கண்காணிப்பு பொறியாளர் ஜவஹர் முத்துராஜ் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.
பாலம் அமைக்கும் பணியையும் மற்றும் சாலை அமைப்பதற்கான மண் நிரப்புதல் பணியையும் அவர்கள் ஆய்வு செய்தனர். இது தொடர்பான ஆய்வ றிக்கை நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள் ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த ஆய்வின்போது திட்டங்கள் கோட்ட பொறியாளர் பிரசன்ன வெங்கடேசன், உதவி கோட்ட பொறியாளர் சாருமதி, உதவி பொறியாளர் அருண்பிரகாஷ், ராமநாதபுரம் கோட்ட பொறியாளர் சந்திரன், பரமக்குடி உதவி கோட்ட பொறியாளர் கண்ணன், உதவி பொறியாளர் பிரபாகரன், நெடுஞ்சாலை தரக்கட்டுப்பாடு உதவி கோட்ட பொறியாளர் வெற்றிவேல் ராஜன், உதவி பொறியாளர்கள் அன்பரசு, சதீஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
- ராமநாதபுரத்தில் நடந்த மகளிர் சுய உதவி குழு கடன் வழங்குவது குறித்த கருத்தரங்கத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பங்கேற்றார்.
- மகளிர் சுய உதவி குழு கடன் மேளா நடைபெற உள்ளது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டரின் அறிவுறுத்த லுக்கு இணங்க கூட்டுறவுத் துறை மற்றும் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து மகளிர் சுய உதவி குழு கடன் வழங்குவது தொடர்பான கருத்தரங்கை மாவட்ட ஆட்சியர் வளாக மக்கள் குறைதீர் கூட்டரங்கில் நடத்தியது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்த ராஜூலு கலந்து கொண்டார்.
அவர் பேசியதாவது:-
மகளிர் சுய உதவி குழு கடன்கள் அதிகம் வழங்கப்படுவதன் மூலம் மாவட்டத்தில் பண சுழற்சி அதிகம் ஏற்பட்டு மக்களின் வாழ்வாதாரம் மேம்படும். ஒவ்வொரு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களும், 100-க்கும் மேற்பட்ட சுய உதவி குழுக்கள் உருவாக்கப் படவும், இந்த நிதியாண்டில் ரூ.300 கோடிக்கும் மேலாக மகளிர் சுய உதவி குழு கடன் வழங்கவும் உறுதி பூண்டு துறை அலுவலர்கள் மற்றும் சங்க பணியாளர்கள் செயல்பட வேண்டும்.
மேலும் மே 15 முதல் ஜூன் 30 வரை மாவட்டத்தில் உள்ள 131 வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் மகளிர் சுய உதவி குழு கடன் மேளா நடைபெற உள்ளது. இதில் சங்கத்தின் விவகார எல்லையில் உள்ள அனைத்து மகளிரும் உறுப்பினராகி, கடன் பெற்று பயனடைய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர், ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர், மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர்கள், கூட்டுறவுத்துறை மற்றும் மத்திய வங்கி அலுவலர்கள் கலந்துகொண்டனர். சிறந்து விளங்கிய கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்கள் வழங்கப்பட்டன.
- எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தலைவர்கள் சங்கமம் நிகழ்ச்சி நடந்தது.
- மாவட்ட தலைவர் கன்சுல் மஹரிபா முன்னிலை வகித்தனர்.
ராமநாதபுரம்
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தலைவர்கள் சங்கமம் நிகழ்ச்சி கிழக்கு மாவட்ட தலைவர் ரியாஸ் கான் தலைமையில் ராமநாதபுரத்தில் நடந்தது.
கட்சியின் தமிழ் மாநில தலைவர் நெல்லை முபாரக், மாநில துணைத் தலைவர் அப்துல் ஹமீது, மாநில பொதுச் செயலாளர் அகமது நவவி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் முஜிபுர் ரஹ்மான், டாக்டர் ஜெமிலுநிசா, ஜஹாங்கீர் அரூஷி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். மேற்கு மாவட்ட தலைவர் நூருல் அமீன், பொதுச்செயலாளர் பாஞ்ச் பீர், கிழக்கு மாவட்ட துணைத் தலைவர்கள் சோமு,சுலைமான் செயலாளர்கள் ஆசாத், நஜ்முதீன், மேற்கு மாவட்ட துணைத் தலைவர் மீரான் மொய்தீன், செயலாளர்கள் சிக்கல் காஜா யூசுப், கிழக்கு மாவட்ட வுமன் இந்தியா மூவ்மெண்ட் தலைவர் ரம்ஜான், மேற்கு மாவட்ட தலைவர் கன்சுல் மஹரிபா முன்னிலை வகித்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட ஊடக பொறுப்பாளர் சுபைர் ஆப்தீன் செய்திருந்தார்.
- சர்வதேச சிலம்ப போட்டியில் ராமநாதபுரம் மாணவி சாதனை படைத்தார்.
- வெற்றி பெற்ற மாணவிக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
ராமநாதபுரம்
கர்நாடக மாநிலம் பெங்களூர் பல்கலைக்கழகத்தில் வோல்டு யூனியன் சிலம்ப பெடரேஷன் சார்பில் சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டி நடந்தது.
இதில் சப்ஜூனியர் ஒற்றை கம்பு பிரிவில் ராமநாதபுரம் நிக்கோலஸ் சிலம்ப பயிற்சி பள்ளி மாணவி கனிஷ்கா முதல் பரிசான தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். இந்த போட்டியில் இந்தியா, சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், இத்தாலி, இலங்ைக ஆகிய 5 நாடுகளில் இருந்து சுமார் 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவிக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
மாணவியுடன் சிலம்ப மாஸ்டர் மேத்யு இம்மானுவேலும் உடனிருந்தார். ராமநாதபுரம் திரும்பிய மாணவிக்கு பெற்றோர், மாணவர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
- கீழக்கரை தாசில்தார் பொறுப்பேற்றார்.
- அலுவலக பணியாளர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை புதிய தாசில்தாராக பழனிக்குமார் பொறுப்பேற்றார். அவரை துணை தாசில்தார் பரமசிவம், சமூக நலத்துறை தாசில்தார் ஜலால், தலைமை நிலஅளவர் சொக்கநாதன், வருவாய் அலுவலர் சங்கத்தின் மாவட்ட இணை செயலாளர் காசிநாதத்துரை, தலைமையிடத்து துணை வட்டாட்சியர் அழகப்பா ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.
இதுவரை அங்கு தாசில்தாராக பணியாற்றிய சரவணன் புதிய தாசில்தாரிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார்.புதிதாக பொறுப்பேற்ற தாசில்தார் பழனிக்குமாருக்கு வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அதிகாரிகள், வட்டாட்சியர் அலுவலக பணியாளர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
- ராமநாதபுரம் இசை பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
- தொலைபேசி 04567-220104, 99422 67837, 94420 4310, 97516 74700, 95664 73769, 99941 34886 என்ற எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்.
ராமநாதபுரம்
தமிழ்நாடுஅரசுகலைபண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கி வரும் மாவட்டஅரசு இசைப்பள்ளி ராமநாதபுரத்தில் கீழ்காணும் பாடப்பிரிவுகளில் சிறந்த இசை ஆசிரியர்களைக் கொண்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. குரலிசை (வாய்ப்பாட்டு), பரதநாட்டியம், நாதசுரம், தவில்,தேவாரம், மிருதங்கம், வயலின் போன்ற வகுப்புகள் நடைபெற உள்ளன.
2023-24-ம் கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.வயது வரம்பு 12 முதல் 25 வயது வரைக்கு உட்பட்டவர்கள் சேரலாம். கல்வித் தகுதி குரலிசை, பரதநாட்டியம், தேவாரம், வயலின், மிருதங்கம் பிரிவுகளில் சேர 7-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாணவர்களும் பரதநாட்டிய பிரிவில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
பயிற்சி காலம் 3ஆண்டுகள். பயிற்சி கட்டணம் முதலாமாண்டு மாணவர்களுக்கு ரூ.350-ம், 2-ம் ஆண்டு, 3-ம் ஆண்டு மாணவர்களுக்கு ரூ.325-ம் சிறப்பு கட்டணமாக வசூலிக்கப்படும். அரசுவழங்கும் சலுகை இலவச பஸ் பயணஅட்டை, கல்வி உதவித்தொகைமாதம் ரூ.400, அரசுமாணவர்விடுதி வசதி அளிக்கப்படும்.
இசைக்கல்வியில் ஆர்வமுள்ளவர்கள் மற்றும் மாணவ-மாணவிகள்தலைமைஆசிரியர் மாவட்டஅரசு இசைப்பள்ளி, எண் 14,கவுரிவிலாஸ் பேலஸ், அரண்மனை ராமநாதபுரம் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி 04567-220104, 99422 67837, 94420 4310, 97516 74700, 95664 73769, 99941 34886 என்ற எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்.
- வீரஜக்கதேவி கோவிலில் வழிபாடு செய்தனர்.
- வீரபாண்டிய கட்டபொம்மன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பசும்பொன்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியில் இருந்து திரளானோர் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை வீரஜக்கதேவி கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தனர்.
கமுதி அருகே உள்ள பெரியஉடப்பங்குளம் கிராமத்தில் இளைஞர்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் அங்குள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் ஜோதி ஏந்தி, பாஞ்சாலங்குறிச்சி கோட்டையில் உள்ள வீர ஜக்கதேவி கோவிலில் வழிபாடு நடத்தினர்.
இதேபோல் இந்த பகுதியில் உள்ள தலைவ நாயக்கன்பட்டி, கீழராமநதி,சேதுராஜபுரம், நாராயணபுரம், கீழவலசை பாக்குவெட்டி, புதுக்குளம், கோவிலாங்குளம்பட்டி, இடையன்குளம், தாதாகுளம் உள்பட பல்வேறு கிராமங்களில் இருந்து சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஜோதி ஏந்தி வீரஜக்கதேவி கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினர்.
கமுதி அருகே பெரிய உடப்பங்குளத்தில் வீரபாண்டிய கட்ட பொம்மன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
- தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது.
- முருகப்பெருமாள், சிவராமன், சோலை முருகன், ரமேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.
சாயல்குடி
கடலாடி தி.மு.க. வடக்கு ஒன்றியம் சார்பில் ஏனாதி பூங்குளம் பகுதியில் தமிழக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கடலாடி வடக்கு ஒன்றிய செயலாளர் ஆப்பனூர் ஆறுமுகவேல் தலைமை தாங்கினார். கடலாடி ஒன்றிய முன்னாள் துணை சேர்மன் பத்மநாதன், ஒன்றிய கவுன்சிலர்கள் பானுமதி ராமமூர்த்தி, செய்யது அலி பாத்திமா, நிர்வாகிகள் போகத்துரை, சிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்.எஸ்.மங்கலம் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் வ.து.ந.ஆனந்த் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய இளைஞரணி மாரிநாதன், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பழனிவேல் பாண்டியன், மாணவர் அணி லட்சுமணன், நிர்வாகிகள் மணிமாறன், முருகப்பெருமாள், சிவராமன், சோலை முருகன், ரமேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.
- புதிய டிரான்ஸ்பார்மரை முருகேசன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
- தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பரமக்குடி
பரமக்குடி நகர் தெற்கு பிரிவுக்கு உட்பட்ட பொன்னையாபுரம் எம்.ஜி.ஆர்.நகரில் மின்சார வாரிய மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.4.5 லட்சம் செலவில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. அதை முருகேசன் எம்.எல்.ஏ. பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் பரமக்குடி நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி, 30-வது வார்டு கவுன்சிலர் மாரியம்மாள் மும்மூர்த்தி, கோட்ட செயற்பொறியாளர் ரெஜினா ராஜகுமாரி, உதவி செயற்பொறியாளர் (நகர்) கங்காதரன், உதவி மின் பொறியாளர் சத்தியேந்திரன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.






